ADS 468x60

23 March 2010

உலகமயமாக்கலில் உக்கும் மனிதன்

வாழ்க்கைக்கு வேலை அவசியம்தான். ஆனால், வேலையே வாழ்க்கையாக இருந்து விடக்கூடாது. எந்த நேரமும் வேலையைக் கட்டி அழுது கொண்டிருக்காமல், அதற்காக ஒதுக்கபட்ட நேரத்தில் மட்டும் வேலை செய்யுங்கள். அதேபோல் வாங்கும் சம்பளத்திற்குக் குறைவில்லாமல் வேலை பாருங்கள். அலுவலக வேலைக்காக குடும்பத்தில் கிடைக்கக் கூடிய சந்தோஷங்களைத் தியாகம் செய்யாதீர்கள்.   வேலையையும், அது சார்ந்த டென்ஷன்களையும் மறக்க ஓய்வு அவசியம். விடுமுறை நாட்களிலும் அலுவலகத்தை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், கிடைக்கக் கூடிய ஓய்வை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

அதிக நாட்கள் விடுமுறை கிடைத்தால் குடும்பத்துடன் சுற்றுலா செல்லுங்கள். வார இறுதியில் திரைபடங்களுக்கோ, உறவினர் அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ சென்று வரலாம். அதன் முலம் கிடைக்கும் புத்துணர்ச்சி தான் அடுத்த ஆறு நாட்களுக்கு சோர்வு இல்லாமல் வேலையை சிறப்பாகச் செய்ய உதவும்.   உங்களுக்கு எந்த வேலையில் ஆர்வம், திறமை இருக்கிறதோ, அந்தத் துறையில் சேர்ந்து பணியாற்றுங்கள். அப்போதுதான் வேலையையும் நன்றாகச் செய்ய முடியும்; உங்கள் திறமைகளும் வெளி உலகத்திற்குத் தெரிய வரும். விருப்பமில்லாத வேலையைச் செய்யும்போது, வேலையும் ஒழுங்காக நடக்காது. உங்கள் திறமைகளும் வீணாகி போகும். 

ஓவியம் வரைவதில் திறமையை வைத்துக் கொண்டு மார்க்கெட்டிங் துறைக்கு போக வேண்டாம்.   உங்களால் செய்ய முடியாத அல்லது செய்யத் தெரியாத வேலைகளைக் கண்டிப்பாக மறுத்து விடுங்கள். மேலதிகாரியைத் திருப்தி படுத்துவதற்காகவோ, சக ஊழியர்களிடம் உங்களை பெரிய ஆளாக காட்டிக் கொள்வதற்காகவோ எல்லா வேலைகளையும் ஒப்புக் கொண்டால் வேலையின் முடிவு எதிர்பார்த்த பலனைத் தராது; உங்களுக்கும் மன அழுத்தம் அதிகரிக்கும். எனவே, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணாமல், `இதை என்னால் செய்ய முடியாது’ என்று திட்டவட்டமாகக் கூறிவிடுங்கள்.

வேலையில் ஏதாவது உதவி தேவைபடும் பட்சத்தில், தயங்காமல் உடன் பணிபுரிபவர்களிடம் கேளுங்கள். `எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை, நானே எல்லாவற்றைம் செய்து கொள்கிறேன்’ என்று அடம் பிடித்தால் டென்ஷன்தான் மிஞ்சும். எல்லா வேலைகளும் தேங்கி, உங்கள் ஒருவரால் மொத்த அலுவலகத்தின் வேலையும் ஸ்தம்பித்து போகும் நிலை உருவாகும். அதேபோல, உடன் பணிபுரிபவர்களுக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டால், அவர்களுடைய வேலைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.   ஒவ்வொரு வாரமும் அந்த வாரத்தின் இறுதியில் நீங்கள் செய்த வேலைகளை பட்டியலிடுங்கள். எந்த வேலைக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டீர்கள், எந்த வேலைக்கு குறைவான நேரம் எடுத்துக் கொண்டீர்கள் என்பதையும் கணக்கிட்டு பாருங்கள். வேலையை முடிக்க அதிக நேரம் ஆனதற்குக் காரணம் என்ன? அந்த வேலையில் தோன்றிய சிக்கல்கள் என்னென்ன? நாம் செய்த தவறுகள் எவையெவை? இதையெல்லாம் குறித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அடுத்து குறையில்லாமல் வேலை பார்க்க முடியும்.   மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிருங்கள். பெரும்பாலும் அதுபோன்ற சூழ்நிலைகள் உருவாகாமல் தடுப்பதே நல்லது. தவறு யார் மீது இருந்தாலும் அனுசரித்துச் செல்பவராக நீங்கள் இருங்கள். மேலதிகாரி மீது தவறு இருக்கும் பட்சத்தில், பலர் முன்னிலையில் வெளிப்படையாகச் சொல்லி அவமானபடுத்துவது தவறான செயலாகும். அவரைத் தனியாகச் சந்தித்து யார் மீது தவறு என்பதை விளக்கிச் சொல்லும்போது, அவர் மனபூர்வமாக தவறை ஒத்துக் கொள்வார். மேலும், உங்கள் மீதான மரியாதையும் அதிகரிக்கும்..
எங்கோ படித்தது.....

11 March 2010

தேனூர் சிட்டுகளின் குழு நடனம்

நம்ம சின்னஞ் சிறுசிகளுக்கு எவ்வளவு ஆற்றல் இருந்தும் அவங்கள பறைசாற்றும், முன்னுக்கு கொண்டுவரும் எவரும் இருக்கிறார்களா என்றால் கேள்விகுறியாகவே இருக்கிறது.. இதனால் நான் ஒரு பரீட்சார்த்த முயற்சியாகவே இவங்கள உங்கள் வாசலில் மலர வைக்கிறேன்..
>

உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது....


முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவர்களின் பெருமை, வித்தகம், பன்முகப்பணி, பரவலான அறிவு என பல பல. பல்லாயிருவர் ஒரவரிடமே அமையக்கூடியவை. அந்த மகான் செய்த தொண்டு தூய்மையானது. பெற்ற பேறு பெருமளவானது. எல்லாவற்றையும் துறந்த தூய சந்நியாசியாய் இருந்து, இருந்தமிழே உன்னால் இருந்தேன், விண்ணோர் விருந்தமிழ்தும் விரும்பேனென்று தமிழை துறக்க மாட்டாமல், முத்தமிழும் துறைபோகத் தொண்டு செய்தவர்.

கண்டு யாழ் நூலும், நாடகத்துறையை நனி விழங்க மதங்கசூலாமணியும் தங்தவர். தூய மனமும் இனிய உரையும் அஞ்சாத போக்கும், பணிவான இயல்வும் கொண்டவர். வடநாட்டு நகரங்களிலும், தெற்கில் சென்னை, சிதம்பரம், மதுரை முதலான நகரங்களிலும், தஞ்சை பெரு நகரத்திலும் அவர் புகழ் நிலவவிட்டுப் போனவர். யாழ்ப்பாணத்தில் அவர் பணி பெரிது. சென் பற்றிக்ஸ் கல்லூரி, மானிப்பாய் இந்தக்கல்லூரிகளில் பணி செய்தவாறே, இங்கே நாடகத்துறையை வளர்த்ததோடு சைவ பூர்வாச்சிரமத்தில் இளமையிலேயே புலமை ஊறப் பெற்று பல மொழிகள் அறிந்து, விஞ்ஞானத்துறை நன்கறிந்து, வேதாந்த துறையில் புகுந்து விழுமிய நூல்கள் தேர்ந்து இராமகிருஷ்ண மடத்தை அலங்கரித்தவாறே, தனித்துவமான போக்கில், ஆலயம் தொழுது என்றும் சம்பிடத்தில் திருநீறு வைத்திருந்து பரவலாகப்பூசி சிவனை மறவாச் சிந்தையுடன் வாழ்ந்தவர்.

 அண்ணாமலை, பேராதனைப் பல்கலைக்கழகங்களில் முதல் பேராசிரியராக இருந்து தழிழ் மொழிக்கு ஏற்றம் கொடுத்தவாறே இயற்றமிழ் வளம்பெற கட்டுரைகளும் பாடல்களும் எழுதியதோடு, இசை மரபு வித்தியா விருத்திச் சங்கத்தையும். ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கத்தினையும் வளர்த்ததோடு கலா நிலையத்திற்கும் வித்திட்டவர் ஆவார். அவர் பெருமையை அறிந்த மாணவர் கூட்டம் மறைநது வருகிறது. அவரிடம் படித்தவர்கள் அவரைப்பற்றி நிறையச் சொல்லவேண்டும் அவர் மட்டக்களப்பையும் யாழ்ப்பாணத்தையும் அணைத்த உயிர்பாலம். அந்த உயிர்பு உயிர்ப்பாகவே நிலவுதல் வேண்டும்...

