ADS 468x60

28 November 2010

களுதையும் கண் கொடுக்கும்!


களுத,
சனியன்,
உருப்படாதது,
தண்டச்சோறு
அப்பாக் காரன்..
குழந்தையைப் பார்த்து...

சில வருடங்களின் பின்,.........
குறுடு,
கட்டயில போறது...
இஞ்ச சோற வைத்துவிட்டு
எங்கே தேடுகிறாய் மனிசா?
அம்மாக்காறி...

ஐயா கண்களை
திறந்து பாருங்க........
நேர்ஸ் பொண்ணு...
ஓ ஆண்டவா!
நல்லாத் தெரியுது
தங்கம்....
சீதேவி....
யாரம்மா அந்த
புண்ணியவான்??
உங்க மகதான் என்றாள்

அன்றுதான் தெரிந்தது....
களுதையும்
கண் கொடுக்கும் என்று....
.........................................

27 November 2010

என்னைப் படிக்க விடுங்க..

நொரு.... நொறு........
சடார்..... புடார்......
சட்டிகள் உடையும்
சத்தம்!!

கா...கூகூகூகூ.....
கீகீ...கே..கே...
விச வார்த்தைகள்
சூழலை சுடுகிறது..

வரார்... வரார்....
சரார்.... புரார்.....
பானையில் ஒட்டிய சோறு
குடிச்ச வாய்கு.....

பட... பட...
பட... பட....
பயத்தில்! அணைகிறது விளக்கு!
அவளது கல்வியைப்போல்!!!...

பிள்ள... பிள்ள...
பிள்ள... பிள்ள....
அம்மா தட்டினாள்,
அப்பா வீசிய
சோற்றுப் பருக்கையுடன்....
அப்போதுதான் பார்த்தேன்,
அவளின் கன்னம் சிவந்திருந்தது!
எமது வறுமையைப்போல்!!!
.

அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்.....

 இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
    இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
    ஆலயம்பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
    பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
     ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்..

பழம் நிறைசோலைகள் உருவாக்குதல், இனிமையான குளிர்சி பொருந்திய  தண்நீர் தடாகங்களை ஆக்குதல், உண்டு உறங்குவதற்க்காக அன்ன சத்திரங்கள் ஆயிரம் ஆயிரம் கட்டுதல்...இன்னும் என்ன என்ன நன்மைகளை செய்தாலும் இவற்றையெல்லாம் விஞ்சி யாரோ ஒரு ஏழை பிள்ளை கல்வி படிக்க உதவுவதே மகா புண்ணியம்.. என்று பாரதியார் பாடியிருக்கிறார்...

15 November 2010

அறிவோம் அறிவை


அறிவு (Knowledge) என்பது உணர்தலாலும், அனுபத்தாலும், கற்பதாலும் கிடைக்கப்பெறுவைகளாகும். அறிவு என்பது ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை கிடைப்பவைகளாகவே உள்ளன. அதனை படித்தவர்களுக்கு மட்டுமே அறிவு இருப்பது போன்றும், அறிஞர்கள் என்றும் ஒரு தோற்றப்பாடு பொதுவாக அநேகமானோரிடம் காணப்படுகின்றன. அத்தோற்றப்பாடு முற்றிலும் தவறானது. அறிவு என்பது எல்லோருக்கும் உண்டு, மனிதரல்லாத விலங்குகளுக்கும் உண்டு. அவற்றை இயற்கையறிவு, உணர்வறிவு, படிப்பறிவு, பட்டறிவு, கல்வியறிவு, தொழில்சார் அறிவு, துறைச்சார் அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு, ஆள்மனப்பதிவறிவு என பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். இந்தப்பிரிவுகளை பல்வேறு உற்பிரிவுகளாக வகுத்துக்கூறலாம். எடுத்துக்காட்டாக அறிவை கூட சிலர் பேரரறிவு, சிற்றறிவு என்று வகைப்படுத்தும் முறைமையும் உள்ளது..

இயற்கையறிவு என்பது இயற்கையைப் பற்றி அறியும் அல்லது கற்கும் அறிவன்று. அது இயற்கையிலேயே கிடைக்கப்பெறும் அறிவைக் குறிக்கும். ஒரு குழந்தை பிறந்தவுடன் கிடைக்கப்பெறும் அறிவு இயற்கையறிவு ஆகும். அது முதலில் பசியை உணரும் அறிவை இயற்கையறிவாகவே கொண்டுள்ளது. அதனாலேயே பசித்தால் குழந்தைகள் அழத்தொடங்கிவிடுகின்றன. அதன்பின் உணரும் அறிவை பெறுகின்றது. அதாவது தாயின் முளைக்காம்பை தொட்டதும் அதையுணர்ந்து (அழுகையை நிறுத்தும்) பாலறுந்தத் தொடங்கிவிடும். இதன் வளர்ச்சிப்போக்கில் பாலைத் தரும் தாயை அறியும் அறிவையும், அவரிடத்தில் அன்புகொள்ளும் அறிவையும் பெற்றுக்கொள்ளும். இவைகளை இயற்கையறிவு எனலாம்.
ஒரு பாடசாலையில் கற்பிப்பதை ஒரு மாணவன் உடனடியாக அவற்றை விளங்கிக்கொள்கின்றான் என்றால், அது அம்மாணவரின் கிரகிக்கும் ஆற்றலின் தன்மையையே காட்டுகிறது. அதேவேளை ஒழுங்காக பாடங்களில் கவனம் செலுத்தாத மாணவனை அறிவற்றவன் என்று கூறவும் முடியாது. சிலவேளை அம்மாணவன் விளையாட்டுத் துறையிலோ, வேறு எதாவது ஒரு துறையிலோ அறிவதில் ஆர்வம் மிக்கவராக இருக்கலாம். இங்கே அறிவு என்பது தாம் ஆர்வம் கொள்ளும் துறைச்சார்ந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே எல்லோரது அறிவும் ஒரே மாதிரியானதாகவும், ஒரே தன்மைக்கொண்டதாகவும் இருப்பதில்லை. அதேவேளை கல்வியால் கிடைக்கப்பெறும் அறிவை கல்வியறிவு என்று மட்டுமே கூறலாம்.
ஆழ்மனப்பதிவறிவு என்பது தாம் பிறந்த, வாழ்ந்த சூழலிற்கு ஏற்ப பிறராலோ, வாழும் நாட்டின் அரசியல் அமைப்புக்கு அமைவாக ஆழ்மனதில் பதிந்து அதுவே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவெனலாம். எடுத்துக்காட்டாக: பிறந்த ஒரு குழந்தையை அது தானாக உணர்ந்துக்கொள்ளும் முன் வேறு ஒரு தம்பதியினர் எடுத்து தமது குழந்தை என்று கூறு வளர்ப்பதால், அக்குழந்தை தமது பெற்றோர் அவர்களே என ஆழ்மனதில் பதிந்துக்கொள்ளும் அறிவு ஆழ்மனப்பதிவறிவு எனலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டாக: GOD எனும் ஆங்கிலச் சொல்லின் ஒலிப்பை இந்தியத் தமிழர்கள் "காட்" என்பதே சரியெனும் அறிவையும், இலங்கைத் தமிழர்கள் "கோட்" என்பதே சரியெனும் அறிவையும் கொண்டிருப்போம். ஒரே தமிழரான நாம் ஒரு வேற்று மொழி சொல் தொடர்ப்பில் இத்தகைய உறுதியை எவ்வாறு கொண்டிருக்கிறோம் எனில் நாம் பிறந்த வளர்ந்த நிலப்பரப்பின் அரசியல் எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கும் சிலவிதிமுறைகள் எம்மனதில் ஆழப்பதிந்து அதுவே சரியெனும் மனநிலையிக்கு நாம் சென்று விடுவதே காரணமாகும். இதனையே ஆழ்மனப்பதிவறிவு எனப்படுகின்றது. குறிப்பாக சிவபெருமான் அடித்ததாலேயே எல்லோரதும் முதுகில் தழும்பு இருக்கின்றது என இந்துக்கள் நம்பும் நம்பிக்கை போன்ற ஒவ்வொரு மதங்களின் உள்ள வெவ்வேறு கருத்துக்களை அப்படியே உள்வாங்கி அதுவே சரியென கொள்ளுதலும் ஆழ்மனப்பதிவறிவின் வெளிப்பாடே ஆகும்...
பட்டறிவு(experience)
அறிவு என்பது ஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு நிறுவனத்தைப் பற்றியோ அல்லது ஏதாவது ஒரு பொருள் பற்றியோ (அறிந்து)தெரிந்து கொள்வது ஆகும். இந்த அறிவைப் பெறும் வழிகள்: 1.கூரிய நோக்கு(perception) 2.கல்வி கற்கும் முறை(learning process) 3.விவாதித்து முடிவுக்கு வருதல்(debates) 4.செவிகளைத் திறந்து வைத்துக் கொள்ளுதல்(open ears) - கேள்வி அறிவு 5.தனக்குத்தானே விவாதிக்கும் முறை(reasoning)
நாம் அனுபவத்தினாலோ, புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவோ அல்லது ஏதாவது காரண, காரியங்களினாலோ பெறுகிறோம். அறிவு என்பதன் முழுமையான விளக்கம் நம் தத்துவ மேதைகளிடையே காலம் காலமாக நடந்து வரும் விவாதமாகும். இன்றும் இந்த விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவு என்பதற்கு சரியான விளக்கம் தரவேண்டுமென்றால் ஒரு செயல் ஏரண விதிகளால்(logically) நியாயப்படுத்தபட்டதாகவும், உண்மையாகவும், அனைவராலும் நம்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும். (Plato) ஆனால் இவை மட்டுமே ஒரு செயலை அறிவு என்று சொல்லுவதற்கு தகுதியான அளவுகோல் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு. அறிவு பல வகைப்படும்.
ஒவ்வொரு கணத்திலும் நாம் பாடுபட்டு(அநுபவித்து) அறியும் அறிவு பட்டறிவு(experience). ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏற்படும் அறிவுத்திறனை சூழ்நிலை அறிவு என்று வகைப்படுத்தலாம். புத்தகங்களில் பெறுவதை புத்தக அறிவு என்றும், சமூக வழி பெறுவதை சமூக அறிவு என்றும் பல வகை உண்டு. சூழ்நிலை அறிவு மொழி, கலாசாரம், பண்பாடு இவற்றோடு நெருங்கிய தொடர்பு உடையது.

14 November 2010

நேரம் ஒதுக்குங்கள்!


வரலாற்று அடிப்படையில், நேரம் என்பதன் பொருள் தொடர்பாக இரண்டு விதமாக கருத்துக்கள் உள்ளன. நேரம்,அண்டத்தின் அடிப்படையான கூறு, அதன் ஒரு பரிமாணம் என்பது ஒரு கருத்து. இதன்படி, இதிலே நிகழ்வுகள் ஒரு தொடராக நடைபெறுகின்றன, இது அளக்கக் கூடிய ஒன்று ஆகும். இது ஐசாக் நியூட்டன் போன்றவர்கள் கொண்டிருந்தஇயல்பிய (realist) நோக்கு ஆகும்.
இதற்கு முரண்பாடான இன்னொரு கருத்துப்படி, நேரம், அறிவு சார்ந்த அமைப்பின் ஒரு கூறு. இந்த அமைப்பினுள்ளேமனிதர்கள், நிகழ்வுகளைத் தொடராக்கம் செய்துகொள்கிறார்கள், நிகழ்வுகள் நடைபெறும் காலத்தையும் அவற்றுக்கிடையேயான இடைவெளியையும் அளந்து கொள்கிறார்கள், பொருள்களின் இயக்கங்களை ஒப்பீடு செய்கிறார்கள் என்கிறார்கள் இக்கருத்தின் ஆதரவாளர்கள். மேலும் இக் கருத்துப்படி, நேரம் பாய்ந்து செல்லும் ஒன்றோ, அதனூடாக வேறு பொருட்கள் செல்வதற்கான ஊடகமோ அல்லது நிகழ்வுகளைக் கொள்ளுகின்ற ஒரு தாங்கியோ அல்ல.கோட்பிரைட் லீப்னிஸ் (Gottfried Leibniz), இம்மானுவேல் கண்ட் (Immanuel Kant) போன்றவர்கள் இக்கருத்தைக் கொண்டிருந்தனர்.
அறிவியலில்வெளியுடன், நேரமும் அடிப்படையானது ஆகும். அதாவது, இவை, வேறு அளவுகளால் வரையறுக்கப்படக் கூடியன அல்ல. இவற்றினாலேயே ஏனைய அளவுகள் வரையறுக்கப்படுகின்றன. இதனால், இவற்றை அளப்பதன்மூலம் மட்டுமே வரையறுக்க முடியும். ஒழுங்காக நடக்கும் நிகழ்வுகளும், குறித்த கால அடிப்படையில் இயங்கும் பொருட்களுமே நெடுங்காலமாக நேரத்தை அளக்கும் அலகுகளின் அடிப்படையாக விளங்குகின்றன. எடுத்துக்காட்டுகளாக, சூரியனின் இயக்கம், சந்திரன் தேய்ந்து வளர்தல்,ஊசல்களின் (pendulum) இயக்கம் என்பவற்றைக் குறிப்பிடலாம்........


