ADS 468x60

29 April 2010

இன்சொல் மட்டுமே பேசுங்கள்


இன்சொல் மட்டுமே பேசுங்கள்
எல்லாத் தேசத்தாரும், எல்லா நாட்டாரும், எல்லா
நிறத்தாரும், எல்லா சமயத்தாரும் கருத்து வேறுபாடின்றி
ஒப்பமுடிந்த உண்மை வேதம் நமது திருக்குறள் ஒன்றேயாம்.
உலகிலுள்ள எல்லா அறங்களையும் தன்னகத்தே கொண்டு சுருங்கச்
சொல்லி விளங்க வைப்பது திருக்குறள்.
திருமால், குறள் வடிவு கொண்டு இரண்டடியால் மூவுலகையும்
அளந்தவர். வள்ளுவர், தமது குறளின் இரண்டடியால் எல்லா
உலகங்களையும் அளந்தவர்.
திருக்குறள் ஓதுவதற்கு எளிது. மனப்பாடம் செய்வதும்
சுலபம். ஒரு முறை படித்தாலே போதும். உணர்தற்கு அரிது,
வேதங்களிலுள்ள விழுப்பொருள்களை எல்லாம் விளக்கமாக
உரைப்பது. நினைக்கும்தோறும் நெஞ்சில் தெவிட்டாத இன்பத்தை
ஊற்றெடுக்கச் செய்வது.
கடல் தண்ணீர் வற்றிவிட்டாலும் சூரியன் தட்பத்தை
அடைந்தாலும், சந்திரன் வெப்பத்தை அடைந்தாலும் திருக்குறள்
தனது பெருமையினின்றும் குறையாது.
திருக்குறளைத் தொட்டாலும் கை மணக்கும். படித்தாலும் கண்
மணக்கும். கேட்டால் செவிமணக்கும். சொன்னால் வாய் மணக்கும்.
எண்ணினால் இதயம் மணக்கும். அத்தகைய தெய்வ மணம் வீசும்
சீரும் சிறப்பும் உடையது திருக்குறள்.
இன்சொல்லே பேசுகிறவர்களுக்கு உலகில் ஒரு வகையான
துன்பமுமில்லை. எம வாதனையும் கிடையாது. சிவகதி திண்ணமாகக்
கிடைக்கும்.
கனிகள் நிறைந்துள்ள ஓர் மரத்தில் வகையறியா ஒருவன்
சுவைமிகுந்த கனிகளை விலக்கிக் கைப்புடைய காய்களை மென்றதை
ஒக்கும் இன்னாத சொற்களைக் கூறுவோனின் இயல்பு. எனவே
மனத்தூய்மையுடன் வாழ்ந்து இறைவன் திருவருளால்
இன்சொல்லைக்கூறப் பயின்று நாம் அனைவரும் இம்மை
இன்பத்தையும் அடைந்து நற்கதி பெறுவோமாக.

26 April 2010

விவசாய நாடுகள் விற்கப்படும் அபாயம்....

விவசாய நாடுகள் விற்கப்படுவது ஒன்றும் புதிதானதல்ல, இருந்தும் கண்ணுக்கு தெரியாத பகல் கொள்ளை எம்மை போல ஏழைநாடுகளை குறிவைத்து நடத்துவதை புத்திஜீவிகள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் வருத்தம் தருகிறது. அவுட் சோர்ஸிங் என்பது உற்பத்தி, சேவை என அனைத்து துறைகளிலும் கொடி கட்டி பறக்கும் காலமிது. விவசாயம் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன? விவசாயமும் தற்போது ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு அவுட் சோர்ஸ் ஆக தொடங்கி உள்ளது. மற்ற துறைகளில் அவுட் சோர்ஸிங் என்றால் வளரும் நாடுகளுக்கு புதிய வேலை வாய்ப்பு, அன்னிய முதலீடு என்று ஒரு சில பயன்கள் கிடைக்கும். ஆனால் விவசாயம் அவுட் சோர்ஸ் செய்யப்படுவதால் ஏழை நாடுகள் மிகப் பெரிய பட்டினி சாவிற்கு அழைத்து செல்லப்பட இருக்கின்றனர்.

24 April 2010

மீன் பாடும் தேன் நாடு

நீர் ஓடும் நாட்டில்
மீன் பாடக் கேட்டு
நெல் ஆடும் பூமியிது
சில்லென்று தென்றல் வீசி எமை
உல்லாசம் கொஞ்சிம் தங்க நிலம்
ஊரெல்லாம் பால் பொங்கும்
ஏரோடும் வளம் எங்கும்
;


கிழக்கில் கதிர்கள் மேலே கண்டு
உழைக்கும் மக்கள் ஆயிரம்
பசுமை கொஞசும் வயல்கள் கோடி
படுவான் கரையும் சொர்க்கமே
வீரம் மனதில் ஈரம்
கலைகளில் தேன் அமுது ஊறுமிடம்
தமிழில் இனிய சுவைகள் வந்து
அமிழ்தாய் காதில் பாயும் நாடு
இதுதான் இதுதான் இயற்கையின் வீடுவளைந்து நெழிந்து ஓடும் வாவி
மட்டக்களப்பின் கோலங்கள்
நாட்டுக் கூத்து பாட்டுக் கேட்டு
நாகரீகம் வளர்ந்த நிலம்
விபுலா நந்தர் போலே
மண்டுர் புலவர்மணியும் வாழ்ந்த இடம்
வந்தோர் எல்லாம் வாழவைக்கும்
செந்தேன் சிந்தும் சொர்க்காபுரி
இதுதான் இதுதான் தமிழரின் நாடு.

