ADS 468x60

23 January 2011

கதரின் வராக்கின் வருகையும் காத்திருக்கும் மக்களும்..


தற்போதைய அனர்த்த முகாமைத்துவ மையத்தின் தகவலின் பிரகாரம் 43 பேர் அண்மைய வெள்ளத்தில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் உயிர் இழந்துள்ளதோடு ஒரு மில்லியனுக்கும் மேலாக மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், பிரதி ஐ.நா. மனிதாபிமானச் செயலாளரும், ஐ.நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான தற்போதய பிரதி அவசர நிவாரண இணைப்பாளருமான கலாநிதி கதரின் வரக் அவர்களின் இலங்கை நோக்கிய விஜயம் ஒரு திருப்பு முனையாகவும் அதேநேரம் திருப்தியளிப்பதொன்றாகவுமே இருக்கின்றது.

 குறிப்பாக இவர் அண்மையில் வெள்ளத்தினில் அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களான வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களுக்கு விஜயம் ஒன்றை மேற்க்கொண்டு அங்கு வெள்ளத்தினாலும், 2009 மே மாதம் வரை இடம்பெற்று வந்த யுத்த அனர்த்தத்திலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டதோடு அங்கு கடமையாற்றும் அரச அதிகாரிகள் மற்றும் ஐ.நா அமைப்பினரை சந்தித்து வெள்ள நிவாரணம் பற்றிய ஒரு மதிப்பீட்டினையும் மேற்கொண்டுள்ளார்.

மூன்று நான் விஜயத்தினை மேற்க்கொண்ட கதரின் அவர்கள் அவரின் விஜயத்தின் முடிவில் கருத்துரைக்கையில் அவர் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் நிவாரணங்கள் மீதான திருப்தி பற்றி அறிந்துகொண்டதோடு, வெள்ள அனர்த்தத்தினில் இடம் பெயர்ந்தவர்களின் மீளக் குடியமர்த்துதலை துரிதப்படுத்துதல் மற்றும் அவர்களை தையிரியப்படுத்துதல் என்பனவற்றினூடாக அவர்களின் வாழ்வாதாரத்தினை மீழுருவாக்குதல் என்பன பற்றி கவனம் செலுத்தி இருப்பதாகவும், இதற்க்காக வெள்ளத்தினில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் கிழக்கு, வடக்கு மற்றும் மத்திய பிரதேச மீள் கட்டுமானத்துக்காக 51 மில்லியன் டொலர் அவசரமாக கோரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

உன்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உதவிகள் போய்சேருகின்றதா என்ற கேள்விக்கு அப்பால் யாருக்கோ எங்கிருந்தோ உதவி கிடைக்கிறது என்ற பெருமூச்சுடன், இறைவன் கருனையால் வருகின்ற உதவிகள் உன்மையாக பாதிக்கப்பட்டு தொழில், இருப்பிடம், இயல்பு வாழ்கை என்பனவற்றினை இழந்த மக்களுக்கு போய்ச்சேர வேண்டுமென்று பிராத்திக்கிறேன்.

கதரினா பற்றி ஒரு குறிப்புரை,
இவர் தனது கலாநிதிப்பட்டத்தினை குற்றவியலில் அல்வனி, சுணி பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளதுடன், தனது முதமானிப்பட்டத்தினை குற்றவியல் தத்துவத்தில் கேம்றிஜ் பல்கலைக்கழகத்தினில் முடித்து 2007 இல் ஐ.நா. செயலாளர் நாயகத்தினால்  பிரதி ஐ.நா. மனிதாபிமானச் செயலாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment