ADS 468x60

17 February 2010

வெள்ளத்து அபாயத்தை இல்லாது பண்ணுவோம்..

வெள்ள அபாயத்தில் இருந்து பாதுகாப்பு பெறுவோம்.
காலநிலை மாற்றங்களுக்கிணங்க இலங்கையானது வெள்ளம், புயல், சுனாமி போன்ற அனர்த்தங்களுக்கு இலகுவாக பாதிக்கப்பட்டு வந்துள்ளமையை முன்னைய வருடங்களில் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது. நீர்நிலைகள் ஒழுங்கான முறையில் வடிந்து செல்வது தடைப்படும்போது வெள்ளம் ஏற்ப்படுகின்றது. வெள்ளம் வடிந்தோடுகின்ற, மற்றும் தாழ்நிலைப்பகுதிகளில் குடியிருப்புகளை அமைப்பதன்மூலம் வெள்ளம் தடைப்பட்டு அதன் ஆபத்தினை அதிகரிக்கச் செய்கின்றது. 
வெள்ளம் ஏற்ப்படுவற்க்கான காரணங்கள்.




வெள்ள அனர்த்த மட்டங்களை கருத்தெடுக்காமல் நிலப்பயன்பாட்டினை மேற்கொள்ளல்.

அதிகரித்துவரும் சனத்தொகை காரணமாக நிலப்பகுதியின் அளவு குறைந்து வருகின்றமை இதனால் வெள்ளளம் வடிந்தோடுகின்ற இடங்களில் வருமானம் குறைந்தவர்களின் அத்துமீறிய குடியேற்றம்.

வடிகால் அமைப்புகளை தூய்மை செய்வதில் காணப்படுகின்ற பொது மக்களின் அசண்டையீனமான போக்கு. மண்ணை முறையற்ற முறையில் அகன்றெடுத்தல். நீர் வழிந்தோடி தேங்கி நிற்கும் இடங்களை நிரப்புதல் மற்றும் அவற்றின்மீது கட்டிடங்களை அமைத்தல். 

வெள்ளத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள். 
தூய சுட்டாறிய நீரினை அருந்துதல் அதற்க்காக வீடுகளில் பாவனைக்கு பயன்படுத்தப்படும் நீரில் குளோரினை இட்டு பாவித்தல்.எப்பொழுதும் குடிநீரை சிறிய மூடி கொண்ட, சுத்தமான கொள்கலன்களில் சேமித்து வைத்தல் வேண்டும். உணவினை மூடிவைத்து பாதுகாப்பதுடன் அவற்றை சூடாற முன் உண்ணுதல் வேண்டும். சாப்பிட முன்னும் பின்னும் கைகளை தூய்மையாக கழுவுதல் வேண்டும். நுளம்பு தொல்லையில் இருந்து பாதுகாப்பு பெற நுளம்பு வலைகளை பாவித்தல் வேண்டும். இவற்றின்போது வயிற்றோட்டம், வாந்திபேதி என்பன ஏற்ப்பட வாய்ப்பிரிப்பதனால் தூய நீராகாரங்களை உட்கொள்ளுதல் ஆரோக்கியமாக இருக்கும். மேற்கூறிய நோய்களுக்குரிய அறிகுறிகள் தென்படுகின்ற போது உடனடி வைத்தியரை நாடி ஆலோசனை பெறுவது சாலச் சிறந்ததாகும். நித்திரை செல்லும்போது கால் மற்றும் கைகளை மூடும்படியாக துணிகளால் போர்த்தவேண்டும். சுகமடைந்த நோயாளிகளை நுளம்புக்கடியிலிருந்து பாதுகாக்க வேண்டும். தண்நீர் தேங்கி நிற்கும் இடங்களை இல்லாது செய்தல் வேண்டும் (தகரப் பேணி, டயர், சிறட்டை போன்றன) இயற்கையாக அமைந்திருக்கும் நீர் வழிந்தோடக்கூடிய வழிகளில் குடியேற்றத்திட்டங்களை அமைத்தல் தடைசெய்யப்பட வேண்டும். புதிய அபிவிருத்தி திட்டங்களுக்காக நீர்நிலைகள், நீர் வழிந்தோடும் இடங்கள் பாவிப்பது தடைசெய்யப்படுதல் வேண்டும். ஏற்கனவே தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட வெள்ளம் வழிந்தோடும் இடங்கள் மீளவும் பாதுகாக்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும். 
வெள்ள அனர்த்தம் மூலம் ஏற்ப்படும் பொது ஆபத்துகள். 
வெள்ளத்தினால் பெரியளவிலான மண்ணரிப்பு உருவாகின்றது, அத்துடன் இது பாலங்கள், கட்டிடங்கள் என்பனவற்றை சிதைவடையச் செய்கின்றது. மனிதர்களால் கட்டப்பட்ட வீட்டின் சுவர்கள், கதவுகள், கூரைகள் அத்துடன் வீடுகள் என்பன சிறிய வெள்ளத்தினாலும் பாதிப்படைகின்றது. விவசாய நிலங்களில் ஏற்ப்படுகின்ற வெள்ளத்தின்போது விவசாயப்ப் பயிர் செய்கைகள், மிருக வளர்ப்புப் பண்ணைகள் அத்துடன் செல்லப்பிராணிகள் என்பன வெள்ளத்தின்போது மிகுந்த பாதிப்பினை எதிர்நோக்குகின்றன.வேள்ளம் போக்குவரத்தினை சீர்குலைத்து விடுகின்றது இது அங்கு உடனடி உணவுத்தட்டுப்பாட்டினை உண்டுபண்ணுவதுடன் அதுவே மக்களை பட்டினிச் சாவுக்கும் இடடுச் செல்லும் துர்ப்பாக்கியம் ஏற்ப்பட்டு விடுகின்றது. வெள்ள காலங்களில் அதன் வடிந்தோடும் தன்மையைப் பொறுத்து மக்களின் இடப் பெயர்வுகள பாரியளவில் ஏற்ப்பட்டு வருகின்றன. இதன்போது மக்ககள் தற்காலிக வீடுகளிலும் மற்றும் மீள்குடியேற்ற திட்டங்களிலும் குடியமர்த்தப்படும் போது தூய்மையான நீரைப் பெறுவது மற்றும் போதியளவு உணவினைப் பெறுவது மட்டுப்படுத்தப்பட்டே காணப்படுவதுடன் அங்கு ஏற்ப்படும் சுத்தமற்ற தன்மை உணவு மற்றும் குடி நீர் மூலம் வரும் நோய்களுக்கு ஏதுவாக அமைந்து காணப்படும். ஓவ்வொரு வருடமும் வரும் வெள்ள அனர்த்தத்துக்கென பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை வழங்க வேண்யெ நிர்ப்பந்தம். வெள்ளம் ஏற்ப்பட்டதன் பின்னர் பல்வேறு நோய்கள் உண்டாகுகின்றன, குறிப்பாக கொலரா, தைப்பொயிட், டையேரியா மற்றும் காய்சல் போன்ற இன்னோரன்ன நோய்களையும் உண்டுபண்ணுகிறது. 

வெள்ளம் மூலமாக ஏற்ப்படுகின்ற சுகாதாரக் கேடுகள். 
வெள்ளநீர் மூலம் குப்பை கூழங்கள் கொண்டு சேர்க்கப்படுவதுடன் நஞ்சு கலந்த மாசுறுதலும் அதன்போது ஏற்படுகின்றது இது சுகாதாரச் சீர்கேட்டை ஏற்ப்படுத்துகின்றது.

0 comments:

Post a Comment