22 April 2010

தமிழ் முன்னேற்றம் அடைய என்ன செய்யவேண்டும்


மதமும் இலக்கணமும்
உதாரணமாக மக்கள், தேவர், நரகர், உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது?
இனி பள்ளிக் கூடங்களில் பிள்ளைகளுக்குத் தமிழ் இலக்கியத்துக்குப் புத்தகங்கள் எவை? கம்பராமாயணம், பாரதம், பாகவதம், பெரியபுராணம், தேவாரம், திருவாய்மொழி போன்ற மத தத்துவங்களையும், ஆரிய மத தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லாமல் வேறு இலக்கியங்கள் மிதந்து காணப்படுகின்றனவா? பண்டிதர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராண ஞானம்தானே அதிகமாகயிருக்கின்றது?
மேல் நாட்டு இலக்கியம்
மேல்நாட்டுப் புலவர்கள், மேல் நாட்டு இலக்கியங்கள் ஆகியவைகளுக்கு இருக்கும் பெருமையும், அறிவும் நம் தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கின்றது என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இங்கிலாந்து வேண்டுமா? என்றால் இங்கிலீஷ் மகன் ஷேக்ஸ்பியர் வேண்டும் என்பானாம். நாம் எதைக் கேட்பது? இந்தியா வேண்டுமா? கம்பராமாயணம் வேண்டுமா என்றால் உண்மைத் தமிழ் மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்றுதானே சொல்லுவான்.
மேல் நாட்டில்தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ் நாட்டில் அறிவாளிகள் இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை. மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த இலக்கியங்களை மத சம்பந்தமின்றி பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால் நூற்றுக் கணக்காக மேல்நாட்டு இலக்கியங்களும் பண்டிதர்களும் போற்றப்படுகிறார்கள்.
கீழ் நாட்டில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியம் உலகத்தால் மதிக்கப்படுகின்றன? எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப்படுகிறார்கள்? தாகூர் அவர்கள் கவிக்கு ஆகப் போற்றப்படலாம். ஆகவே மதம், கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம் தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல் அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவர்களாவார்கள்.
மலத்தில் அரிசி பொறுக்கலாமா? கம்ப ராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிறதாகச் சொல்லுகிறார்கள். இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவு தான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அது போல்தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அதில் தமிழ் மக்களை எவ் வளவு இழிவாகக்குறிப்பிடப்பட்டிருக் கிறது. தமிழரின் சரித்திர கால எதிரிகளை எவ்வளவு மேன்மையாகக் குறிப்பிடப்பட் டிருக்கிறது. சுயமரியாதையை விரும்பு கிறவன் எப்படி கம்பராமாயண இலக்கி யத்தைப் படிப்பான்? இன்று கம்பராமா யணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா என்று நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.
கடவுளால் மொழி உயராது தமிழ் மொழியின் பெருமை பரமசிவனுடைய டமாரத்திலிருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய மொழி என்றோ, சொல்லி விடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததாலும், முதலை உண்டபாலனை அழைத்ததாலும், எலும்பைப் பெண்ணாக்கினதாலும், தமிழ் வளர்ச்சியையும், மேன்மையையும் குறைக்கத்தான் பயன்படும்.
பரமசிவனுக்குகந்த மொழி தமிழ் என்றால் வைணவனும் முஸ்லிமும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றியும் அந்தப்படியிருந்தால் பார்ப்பான் தமிழ் மொழியைச் சூத்திர பாஷை என்றும், அதைக்காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா? என்று யோசித்துப் பாருங்கள்.
இந்திப் புரட்டு
இன்று தமிழ் நாட்டில் வந்து தமிழ் கற்று வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்பனர்களே இந்தி பாஷை இந்தியப்பாஷை ஆகவேண்டுமென்று முயற்சித்து வெற்றி பெற்றுவருகிறார்கள். கோர்ட்பாஷை, அரசாங்க பாஷை ஆகியவை எல்லாம் இந்தியமயமாக வேண்டும் என்கிறார்கள். காரணம் கேட்டால் இந்தி பாஷையில் துளசிதாஸ் ராமாயணம் நன்றாய் விளங்குமென்கிறார்கள்.
தமிழ்ப் பண்டிதர்கள் பெரும்பாலோர்க்கு இதைப்பற்றிச் சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை; தமிழ்ப் பண்டிதர்கள் இந்த அரசியல்வாதிகளின் கூச்சலுக்கும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கும் பயந்து கொண்டு வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.
செத்த பாம்பு
பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். பொதுப் பணம் சமஸ்கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது மக்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவது செலவாக வேண்டும்? தமிழ் மக்கள் யாரும் இதைப் பற்றிக் கவனிப்பதில்லை. தமிழ் தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் சில பண்டிதர்கள் தான் சத்தம் போடுகிறார்கள், ஆனால் சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் கேபினெட் மெம்பர்கள், அய்க்கோர்ட் ஜட்ஜுகள் முதல் எல்லா பார்ப்பன அதிகாரிகளும் பாடுபடுகிறார்கள். நம்ம பெரிய அதிகாரிகளுக்கோ, பெரிய செல்வாக்கும் செல்வமும், உள்ளவர்களுக்கோ தமிழைப் பற்றிக் கவலையும் இல்லை. தமிழைப் பற்றி அதிகம் பேருக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது.
தமிழாபிமானம் தேசத்துரோகம்!

தமிழினிடத்தில் ஒருவன் அபிமானியாக இருந்தாலே அவன் தேசத்துரோகி, வகுப்புவாதி, பிராமணத்துவேஷி என்றொல்லாம் ஆய்விடுகிறான். ஆதலால் கூட்டத்துக்கு வரக்கூட நமது மந்திரிகள் பயப்படுகிறார்கள். தமிழின் பரிதாப நிலைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? தமிழ் மொழியில், ஒரு சிறு மாற்றமோ, முற்போக்கோ செய்யக்கூட ஒரு தமிழ் அபிமானியும் முயற்சிப்பதில்லை. யாராவது முயற்சித்தாலும் ஆதரவளிப்பதுமில்லை. தற்கால நிலைக்கு தமிழ் போதியதாகவும், சவுகரியமுள்ளதாகவும் ஆக்க யார் முயற்சித்தார்கள்? மாறுதல் அவசியம்
மேல் நாட்டு மொழிகள் எவ்வளவு மாற்றமடைந்து வருகின்றன; எழுத்துகளில் எவ்வளவு மாறுதல் செய்து வருகிறார்கள். ரஷ்யாவில் சில பழைய எழுத்துகளை எடுத்து விட்டார்கள். புதிய எழுத்துகள் சேர்த்தார்கள். அமெரிக்காவில் எழுத்துக் கூட்டுவதாகிய இஸ்பெல்லிங் முறையை மாற்றி விட்டார்கள். துருக்கியில் துருக்கி மொழிக்கு உண்டான எழுத்துகளையே அடியோடு எடுத்துவிட்டு ஆங்கில எழுத்துகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். தமிழர்கள் தமிழுக்காக நமக்கு விவரம் தெரிந்த காலமாய் என்ன காரியம் செய்தார்கள்? காலத்துக்கு ஏற்றமாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது; மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனாவான்.
தமிழ் எழுத்துகளில் ஒரு சில மாற்றம் செய்தேன். அநேக பண்டிதர்கள் எனக்கு நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களேயல்லாமல், ஒருவராவது அம்முயற்சிக்கு ஆதரவளித்தவர்கள் அல்லர். இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.
ஆனால், தகுதி உள்ளவர்கள் எவரும் வெளிவராவிட்டால் நான் என்செய்வது? என்னைக் குறைகூறவோ, திருத்தவோ, முயற்சிப்பதின் மூலமாகவாவது இதற்கு ஒரு வழி பிறக்காதா என்றுதான் துணிந்தேன். இதுவரை யாரும் அதை லட்சியம் செய்யவில்லை. ஆனாலும் நான் அம்முறையிலேயே பத்திரிகைகள் நடத்துகிறேன். அம்முறையிலேயே 10, 20 புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறேன். இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கிறது.
இவைகளையெல்லாம் பார்ப்பனர்களே செய்வதாகப் பாசாங்கு செய்து பார்ப்பனர்கள் தமிழின் மீது ஆதிக்கம் செலுத்தப் பார்த்தார்கள். அநேக பண்டிதர்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்தார்கள்.
எங்கும் திருநாள்
எப்படி ஆனாலும் தமிழ் மொழி உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றியமையாதது, அதன் மூலம் தமிழ் மக்கள் ஒன்று சேர வசதி உண்டு.
தீபாவளி போன்ற மூட நம்பிக்கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானதுமான பண்டிகைகள் கொண்டாடுவதைவிட இப்படித் தமிழ்த்திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும், மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாகத் திருநாள்களைப் பரப்பவேண்டும். நமது நண்பர்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதையும் இருந்தாலும் ஒரு திருநாள் வேண்டி இருக்கிறதால் தீபாவளியும், மாரிப் பண்டிகையையும் கொண்டாட ஆசைப்படுகிறார்கள். ஆதலால் தக்கது செய்யவேண்டுகிறேன்.
தந்தை பெரியார் - " விடுதலை" 1-5-1949

20 April 2010

காப்பியங்கள்

காப்பியங்கள் உலகிலுள்ள பல மொழிகளிலும் படைக்கப்பட்டு உள்ளன. அவை அந்தந்த நாட்டுப் பண்பாட்டின் அடிப்படையில் அமைந்து     காணப்படுகின்றன. அக்காப்பியங்கள் பற்றிய செய்திகளைக் கீழே காணலாம்.

1.5.1 உலக மொழிகளில் காப்பியங்கள்
    உலக மொழிகள் பலவற்றிலும் தொன்று தொட்டுக் காப்பியம் என்னும் இலக்கிய வகை படைக்கப்பட்டு வந்திருக்கிறது. அவற்றுள் சிலவற்றை காணலாம்.
காப்பியத்தின் பெயர்ஆசிரியர்மொழி / நாடு
இலியாது, ஒதீஸி்ஹோமர்கிரேக்க மொழி
ஆர்லண்டோ இன்ன
மராட்டோ
பயர்டோஇத்தாலி
ஷாநாமாஅபுல்காசிம்
மன்சூர்
பாரசீகம்
மேமெக்காசெக்மொழி
வாண்டன் ஓஸ்ரெய்னால்ட்பிளீமிஷ்டச்சு மொழி


1.5.2 இந்திய மொழிக் காப்பியங்கள்

    இந்திய மொழிகளிலும் பழங்காலம் முதல் காப்பியப் படைப்புகள் தோன்றி வந்துள்ளன. பின்வரும் இந்தியக் காப்பியங்கள் குறிப்பிடத் தக்கவை ஆகும்.
காப்பியத்தின் பெயர்
ஆசிரியர்
மொழி
இராமாயணம்வால்மீகிவடமொழி
மகாபாரதம்வியாசர்வடமொழி
இராம சரித மானஸ்துளசிதாசர்ஹிந்தி
குமார சம்பவம்,
இரகு வம்சம்
காளிதாசர்வடமொழி
நூர் நாமாஅமீர் குஸ்ருபாரசீகம்
சுதாம சரித்திரம்பக்தசிரோமணிகுஜராத்தி
பத்மாவதிஆலாவுல்வங்காளம்
பிரபுலிங்க லீலைசாமரசன்கன்னடம்
குமார சம்பவம்நன்னிசோடதெலுங்கு

1.5.3 தமிழில் காப்பியங்கள்
    தமிழில் காலந்தோறும் தோன்றிய காப்பியங்களை இதிகாசம், புராணம், பெருங்காப்பியம், சிறுகாப்பியம், கதைப்பாடல் எனத் தமிழறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இருப்பினும் வடநூலார் வடமொழியில் கவியால் எழுதப்படும் அனைத்தையும் காவியம் என்னும் சொல்லால் குறித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
 இதிகாசம்
கடவுளரும் கடவுளின் அம்சம் ஆனவர்களும்,மானிடராகப் பிறந்து,
பல தெய்வீகச் செயல்களை ஆற்றி, இறுதியில் தெய்வீக நிலை
எய்துவதைப் பற்றி விரிவாகப் பேசுவன இதிகாசங்கள் எனப்படும்.
(இதிகாசம் என்னும் சொல்லின் பொருள் இவ்வாறு நடந்தது
என்பதாம்.)
 புராணம்
    கடவுளர் பற்றிய புராணங்களில் தெய்வங்கள், தெய்வீக நிலையில் நின்று செயல்படுகின்றன. இத்தெய்வங்களின் அற்புதச்
செயல்கள் ஒரு தலத்தைச் (இடம்) சார்ந்து அமைகின்ற போது அதைப் பற்றிக் கூறும் கதைப் பாடல்கள் தல புராணங்கள் என்று
பெயர் பெறுகின்றன.
 காப்பியம்
    சிறப்பு மிக்க, மனிதப் பாத்திரங்கள், நல்வினை தீவினைப் பலன்களை உலக வாழ்க்கையில் அனுபவித்து, நல்வினை ஆற்றி, இறுதியில் இறவா இன்பமாகிய இறைநிலை எய்துதல் பற்றி
விரிவாகச் சிறப்பித்துக் கூறுவனவே காப்பியங்கள் எனப்படுகின்றன.
    தமிழில் காப்பியப் படைப்பு, இரண்டாம் நூற்றாண்டின்
பிற்பகுதியிலிருந்து தொடங்கியது எனலாம். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும், சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையும்
தமிழில் முதற்     காப்பியங்களாகப்     போற்றப்படுகின்றன.
இவையிரண்டும் ஐம்பெருங் காப்பியங்களில் இடம் பெற்றுள்ளன.
இளங்கோவடிகளால்     இயற்றப்பட்ட      சிலப்பதிகாரம்
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று சான்றோர்களால் பாராட்டப்படுகின்றது. அதைத்     தொடர்ந்து ஒவ்வொரு காலப் பகுதியிலும் காப்பியப் படைப்பு நிகழ்ந்த வண்ணமாகவே இருந்திருக்கின்றது. அவற்றுள்  சில குறிப்பிடத் தக்க காப்பியங்களைச் சுட்டிக் காட்டலாம்.