வெள்ளை நிற மல்லிகையோ
வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியினைக்கு
வாய்த்த மலரெதுவோ
உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுடுவது....

எனக்கு மட்டுமல்ல அனைவர்கும் பிடிக்கும் வேதாந்த சாறு அவர் இயற்றிய கவிதைகள்அவர் இலங்கைக்கே கிடைத்த முத்து.

நாளைய தலைவர்கள்........

வேலென எழுந்து
வில்லென நிமிந்து
புலியெனப் புறப்படு!
நீ ஒரு நெருப்பு!
யாரும் உனக்கில்லை எதிரி
எடு !எடு! கல்வியில் உதிரி

கல்லென இறுகி
கல்வியில் உருகி
நேர் வழிகாட்ட துணிந்து செல்!
நீ ஒரு புயல்!
உனக்கிங்கில்லை தடை
வாழ்கையில் இடர்களை உடை!

கிணற்றுத் தவளையாய் கிடவாதே!
இன்ரநெற்றில் கதைபேசி
ஈமெயிலில் உறவாடி
சற்றிங் செய்து சுற்றி விளையாட
கம்யுட்டர்குள் சென்று
காற்றில் பறக்கும் உலகமடா..

பழந்தரும் திராட்சை செடிகளே!
மணந்தரும் மல்லிகைக் கொடிகளே!
நில்லாதே ! ஓடு! முன்னேறு!
சொல்லாதே ! நீ முடியாதென்று
முடங்கிய பொருளாதாரத்தின்
திறவுகோல்களே!
வேலையின்மையைக்
களையெடுக்கும் வேங்கைகளே!
பாதாளத்தில் படுக்கும்
இலங்கைக்கு முண்டு கொடுக்கும்
முன்னோடிகளே!

உங்களை எங்கள்
மனதில் வெள்ளை விரித்து
புன்னகைப் பூச்சொரிந்து
அன்பினைப் பாலாய் பரிமாறி
முன்னேறி செல்ல வாழ்துகிறோம்.....

09 March 2010

புதிர் கணக்கு

கண்டு பிடியுங்கள்-இந்த
கணக்கை
தேர்தலில் களமாடி
சூது விளையாட
கோடி கோடியாய் கொட்டி
வேடிக்கை பார்க்கும் இவர்கள்
தேச அபிமானிகளாம்
இல்லை இல்லை
அவர்கள் தேச அவமானிகள்.......

மடி நிறைய கடன் வேண்டும்
அரச கூட்டம்- அது
மக்களின் கைகளில் விழுந்ததோ
பெரிய வாட்டம்.
அன்னியன் கையில்- நாட்டை
அடகு வைக்கும் திட்டம்
மக்களுக்கு கொடுத்ததோ
கடன்காரன் பட்டம்....

வேதனையில் உள்ளோரெல்லாம்
வேண்டுவதோ
சமாதான நாட்டம்-ஆனால்
அரசியல்வாதிகள்
போடுகின்ற ஆட்டம்
அங்கொண்டும் இங்கொண்டும்
தேர்தல் கூட்டம்
அதில் அகப்பட்ட மக்கள்
படுவதெல்லாம் அடி, வெடி...

தேர்தலுக்காய் போனது கோடி கோடி
நாட்டில் மக்களுக்கு வந்ததோ பேரிடி
நாம் கூட்டியதெல்லாம் வேதனை- நாட்டில்
காட்டியதெல்லாம் சோதனை

ஆண்டுக்கொருமுறை வந்து வந்து
ஆண்டவரெல்லாம் தந்ததென்ன???
மீண்டும் வருமரசி புத்தாண்டில்
பொருளினை பெருக்குமோ!
நாட்டினைப் பிரிக்குமோ!
மக்களை கழிக்குமோ!- இல்லை
ஒற்றுமை கூட்டுமோ!
புதிர் கணக்கே எங்களுக்கு
புரிய வைப்பார் யாருமுண்டோ????

08 March 2010

பெண்ணே அடைக்கலம் ...













விலாசங்களை காற்றிலே
பறக்கவிட்டு
உல்லாசம் என்றெண்ணி
மதுவில் சிக்கி
மயக்கத்தில் விக்கி
மடிந்துபோகும் ஆண்களுக்கு
பெண்ணே அடைக்கலம்..

