ADS 468x60

12 January 2011

வெள்ளத்தில் அடித்துப்போன கோடைமேட்டுக் கிராமம்.

அழகிய குட்டித்தீவாய், ஆறுகளும், வயல்களும் மற்றும் குளங்களும் சூழ மண்வாசைன கமழ்ந்த கோடை மேட்டுக் குட்டித்தீவு வெள்ளத்தோடு வெள்ளமாக அடித்துச் செல்லப்பட்டிருப்பது சொல்லொண்ணாத் துயரமாகும். இக் குக்கிராமம் எருவிலின் தலை போன்று அதன் மேற்கே சுமார் ஒன்ரரை கிலோ மீற்றருக்கு அப்பால் வத்தளைக் கிழங்கிற்கே பெயரெடுத்த விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும் நிறைந்த, அனர்த்தத்தில் நலிவுறக்கூடிய கிராமமாகும்.

மட்டக்களப்பினை சொல்லொணாத் துயரில் ஆழ்த்திவரும் பேய் மழை, பெரு வெள்ளம், பெருங்காற்றுக்கு மத்தியில் சிறுவர்கள் குழந்தைகள், வயோதிபர்கள் என 60 குடும்பங்களைச் சேர்ந்த 300 க்கு மேற்ப்பட்ட மக்கள் யாருடைய உதவியும் இன்றி அம்மக்களது உதவியுடன் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் வழி தெரியாத வெள்ளத்தினிலும் இவர்களை கொண்டு சேர்த்துள்ளனர்.

இவர்கள் தற்போது எருவில் மகாவித்தியாலயத்தினில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு இருக்கும் மாடிக்கட்டிடங்கள் நிரம்பி வழிவதனால் இவர்கள் கீழுள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு படிப்படியாக வெள்ளம் உள்நுழைவதனால் அவர்களின் நிலை அந்தோ பரிதாபம். இவர்களில் உள்ள சிறுவர்கள் வயோதிபர்கள் நோய்வாய்ப்பட்டவுர்களாக சொல்லொண்ணாத் துயருறுகின்றனர். 

இவர்களை பார்வையிட வைத்திய நடமாடும் சோவைகளோ, உணவு கொடுப்பதற்க்கான ஏற்ப்பாடுகளோ செய்யப்படவில்லை என மக்கள் அழுதுகொண்டு முறையிடுகின்றனர். இந்நிலையில் இவர்களது உடனடித்தேவையான பாய், உடு துணிகள், வெற்சீற், குடிநீர், அரிக்கன் விளக்கு, நுளம்பு வலை என்பன வளங்கப்படவில்லை அத்துடன் குறிப்பாக சிறுவர்களுக்கான பால்மா இவர்களுக்கு அவசிய தேவையாய் உள்ளது. இம்மக்கள் ஒரு பாதிக்கப்படாத மக்கள் போன்று புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

ஐனாதிபதி கூறிய ஒரு நல்ல விடயம் ஞாபகத்துக்கு வருகிறது இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரச அதிகாரிகள் தங்கள் குடும்பம்போல் அல்லும் பகலும் சுற்று நிருபங்களுக்கு அப்பால் அவர்களுக்கு உதவவேண்டும் என்று குறிப்பிட்டது முற்றிலும் உன்மை. சுற்று நிருபத்துக்குள் உதவியிருப்பினும் இம்மக்களது துன்பம் போக்கியிருக்கலாம். ஆனால் இத்தனை கஸ்டத்தினையும் பார்த்துக்கொண்டு இருக்கும் பொறுப்பற்ற அதிகாரிகள் இம்மக்களுக்கு தேவைதானா?

அரசு அரசசார்பற்ற நிறுவனங்கள் பட்டவர்த்தனமாக வழங்கிவருகின்ற நிதி, நிவாரண உதவி ஏன் உன்மையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவில்லை?

மக்களுக்குத்தான் அனர்த்தம் இந்த அதிகாரிகள் இப்படி சுருண்டு கிடப்பதற்க்கா இப்பதவிகளை சுமக்கிறார்கள்?

வெட்கக்கேடாகும் இந்த பொறுப்பற்ற அதிகாரிகள் உடனடியாக இம்மக்களுக்கு மனிதாவிமானமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.... 

தகவல்: K.பகிரதன்.

0 comments:

Post a Comment