ADS 468x60

17 February 2010

இதிலும் ஒரு சுகம்தான்

என்னதான் மாளிகை இருந்தாலும் ,பணம் இருந்தாலும், நம்மட கிராமப் புறண்கலப் பாருங்க எத்தன எளிமையா சந்தோசமா சீவிக்குதுகள்....இப்படித்தான் அடிக்கடி அடியேனுக்கு அனர்த்தம் சம்பந்தமான மாவட்ட உத்தியோகத்தராக இருக்கிறத்தால காணாத இடத்தையும் காணும் பாக்கியம் நம்ம பக்கத்தில கிடைக்கும் அப்பா.....இப்பவும் நம்ம கிராமப்புறப் பகுதியில மண்ணில் கட்டிய சிறிய கடைகளில் இந்த தூரப் பிரயாணங்களின் போது தேநீர் குடிப்பதெனில்அதில ஒரு தனிச்சுகம் இருக்கு....
அவங்க தேனீர் மட்டும் தருவதில்ல அதில் அன்பையும் கலந்து தருவாங்க பாருங்க அது தான் பெசலோ பெசல்.... தமனப்பக்கமா வக்மிடியாவ என்ற ஒரு அழகிய நீர் ஓடைகள் நிறைந்த கிராமம்... அங்கதான் இந்த தேனீர் அருந்தும் சந்தர்ப்பம் கிடைத்தது..

பாருங்கள் ஆச்சி ப்படி போடுறா தேத்தண்ணி ...உம் அழகாய் இருந்தது ஒரு அரிக்கன் லாம்பு, பாதி முடிந்த கதலி வாழைக்குலை, கணக்கு பாக்க ஒரு உரல் இருக்கை, பலகை அடித்த ராக்கை, அதில் பழசான பச்ச கொச்சிக்கா, கூனிக்கருவாடு, சுரக்காய் பாதி , தும்பன்காய், இன்னும் என்னென்னவோ இதற்குள் சட்ட இல்லாமல் க்கத்தோட பாக்கும் சின்னப்பொண்ணு ....        
இப்படி கிராமத்து வாசனையை நுகராமல் எத்தனைபோ் செயற்கையாக வாழ்ந்நு கொண்டிருக்கிறாா்கள். அந்த வாழ்க்கையில் இருக்கும் தூய்மை இரசனை வேறெங்கும் காணமுடியாதுப்பா. வாருங்கள் போவோம் வாடிப்பக்கம்.

1 comments:

Unknown said...

கூனிக்கருவாடு, My fav.... :)

Post a Comment