ADS 468x60

01 October 2010

சிறுவர்கள் எமதென்று எப்போதும் எழுவோம்...


போதுமே!
இளமையில் வறுமை
பாலியல் பரிதவிப்பு,
கூலிக்கு வேலை
பள்ளிக்கு வேலி,
பாசத்துக்கோ நாசம்,
விளையாடத் தடை,
விலைபோகும் நிலை,
பெற்றோரின் பிரிவு,
போதுமே!
சட்டங்கள் சாக்குப் பைக்குள்
உறையிட்டுத் தூங்கும்போது,
திட்டங்கள் போட்டு என்ன பயன்?
இது ஒன்னும்,
மொகஞ்சதரோ ஆராய்ச்சி இல்லை!
புதிதாய் கண்டறிய...
வீட்டுக்கு வீடு ரோட்டுக்கு ரோடு.....
நீதியின் கண்ணில் மிளகாய் தூவி!
அரங்கேறும்
துஸ்ப்பிரயோக நாடகம் தான்!
மலரா மொட்டுகள்
வாசன அறிய முன்னே,
உலர விடுவதுதான் நியாயமா?
ஆசியாவின் மூலைகள் எங்கும்
அளிக்கையாகும் லீலைகள்தான்...

திறந்த சிறையில்...
ஆயுட் கைதிகளாய்..
நிரபராதிகள் இங்கே!
ஞானிகள், விஞ்ஞானிகள்,
மன்னர்கள் மகாத்மாக்கள்,
எத்தனை எத்தனை...
ஓ! கடவுளே!
அத்தனையும்
கருவிலே கருக்கப்படும்
நரகத்தின் வீடா!
பேசிப் பேசி என்ன பயன்?
யோசிக்க வேண்டும்.....
சட்டங்களுக்கு உயிர் கொடுப்போம்
திட்டங்களை அமுலாக்குவோம்
கலங்கரை விளக்குகளை,
வாழவிடவோம்..
எல்லோரும் தொழுவோம்..
சிறுவர்கள் எமதென்று
எப்போதும் எழுவோம்....


0 comments:

Post a Comment