காப்பியத்தின் பெயர்
ஆசிரியர்
சமயம்
சிலப்பதிகாரம்இளங்கோவடிகள்சமணம்
சீவகசிந்தாமணிதிருத்தக்கதேவர்சமணம்
சூளாமணிதோலாமொழித்தேவர்சமணம்
மணிமேகலைசீத்தலைச்
சாத்தனார்
பௌத்தம்
குண்டலகேசிநாதகுத்தனார்பௌத்தம்
இராமாயணம்கம்பர்வைணவம்
பாரதம்வில்லிப்புத்தூரார்வைணவம்
பெரியபுராணம்சேக்கிழார்சைவம்
திருவிளையாடற்புராணம்பரஞ்சோதி முனிவர்சைவம்
சீறாப்புராணம்உமறுப்புலவர்இஸ்லாம்
தேம்பாவணிவீரமாமுனிவர்கிறித்துவம்
இரட்சண்ய
யாத்திரிகம்
கிருஷ்ணப்பிள்ளைகிறித்துவம்
    இதிகாசங்களிலிருந்து ஏதேனும் ஒரு பகுதியை எடுத்துக்
கொண்டு, விரிவாக்கிக் காப்பிய வடிவில் தரும் இலக்கியத்தை,
கண்ட காவியம் என்று வடமொழி அறிஞர் குறிப்பிடுவர்.
அத்தகைய முயற்சி தமிழிலும் நிகழ்ந்தது. நைடதம் (அதிவீர ராம
பாண்டியர்),     நளவெண்பா     (புகழேந்திப்புலவர்),
குசேலோபாக்கியானம்     (வல்லூர் தேவராசப் பிள்ளை),
அரிச்சந்திர புராணம் (நல்லூர் வீரைகவிராயர்) முதலியவை இந்த வகைக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும்.
    இன்றுவரை     தமிழில்     உருவான     காப்பியங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 150 ஆகும்.
தமிழ்க் காப்பியங்களின் அமைப்புக்கு ஓர் எடுத்துக் காட்டாகச் சிலப்பதிகாரம்பற்றிய செய்திகளை இங்குக் காண்போம்.
    சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். மகளிர் காலில் அணியும் அணி சிலம்பு. சிலம்பால் விளைந்த நூல் ஆதலின்சிலப்பதிகாரம்     என்றாயிற்று.     கண்ணகியின் சிலம்பும், பாண்டிமாதேவியின்     சிலம்பும்     கதைக்கு அடிப்படையானவை. இக்காப்பியம் மூன்று காண்டங்களையும் 30 காதைகளையும் கொண்டது.
சோழ நாட்டில் புகார் நகரில் பிறந்த கண்ணகி, பாண்டி நாட்டு
மதுரையை அடைந்து, கணவனை இழந்து, சேர நாட்டில் புகுந்து தெய்வமாகியதே கதையாம். இதனைச் சமணக் காப்பியம் என்பர் அறிஞர்.

