ADS 468x60

10 January 2011

வெள்ளம் அபிவிருத்தியை புறந்தள்ளும் அனர்த்தமாகினால்...

ன்று ஊடகங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகைகள் எல்லாம் சக்கைபோடும் விடயம் நாம் எல்லோரையும் ஒரு கணம் அச்சத்தில் ஆழ்தி இருக்கும் வெள்ள அனர்த்தமாகும். வடகீழ் பருவக்காற்று காலங்களில் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் மழை வளமாகக் கிடைப்பதனால்தான் பல்லாயிரக்கணக்கான வயல் காடுகள் நெல் விளையும் சோலைகளாகவும், அரிசு உற்பத்தியாக்கும் சாலைகளாகவும் போற்றப்படுதல் குறிப்பிடப்படுகின்றது, ஆனால் அந்த வளம் இன்று வெள்ளமாகி விட்டது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தினில் 24 மணித்தியாலங்களில் 312 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.


இன்று காலநிலை மாறிப்போச்சுங்க விதைத்த பின் மழை இல்லை, விளைந்த பின் வெயில் இல்லை. விவசாயிகள் செய்வதறியாது பெய்மழையில் பேதலிக்கின்றனர். இது ஒருபுறம், மறுபுறத்தில் பட்டி தொட்டி எங்கும் வெள்ளக்காடு. மக்கள் இடம் பெயர்கின்றனர், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது அங்கு அனேகமாக இடம் பெயர்ந்த மக்கள் குடியேறி அவதியுறுகின்றனர். குறிப்பாக நீண்ட நாள் வெள்ளம் தங்கி நிற்ப்பதனால் சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் அங்கவீனர்கள் தொற்றுக்காய்ச்சல், குளிர் ஜீரம் என்பனவற்றினால் இலகுவில் பாதிப்படைந்திருக்கின்றனர்.

இதற்க்கப்பால் வெள்ளப் பாதிப்புக் காரணமாக மனநிலை பாதிப்படைந்திருப்பதுடன், இருக்கின்ற நோய்களின் அதிகரித்த தன்மையும் காணப்படுகின்றது. இன்னும் வெள்ளம் ஏற்ப்பட்டதின் பின்பு புதிதாகப் பிறந்த குழந்தைகள், கற்பினித்தாய்மார்கள் மிகவும் மோசமான பாதுகாப்பற்ற சூழலை எதிர்நோக்கி வருகின்றனுர். மட்டக்களப்பின் தம்பிடியா, வக்மிட்டியாவ என்ற பகுதிகளில் வெள்ளத்தில் சிக்குண்டு அவதியுற்றுகொண்டிருந்த 11 மக்கள் இலங்கை விமானப்படையினரின் உதவியுடன் 09.01.2011 அன்று காப்பாற்றப்பட்டிருக்கின்றனர். 

பல வீதிகள் வெள்ளத்தினாலும் மறுபுறம் கோபம் கொண்ட மக்களினாலும் உடைத்தெறியப்பட்டிருக்கின்றது. தவிரவும் மட்டக்களப்பு, வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களில் எல்லாம் மேட்டு நிலப்பயிர்கள் எல்லாம் சின்னாபின்னமாகப் போய் கிடக்கிறது. இவ்வாறு நம்மக்கள் துன்பத்தில் திளைக்க மறுபுறம் பாவம் ஜீவராசிகள், வளர்ப்புப் பிராணிகள் இவற்றுக்கு உணவு இல்லாமல் அழிந்து போகின்ற அதே நேரத்தில் அவற்றின் வசிப்பிடங்கள் தாறுமாறாக வேறுவேறாய் கிடக்கின்றது.... 

இவ்வாறு வெள்ளத்தின் சீற்றத்தில் அள்ளுண்ணப்பட்டிருக்கும் மக்கள் ஏற்கனவே மூன்று தசாப்த கால கொடிய சிவில் யுத்தம், பயங்கரவாதம் இவற்றில் இருந்து இப்போதுதான் மீழத்தொடங்கும் போது திரும்பவும் மாழவைத்த இயற்கை அழிவுக்கு என்னதான் காரணம்?????????

