ADS 468x60

31 October 2010

மரம் மனிதனுக்கு வரம்...



நமக்குள் உயிர் இருப்பதுபோல மரத்துக்கும் உயிர் உணர்வுகள் இருக்கிறது, அதாலதான்
மரம் உனக்கு நிழலாகிறது,
குடிக்க நீராகிறது,
குளிக்க கொட்டாகிறது,
இன்னும் 
குருவிக்கு கூடு,
மிருகத்துக்கு காடு,
மருந்துக்கு இலை, 
மனதுக்கு தென்றல், 
விருந்துண்ண பழம், 
விளையாட கிட்டிப்பொல் இன்னும் எத்தனை எண்ணவும் முடியாது! மண்ணில் நாம் பெற்ற இன்பம் மரங்கள் தந்த வரமல்லவா!

15 October 2010

சத்தி முழக்கம்....

அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்தனுதே
கிரிவர விந்த்ய ஸிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாசினி ஜிஸ்துனுதே
பகவதி ஹே ஸிதிகண்ட குடும்பினி
பூரி குடும்பினி பூரி க்ருதே
ஜய ஜயஹே மஹிஷாசுரமர்த்தினி
ரம்ய கபர்த்தினி ஷைலஸுதே!

என் வலைப் பூக்களில் வலம் வரும் மண்வாசனை மாறாத பதிவுகளை ஊக்குவிக்கும் உங்கள் அனைவருhர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகலந்த வணக்கங்கள்.. இந்த புனித நவராத்திரி நாட்களை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு மாநகரமே விழாக்கோலம் பூணத் தொடங்கி விட்டது... எங்கள் தேனூர் அதற்கு விதிவிலக்கல்ல.. தேத்தாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் நவராத்ரி பெருவிழா எடுப்பது வழக்கம், அதுபோல் படபத்திர காளி அன்னை ஆலயத்திலும் விழா நடைபெறுகிறது.. இவற்றை முன்னிட்டு தேத்ததத்தீவு இந்து இளைஞர் மன்றத்தினர் சக்தி முழக்கம் எனும் ஓர் இறுவட்டு சென்ற வருடம் வெளியிட்டு இருந்தனர்... அதில் ஓர் பாடலை இங்கு இடுகிறேன்.....


05 October 2010

களுகு மலைப் பத்து.

களுகு மலைப் பத்து இது கருத்துடைய சொத்து தொழுவதுக்கு முத்து இது கந்தனின் சித்து.. கதிர்காம் யாத்திரிகர்கள் இதை கைத்தடியாய் பிடித்து கந்தனருள் பெற்றதுதான் ஆயிரம்...  தேத்தாத்தீவு இந்து இளைஞர் மன்றத்தினர் இதனை பெருமையுடன் அளிக்கை செய்கின்றனர்.

01 October 2010

சிறுவர்கள் எமது எதிர்காலத்தின் நம்பிக்கைச் சொத்தாகும்

இன்றய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்பதற்கு இலக்கணமாக பல வளர்முக மேற்கத்தய நாடுகளுக்கு உரித்தான சிறுவர்கள் மேதைகளாகவும், ஆய்வாளர்களாகவும் உருவாக்கப்பட்டு அவர்கள் தான் கணிசமான அளவு கீழைத்தேய நாடுகளை வழிநடத்தும் துர்ப்பாக்கிய நிலையில் இருப்பது வருத்தத்திற்கும் திருத்தத்திற்கும் உரியதாகும். சிறுவர்கள் சார்பாக இன்று உலகலாவிய ரீதியில் பெரும் முக்கியத்துவம் செலுத்தப்பட்டு வருவது அறியக்கிடக்கின்றது. அவர்களுக்கென்று புதிய சட்டங்கள், உரிமைகள் மற்றும் உரித்துடமைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவ்விடயம் சரியாக மக்களை சென்றடயவில்லை என்பதையே மேலைத்தேய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது தரவுகள் வெளிக்காட்டுகின்றன.

சிறுவர்கள் எமதென்று எப்போதும் எழுவோம்...


போதுமே!
இளமையில் வறுமை
பாலியல் பரிதவிப்பு,
கூலிக்கு வேலை
பள்ளிக்கு வேலி,
பாசத்துக்கோ நாசம்,
விளையாடத் தடை,
விலைபோகும் நிலை,
பெற்றோரின் பிரிவு,
போதுமே!
சட்டங்கள் சாக்குப் பைக்குள்
உறையிட்டுத் தூங்கும்போது,
திட்டங்கள் போட்டு என்ன பயன்?
இது ஒன்னும்,
மொகஞ்சதரோ ஆராய்ச்சி இல்லை!
புதிதாய் கண்டறிய...
வீட்டுக்கு வீடு ரோட்டுக்கு ரோடு.....
நீதியின் கண்ணில் மிளகாய் தூவி!
அரங்கேறும்
துஸ்ப்பிரயோக நாடகம் தான்!
மலரா மொட்டுகள்
வாசன அறிய முன்னே,
உலர விடுவதுதான் நியாயமா?
ஆசியாவின் மூலைகள் எங்கும்
அளிக்கையாகும் லீலைகள்தான்...

திறந்த சிறையில்...
ஆயுட் கைதிகளாய்..
நிரபராதிகள் இங்கே!
ஞானிகள், விஞ்ஞானிகள்,
மன்னர்கள் மகாத்மாக்கள்,
எத்தனை எத்தனை...
ஓ! கடவுளே!
அத்தனையும்
கருவிலே கருக்கப்படும்
நரகத்தின் வீடா!
பேசிப் பேசி என்ன பயன்?
யோசிக்க வேண்டும்.....
சட்டங்களுக்கு உயிர் கொடுப்போம்
திட்டங்களை அமுலாக்குவோம்
கலங்கரை விளக்குகளை,
வாழவிடவோம்..
எல்லோரும் தொழுவோம்..
சிறுவர்கள் எமதென்று
எப்போதும் எழுவோம்....