1.5.4 இக்காலக் காப்பியங்கள்
    பழையன கழிதலையும், புதியன புகுதலையும் காலந்தோறும்
தோன்றுகின்ற இலக்கியங்களில் காணலாம். அவ்வகையில், தமிழ்க்
காப்பிய வளர்ச்சிப் போக்கும் அமைந்துள்ளது. பழங்காலத்தில் சமய அடிப்படையில் பல காப்பியங்கள் எழுந்தன. இடைக்காலத்தில் சமயங்களை வளர்த்த சமயச் சான்றோர் வரலாறுகளைப் பாடுவது மிகுதியாகக் காணப்பட்டது. குறிப்பாகச் சோழர் காலத்தில்தான் மிகுதியான காப்பியங்கள் தோன்றின. அதனால் தமிழிலக்கிய வரலாற்றில் சோழர் காலத்தைக் காப்பிய இலக்கியக் காலம் என்று தமிழறிஞர்கள் கூறுவார்கள்.     கி.பி. 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் மிகுதியும் புராண நூல்கள் எழுந்தன. சோழர் காலத்தை அடுத்தும் இக்காலத்திலும் கதைப் பாடல்கள் மிகுதியாகத் தோன்றியுள்ளன.
    இக்காலத்தில் காப்பிய இலக்கணங்களுள் ஒரு சிலவற்றை மட்டும் பின்பற்றி அமைக்கப்பட்ட செய்யுள் படைப்புகள் சிறு காப்பியம், சிறு      காவியம், குறுங்காப்பியம், குறுங்காவியம்     என்று     பெயரிட்டு வழங்கப்படுகின்றன. இக்காவியங்கள் மொழிபெயர்ப்பாகவும், தழுவல் காப்பியங்களாகவும் இருக்கின்றன. அண்மைக் காலம் வரையிலும் தோன்றிய தமிழ்க் காப்பியங்கள் கீழே பட்டியலிட்டுத் தரப்பட்டுள்ளன.
பாரதியார்
-
கண்ணன் பாட்டு,
குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம்.
பாரதிதாசன்
-
பாண்டியன் பரிசு, தமிழச்சியின்
கத்தி, இருண்ட வீடு, எதிர்பாராத முத்தம், சஞ்சீவி பர்வதத்தின்
சாரல், வீரத்தாய், புரட்சிக்கவி.
கவிமணி
-
மருமக்கள் வழி மான்மியம்
கண்ணதாசன்
-
ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி,
ஏசு காவியம்.
முடியரசன்
-
பூங்கொடி, வீரகாவியம்
கவியோகி சுத்தானந்த
பாரதியார்
-
பாரத சக்தி மகா காவியம்
டாக்டர் சாலை
இளந்திரையன்
-
சிலம்பின் சிறுநகை
தி. வெங்கட
கிருஷ்ணய்யங்கார்
-
இராகவ காவியம்
புலவர் குழந்தை
-
இராவண காவியம்
வாணிதாசன்
-
கொடிமுல்லை
அண்ணாதாசன்
-
கலைஞர் காவியம்
தமிழ் ஒளி
-
மாதவி காவியம்
இக்காலக் காப்பியத்தைப் பற்றிய விளக்கத்தை ஒரு சான்று கொண்டு நோக்கி உணரலாம்.
 பாரதியார் - பாஞ்சாலி சபதம்
    பாஞ்சாலி சபதம், பாரதக் கதையின் ஒரு    பகுதியாகத்
திகழ்கின்றது. சூதில் அனைத்தையும் இழக்கின்றான் தருமன். அந்நிலையில் துச்சாதனன் திரௌபதியின் கூந்தல் பற்றி இழுத்துச் சபைக்குக் கொண்டு வருகின்றான். நாணழிந்த திரௌபதி, சபையோர் முன்னிலையில் தான் அடைந்த அவமானத்தால் ஆத்திரமடைந்து, கொடூரமான ஒரு சபதம் செய்கின்றாள். தொடர்ந்து வீமன், அர்ச்சுனன் முதலானோரும் சபதம் எடுக்கின்றனர்.இதுவே இக்கதை பொதி பாடலின் கருவாகும். இக்கதைப் பாடல் குறியீட்டு நிலையில் இந்திய விடுதலை உணர்வைப் பிரதிபலிக்கின்றது. இக்காவியம் இரண்டு பாகங்களையும் 5 சருக்கங்களையும் 308 பாடல்களையும் கொண்டது.

13 April 2010

விகிர்த்தி புதவருடப் பிறப்பு

சங்கு முழங்க 
தானை பல வென்று 
எங்கும் உலகாழும் -தமிழன்
சிங்க நடைபோட்டு 
வங்கக் கடல் சூழ
வாழ்த்து மழைமாரி- தமிழர் 
வாழும் வரை பெய்ய 
ஆண்டே வருக 
புத்தாண்டே வருக...

தமிழர் காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். தமிழ் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இதனால் இவை சூரிய மாதங்கள் எனப்படுகின்றன. அவ்வாறு வரும் ஆண்டுகளை 'பிரபவ முதல் அக்ஷய' வரை அறுபது தமிழ் வருடங்களாக அறுபது பெயர்களிட்டு அழைக்கின்றனர்.இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. 

சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு ஆகும். அத்துடன் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடுவர்.

இன்று செவ்வாய்க்கிழமை பங்குனி மாதம் 30ஆம் திகதி வைகறை 5 மணி 21 நிமிடத்தில் (14.04.2010) விகிர்தி வருடம் பிறப்பதாகவும்இ அன்று பின்னிரவு 1 மணி 21 நிமிடம் முதல் சித்திரை முதலாம் திகதி புதன்கிழமை காலை 9 மணி 21 நிமிடம் வரை விஷூ புண்ணியகாலமாகுமென வாக்கிய பஞ்சாங்கமும் நாளை புதன்கிழமை 14.04.2010 காலை 6 மணி 57 நிமிடத்தில் விகிர்தி வரு டம் பிறப்பதாகவும்இ செவ்வாய் இரவு 2 மணி 57 நிமிடத்திலிருந்து புதன் முற்பகல் 10 மணி 57 நிமிடம் வரையும் புண்ணி யகாலமாகுமெனத் திருக்கணித பஞ்சாங் கமும்  தெரிவிக்கின்றன.புதிய விகிர்த்தி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி எதிர்வரும் 14ம் திகதி சித்திரை மாதம் 4ம் திகதி காலை 6.57க்கு மேடலக்கிணமும் ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் அமாவாசை நிதியும் மரணயோகமும் கூடிய சுபவேளையில் பிறக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் பங்குனி மாதம் 31ம் திகதி 14ம் திகதி புதன்கிழமை அதிகாலை 5.23க்கு மீன லக்ணம் ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் அமாவாசைத் திதி மரணயோகம் கூடியவேளையில் புதுவருடம் பிறக்கிறது என சுட்டிக் காட்டப்படுகிறது. 

