ADS 468x60

16 December 2010

விருத்தி நோக்கிய வீறுநடையில் மட்டக்களப்பு

உலகம் இன்று விரல் நுனியில் தவழும் அளவுக்கு சுருங்கி விட்டது. மேல்ல நகர்து கொண்டிருக்கும் இந்த உலகத்தினுள் சமிப காலத்தில் பாரிய பொருளாதார, வள வேறுபாடுகள் வேரூன்றி விட்டது. இது உலகை ஏழைவர்க்கம் பணக்காற வர்க்கம் என  இரண்டாப் பிரிக்கும் அளவுக்கு விஸ்வரூம் எடுத்திருக்கிறது என, 1986 இல் ரண்ணன் வெற்ஸ் என்பவர் குறிப்பிட்டிருந்தார். உலகில் ¾ பங்கினர் 16மூ சதவீதமான வருமானத்தினை மட்டும் அனுபவிக்க மற்றய 84மூ வீதமான உலக வருமானத்தினையும் உலகின் 20ம% வீதமான மக்கள் மட்டும் அனுபவிக்கும் ஏற்றத்தாழ்வான உலகில் எங்கள் வாழ்க்கை நகர்கின்றது.
                                                  (Eastern University Batticaloa, Sri Lanka)
ஐக்கிய நாடுகள் சபையின் இப்போதய அறிக்கையின்படி, உலக சனத்தொகை 6.1 வீதத்தில் இருந்து இது 2050 இல் 9.1 பில்லியனாக உயரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதிசயமும் ஆபத்தான விடயமும் என்னவெனில் இதில் 90 வீதமான மக்கள் தொகை ஆசியா போன்ற வளர்முக நாடுகளிலேயே காணப்படும் எனக்கூறப்பட்டுள்ளது, அப்படியானால் இவர்களுடைய எதிர்கால வாழ்கை, வாழ்வாதாரம், அடிப்படை வசதிகள் மற்றும் வளப்பகிர்வுகள் எவ்வாறு இருக்கும் என சிந்தித்துகூட பார்க்க முடியாமல் இருக்கின்றது.
                                                          (Batticaloa Clock Tower)
நாம் வாழ்வது ஆசியாக்கண்டமாகும் இங்குதான் உலகிலேயே சனத்தொகையை அதிகமாகக் கொண்ட நாடுகள் காணப்படுகின்றது. உலக சனத்தொகையில் 61.3ம% சதவிகிதமான மக்கள் தொகை இங்குதான் காணப்படுகின்றது. இது உலக சனத்தொகையில் இரைவாசிக்கும் அதிகமாகும். இங்குதான் இலங்காபுரி இந்துசமுத்திரத்தின் நித்திலமாக வரலாற்றுபட பாதைகள் பல கடந்து வளம்மிக்க இறமை கொண்ட நாடாக மிளிர்கின்றது.

இலங்கையின் கிழக்கே; வடதிசையில் வெருகலையும், கிழக்கே வங்காள விரிகுடாவையும், தெற்கே அம்பாறை மாவட்டத்தினையும் மற்றும் மேற்கே பொலன்னறுவை மாவட்டத்தினையும் கொண்டமைந்த, இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று பூர்வீகம் கொண்ட, கிழக்கிலங்கையின் நடுநாயகமாகத் திகழ்கின்ற மீன்பாடும் தேநாடு என வர்ணிககப்படும் மாவட்டம்தான் மட்டக்களப்பாகும். இதற்கு மட்டக்களப்பு மான்மீயத்தினில் 'தேன்ஆறு' என்று பொருளுரைக்கப்படுவது சாலப் பொருத்தமானதே!. இதனால்தான் என்னவோ புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள்

'பால் பெருகும் தேன் பெருகும்; பண்புடைய மன்னவர் செங்
கோல் பெருகும் படிய பைங் கூழ் பெருகும் புனல் பரந்து
கால் பெருகும் கல்லார்கும் சொல்லாட்சி மிகப் பெருகும்
நூல் பெருகும் கிடையார்கு நுவலறங்கள் பெருகுமால்'

என அனைத்தும் பெருக்கெடுக்கும் எமது மீன்பாடும் தேனாடு பாடப்பட்டிருப்பது ஒரு சாட்சியாகும்.