1. வாழ்க்கையில் நல்லதை அனுபவிக்க நேரம் ஒதுக்குங்கள்.

இது வெற்றியின் இரகசியம்

2. சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.

இது ஆற்றலின் ஆணிவேர்

3. விளையாடுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.

இது இளமையின் இரகசியம்

4. வாசிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.

இது மெய்யறிவின் அடித்தளம்

5. நட்பாக இருக்க நேரம் ஒதுக்குங்கள்.

இது மகிழ்ச்சியின் இருப்பிடம்.

6. கனவு காண்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.

இது ஆன்மாவை நட்சத்திரங்களுடன் ஒன்றிணைக்கும்.

7. சிரிப்பதற்குநேரம் ஒதுக்குங்கள்.

இது வாழ்வை நீடிக்கும் இன்னிசை.

8.  அன்பு செலுத்த நேரம் ஒதுக்குங்கள்.

இது வாழ்வின் உயரிய இன்பம்இ

9. வேலை செய்ய நேரம் ஒதுக்குங்கள்.

இது வெற்றியின் வெகுமதி.

10. தியானம் செய்ய நேரம் ஒதுக்குங்கள்.

இது தேவனுடான உள்ளத்தின் சங்கமம்

11. தேவனுக்கு நேரம் ஒதுக்குங்கள்.

இது ஒன்றே வாழ்வின் நிலையான முதலீடு.

13 November 2010

இலங்கையில் சுனாமி அனர்த்தமும், ஜீபனோபாய அபிவிருத்தித்திட்டமும்


கிட்டத்தட்ட275000 தொழிலாளர்களைக் கொண்ட 60,000 நுண் வியாபார நிலையங்கள் சுனாமி அனர்த்தத்தினால் முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக பல ஸ்தாபனங்கள் முன்வந்ன. அவர்களின் சில நடவடிக்கைகள் கீழ்க்காணும் பிரிவுகளாக வகுக்கமுடியும்.
 • பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி பண உதவிகள்
 • வேலைக்காக பணம் – நிகழ்ச்சித்திட்டங்கள்
 • பொருளாதார செயற்பாடுகளை மறுசீரமைத்தல்
TAFREN சுனாமியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஜீவனோபாயத்தை பாதுகாத்தலுக்கும் மீளமைத்தலுக்கும் உதவுவதற்கான இணைப்பு மற்றும் முகாமைத்துவக்கொள்கை வடிவம்
பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி பண உதவிகள்
சுனாமிக்குப் பின்னரான ஜீவனோபாய அபிவிருத்திகளில், சம்பாதிக்கும் திறனை இழந்த மற்றும் சம்பாதிக்கும் குடும்பத்தலைவனை இழந்து பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இதுவே முதன்மையான கருவியாகக் கருதப்படுகிறது ஆதலினால்,  இதுவே உடனடி நிவாரணக் கருவியாக நடைமுறைப்படுத்துகின்றது. ஆயினும், உடனடி உதவியாக வழங்கப்படும் உணவு, உடை, மருந்து, புகலிடம் போன்றவற்றிலிருந்து இது தெளிவாக வேறுபடுத்தப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கிடையே பிறரில் தங்கியிருக்கும் எண்ணத்தைத் தவிர்ப்பதற்கான பொருளாதார செய்யற்பாடுகளை மீளமைப்பதனை நோக்கமாகக் கொண்டிருப்பது முக்கியமானதாகும்.
வேலைக்காக பணம் – நிகழ்ச்சித்திட்டங்கள்
பாதிக்கப்பட்ட சமூகங்களில் மக்களும், சமூகங்களும் இணைந்து பங்களிப்புடன் செயற்பட்டு உடனடி வருமானம் ஈட்டும் கட்டமைப்பாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கிடையே பணிபுரியும் மக்களின் ஜீவனோபாயங்களை மேம்படுத்த உதவுகின்றது. ஆயினும், தொழிலாளர்களாக மட்டும் அம்மக்களைக் கட்டுப்படுத்தப்படுவது வேலைக்காகப் பணம் என்ற நிகழ்ச்சித்திட்டங்கள் இருப்பதனால் பல்வேறு தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கமுடியாமை சமூகப்பணிகளில் சமூக உடைமைகளை இழப்பது போன்ற பலவீனங்கள் இங்கே காணப்படுவதால் இந்த நடைமுறையும் ஒரு தற்காலிகமானதே.
பொருளாதார செயற்பாடுகளை மறுசீரமைத்தல்
அனர்த்தங்களுக்குப் பின்னரான ஜீவனோபாய அபிவிருத்தி நடவடிக்கைகளில் இது மிகவும் பொருத்தமான அணுகுமுறையாகக் கருதப்பட்டுள்ளது. ஆயினும் அனர்த்தங்களுக்குப் பின்னரான சந்தர்ப்பங்களில் மனவிரக்தியுடன் தரங்குறைந்த சுற்றாடல் நிலைமைகளில் சமூகங்கள் வாழ்ந்துகொண்டிருப்பதால் அங்கே நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள், சாதாரண நிலைமைகளில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளிலிருந்து வேறுபடுகின்றன. எனினும், இதனை நடைமுறைப்படுத்துவோர் வியாபார அபிவிருத்தி எண்ணக்கருத்துக்களைக் கொண்ட அடிப்படைத்தரத்தினை மீறுவதற்கு இது காரணமாக அமையக்கூடாது என்பதை மனதில் கொண்டிருக்கவேண்டும்.
 நடைமுறைப்படுத்திய நிறுவனங்களின் முன்னெடுப்புக்கள் :-
 • மொத்தம் 234,000 – ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் மாதாந்தம் தலா ரூபா 5000/=  ஒதுக்கீடு.
 • வாரமொன்றிற்கு ரூபா 375/= (பணம் – ரூபா 200/=, உணவு ரூபா 175/= 81000 மக்களுக்கு)
 • நுண், சிறிய, இடைநிலை கைத்தொழிலுக்கு ரூபா 5  மில்லியன் கடன் உதவித்திட்டம்.
 • 2450 விண்ணப்பதாரிகளுக்கு மொத்தம் ரூபா 1010  மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
 • தேசிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்துடன் பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களினூடாக நுண்கைத்தொழிலுக்கு ரூபா 700 மில்லியன் கடன் உதவித்திட்டம்.
நடைமுறையில் இருந்த மறுசீரமைப்பு செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட பிரச்சனைகள்
 • அனர்த்தத்தடுப்புடனான நீடித்து நிலைத்து நிற்கும் ஜீவனோபாய அணுகுமுறைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை.
 • ஜீவனோயாய நடவடிக்கைகளில் மேலே கூறப்பட்ட மூன்று கருவிகளையும் பிரயோகிப்பது தொடர்பான தெளிவற்ற தன்மையும், வேறுபட்ட கால அட்டவணையும்.
 • அறிவுப்பரிமாற்றங்களில் குறைந்த கவனமும் பௌதீக சொத்து அன்பளிப்புக்களில் நாட்டமும்.
 • பெறுமதிமிக்க அபிவிருத்தி வட்டத்தில் குறைந்த கவனமும் சுற்றாடலில் காணப்படும் விடயங்களில் மிகுந்த நாட்டமும்.
 • ஊனமுற்றோர், பால்நிலை உணர்வுகள், பிணக்குகள், உணர்வுகள் முதலியனவற்றை உண்டாக்குவதில் குறைந்த ஆர்வம்.
 • ஒரே தரத்தில் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்கின்ற வளர்வாளர்களின் நம்பிக்கை.
 • தொழில்நுட்ப அனுபவம் அற்றிருத்தல்.
 • சமூகங்களுக்கிடையே தொழில்நுட்ப அபிவிருத்தி நடைமுறைகளிலுள்ள அனுபவக் குறைவு.

