ADS 468x60

04 January 2011

பூர்வீகக் கலைகள் அந்நிய மோகத்தில் ஆடிப்போகும் நிலை...


நாடுகளின் காட்டுவெள்ளம் போன்ற பெருவளர்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாம் வாழுகின்ற ஆசிய நாடுகள் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு பின்னால் நிற்ப்பதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன. ஆவைகள் மதவாதம், இனவாதம், மொழிப்பிரிவினை, சாதிச்சண்டை இன்னும் எத்தனையோ.. இவைகள் உழகை;கும் ஆற்றல், கண்டுபிடிப்பாற்றல், புதிது புனையும் ஆற்றல் என்பனவற்றையெல்லாம் அடியோடு அழித்திருக்கின்றது. ஆவற்றை நன்கு புரிந்துகொண்ட அன்னிய ஆட்சியாளர்கள்; இதை தங்கள் ஆட்சிக்காலங்களில் இவற்றால்தான் பிளைப்பு நடத்தி இருக்கின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய கலைகள்..
பாவம் நம்ம மக்கள் இதனால் நல்ல கலாசாரத்தை இழந்திருக்கின்றனர், வளங்களை இளந்திருக்கின்றனர். என்னிடம் ஒரு நண்பர் கூறும்போது இவற்றின் ஆழமான தாக்கம் புலநாகியது. குறிப்பாக இலங்கையில் அதிலும் மட்டக்களப்பில் நிறையவே பாரம்பரியக்கலைகள் இருந்து வந்தது. இங்கு களுதாவளை, அம்பிலாந்துறை மற்றும் கோளாவில் போன்ற இடங்களில் இக்கலைஞர்கள் வசித்து வருகின்றனர். அவைகள் புத்தகங்களில் படிக்கும் அளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்; துரதிஸ்டம் யாருக்கும் வரக்கூடாது. ஆண்ணாவியார் பரம்பரை, பறையடிப்போர் பரம்பரை, சாத்திரக்கலைஞ்ஞர்கள், அதர்வணவேதம் பயின்றோர் எனச் சொல்லிக் கொண்டு போகலாம்.
பறை இது சங்ககாலத்தின் புலத்தில் இருந்து மருவி வரும் தமிழர் கலையாகும். இவர்கள் இப்போது பாராட்டப்பட்டும், போற்றப்பட்டும் வந்தனர். கல்யான வீடு, கோயில் திருவிழாக்கள், சடங்கு வைபவங்கள், வரவேற்ப்பு வைபவங்கள், ஏன் மரணவீடுகளில் எல்லாம் சூழ்நிலைக்கேற்ப்ப பல ராகமோடிகளைப் கொண்டு தமிழர் வாழ்வில் மங்காத இடத்தினைப்பிடித்திருந்தது. 

புதிய விடயம் என்னவெனில் பலபேரும் ரசிக்கும்படி இசையமைக்கும் கலைஞ்ஞன் அவற்றை செய்ய முடியாத சாதாரண மக்களால் ஒதுக்கப்பட்டனர். அவர்கள் கோயிலுக்குள் நுளைய மறுக்கப்பட்டனர், பொது நிகழ்வில் கலந்துகொள்ள மறுக்கப்பட்டனர், சுகதுக்கங்களில் பங்குகொள்ள ஒதுக்கப்பட்டனர் ஆக  இனிய இசையான பறைமேளம் வாசிச்ச குற்றத்துக்காக. காலப்போக்கில் அவர்கள் தாழ்ந்த இனம் என பச்சை குத்தப்பட்டனர்.
இன்றும் போற்றும் சிங்கள பறை...

ஆனால் மறுபுறத்தில் சிங்கள மக்கக் அவர்களை ஊர் ஊராக வளர்த்து அவர்களது பாரம்பரியம் என மார்தட்டும் அளசுக்கு அதற்கென பிரத்தியேக பாட அலகுகள் எல்லாம் பல்கலைக்கழக மட்டத்தில் ஆரம்பித்து இருக்கின்றனர். அவர்கள் கௌரவிக்கப்படுகின்றனர், எங்கள் கலை என மார் தட்டுகின்றனர், தங்கள் தனித்துவத்தை நிலை நாட்டுகின்றனர். ஆனால் இங்கு எமெக்கென இருந்த பாரம்பரியம், தனித்துவம், கலாசாரம் இவையெல்லாம் ஒரே இரத்தம் கொண்ட மனித வர்க்கத்தினால் பிரித்துப் பார்ப்பது விசித்திரமாகவே இருக்கிறது.

