ADS 468x60

12 January 2011

மட்டக்களப்பில் வெள்ள அபாயம் அதிகரிக்கிறது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள அபாயம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டு வருகின்றது. 12.01.2011 இன் மழைவீழ்சி 113.09 மில்லி மீற்றர் எனப் பதிவாகியுள்ளது. மறுபுறத்தில் போரதீவுப்பற்று, மன்முனை தென் எருவில்பற்று, ஏறாவூர்ப்பற்று என்பன மக்கள் வீடுகளில் தங்கி இருக்கொணாத அளவு வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

இங்கு கிட்டத்தட்ட 533,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 122,000 பேர் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்றும். அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. இங்கு அகப்பட்டிருக்கும் பணியில் ஈடுபட்டுவந்த விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலமான மீட்ப்புப் பணி மற்றும் உணவு விநியோகம் என்பன மோசமான காலநிலை காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இம்மக்களை நேரடியாக பார்வையிட வந்த ஐனாதிபதி மகிந்த அவர்களால்கூட வரமுடியாத சூழலை இந்த சீரற்ற காலநிலை ஏற்ப்படுத்தியுள்ளது. அவர் பொலநறுவை மாவட்டத்தில் சென்று பார்வையிட்டுத்திரும்பியதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதற்க்கப்பால் பிரதி அமைச்சர் வி.முரளிதரன் அவர்கள் தற்பொழுது மட்டக்களப்பு மக்களுடன் நேரடியாக நின்று அவர்களின் அவசர தேவைகளை குசனம் விசாரிப்பதாகவும், அவர்கனது தேவைகளை இயன்ற அளவு பூர்த்தி செய்து வருவதாகவும், அவர் பரோபகாரிகளிடம் இருந்து இம்மக்களுக்கு உதவ வருமாறு வேண்டுகோளும் விடுத்திருந்தார். அவர் குமாரவேலியர் கிராமத்து மக்களுடன் இருந்து அவர்களின் தேவைகளை உணர்ந்து உதவி வழங்கி வருவதாகவும் அறியக்கூடியதாய் உள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவி வரும் வெள்ள அபாய வாதந்தி பற்றி ஒரு தகவலை மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் திரு. சீனித்தம்பி. மோகனராசா அவர்கள் தருகையில், மட்டக்களப்பு நீர் தாங்கு குளங்கள் அனைத்தும் அனைத்து உத்தியோகஸ்த்தர்களின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், தற்போதய நிலவரங்களின்படி, அச்சப்பட வேண்டியதில்லை என்றும். அவ்வாறு ஏதும் அபாயம் ஏற்ப்படும் சந்தர்ப்பங்களில் அது முன்னராகவே மக்களுக்கு ஊடகங்கழூடாக அறியத்தரப்படும் என்றும் கூறியுள்ளார். எது எப்படியாயினும் மக்கள் இவற்றுக்கு முன்னாயித்தமாக இருப்பது உசிதமாகும்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என வழங்கப்பட்டு வந்த உலர் உணவுகளை மீண்டும் வளங்குவதற்கு இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகளின் உணவுத்திட்டத்திதுர் தேவையான உணவினை வழங்குவதற்கும், அதுபோன்று UNICEF உம் இம்மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முன்வந்துள்ளமை பாராட்டத்தக்கது.

இ களுவாஞ்சிகுடியினையும், படுவான்கரையையும் இணைக்கும் பட்டிருப்பு பாலத்திற்க்கப்பால் மக்கள் வரமுடியாமல் வெள்ளம் பாய்ந்து செல்வதனால் அம்மக்கள் மிகவும் அந்நியப்படுத்தப்பட்டு எதுவித உதவிகளையும் பெறமுடியாத நிற்க்கதிக்குள்ளாகி உள்ளனர். ஆவர்களது வீடுகளெல்லாம் நான்கு அடிகளுக்கு மேல் வெள்ளம் மேவியுள்ளது. இந்நிலையில் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் அவர்களை மீட்டெடுக்கும் பணியில் படகுச் சேவை வளங்கி வருவதனையும் அறியத்தருகிறேன்.

என்னதான் பேசினாலும் ஐந்து நாட்க்களாக தொடந்து பெய்யெனப் பெய்யும் மழை காரணமாக இலங்கையில் 19 உயிர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில், மட்டக்களப்பில் ஓந்தாச்சிமடக் கிராமத்தில் ஒரு இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் மத்தியில் இந்த மக்களின் அவலங்களை எல்லாம் நாங்கள் தெரிவித்தும் உடனடி உதவி வழங்க முடியாத அளவுக்கு, வெள்ளம் வானைப்பிளப்பதனைப் போல் பிரதான பாதைகளையெல்லாம் ஆங்காங்கே உடைத்துள்ளதால், நிவாரண உதவிகளை செய்யும் உள்ளம் இருந்தும் அவர்களால் வழங்க முடியாத துரதிஸ்டம் எம்மக்களுக்கு நேர்ந்துள்ளது.

இதற்க்கப்பால் அம்பாறையில் பாண்டிருப்பு, கல்முனை என்பன முற்றாக நீரில் மூழ்கி வழிவதனையும் காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் கிட்டங்கி பாலம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதனால் அதற்கு அப்பால் வுhழுகின்ற நாவிதன்வெளிப் பிரதேச மக்களும் பாதிப்படைந்துள்ளது.

இதற்குமேல் ஆண்டவன்தான் இவர்களை காப்பாற்றவேண்டும். ஆனாலும் பரோபகாரிகளே தயவு செய்து இம்மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவாருங்கள் என அழைக்கிறோம்.

0 comments:

Post a Comment