தேசிய விவாசாயக் கொள்கைகளும் இலங்கையும்...

இலங்கைப் பொருளாதாரத்தில் விவசாயமானது மூலைக்கல்லாக விளங்குகின்றது. கிராமப்புறங்களில் வசிக்கும் 70% இற்கும் மேலான மக்கள் அவர்களின் வாழ்வாதாரமாக விவசாயத்திலேயே தங்கியுள்ளனர். இந்த விவசாயமானது மொத்த உள் நாட்டு உற்பத்திக்கு 18%ஆலும் வேலை வாய்ப்புக்களிற்து 30% ஆலும் பங்களிப்புச்செய்கின்றது. விவசாய உற்பத்தித்திறன் ஆனது ஏறத்தாழ நிலையாக இருந்துள்ளது. விதிவிலக்காக அரிசி அண்மைய ஆண்டுகளில் தன்னிறைவுத்தன்மையை அடைந்துள்ளது.
ஆயினும் இப்பிரிவின் வளர்ச்சி மந்த கதியிலேயே உள்ளது. 90%மான ஏழை மக்கள் கிராமப்புற விவசாய பொருளாதாத்திலேயே வாழ்க்கை நடத்துவதனால் இலங்கையின் வறுமை நிலையைக்குறைக்க வேண்டுமாயின் துரிதமான விவசாய உற்பத்தி வளர்ச்சியை எட்டுதல் வேண்டும். ஆகையால் சுற்றாடல், நீர் வளம், உயிர்ப்பல்வகைமை என்பவற்றைப் பாதுகாக்கும் அதே வேளை துரித உணவு உற்பத்தி அபிவிருத்திக்கு , அபிவிருத்திக் கட்டங்களில் முக்கிய இடம் கொடுக்கப்பட வேண்டும்.  விவசாயத்தின் வளர்ச்சியை முடக்கும் தற்போதுள்ள கொள்கைகள் மற்றும் ஒழுங்குபடுத்தும் முட்டுக்கட்டைகளை அகற்றுவதையும் இது உள்ளடக்குகின்றது.
துண்டாக்கப்பட்ட காணிகளின் பாவனை, நீர்ப் பற்றாக்குறை, கடன் வசதி, விதை, தொழில்நுட்பத் தெரிவு நிலை, தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல், களஞ்சியப்படுத்தல், கொண்டு செல்லுகை, ஏழ்மையான விவசாயச்செயன்முறைகள் ஆகியன விவசாயத்தின் பலவீனப்படுத்தப்பட்ட உற்பத்திக்குப் பங்களிப்புச் செய்கின்றன. கிராம அபிவிருத்திக்காக, குறுகிய மற்றும் நடுத்தர காலச் சலுகைகளான விவசாயிகளின் சந்தைகளை பெரிதாக்குவதை வசதிப்படுத்தும் கொள்கைகளைப்பின்பற்றல், விருத்தி செய்யப்பட்ட தொழில் நுட்பங்கள், தேவையான பாதுகாப்புடன் உறுதியான வர்த்தகக் கொள்கைகளை உருவாக்குதல், பிரதேச வாரியான சமமான உட்கட்டமைப்பு வசதியை உருவாக்குதல்.
இலங்கையின் விவசாயக்கொள்கை
குறிக்கோள்களும் நோக்கங்களும்
 • நாட்டின் உணவு மற்றும் போசணைப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்காக உள்நாட்டு விவசாய உற்பத்தியை அதிகரித்தல்.
 • விவசாய உற்பத்தியை செழுமைப்படுத்தும் உறுதியான வளர்ச்சியை உத்தரவாதமளித்தல்.
 • உள் நாட்டு மற்றும் ஏற்றுமதி விவசாயத்தில் உலகமயமாதலின் தீமையான விளைவுகளைக்குறைத்தல் மற்றும் நன்மைகளை அதிகப்படுத்தல்.
 • உற்பத்திச் செலவைக்குறைப்பதற்கும் வருமானத்தை அதிகரிப்பதற்குமாக வினைத்திறன் மிக்க விவசாய முறைகளைப்பின்பற்றுதலும் விருத்தி செய்யப்பட்ட விவசாயத் தொழில் நுட்பத்தைக் கையாளலும்.
 • சுகாதாரத்திற்கு தீங்கற்ர , சுற்றாடல் சினேக பூர்வமான தொழில் நுட்பங்களை விவசாயத்தில் பின்பற்றுதல்.
 • விவசாயம் சார்பான கைத்தொழில்களை மேம்படுத்துவதுடன் வேலை வாய்ப்புக்களையும் அதிகரித்தல்.
 • விவசாய சமுதாயத்தின் வருமானம் மற்றும் வாழ்க்கை நிலை என்பவற்றை உயர்த்துதல்.
விவசாய உற்பத்தியை மேம்படுத்தல்.
சரியான மற்றும் பாதுகாப்பான முறையில் வளங்களைப்பயன்படுத்தக்கூடிய தொடர்ச்சியான விவசாய அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக தொழில் நுட்பப்பாரமுள்ள, பொருளாதார ரீதியில் சாத்தியமான சுற்றாடல் சினேக பூர்வமான, சமூக ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களை அமுல் படுத்துவதன் மூலம் அரசாங்கமானது விவசாய உற்பத்தியை மேம்படுத்துகின்றது. இக் கொள்கையின் பிரதான அம்சங்களாவன,
 • அரிசி மற்றும் ஏனைய பயிர்கள், தோட்ட மற்றும் பூந் தோட்டப்பயிர்கள், வேர் மற்றும் கிழங்குப்பயிர்கள், விவசாய ஏற்றுமதிப்பயிர்கள், மூலிகைகள், வேறு உபயோகப்படுத்துகின்ற பயிர்கள், அதே போல் உப உணவுப்பயிர்களான கரும்பு, மரமுந்திரிகை, தேங்காய் என்பவற்றைப் பயிரிடுதலில் முக்கியத்துவத்தைக் கொடுப்பதன் மூலம் உள் நாட்டு உணவு வினியோகம், வேலை வாய்ப்பு மற்றும் விவசாய ஏற்றுமதி என்பவற்றை அதிகரித்தல்.
 • நிலைத்து நிற்கக்கூடிய விவசாய முறைகளின் ஊடாக பயிர் உற்பத்தியை மேம்படுத்துவன் மூலம் நீர் மற்றும் நிலங்களின் வினைத்திறனை அதிகரித்தல்.
 • உறுதியான, நிலையான விவசாய அபிவிருத்திக்காக ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவம், ஒருங்கிணைந்த தாவரப்போசாக்கு முகாமைத்துவம் போன்ற சிறந்த விவசாய செயன்முறைகளை மேம்படுத்தல்.
 • வாழ்வாதாரம் மற்றும் மீன் வளர்ப்பு என்பவற்றின் ஊடாக ஒருங்கிணைந்த விவசாயத்தில் இருந்து வருமான உற்பத்தியை மேம்படுத்தல்.
 • சந்தைததெவைகளையும் , போசணைத்தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய உற்பத்தித் திட்டங்களை வடிவமைத்தல்.
 • காலநிலைக்கு இசைவாக்கமான பயிர்களைப்பயிரிடுதலும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்களை மேம்படுத்தலும்.
 • எங்கேயும் எப்போதும் பொருத்தமான நவீன மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களைக் கிராமங்களிற்கு அறிமுகம் செய்தல்