இம்மாவட்டம் கிட்டத்தட்ட 2633.1 சதுரக்கிலோமீற்றர் பரப்பளவில் பல வளங்களை உள்ளடக்கி சுமார் 545477 மக்கக் தொகையை தன்னகத்தே கொண்ட இடமாகும். இங்கு அன்னியர்களான போத்திக்கீசர்கள் 1602 இல் கால்பதித்ததில் இருந்து, அதன் பின் டச்சுக்காரர் மற்றும் ஆங்கிலேயர் என பல்தேசத்தவர்களும் ஆட்சி செய்த, வாணிபம் செய்த வரலாற்றுப் பூமியாகும். இந்த அன்னிய மோகத்துக்கு காரணம் இங்கு காணப்படுகின்ற இயற்கை வளங்களான நிலம், நீரேரிகள், வாவிகள், கடல்பரப்பு, காடுகள், மலைகள், புல்வெளிகள் மற்றும் இன்னோரன்ன இயற்கை வளங்களைக் குறிப்பிடலாம்.
(மட்டக்களப்பில் நெற்கதிர்களை சூட்டில் வைக்கும் காட்சி)
மட்டக்களப்பு மாவட்டத்தினை பல கவிஞ்ஞர்கள் போற்றிப் பாடியுள்ளனர் அதில் 'மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகர் அழகான மேடையம்மா' எனக்காட்டி இருப்பது என்னவோ உன்மைதான், ஏனெனில் மட்டக்களப்பிற்கு அணிசேர்ப்பதே அதில் இயற்கையாக அமைந்துள்ள வாவிகள்தான். குறிப்பாக மட்டக்களப்பு வாவி, வாழைச்சேனை வாவி மற்றும் வாகரை பனிச்சங்கேணி வாவி என்பன குறிப்பிடத்தக்கது. இதே போன்று மட்டக்களப்பின் கரைகள் அனைத்தினையும் இந்து சமுத்திரம் கைப்பிடித்து நிற்ப்பதைக்காணலாம். இதில் கற்குடா, பாசுக்குடா போன்ற மனதைக் கவரும் இடங்கள் அழகிய சுற்றுலாப் பிரயாணிகளின் சொற்காபுரியாகவும் திகழ்கிறது.
                             (மட்டக்களப்பு கச்சேரி அமைந்துள்ள ஒல்லாந்துர் கோட்டையின் அழகு)
இங்குள்ள மக்கள் வாழ்கை நடத்த பல வளங்களும், வழிகளும் இருப்பினும் மூன்று தசாப்த கால சிவில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், இடப்பெயர்வுகள் என்பனபோன்ற இன்னோரன்ன காரணங்களால் அவை சிதைவடைந்து சின்னாபின்னமாகிக் காணப்பட்டன. இன்று மட்டக்களப்புக்கு வருவாய் தேடித்தருகின்ற இரண்டு மார்க்கங்கள் காணப்படுகின்றன. ஓன்று விவசாயத்துறை மற்றது மீன்பிடித்துறை. ஆதில் சுமார் 58374 கெக்டேயர் நிலப்பரப்பினில் சுமார் 300,000 விவசாயக் குடும்பங்கள் நெற்செய்கையில் இருபோகத்திலும் ஈடுபடுகின்றனர். அதேபோல சுமார் 49,339 கெக்டேயர் மேட்டுநிலத்தில் மேட்டு நிலப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றனர். இங்கு வெண்காயம், பச்சை மிளகாய், கத்தரி, வெற்றிலை மற்றும் இதர பயிர்களும் செய்கை பண்ணப்படுகின்ற ஒரு வளமிகு மாவட்டம். இவைதவிர நன்நீர் ஓடைகள், பரந்த கடல் வளம், குளங்கள், வாவிகள் இவைகள் இங்கு மீன்பிடித் தொழிலை மேற்க்கொள்ளக்கூடியதாகும்.
                                       ( மட்டக்களப்புக்கே அடையாளமான கல்லடிப் பாலத்தின் அழகு)
இவை எல்லாம் அமைந்திருந்தும், இன்னும் ஒருவேளைச் சோற்றோடு வாழ்கை நடாத்துகின்ற, வேலைவாய்ப்பில்லாமல், இருக்க நிரந்திர வீடில்லாமல், அடிப்படைக்கல்வி வசதிகூட இல்லாமல், ஒருநாளைக்கு ஒர டொளர் வருமானத்துக்கும் குறைவாக வருமானத்துடன் எத்தனை எத்தனைபேர் வறுமையில் வாடுகின்றனர். தாண்டிச் சென்ற இயற்கை, மனித அனர்த்தங்கள், உலகப் பொருளாதார மந்தம், ஏட்டிக்குப்போட்டியான விலைவாசி அதிகரிப்பு, மிதமிஞ்சிய அரசின் கடன் சுமை, வரிச்சலுகைப் புறக்கணிப்பு, எண்ணெய் விலை அதிகரிப்பு இவையெல்லாம் இம்மக்களின் வறுமைச் சுமையை இன்னும் இன்னும் கூட்டி இருக்கின்றது தவிர இம்மக்களை ஒரு தொழில் புரட்சியாளராக்கும் எதுவித முயற்சியும் பலிக்கவில்லை என்றே கூறத்தோணுகிறது.