சீவியம் செய்ய
சில்லறைகளை கரியாக்கி
நெருப்பினில் ஆவியாகும்
புகையால் பழுக்கும்
நெஞ்சங்கள்
இருப்பினை தொலைத்து
எங்கெங்கோ திரிகையில்
பெண்ணே அடைக்கலம்.

கோட்பாடுகள் நியாயங்கள்-என்று
நட்புக்கு இக்கணம் எழுதும்
சித்தாந்திகளின்
சித்து விளையாட்டில்
சிக்கி சீதறுண்டு
இதயத்தின் காதுகள்
வசை மொழிகேட்டு
வெடிக்கும் வேளை
பெண்ணே அடைக்கலம்.

சிறிய மனதின் பைக்கட்டுக்குள்
குடும்பத்தின் இரும்புச் சுமைகள்
சமூகத்தின் சாக்கடைகள்
இவற்றுடன்,,,,
உதட்டில் மட்டும் புன்ன்டுகைத்து,,,,,
உள்ளத்தால் சூட்டுக்கோல் வைக்கும்
செங்காட்டுப் புலியவள்
காட்டுக்குள்ளும்
பெண்ணே அடைக்கலம்......

05 March 2010

வெட்கம்




உன் வெட்கப் பார்வைகளை
புறக்கி புறக்கி
மூச்சினில் கரைத்து 
இதயத்தில் தெழித்த- என் மனம்
நீ திருகி எறிந்த
எனது வார்த்தைகளை
எண்ணி
ஏக்க புகைமேகம்
கண்களினூடே -பெய்யும்
உவப்பு மழையால்
என் ஆசைப் 
பயிர்களெல்லாம் 
அழிந்து கொண்டிருக்கிறது

உனக்கு தொரியுமா?
உயிர் அணுக்களெல்லாம்
உறைந்து கிடக்கும்
ஆசையை 
கொட்டவேணும் -என்று
தோணுகையில்
உன்னைக் கண்டதும்
அவையெல்லாம்- உன்
முகத்தைப் போலவே
வெட்கி குனிந்து விடுகுதடி

03 March 2010

உலகை வியக்கவைத்தவள்.........

சேய்- உன்
வயிற்றில் பிறந்ததால்
மட்டுமல்ல
செவ்வாயில் சீவனம் செய்ய
சந்திரனில் சஞ்சரிக்க
ரத்தத்தில் உயிர் கலந்து
கடுப்பு பால் தந்த
தாய்- நீ

இவள் விரல் நுனிகள்
தந்தியை மட்டும்
மீட்டவில்லை
சரித்திரம் படைக்கும்
எத்தனையோ மன்னர்களுக்கு
உணவினையும்
ஊட்டி இருக்கின்றது.


இமைகட்கு முள்வேலியிட்டு
சுமைகளை சுகமாக்கி
எங்கள்
கனவு கப்பலுக்கு
விழிகாட்டிய விடிவெள்ளி..
இவள்
பள்ளிக்கூட இதிகாசங்களில்
வெள்ளிச்சரமாய் மின்னும்
முகப்பக்கம்...

தெய்வம்- அது
கண்ணுக்கு தெரியாத
மாயை அல்ல
மதம் பிடித்தோர்
உருவச்சிலைகளும் இல்லை
அது(அவள்)
உயிரை கருவாக்கி
உலகை உருவாக்கி
உன்னை மனிதனாக்கிய
பெண்ணே!

உன்மைகள்
தணலில் கருகும்போது
கயவர்களை கண்களால்
தீயிட்டு எரிக்கும்
கண்ணகி இவள்..
இளமை சக வறுமை
சமன் கொடுமை- இது
ஓளவையார் சமன்பாடு
அதை மாற்றி
இளமை சக அன்பு
சமன் வாழ்கை- என்று
தன்னையே அர்பணிக்கும்
தெரேசா இவள்...

இன்னும்- இவள்
அள்ளி அணைத்து
கொஞ்சிடும் -பேதை
கண்ணில் காதல்
நதி பாச்சும் -மங்கை
மணந்தோர்கு
மாலை சூட்டும் -மடந்தை
தொப்புள் கொடி
உறவு தரும் -அரிவை
தோழில் பிள்ளையை
தூங்கவைக்கும் -தெரிவை
குலத்தை பேணிக்காக்கும் -பேரிளம்பெண்
கும்பிடும் தெய்வமாய் -மூதாட்டி
ஓ...
இவள் பருவங்கள் எல்லாம்- உலகை
புருவம் உயர்த்தி வியக்க வைக்கும்
துருவங்கள் ஆனதப்பா!!!