புதிய தலைமுறையில்...
இருப்பினும் நீண்டு சென்ற சிவில் யுத்தம் இந்த இனவெறியர்களை சற்று பின்தள்ளி இருந்தது. ஆனாலும் அந்தக் கலைஞர் குழாம் வளர்ந்து, குடும்ப நிலையில் சந்தோசமாக இருக்கின்றனர். மறுபுறத்தில் பழைய கலைஞர்களுடன் அவை புதிய தலைமுறைக்கு எடுத்துவரப்படாமல் அது அங்கேயே நின்றுவிட்டது, துயரமே. இதனால் அவர்கள் தங்களுக்கு என கோயில், தங்களுக்கென சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று அவர்கள் தனித்துவமாய் வாழப்பழகி விட்டனர், இது மறுபுறத்தில் இந்த இனவாதிகளுக்கு கடுப்பூட்டு10ம் செயலாக இருப்பினும், அவர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு மதிப்பு கொடுத்தாக வேண்டிய தேவை இவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பேரசிரியர் மௌனகுருவின் புரட்சியும், கட்டிக்காப்பும்....
இந்த தமிழர் பண்பாட்டுக் கலை எச்சசொச்சம் இல்லாமல் போவதை யாரும் விரும்புவதில்லை, ஆனாலும் அவற்றை முன்னெடுக்கும் தெம்பும் யாரிடமும் இல்லை. சிலரால் மட்டுமே அவை இன்றும் கொஞ்சமாவது மின்னுகின்றதெனின் அவர்களை பாராட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.
மட்டக்களப்பின் மூளையாக மிளிரும் கிழக்குப் பல்கலைக்கழகம் இந்த விடயத்தில் போற்றப்பட வேண்டியதொன்றாகும். கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நுண்கலைத்துறைப் பேராசிரியராக இருந்த பெருமைக்குரிய மௌனகுரு ஐயா அவர்கள் இக்கலைஞர்களுக்கு புத்தூக்கம் கொடுக்க ஆரம்பித்தார். வருடா வருடம் உலக நாடக விழாக் கொண்டாடி மகிழும் இவர்கள், பறை மேளக்கலைஞ்ஞர்களை மாத்திரமல்ல, அனைத்துப் பாரம்பரியக் கலைகளையும் வெளிக்கொணரத்தொடங்கினார். பறைமேளம் பயிலும் மாணவ அணியினரை உருவாக்கினார். அது அழிந்துபோகாமல் நீருற்றி வளர்து வருகின்றமை எமக்கெல்லாம் தையிரியம் ஊட்டும் செயலாகவே இருக்கின்றது.

பேராசிரியர் அவர்கள் மிக எழிமையானவர் ஆயிரம் ஆயழரம் பட்டதாரிகளை உருவாக்கிய செம்மல், மாத்திரமா பட்டி தொட்டியெல்லாம் இந்த கலைகளை ஊக்குவிக்க பாடுபடுகின்ற ஒருவர். பல்கலைக்கழகங்கள் பட்டதாரிகளை மாத்திரம் உருவாக்கும் இடம் எனும் அர்த்தமற்ற அர்த்தத்துக்கு புதிய வடிவங் கொடுத்து, அங்த சமுகத்தின் கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகம் என்பனவற்றினை கட்டிக்காக்கின்ற ஒரு புனிதப்பள்ளி என்பதை இவரின் செயற்பாடு காட்டத்தவறவில்லை.

இவ்வாறான ஊக்குவிப்பு, கௌரவிப்பு, தட்டிக்கொடுத்தல் என்பன பல்கலைக்கழக மட்டத்தில் மாத்திரம் நின்றுவிடாமல், அனைத்து நிகழ்வுகளிலும், அனைத்து மட்டங்களிலும் அவை பிரதிபலிக்கும்படி செய்யவேணும். அவர்களுக்கென ஊக்குவிப்புத்தொகை, பாராட்டுக்கள் என்பன வழங்கப்படுவதோடு பல்கலைக்கழக, கல்லூரி மற்றும் பாடசாலை போன்ற கல்விக்கூடங்களில் அவை பயிலப்படவேண்டும்.. தவிரவும் நம் மத்தியில் தோன்றும் அரசியல்வாதிகள் இவைகள் என்னவிலை என்று கேட்கும் அளவுக்கு அவர்களுடைய செயற்பாடுகள் வேறெங்கோ குறியாக இருக்கின்றது. ஆவை மாறவேணும், அவர்கள் இவர்களுக்கு புத்துயிர் அளிக்கவேணும். இது வெறும் ஆதங்கம்தான் இருப்பினும் இது எங்களது கனவாகாமல் நிஜத்தில் கொண்டுவரவோம், எங்களை நாங்களே பண்பாடுவோம்.

0 comments:

Post a Comment