பொதுவான காரணங்கள்....
பொதுவாக பொதுமக்களிடம் இருந்து வருகின்ற கருத்துக்கணிப்பின்படி 1956இன் பின் இப்போது ஏற்ப்பட்டிருககும் வெள்ளம்தான் பெரிது என்று கூறுகின்றனர். அதற்கிடையில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஒருவிடயத்தினை இங்கு நான் விழிப்பூட்ட விரும்புகிறேன். அபிவிருத்தி என்பது ஒரு சமுகத்தினுடைய வாழ்கையின் தரத்தினை மேன்மையடையச் செய்வதாகும் அனர்த்தத்தினுள் உட்ப்படுதுவதில்லை. இவ்வபிவிருத்தி நிலைத்திருக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கவேண்டும். நிலைத்திருத்தல் எனபது அடுத்த சந்ததியும் இவ்வபிவிருத்தியை அனுபவிக்க வழி அமைத்தல் வேண்டும். ஆனால் இன்று இவை கேள்விக்குறியாக இருக்கின்றது புலனாகின்றது. 

கோடிக்கணக்கில் ஆண்டாண்டு நிவாரணம் வளங்குகின்றனர்.. இவர்கள் நிவாரணம் வழங்குவது இன்னொரு கையேந்ந்தும் சமுகத்தினை படைப்பதை விட வேறெந்த வெளியீட்டினையும் சொல்லும்படியாகத் தரவில்லை என்றே கூறவேண்டும். மக்களும் வெள்ளம் வந்தால் உணவு வள்ளம் வரும் என்னும் மனப்பாங்கை உருவாக்க வைக்கப்பட்டுள்ளனர். 

திட்டமிடாத அபிவிருத்தி....

திட்டமிடப்படாத அபிவிருத்தி இயற்கையை செயற்கையாக மாற்றியுள்ளது. நீரோடைகள் வீதிகளாகவும், பள்ளத்தாக்குகள் வீட்டுத்திட்டங்களாகவும் ஆற்றங்கரைகள் கொட்டேல்களாகவும், கடற்கரைகள் மசாஜ் சென்ரர்களாகவும் மாறியுள்ளதை நீங்கள் அவதானிக்கலாம். இயற்கையான அமைப்பில் அனர்த்த முகாமைத்திட்டத்தினை உள்வாங்காமல் செய்த அபிவிருத்திகள் இன்று அனர்தமாக மாறியுள்ளன. இப்போது இதற்கு யார் காரணம்?? 

வேறுயாருமில்லை இந்த திட்டமிடலளர்களும், அபிவிருத்தியாளர்களும்தான். இத்திட்டமிடலாளர்கள் ஒழுங்கான முறையில் அபிவிருத்தித்திட்டத்தினுள் அனர்த்த முகாமைத்துவத்திட்டத்தினை உட்ப்படுத்தி செய்திருந்தால் கோடான கோடி நிவாரணத்துக்கும், வருடா வருட அனர்த்த இழப்புகளை சீர் செய்ய செலவிடுவதற்கும் வாரி இறைக்கும் பணத்தினை மீதப்படுத்தி இன்னோர் அபிவிருத்தியை செய்யலாமல்லவா!

மக்களின் அசண்டையான போக்கு..
அத்துடன் மக்களின் அசண்டையீனமான போக்கும் அவர்களுக்கே ஆபத்தாய் முடிந்துள்ளதையும் சுட்டிக்காட்டவேண்டும். குறிப்பாக மக்கள் நீர் வடிந்தோடும் இடங்களில் குப்பைகளை குவிக்கின்றனர்(Dumping) இதனால் நீர் வழிந்தோட இடமில்லாமல் வீடுகளில் தஞ்சமடைகின்றன. தவிரவும் சட்டதிட்டங்களை அமுலாக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்காமை ஒரு பெரிய குறைபாடாக இருக்கின்றன. நிலப்பயன்பாட்டுத் திட்டங்கள் இருந்தும் இல்லாமல் செயலிழந்து கிடப்பதும், இருந்தும் செல்வந்தர்கள் தங்களது பணபலத்தினைப்பயன்படுத்தி தவறுதலாக நிலத்தினைப் பயன்படுத்துகின்றமையும், இவ்வாறான அனர்த்தங்களில் அப்பாவி வறிய மக்கள் சிக்கித்தவிக்கின்ற நிலமையை பரிசாகத் தந்துள்ளது.

வெள்ளப்பாதுகாப் இடங்களில் குடியேற்றத்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்க்கான வழிமுறைகளாக.
  •  வெள்ளம் வடிந்தோடுவதற்கென ஒதுக்கப்பட்ட வலயத்தினுள் குடியேற்றத்தினை சரியான முறையில் தடைசெய்தல்.
  •  சட்டமுறையற்ற குடியேற்றதிட்டங்களை தடுப்பதற்க்கான ஒழுங்குமுறையான அவதானிப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளை எடுத்துவருதல்.
  •  புதிய குடியேற்றத்திட்டங்களை தடைசெய்யப்பட்ட இடங்களில் ஊக்குவிப்பது மற்றும் உதவிபுரிவது நிறுத்தப்படவேண்டும்.
  •  வெள்ளத்தினை வழிந்தோடச் செய்வதற்க்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிலங்கள் குறிப்பாக சதுப்பு நிலங்கள் பாதுகாப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
  •  வெள்ளம் வழிந்தோடுகின்ற நிலங்களை அண்டியுள்ள பிரதேசங்களை மீள ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கைகளை வலுவாக தடைசெய்வதுடன் அவற்றின்மீது வலுவான கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.
  •  சரியான நீர் வழிந்தோடக்கூடிய வடிகால்கள் அது வெளியேறும் வழிகள் என்பவற்றை நகரப்பகுதியினுள் திட்டமிட்டபடி அமைக்கப்பட உறுதிசெய்யப்பட வேண்டும்.
  •  நீர் வழிந்தோடக்கூடிய இடங்களை சுத்தமாக வைத்திருத்தல் அறிவுறுத்தல் வேண்டும்.
  •  குடிநீரினைப் பெறுகின்ற இடங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதனால் அதில் பெறும் நீரினைக் குடிப்பதினால் மாசடைந்த நீர் மூலம் பல்வேறு தொற்று நோய்கள் வரலாம்.
மட்டக்களப்பின் வெள்ள அனர்த்தம்...
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தினை தாக்கியுள்ள பெருவெள்ளத்தினால் 334 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன, 965 கிராமங்கள் பாதிக்கப்பட்டும் உள்ளன.  2008 இல் 33465 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்த தொகை இம்முறை வெள்ளத்தினில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரின் பிந்திய அறிக்கைப்படி, சுமார் 60000 மக்கள் தற்காலிக முகாங்களில் தங்கியுள்ளனர் என்றும், 200,000 க்கும் மேற்ப்பட்டவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தங்கியிருக்கின்றனர் என்றும், இவர்களில் அனேகமானவக்கள் வாகரை, செங்கலடி, மன்முனைத் தென் எரவில் பற்று போன்ற பிரதேசங்களில் இருக்கின்றனர் என்றும், இவர்களுக்கான போக்குவரத்துப் பாதைகள் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் ஐனாதிபதியின் பணிப்புரையின் அடிப்படையில் இவர்களை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்டெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றதுடன், இவர்களுக்கான சமைத்த உணவுகள் படகுகள், மற்றும் கெலிகொப்டர்கள் மூலம் வளங்கப்பட்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

மாத்திரமில்லாமல் பல குளங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதனால் நிறைய ஆபத்துகளை ஆங்காங்கே வாழுகின்ற மக்கள் எதிர்நோக்கி வருவதாகவும் கூறப்படுகின்றது. 

இதனால் தான் நம்முன்னோர்கள் சொன்னார்கள் "வெள்ளம் வருமுன் "காக்கப்படவேண்டியது, ஆனால் நாம் வெள்ளம் வர வழிசெய்யும் மூடத்தனமான அபிவிருத்தி எப்போதுதுதான் உன்மையான பயனுள்ள ஒன்றாக வருமோ தெரியவில்லை நிற்க்க, நிவாரணங்கள், உதவிகள் செய்வது போன்று காட்டிக்கொண்டு அரசியல் லாபம் தேடும் அனர்த்த நிவாரண நடைமுறை மாற ஆண்டவன்தான் ஒரு புதிய அரசியல் மேடையினை ஆக்கித்தரவேண்டும் என்பதுடன் இவற்றை உணர்ந்து திட்டமிடல்  மற்றும் அபிவிருத்தியாளர்கள் வளர்க்கப்பட வேண்டும். நம்மக்கள் படுகின்ற சொல்லொன்னாத் துயுர் நீங்க இறைவனை பிராத்திப்பது தவிர வேறு வழி தெரியவில்லை......

0 comments:

Post a Comment