செவ்வாய்க்கிழமை இரவு 2.57முதல் புதன்கிழமை 10.57வரையுள்ள காலம் புண்ணிய காலமாக திருக்கணித பஞ்சாங்கமும் செவ்வாய்க்கிழமை பின் இரவு 12.23முதல் புதன் காலை 8.23 வரையும் புண்ணியகாலம் என்றும் வாக்கிய பஞ்சாங்கம் குறிப்பிட்டுள்ளது. இப்புண்ணிய காலத்தில் மருந்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து புத்தாண்டை உடுத்தி சித்திரை கொண்டாடலாம் என வேண்டப்படுகிறது. புது வருட ஆதாய பலன் இங்கே பார்க்கலாம்.....

நம்பினார் கெடுவதில்லை!


களங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி.
இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார். இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது. “பொள்ளா’ என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர்.
இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை; நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத் தார். ஒருநாள், அவர் தன் மனைவியுடன் வெளியூர் செல்ல இருந்ததால், மகனிடம், “இன்று, நீ போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்து வா…’ என்றார்.
மகிழ்ச்சியடைந்த சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத் தைப் படைத்தான்.
“அப்பனே, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக் குப் போய் விட்டார். உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று விடாமல் சாப்பிடு. குருகுலத்துக்கு கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர் கோபிப்பார். விரைவில் சாப்பிடப்பா…’ என்றான்.
பிள்ளையார் என்றாவது சாப்பிட்டதுண்டா?
அவர் கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார். பையனுக்கு அழுகை வந்தது…
“இதோ பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில் முட்டி மோதி இறப்பேன்…’ என்று சொல்லியபடியே, தூணில் முட்டி அழுதான்.
அவனது களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில் இருந்து எழுந்து வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார். தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட வடுவே மறைந்து விட்டது. நம்பியின் விருப்பப்படியே அத்தனை பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார்.
அவரிடம், “விநாயகா! எப் படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி விட்டது. நான் அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக் கொடுத்திருப் பாரோ, அதை நீயே சொல்லிக் கொடேன்…’ என்றார் நம்பி.
அவனுக்கு அனைத்து ஞானத் தையும் போதித்து, மறைந்து விட்டார் விநாயகர்.
மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர் திரும்பியதும் நடந்ததையெல்லாம் சொன்னான். அவர் கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த விஷயம் ராஜராஜசோழனுக்கு எட்டியது. அவன் நம்பியாண்டார் நம்பியின் இல்லத்துக்கே வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர் சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான்.
அதன்படியே, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார் நம்பி. மன்னனும், மக்களும் ஆச்சரியப் பட்டனர். அவரது மகிமையை உணர்ந்த மன்னன், தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில் மூவர் பாடிய தேவாரமும், தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச் சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டான்.
அதன்படி, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில் இருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி அவற்றை 11 திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு இசையின்பத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
குழந்தை போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.

12 April 2010


11 April 2010

எழிதாய் சம்பாதிக்க என்ன வழி?

