ADS 468x60

13 January 2011

வடியாத வெள்ளமும் தாங்க முடியாத வாழ்க்கையும். ...

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழ்நாளில் இல்லாத அளவு பெருமழை பெய்து வெள்ளமாக மாறியுள்ளது> அனர்த்த முமாமைத்துவத்தின் கணிப்பீட்டின்படி 493 நலன்புரி முகாங்களில் பாதிக்கப்ப்ட்ட 954>204 மக்களில் 183>008 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தினில் 1070 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளது. 12.01.2011 இன் மழைவீழ்சியின் அளவு 200 மில்மீற்றருக்கு லோகப் பதிவாகியுள்ளது. இருந்த போதும் பொலநறுவை மாவட்டத்தில் மழையின் வேகம் குறைந்துள்ளது எனவும் ஆனால் மட்டக்களப்பின் நிலமை அவ்வாறு இல்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் திரு கொடுப்புலி அவர்கள் கருதடது வெளியிட்டுள்ளார்.

இதே நேரம் வெறும் பாடசாலை மண்டபங்களில் தஞ்சம் புகுந்திருக்கும் பாதிக்கப்பட்டோர் வீசிவரும் கடும் குளிர்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பெரும் அவதியுறுகின்றனர். இன்னும் சீரான முறையில் எதுவித உதவியும் கிடைக்கப் பெறாத நிலையில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

இருந்த போதும் கிழக்கு மாகணத்துக்கு என ஒதுக்கப்பட்ட 49 மில்லியன் ரூபாவில் அதிகமான தொகை மட்டக்களப்புக்கே ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நிவாரணந்களை முன்னெடுப்பதற்கென முப்படையினரையும் அரசு பணித்திருக்கிறது. இதற்க்காக 28>000 படையினர் இலங்கையின் வேறு பாகங்களில் இருந்து கழக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையை அரச தகவல் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்> இது பாரபட்சமற்ற நிவாரண விநியோகத்திற்கு பேருதவியாய் இருக்கும் என நம்பப்படுகிறது.

இறுதி அறிக்கைப்படி 18 உயிர்கள் நாடு முழுதும் பறிக்கப்பட்டுள்ளதுடன் 49 பேர் காயப்பட்டுள்ளனர் என தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் விசேட மருத்தவக் குழுக்கள் இம்மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்கள் கடற்படையின் உதவியுடன் மாவட்த்தின் சகல பாகங்களுக்கும் நடமாடும் சேவையை செய்ய பணிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சின் மேலதிகச் செயலாளர் வைத்தியர் மகிபால குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு செய்திகள் வந்து சேர்கின்றதே தவிர இன்னும் உடனடி உதவிகள் தாமதமாகி வருவதனையே காணக்கூடியதாக இருக்கின்றது.

0 comments:

Post a Comment