இங்கு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் புதிதாக முளைத்திருக்கும் நிதி நிறுவனங்கள், வங்கிகள், முதலீட்டு மையங்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் அரச அதிகாரிகளைப்போல் முன்னே உள்ள பிரச்சினைகளை நீண்டகாலத்தினில் இல்லாமல் செய்ய கொள்கையளவில் கட்டுக்கட்டாக பரிகாரங்களை வைத்திருந்தாலும்  செயலளவில் சின்னச் சின்ன புறக்கணிப்புகள் மலைபோல உருவாகி ஒட்டுமொத்த மாவட்டத்தினையும் ஒருபடி பின்தள்ளி வறுமையின் இறுக்குப் பிடிக்குள் தள்ளியுள்ளன. இங்கு 2/3 பகுதியினர் பிளைப்புக்காக விவசாயம் செய்கின்றனர். இதில் பெண்களும் அனேகமாக வயிற்றுப் பிளைப்புக்காக குறைந்த கூலியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக இலங்கையில் 6.6 விகிதத்தினர் ஒரு நாளைக்கு ஒரு டொலருக்கு குறைந்த வருமானமே ஈட்டுவதாகவும், மொத்த சனத்தொகையில் 45.4 விதமானவர்கள் 2 டொலருக்கு குறைந்த வருமானத்தினை மட்டும் ஈட்டுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது மூன்று தசாப்த கால சிவில் யுத்தத்தினுள் அகப்பட்ட மக்களையே மிக மோசமாப் பாதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
                       மட்டக்களப்பு பிள்ளயாரடி ஈச்ச மரம் பழுத்து இருக்கும் போது அதன் அழகு)
இருப்பினும் இவைகளெல்லாம் நாகசாங்கி மற்றும் கிரோசிமாவில் விழுந்த அணுகுண்டுகளோ, அல்லது அமெரிக்காவில் தகர்க்கப்பட்ட இரட்டைக்கோபுரம் போன்ற இழப்புகளோ அல்ல. மட்டக்களப்பு வந்தோரை வாழவைக்கும் பூமி, சென்ற இடமெல்லாம் செல்வம் கொழிக்கும் சாமி, வீரம் விழை நிலம், எதிரிக்கும் இரக்கம் காட்டும் மன்னிப்பு மகிடம் சூடியவர்கள் வெற்றுக் கையோடு திரும்பிப் போக ஒன்றும் கோழைகள் அல்ல, ஒரு கரம் இளப்பினும் மறுகரத்தினால் உழைத்து வாழும் வர்க்கம், இங்கு மனம் மட்டும் திடமாய் இருந்தால் போதும், மறுபடியும் ஒரு சிங்கப்பூரை இந்த மண்ணில் நாட்டலாம். இந்தச் சவால்கள் எங்களுக்கு முன் வெறும் தூசிகளாக இருக்கட்டும். இதற்க்காக உண்ணாவிரதமோ அல்லது உப்புச்சத்தியாக்கிரகமோ இருக்கச் சொல்லவில்லை.. உழைத்து வாழ்வோம், ஒவ்வொருவரும் உழைத்தால்தான் இந்தச் சமும் உயரும், சமுகம் உயர்ந்தால்தான் இந்த மாவட்டம் உயரும்.. இதுதான் இந்த இலங்காபுரி சொர்க்காபுரியாக மாற உதவும் அதை மனதில் வைப்போம், மகிழ்ந்து உழைப்பாம்...

1 comments:

Vijayaretthna Edwin said...

மட்டக்களப்பு என்பதுவும் மட்டக்களப்பு மாவட்டம் என்பதுவும் வெவ்வேறு பொருள் கொண்டவை

Post a Comment