இன்றைய சூழ்நிலையில் எளிய முறையில் சம்பாதிக்க பைனான்ஸ் கம்பெனி தான் சிறந்த வழி. ஒரு பைனான்ஸ் கம்பெனி தொடங்குவது முதல் மொத்த காசையும் ஆட்டயப் போட்டுக்கிட்டு எஸ்கேப் ஆவது வரை ஏதோ என்னால் முடிந்த யோசனைகதேவையான பொருட்கள்: நல்ல கட்டிடம் : 1 இணையதளம்: 1 மேனேஜர்: 2 அல்ல்து 3ரிசப்சனிஸ்ட் :2 (அழகாகஇருப்பது அவசியம்தொலைபேசி இணைப்புகள் : 3 அல்லது 4செக்யூரிட்டிகள் : 2 மேசை நாற்காலிகள்தேவையானஅளவு  லர்விளக்குகள் : தேவையான அளவு
செய்முறை :
1) முதலில் நகர்புறத்தின் அல்லது ஒதுக்குப் புறமாக எவ்வளவு கேட்டாலும் ட்வான்ஸ் கொடுத்து ஒரு பிரம்மாண்டக்கட்டிடத்தை வாடகைகுப் பிடித்துக் கொள்ளவும்.அதன்பிறகு கொஞ்சம் செலவுசெய்து கட்டிடத்தின் வெளியே ஸ்டீல்மோல்டிங் செய்து கொள்ளவும்
2) மேஜை நாற்காலிகள் நாள் வாடகைக்குப் பிடித்து வைத்துக் கொள்ளவும்அதற்கும் வாடகை கொடுக்கத்தேவையிருக்காதுஎஸ்கேப் ஆகி போகும் போது அதை வைத்துவிட்டுப் போவதால் ஏமாந்தவர்கள் அதைத்தூக்கிஅடித்து விளையாட வசதிப்படும்.
3)சாப்ட்வேர் படித்தவர்கள் புதிய நபர்கள் தேவை என பேப்பரில் விளம்பரம் செய்து அவர்களில்நல்லதாகப் 10 பேரைசெகச்ட் செய்து பின்னர் அவர்களிடம் நமது ஜில்பான்சி கம்பெனிக்கு ஒரு நல்ல இணையத் தளம் வடிவமைத்துத்தருமாறும் அதை வைத்துத் தான் அவர்களின் திறனை கண்டு பின்னர் அப்பாயின்மென்ட் லட்டர் தருவதாகவும்சொல்லி நல்ல கலர்கலராக வெப்சைட் ஓப்பன்செய்துகொள்ளவும்.அவர்களுக்கும் அல்வா தான்அதேபோல நல்லஅடிவாங்கும் திறன் கொண்ட அப்பாவிகள் சிலரை ஆபீஸ் பணியாளர்களாக அமர்த்த வேண்டும்.கடைசியில் அவர்கள்தான் மாட்டிக் கொண்டு முழிப்பார்கள்.
4) நமீதாநயன்தாரா போன்ற நல்ல கலர் பிகர்களைத் தேர்வு செய்து அவர்களை ரிசப்சனிஸ்ட் வேலைக்கு அமர்த்தவேண்டும்.அவர்களுக்கு எதிராக ரிசப்சனில் சோபா செட்டுகளைப் போட்டுவிட்டால் போதும் கூட்டம் நாளுக்குநாள்அதிகரிக்கும்.
5)பிரைவேட் செக்யூரிட்டி சென்டரில் நல்ல ஆஜானுபாகுவான பேரை கேட்டு வாங்கி அருகிலேயே வைத்துக்கொள்ளவும்இதன் மூலம் பணத்தை திருப்பிக்கேட்டு சண்டை போட நினைத்துக் கொண்டு வருபவர்கள் ஜம்ப்ஆகிவிடுவார்கள்.
)முதலில் வைப்புத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதாமாதம் ரூபாய் 26 ஆயிரம்வாரம்ஒருவருக்கு குலுக்கல் முறையில் ஹோண்டா சிட்டி கார் என 10 மாதங்களுக்குத் தரப்படும் என டிவி,பத்திரிக்கைகளில்விளம்பரம் செய்யலாம்இலவசம் என்றாலே போதும் நம் மக்கள் எதைப் பத்தியும் கண்டுகொள்ளாமல் தங்கள்காசுகளை அள்ளிக்கொண்டு வந்து கொட்டி விடுவார்கள்.
7) செலவைக் கணக்கில் கொள்ளாமல் விளம்பரங்களையும் ஸ்பான்சர்களை அள்ளி இறைக்கவும்.அது மட்டுமின்றிஒரு நபர் மற்றொரு நபரை சேர்த்துவிட்டால் ஒரு தங்க நாணயம் எனஅள்ளிவிட வேண்டும் . நமது ஆட்களில் ஒரு 10பேருக்கு தங்க நாணயக் கொடுப்பது போல போட்டோ எடுத்து அதை ரிசப்சனில் மாட்டி வைத்தால் போதும்இதனால்நமது ஜில்பான்சிகம்பெனியின் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை குபுகுபுவென உயர்ந்துவிடும்.
இது போல செய்தால் ஒரு மாதத்தில் எப்படியும் 100 கோடியை எட்டிவிடலாம்அத்தோடு அதை தூக்கிக் கொண்டுஎஸ்கேப் ஆகிவிடலாம்இதற்குப் பிறகு மட்டுமே சுதாரிக்கும் நம் தமிழக மக்கள் பின்னர் வாயிலும் வயித்திலும்அடித்துக் கொண்டு டிவியில் பேட்டி கொடுப்பார்கள்பிறகு ஏமாந்தோர் அசோசியேசன் அமைத்துப் புகார்கொடுப்பார்கள்பின்னர் காவல்துறை வலைவீசித் தேடும்.எனவே நாம் குளங்களிலும் கடல்களிலும் குளிக்காமல்இருப்பது நலம்.
ஆயிரம் கலைமகள் சபாஆயிரம் அனுபவ் குரூப் என கோடி கோடியாய் சுருட்டி பாடம்புகட்டினாலும் நம்தமிழ்மக்களுக்கு அறிவே வராதுநாளைக்கே நீங்கள் ஒரு பைனான்ஸ் கம்பெனிஆரம்பித்து டபுள் வட்டி தருவதாய்சொன்னால் கூட அதற்கென ஒரு கூட்டம் இருக்கிறது.ஆலோசனை மட்டும் தான் நான் சொல்ல முடியும்மத்தத நீங்கதான் செய்யனும்அப்படி யாராவதுஇதை பாலோ செய்து ஒரு நல்ல தொகை அடித்தால் தயவுசெய்து எனக்கும் ஒருஷேர் தருமாறுபணிவோடு வேண்டுகிறேன்பணம் கிடைத்தால் நான் வாங்கிக் கொள்கிறேன்வேறுஏதாவதுகிடைத்தால்?? என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.., விடு ஜூட்!!!!!!!!!!