11 November 2010

மிலேனியம் அபிவிருத்தி இலக்கும் அனர்த்த இடர் தணிப்பும்.


அனர்த்த இடர் தணிப்பு என்பது அபிவிருத்தி செயற்பாடுகளில் ஒரு ஒருங்கிணைந்த பாகமாகும். இது மிலேனியம் அபிவிருத்தி இலக்கில் பரிந்துரைக்கப்பட்ட ஒன்றாகும். இவ் மிலேனியம் அபிவிருத்தி இலக்குக்கான பரிந்தரை 191 நாடுகளுக்குமான மனித அபிவிருத்திக்கு உதவும் வகையில் குறிப்பாக 2000ம் ஆண்டின் 08 மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த 08 மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளும் 18 உப பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அது மேலும் இலக்குகளுககான 48 சுட்டிகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளமையும் தெழிவாக உள்ளது.

இவ் மிலேனியம் அபிவிருத்தி இலக்கானது அபிவிருத்தி மற்றும் அனர்த்த இடர் தணிப்பு கொள்கைகளுக்கிடையிலான ஒரு குறுக்கு வெட்டாகவே இருக்கின்றது. இவை ஒவ்வொன்றும் நடைமுறைச் செயற்ப்பாட்டுக்கான விசேட குறிகாட்டியாகவும், குறிக்கோளாகவும் பின்னப்பட்டிருக்கின்றன. இந்த இலக்கினை அடைந்து கொள்வதில் அனைத்து ஐ.நா. சபையில் ஒப்பமிட்டுள்ள நாடுகளும் மற்றும் நிதி உதவியாளர்களும் அவர்களது செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதனைக் காணலாம்.

விசேடமாக மிலேனியம் முன்மொழிவில் நான்காவது சரத்தில் இயற்கை அனர்த்தம் மூலமாக வருகின்ற பொருளாதார அபிவிருத்திக்கான இடர்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இது எமது ' எதிர்காலத்தினைப் பாதுகாத்தல்' எனும் தலைப்பில் வருகின்றது. இத்தலைப்பினுள் ஒரு விடயம் குறிப்பிடப்படுகின்றது. அதாவது இயற்கை மற்றும் மனிதர்கள் மூலம் வருகின்ற அனர்த்தங்கள் ஊடாக ஏற்ப்படுகின்ற தாக்கங்கள், அதன் விளைவுகள் என்பனவற்றைக் குறைப்பதற்க்கான கூட்டு முயற்சியினை வலுப்படுத்தல் பற்றி சொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இயற்கை அனர்த்தமானது ஒரு சமுகத்தில் அல்லது ஒரு சமுதாயத்தில் நிகழக்கூடிய அபத்தான நிகழ்வுகளை நன்கு விளங்கி இருக்கும் போது அல்லது தெரியாமல் இருக்கும்போது இடம்பெறுகின்றது. உதாரணமாக மிகக்கடுமையான மழை, அதிக உஸ்னம், அல்லது வேகமான காற்று மற்றும் நில அதிர்வு என்பனவற்றைக் குறிப்பிடலாம். மற்றது மக்கள் அனர்த்தம் மூலமான விளைவுகளில் இரந்து மீழுதல் அதன் ஆபத்துகளை உணர்ந்து கொள்ளாமல் இருக்கும் போது அனர்த்தம் ஏற்படுகின்றது. குறிப்பாக பொதுவாக இடம்பெறுகின்ற இயற்கை அனர்த்தத்தின் மூலம் வருகின்ற நலிவுற்றோரின் தொகை அற்றும் அதன் மூலமாக வரகின்ற ஆபத்து மனிதனுடைய செயற்ப்பாட்டிலே தங்கியுள்ளது.

இனனொரு வகையில் கூறப்பொனால் இயற்கை அனர்த்த மூலமான அதன் தாக்கம், அதன் அளவு என்பனவற்றினை குறைக்கும் செயற்ப்பாடுகள் இவைகள் அபிவிருத்திக்கான பாரிய சவாலாகவே இருக்கின்றது. இது ஒட்டு மொத்தமான இடர்களை மற்றும் அதன் மூலம் மனிதர்கள் நலிவுறும் தன்மை என்பனவற்றை ஏற்படுத்த ஏதுவாக இருக்கின்றது. இதுதான் அதிகப்படியான அனர்த்தத்தினை(pசநகபைரசந னளையளவநச) உண்டு பண்ணுகிறது.

ஓட்டு மொத்த அனர்த்தத்துக்குமான இடர் தணிப்பு, அதே போல் அனர்த்தத்திற்கு பின்னர் வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கான சமமான வளப்பகிர்வு என்பன ஒரு நாட்டின் அபிவிருத்திப்பாதையில் பாரிய தடைக்கற்களாகவே இருந்து வருகின்நறை குறிப்பிடத்தக்கது. இயற்கை அனர்த்தற்கள் அபிவிருத்தி அடைவுகளை அழிவுபடுத்துகின்ற போதும், மறுபக்கம் அபிவிருத்திச் செயற்பாடுகள் அதன்பாட்டுக்கே செயற்படுவதனையும் காணக்கூடியதாய் இருக்கின்றது.

முன்பு நாம் பார்த்த உதாரணற்களுக்கு அமைவாக குறிப்பாக ஒரு அனர்த்த இடர்தணிப்பு இல்லாத பாடசாலை கட்டிடத்தினை எடுத்துக் கொள்வோமெனில், ஒரு அதிர்வு ஏற்ப்படும்போது, இது அபிவிருத்தியினை இல்லாமல் செய்கின்ற அனர்த்த இடருக்கான உதாரணமோ, அல்லது பொருத்தமற்ற அபிவிருத்தி மூலம் விளைகின்ற அதிகப்படியான அனர்த்தமா? என்ற கேள்வி எழுகின்றது.

மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளுக்கான திட்டங்களை எடுத்துக்கொண்டால், இவை முன்னூiமை அடிப்படையில் அமைகின்றது. வெளிப்படையில் பார்ப்போமானால், இந்த இலக்குகள் அனைத்தும் மனிதன் நலிவுறும் தன்மையை இயற்கை அனர்த்தங்களின்போது குறைப்பதனையே நோக்காக கொண்டுள்ளது. இச்செயற்ப்பாடுகள், இலக்குகள் என்பன அனர்த்தங்கள் மூலமான பாதிப்பக்களை அதிகரிக்காமல் குறைப்பதற்கு தீர்மானங்களை மேற்கொள்ளும். உன்மையில் பாடசாலை கட்டிவிட்டால் அது போதாது அது நிலைத்திரக்கக்கூடிய, அதேவேளை நீண்ட நாள் அபிவிருத்தியினை மையமாகக் கொண்டதாக ஒர் அனர்த்தத்தினை தடை செய்யக்கூடிய, மக்களின் அனர்த்த முன் அயத்தத்திற்கு பொருத்தமான கட்டிடங்க்ள அமைவதையே இவ் இலக்குகள் தீர்மானிக்கும். 

மிலேனியம் அபிவிருத்தி இலக்கானது இரு வகையில் அமுல்படுத்தப்படுகின்றது: ஒன்று மிலேனியம் அபிவிருத்தி இலக்கினை அடைவதற்து வழிப்படுத்தக்கூடிய அபிவிருத்தி திட்டமிடல்களை குறிக்கினறது. மற்றது நடைமுறையில் வருகின்ற ஒட்டுமொத்த அனர்த்த இடர்களை தடுக்கக்கூடிய அபிவிருத்தி செயற்ப்படுத்தகையைக் குறிக்கின்றது. இவ்வாறு இல்லாவிடின் எல்லா அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் ஒரு பிரதான காரணியாக இவ் அனர்த்த இடர் அமைந்திருக்கும். இது நன்கு நடைபெறக்கூடிய பொருளாதார , சமுக அபிவிருத்தியில் தலைகீழான மாற்றத்தினையே கொண்டு வரும். இந்த மிலேனியம் அபிவிருத்தி இலக்கினை அடைவதற்கான பொறுப்புணர்சி ஒவ்வொரு தனிநாட்டிலேயுமே தங்கி இருக்கின்றது.

21ம் நூற்றாண்டுக்கான வலுவான உறுதிவாய்ந்த சர்வதேச ரீதியான மிலேனியம் பட்டயம் தயார் செய்யப்பட்டுள்ளது. எடடு வகையான அபிவிருத்தி சார்ந்த இலக்குகள் மிலேனியம் அபிவிருத்தி இலக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் எட்டு குறிக்கோள்களிலும் அனர்த்த இடர் தணிப்பு பற்றி கூடியளவு கவனம் செலுத்தப்பட்டள்ளது குறிப்பிடத்தக்கது.

1. கொடிய வறுமை பசி என்பனவற்றை இல்லாமல் செய்தல்.
அனர்த்த இடர் சுட்டிக்காட்டியின் தரவடிப்படையில் பார்க்கும்போது இயற்கை அனர்த்தம் மூலம் ஏற்ப்படும் நலிவுறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் வருமானம் வறுமை என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ளது.

வெள்ளம், வரட்சி இவற்றுடன் சேர்ந்து மனிதர்களால் உருவாக்கப்படும் அனர்த்தங்கள் 2015இல் எட்ட இருக்கும் மிலேனியம் அபிவிருத்தி இலக்கினை குன்றச் செய்துவிடும். குறிப்பாக 2004 இல் இடம் பெற்ற சுனாமி அனர்த்தம் மூலம் பாதிக்கப்பட்ட 30 தொடங்கி 50 வீதமான மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்வது அதிகரித்து வருகிறதென அறிக்கை வெளியிட்டுள்ளது

2. அனைவரும் ஆரம்பக் கல்வியை அடையச் செய்தல்.
உலகலாவிய ரீதியில் ஏற்ப்படுகின்ற அனர்த்தங்கள் கல்வியின் அடைவுமட்டததினை பின்தள்ளிவிடுகின்றது குறிப்பாக உட்கட்டுமானததினை சிதைவடையச் செய்வதுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உயிர்களை இழக்கின்றனர். 2001ம் ஆண்டு குஜராத்தில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம் காரணமாக 1359 ஆரம்பப் பாடசாலைகள், 992 உயர்தரப் பாடசாலைகள் முற்றாக அழிந்துபோனமை குறிப்பிடத்தக்கது.

