ADS 468x60

16 December 2010

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இன்றய தேவை. (Eastern University, Batticaloa)

மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகம் (Eastern University) இலங்கையிலுள்ள பதின்மூன்று பல்கலைக்கழகங்களுள் ஒன்று. கிழக்கில், மட்டக்களப்பில் பல்கலைக்கழகமொன்றின் தேவை நீண்ட காலமாகவே இருந்துவந்த போதிலும், 1981 ஆம் ஆண்டிலேயே இது காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் கே.டபிள்யூ.தேவநாயகம் ஐயா அவர்களால் 'மட்டக்ககப்பு வளாகம்' என்ற பெயரில் நிறுவப்பட்டது.
வரலாற்றுப் பின்னணி

இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகளில் பல்கலைக்கழகமொன்று இல்லாமை ஒரு பெருங் குறையாக இருந்துவந்தது. எனினும் இத்தகைய ஒரு பல்கலைக்கழகம் எங்கே நிறுவப்பட வேண்டுமென்பதில் தமிழர் பிரதிநிதிகளிடையே ஒத்தகருத்து நிலவவில்லை. 

இலங்கைத் தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, திருகோணமலையிலேயே பல்கலைக் கழகம் நிறுவப்பட வேண்டுமென்று வாதிட்டுவந்தது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரும் வேறு சிலரும் யாழ்ப்பாணத்தில் இது அமையவேண்டுமென்றனர். 

இலங்கையின் தமிழர் பிரதேசத்தின் மத்திய பகுதியில் திருகோணமலை அமைந்திருப்பதும், தமிழர் பகுதியின் தலைமையிடமாகத் திருகோணமலையை வளர்த்தெடுக்கும் நோக்கம் இருந்ததும் தமிழரசுக் கட்சியினர் திருகோணமலையை அமைவிடமாக வலியுறுத்தி வந்ததற்கான காரணங்களிற் சில. திருகோணமலையில் குடித்தொகை அடிப்படையில் தமிழர் விகிதாசாரம் குறைந்துவருவதைத் தடுத்து நிறுத்தவும் இது உதவுமென அவர்கள் கருதினார்கள்.

அக்காலத்தில் யாழ்ப்பாண மாணவர்களே மிகப் பெரும்பான்மையாகப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகினர். எனவே உடனடியாக யாழ்ப்பாணத்திலேயே பல்கலைக்கழகம் தேவை என எதிரணியினர் வாதாடியதுடன், திருகோணமலையின் குடித்தொகை நோக்கங்களைப் பொறுத்தவரை தமிழருக்குப் பாதகமான விளைவுகளே ஏற்படக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்தார்கள்.

1965ல் பதவிக்குவந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசில், தமிழரசு, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பங்காளிகளாக இருந்தும், தமிழர் பகுதியொன்றில் பல்கலைக்கழகமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு சாதகமான நிலைமை இருந்தபோதிலும் கூட, தமிழரிடையே ஒத்தகருத்தின்மை காரணமாக எதுவும் நடைபெறவில்லை. 

அதன் பின் 1972ல் இலங்கை சுதந்திரக் கட்சி வெற்றிபெற்று சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமரான பின்னர். தமிழரசுக் கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழகமொன்றை நிறுவி 1974 ஆம் ஆண்டு திறந்துவைத்தார்.

அக்காலத்தில் இலங்கையிலிருந்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இலங்கைப் பல்கலைக் கழகம் என்ற ஒரே பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு வளாகங்களாகவே செயற்பட்டு வந்தன. எனவே யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகமும், 'இலங்கைப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாண வளாகம்' என்றே அழைக்கப்பட்டது. பின்னர் இவ் வளாகங்கள் அனைத்தும் தனித்தனியான பல்கலைக்கழகங்களான போது, யாழ்ப்பாண வளாகமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆனது.

இதே நிலமையில்தான் கிழக்குப் பல்கலைக்கழகம்  இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வந்தாறுமூலையில் அமைந்துள்ளது. இதன் ஒரு வளாகம் திருகோணமலையில் அமைந்தது. 

இப்பல்கலைக்கழகத்திற்கான மருத்துவபீடத்தை ஆரம்பிக்கும் அனுமதி 2005இல் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலத்தில் மட்டக்களப்பு பல்கலைக்கழகமும் எங்கே ஆரம்பிக்கப்படவேனும் என்ற பெரிய பிரச்சனையில் இருந்து வந்கது.

அப்போததான் 1981 இல் ஆவணி மாதம் 'மட்டக்களப்பு வளாகம்' என்ற பெயரில் ஓர் உயர் கல்வி நிறுவகம் உதித்தது.  இது 'மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியாக' கிடைத்தது 1981 ஐப்பசி மாதத்தில்தான். எதுவும் தபனாக உருவாவதில்லையே, அதேபோன்றுதான் எமது பல்கலைக்கழகமும் அமரர், முன்னாள் அமைச்சர் தேவநாயகம் அவர்களால் 'மட்/வந்தாறுமூலை மகாவித்தியாலயம்" தேவநாயகம் ஐயா சிந்தனையில் மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகமாக மிழிர்கிறது.

இப்பல்கலைக் கழகத்தின் பிரதான வளாகம் ஆனது செங்கலடி நகரத்திற்கு அருகே வந்தாறுமூலையில் அமைந்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பாசிக்குடாப் பகுதிக்கு சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம் மட்டக்களப்பு நகரிலும் இயங்கி வருகின்றன.

கிடைத்த விளைச்சல்கள்.

கடந்த 29 வருட காலத்தில் இப்பல்கலைக்கழகத்தினில் இருந்து பல்லாயிரம் பட்டதாரிகள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். பலர் இன்று கிழக்குப் பல்கலைக்கழகத்திலேயே  உயர் பதவிகளில் கடமையாற்றுவதைக் காண்கின்றோம், மற்றும் சிலர் சிரேஸ்ட விரிவுரையாளர்களாகவும், பீடாதிபதிகளாகவும் மற்றும் நிர்வாக உத்தியோகஸ்த்தர்களாகவும் கடமையாற்றுகின்றனர்.

குறிப்பபாகச் சொல்லப்போனால் அமரர் தேவநாயகம் ஐயா ஏற்றிய சுடர்களாக இப்பல்கலைக்கழகத்தினில் இருந்து இற்றைவரை 48000 பேர் உள்வாரியாகவும், வெளிவாரியாகவும் பட்டதாரிகளாகியுள்ளனர். 600க்கு மேற்ப்பட்டவர்கள் இதில் நிரந்தர, தற்காலிக, அமைய எனும் பெயரில் உத்தியோகஸ்த்தர்களாக கடமைபுரிகின்றனர்.

பீடங்களின் விரிவாக்கம்..

விஞ்ஞான பீடம், விவசாயப்பீடம் இவ்விரண்டு பீடங்களுடன் மட்டும் சுமார் 75 மாணவர்களுடன் ஆரம்பமான மட்டக்கள்பு பல்கலைக்கழக கல்லூரி இன்று கலைப்பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம், விவசாயப் பீடம் மற்றும் சௌபாக்கிய பராமரிப்பு பீடங்களென ஐந்து பீடங்களுடன் திருகோணமலை வளாகம் மற்றும் கல்லடி சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்துடன் 4600 க்கு மேற்ப்பட்ட பட்டதாரிகள் கல்வி கற்கும் வரப்பிரசாதம் இந்த மண்ணுக்கு கிடைத்தது சாலப் பொருத்தமானதே.

உபவேந்தர்கள்.

இப்பல்கலைக்கழக உபவேந்தராக முன்னர் முனைவர் ரவீந்திரநாத் கடமையாற்றியபோது, இவர் கொழும்பில் இனம் தெரியாத ஆயுதாரிகளால் கடத்தப்பட்டுப் பல ஆண்டுகளாகியும் இவரது நிலை சரியாகத் தெரியவில்லை. அவருக்குப் பின்னர் பதில் உபவேந்தராக முனைவர் வரகுணம் நியமிக்கப்பட்டிருந்தார். இவரைத் தொடர்ந்து முனைவர் நா. பத்மநாதன் உபவேந்தராகப் பணியாற்றினார். இவரும் மார்ச் 2010 இல் மாணவர்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து தனது பதவிக்காலம் முடிவடைய முன்னரே பதவியில் இருந்து விலகினார்.

இன்றய தேவை...

இப்பல்கலைக்கழக இயந்கிரங்கள் செம்மையாக இயங்குகின்றனவா என்ற கேள்விக்கு நான் பதில் கூற விளையவில்லை இருப்பினும் பொதுவாக பல்கலைக்கழகத்தில் இருந்து வெளிவரும் மாணவர்களால் நாட்டையோ மாவட்டத்தினையோ கட்டியெழுப்பும் திறனை சமுகம் எதிர்பார்க்கவில்லை அவரவர் குடும்பத்தைக்கூட பாதுகாக்க முடியாத வல்லமைகொண்ட பட்டதாரிகளை உருவாக்குகின்றார்களோ என்ற ஐயப்பாடும் எம்மத்தியில் இல்லாமல் இல்லை.

ஆரம்பத்தினில் முதுமானிக் ல்வியை தொடர்வதென்பது என்னவோ யுத்த சூழ்நிலை, போக்குவரத்து, மொழிப்பிரச்சினைகள் காரரணமாக ஒரு முயல் கொம்பாகவே இருந்து வந்தது இருப்பினும் அவை இப்போது பலதுறைகளிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது செம்மையே, இருப்பினும் மீண்டும் ஒருகேள்வி.

இச்சமுகத்துக்கு இவர்கள் ஆற்றக்கூடிய பணிகளில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளதா? என்பதுதான் இருப்பினும் அவற்றுக்கு ஓரளவு பதிலிறுக்கும் பாங்கு வர்த்தக முகாமைத்துவ பீடத்தினர் மேற்கொள்ளும் முதுமானியில் உண்டெனலாம்.. இருப்பினும் பல இடர்பாடுகளுக்கு மத்தியில் நலிவடைந்த இப்பல்கலைக்கழகம் இந்தளவுக்கு வளர்சிபெற்றிருப்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்...

வேறு பல்கலைக்கழகத்துடன் ஒப்பிடும்போது இப்போது தவழும் நிலையில் எல்லா மட்டங்களிலும் நலிவடைந்து, நாளுக்கு நாள் ஊழல், பாராபட்சம், அநீதி என்ற கொடூர பிடிக்குள் அகப்பட்டு  பத்திரிகைகளிலும் வானொலியிலும் இழிபெயர் கேட்பது நான் பயின்ற பல்கலைக்கம் என்ற வகையில் மனக்கவலையாய் இருக்கிறது..

உலகமயமாதல் சிந்தனையோடு நாம் பத்தோடு பதினைந்தாக ஆவது செல்லவேண்டிய கடப்பாடு எமக்கும் இருக்கின்றதல்லவா! புதிய முறையில் மாணவர்களை உலக சந்தைக்கு அனுப்பும் கல்விச் செயற்ப்பாட்டினை கொள்கைத் திட்டமிடப்படவேண்டியது எமது கடமையல்லவா... அதுமாத்திர மல்ல எங்கள் பல்களைக்களகத்தினைப் பொறுத்த அளவில் பல புத்திஜீவிகள் வெளியேறியது எமது பல்கலைக்கழக மாணவர்களை போட்டித்தன்மையான ஊழியச்சந்தைக்கு விடுவதில் பல சிக்கல்களை முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் கடினமானதாகவே இருக்கின்றதது.

இது தவிர கல்வி நல்ல மனநிலை மாற்றத்தினைக் கொண்டுவருவதற்க்கான பயிற்சிகளை வளங்கும்போது சமுகம் பல்கலைக்கழகம் என்று இருக்கின்ற இரு துருவங்களை இணைக்கும் ஒன்றாக இருக்குமே என்பதும் எனது கருத்து. மழைகக்கு ஏங்கும் பயிர்போல் இச்சமுகம் இமது கல்விச்சமுகத்தின் ஆரோக்கியமான வெளியீகளை எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றன ஆகவே அவர்களின் எதிபார்ப்பை பூர்த்தி செய்யும் சமுகத்தினை உருவாக்கவேண்டிய தேவை உள்ளதல்லவா. ஆகவே ஒட்டுமொத்த தேவைகளை பூர்த்தி செய்து நல்ல உள்ளம் படைத்த பயன் வாய்ந்த சமுகத்தினை ஊருவாக்கவேண்டிய தேவையை உணர்ந்தால் ஒளியமயமான எதிர்காலம் என்றும் எம்கையிலே....

0 comments:

Post a Comment