ADS 468x60

17 January 2011

கிழக்கு நோக்கிய வடக்கின் உறவுப்பாலம்.

வெள்ள அனர்த்தம் காரணமாக இடம் பெயர்ந்து நலன்பரி நிலையங்களில் தங்கியிருக்கும் தமிழ் உறவுகளை நாடி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஒரு தொகை பொருட்களை வழங்கிச் சென்றுள்ளனர். நிர்கதிக்கு உள்ளாகி இருக்கும் எம் உறவுகளை மீட்ப்பதற்கான மனிதாபிமான உறவுப்பயணம் பாராட்டுதற்குரியதே. 

யாழ் பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர்களினுடைய ஒருங்கிணைந்த முயற்சியில் இரண்டு நாட்களுக்குள் யாழ்ப்பாண மக்கள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய பரோபகாரிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மனிதாபிமான உதவிகள் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட மிகவும் பாதிக்கப்பட்ட தமிழ் கிராமங்களுக்கு 15.01.2011, 16.01.2011 திகதிகளில் மாணவர்கள் நேராகச் சென்று பகிர்ந்தளித்தனர்.

பொது மக்கள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்விடங்கள் தெரிவு செய்யப்பட்டது. இதில் அநேகமான வறுமைக்கோட்டின் கீழ் அன்றாடம் தொழில் புரிந்து வாழும் கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தெரிவு செய்யப்பட்ட கிராமங்களாக பட்டிப்பளை, மகிழடித்தீவு, அம்பிலாந்துறை, அரசடித்தீவு, பண்டாரியாவெளி, பன்குடாவெளி, கல்முனை மற்றும் அக்கரைப்பற்று என்பன குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இம்மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களாக அரிசி, பருப்பு, சீனி, சவற்க்காரங்கள், நுளம்புத்திரி, விஸ்கற், மருந்துப் பொருட்கள் மற்றும் இன்னோரன்ன பொருட்களும் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் திரு.எஸ்.அரிகரன் கூறுகையில் ' இது பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு செய்யவேண்டிய கடமை என்றும் இதற்கு ஒத்தாசை வழங்கிய கிழக்குப்பல்கலைக்கழக சமுகத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன்' என்றும் கூறினார்.

எம்முறவுகள் சார்வில் இவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் இன்னும் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு மழையிலும் வெள்ளத்திலும் அல்லோலகல்லோப்பட்டுக்கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பிடித்திருந்தால் இன்ட்லியில் ஓட்டுப்போடுங்கள்..

2 comments:

Ramesh said...

நன்றி நன்றி நன்றி...... தொடர்க உறவுப்பாலம் நீளுக.

S.T.Seelan (S.Thanigaseelan) said...

ஆமாம்..

Post a Comment