3. பால் நிலை சமத்துவத்தினை ஏற்ப்படுத்ததலும் பெண்களுக்கான வலுவூட்டலும்.
அனர்தங்களின்போது மிக மோசமாக பாதிக்கப்படுவது அல்லது இலகுவில் நலிவுறுவது பெண்கள் ஆகும். இதனால் அவர்களது வேலைப்பழு அதிகரிப்பதோடு குடும்பச் சுமையும் அதிகரிக்கின்றது. ஆத்துடன் துஸ்ப்பிரயோகங்களுக்கு ஆளாகும் அளவும் அதிகரிக்கின்றது.

4. பிறப்பிலே இறக்கும் குழந்தைகளின் அளவினை குறைத்தல்.
சுhதாரண இறப்புடன் ஒப்பிடுகையில் அனர்த்தங்களின் போது இறக்கின்றவர்கள் மிக அதிகமாகும். 1971 இல் வங்களாதேசில் ஏற்ப்பட்ட புயல் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோர் 10 வயதுக்கு குறைந்த சிறுவர்களாகும்.

5. கற்பினித் தாய்மாரின் சுகாதார விருத்தி
குறிப்பாக கற்பினித்தாய்மார்கள் மற்றும் இளம் தாய்மார்கள் அனர்த்தங்களின்போது பாதிக்கப்படும் நலிவுற்றவர்களாக இருக்கின்றனர். 40000 கற்பனித்தாய்மார்கள் பாகிஸ்த்தானில் 2005இல் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தின்போது பாதிப்படைந்திருந்தனர் நலிவு நிலையிலுள்ள கற்பனித்தாய்மார்களே அனர்த்தங்களின்போது கூடியளவு ஆபத்தினை எதிர்கொள்கின்றனர். ஊதாரணமாக குறைமாத பிரசவம், நிறை குறைந்த குழந்தைப் பிரசவம்  அத்துடன் பிறந்த உடன் இறக்கின்ற குழந்தைகள். இவையனைத்தும் அனர்த்தங்களின் போதான நெருக்கடியான நிலமைகளிலேயே ஏற்படுகின்றன.

6. HIV, AIDS,  மலேரியா மற்றும் ஏனைய தொற்று நோய்களை குறைத்தல்.
ஆனர்த்தங்கள் பொதுவாக வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ உட்கட்டுமானங்களை எல்லாம் வெகுவாகப் பாதிக்கின்றது. ஆத்துடன் தொற்று நோய்களான மலேரியா, டெங்கு, வயிற்றோட்டம் என்பன அனர்த்தங்களின்போது இரட்டிப்பாக பரவி விடுகின்றது. றுர்ழு இன் தரவுகளின் அடிப்படையில் 2004இல் வங்களாதேசில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு பின்னர் கிட்டத்தட்ட 17000 பொதுமக்கள் வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டனர்.

அதேபோன்று HIV தொற்றும் அனர்த்த காலங்களில் மிக வேகமாக பரவுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனர்த்தப் பகுதிகளில் பணிபுரிபவர்களின் பாலியல் நடத்தைகள் மற்றும் பெண்களின் வறுமை நிலமை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபடல் என்பனவற்றினால் இத்தொற்றுகள் பரவுகின்றன.

7. சுற்றுச்சூழல் நிலைத்திருத்தலை உறுதிப்படுத்தல்.
உலகிலே மிக முக்கியமான வளங்களான பயிர்ச்செய்கை நிலங்கள், காடு, பெறுமதி மிக்க தாவரங்கள் மற்றும் இதர இயற்கை வளங்கள் எல்லாம் அனர்த்தங்களின்போது மிக மோசமாக அழிந்து விடுகின்றது. இவ்வாறு அழிவடைகின்ற வளங்களை குறுங்காலத்தில் மீட்டெடுத்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.
நாகலாந்தில் உள்ள மாயோ பட்டினத்தில் 2004 இல் ஒரு பாரிய மண்சரிவு ஏற்ப்பட்டது. ஆதில் 80 வீடுகள் சேதமடைந்ததுடன் பாரிய வீதிகளும் மோசமாக பாதிக்கப்பட்டது. இதில் 38,600 க்கும் அதிகமான நீர் நிலைகள் அழிந்து போனது குறிப்பிடத்தக்கது.

8. அபிவிருத்திக்கான உலக நட்புறவை கட்டியெழுப்புதல்.
அனர்த்தங்களின் போது வளங்கப்படுகின்ற உதவித் தொகுதிகளில் இருந்து பெரியதொரு வளப் பகுதியினை நிவாரணம் மற்றும் மீள் கட்டுமானம் போன்றவற்றுக்கு மாற்றீடு செய்கின்றனர். சிறிய நாடுகளின் பொருளாதாரங்கள் மிகவும் இலகுவில் இவ்வனர்த்தங்களின்போது முற்றாகப் பாதிப்படைகின்றன. குறிப்பாக இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளுக்கு சுனாமி அனர்த்தங்களின்போது நிவாரணக் கடன் உதவியாக 23.1 பில்லியன் டொலர் தொகையை செல்வந்த நாடுகள் மற்றும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றன வளங்கி இருந்தன.

10 November 2010

வசந்த காலப் பறவைகள்..


பூமியில் பிறந்தோம்
உறவுகளில்,,,
குடும்பங்களையும் தாண்டி
இரத்த உறவிலும் மெத்தமாய்
தூரங்களைத் தொலைத்து....
சாதி மதங்கள்..
போட்ட வேலிகளைப்பிரித்துவிட்டு.....

ஒரு உணவுப் பொதி- அதில்
பல கரங்கள்
ஒரு பால் பாணம் -அதில்
பல உறிஞ்சல்கள்
ஒரு கட்டில்- அதில்
பல தலைகள்.......

ஒரு சோப்பு – அதில்
பலர் குளிப்பு
ஒரு ஜோக்கு – அதில்
பல புன்னகைச் சிதறல்கள்
ஒரு சோகம் -அதில்
பலர் கண்ணீர்த் துளிகள்......

ஒரு காதல் -அதில்
பல மோதல்கள்
ஒரு சண்டை –அதில்
பல சமாதானங்கள்.......

ஒ பறவைகளே!!!
இதமான காற்றுடன்
ரிதமான ஒலியுடன்
தாமரைகளின் புன்னகை
பூக்களின் நடுவே..
ஒரே குளத்தில்
ஒரே குதூகலத்துடன்.....

இன்று நாங்களும்
பல்கலைக்கழகம் எனும்
பாலாவிக் குளத்தில்
வசந்த காலப் பறவைகள்
நாளை????????????????????

09 November 2010

மது


மெய்யை உருக்கும்
நெருப்பு
மையல் கொண்டோரின்
விருப்பு
காசை கரியாக்க
கொழுத்த உரம்
வாழ்கை பின்னடையும்
வழுக்கு மரம்
பலவீனமானோர்
பக்கத்துணை
பருகுவோர்கு விலக்கும்
வெட்கத்தினை
நீராய் இருந்து
முள்ளாய் குத்தும் நெருஞ்சி

மடையர்களின் 
சிறைச்சாலை -இது
ஆக்குவதோ துன்பச்சோலை...

இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் மது அருந்துதல், புகைத்தல் ஆகியன ஒரு பஷனாக மாறிவிட்ட நிலையில் விருந்துபசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில் மதுபான வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன.ஏதாவது கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு வருமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தால் வைன், பியர், பிஸ்கி, பிறண்டி வழங்கப்படுகின்றனவா என்று கேட்டுக்கொண்டே மேற்படி கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு பலர் ஒன்றுகூடும் களியாட்ட நிகழ்வுகளில் மது அருந்துதல் என்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது என்பதுடன், மது அருந்தாது விடுபவர்களை பட்டிக்காடு என்று நோக்கும் நிலையும் வந்துவிட்டது.

லீலைகள்..


இது எனது பல்கலைக்காலத்தில் யாக்கப்பட்ட கவிதை.....

காற்றினில் பறந்து
பூக்களில்  உரசி
தேனினைக் குடிக்க
வண்டுகள் செய்யும் சரசம்
லீலைகள்.....

நிலவினைத் தீண்டி
ஒளியினை மறைத்து
முழுமுகம் கரைத்து
முகவரி மாற்றும்
மேகங்கள் உன்னில்
மோகம் கொள்வதும்
லீலைகள் .......

நாங்களும்
மதுவினில் தோய்ந்து
மார்பினில் பாய்ந்து
கிளுகிளுப்பூட்டி
தீனிகள் தீர்த்தி
சில்மிசம் செய்வதும்
லீலைகள் .........

GH இன் ஓரங்களில்
சத்தமாய் காதலி
பெயரினைச் சொல்லியும் ,,
வெளிச்சங்கள் அணைய ,,
வசைபாடியும் ,,
வேலிகளை பயமுறுத்த,,
வெற்றுப் போத்தல்களை
சுக்குநூறாக்கும் .......
ஆண்களின் வீரமும்
லீலைகள் தான்.

08 November 2010

வறுமையும் அமெரிக்காவும்பாவையர்  உடையில்  வறுமை
பள்ளியில்  கல்வி  வறுமை
படித்தோருக்கு வேலை வறுமை
பாதீட்டில்  மீதி வறுமைவறுமை மிகவும் கொடியது இது ஆசியா போன்ற வறிய நாடுகளில் மட்டுமல்ல அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளையும் இது விட்டுவைக்கவில்லை

வறுமை என்பது, உணவுஉடைஉறைவிடம், பாதுகாப்பான குடிநீர்கல்விபெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும். பல நாடுகளில் முக்கியமாக வளர்ந்துவரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக இருந்துவருகிறது. வறுமைக்கான காரணம், அதன் விளைவுகள், அதனை அளப்பதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பான வாதங்கள், வறுமை ஒழிப்பைத் திட்டமிடுவதிலும், நடைமுறைப் படுத்துவதிலும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. இதனால் இவை, அனைத்துலக வளர்ச்சிபொது நிர்வாகம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன.

வறுமையினால் ஏற்படும் வலி, துன்பம் என்பவை காரணமாக, வறுமை விரும்பத்தகாத ஒன்றாகவே கொள்ளப்படுகின்றது. சமயங்களும், பிறஅறநெறிக் கொள்கைகளும் வறுமையை இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைச் சிறப்பித்துக் கூறுகின்றன. என்னும், சில ஆன்மீகச்சூழல்களில் உலகப் பொருட்களைத் துறந்து பொருள்சார் வறுமை நிலையை ஏற்றுக்கொள்ளல் சிறப்பானதாகக் கருதப்படுவதும் உண்டு.


வறுமை தனிப்பட்டவர்களையோ அல்லது குழுக்களையோ பாதிக்கக்கூடும். இது வளர்ந்துவரும் நாடுகளில் மட்டுமன்றி வளர்ந்த நாடுகளிலும், வறுமை வீடின்மை போன்ற பல வகையான சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றது.
வாஷிங்டன்: உலகின் பணக்கார நாடு என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வர்ணிக்கப்பட்ட அமெரிக்காவில் 7 பேரில் ஒருவர் வறுமையில் வாடுவதாக சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

கடந்த 2008-ம் ஆண்டு கணக்கெடுப்பில், 13.2 சதவீதம் பேர், அதாவது, 3 கோடியே 98 லட்சம்பேர் வறுமையில் வாழ்ந்து வருவது தெரிய வந்தது.

ஆனால், தற்போதைய கணக்கெடுப்பில், இந்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சமாக (14.3 சதவீதம்) உயர்ந்துள்ளது. இதன்மூலம், அமெரிக்க மக்கள் தொகையில், 7 பேரில் ஒருவர் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் அங்கு அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது. முன்பெல்லாம் பெரிய நகரங்களில் மட்டுமே பிச்சைக்காரர்கள் அதிகம் காணப்பட்டதாகவும், இப்போது சிறு நகரங்களிலும் பிச்சைக்காரர்கள் பெருகி விட்டதாகவும் அக்கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே அமெரிக்க எம்.பி.க்கள் வாங்குவதை கட்டாயம் ஆக்கும் 2 மசோதாக்கள், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டன.......