ADS 468x60

03 January 2011

பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை ஒரு பொக்கிசம்..

உலகத்தமிழர் மத்தியில பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை என்னைக்கவர்ந்த ஒரு சிறந்த பேராற்றல் படைத்தவர்;. அவர் ஆரம்பத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு சாதாரண விரிவுரையாளராக இருந்து, தனது இலக்குகளையும் தாண்டி முதுநிலை விரிவுரையாளர், தலைவர், பீடாதுபதி, உபவேந்தர் இன்னும் எத்தனை எத்தனையோ பதவிகளில் ஜொலித்து, 102 பல்கலைக்கழளங்களில் வருகை விரிவுரையாளராக தனது பிளிந்த ஞானத்தை உலகறியச் செய்யும் தமிழ் மகன் என்றால் அது மிகையல்ல. அவரிடம் எனக்கு உரையாடி படிக்க கிடைத்ததை இட்டு நான் பெருமைப்படாமல் இருக்கமுடியவில்லை. 

கிழக்குப் பல்கலைக்கழகம் ஒழுங்குபண்ணி இருந்த சர்வதேச ரீதியான மூன்று நாள் பயிற்சிப்பட்டறையில் மின்னும் பொன்னாக, அறிவுச்சுடராக பிரகாசித்தவர் மதிப்புக்கும், அன்புக்கும் உரிய பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளையவர்களாவார்.

பயிற்சிப்பட்டறை   Revitalization the Management Practices    எனும் தலைப்பில் கி.ப.க.கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அறிவுப்பசிக்கு தீனிபோடுவதுபோல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்த ஏராளமான கலாநிகள் மற்றும் பேராசிரியர்கள் விரிவுரைகள் அமைந்திருந்தன.

இருந்த போதும் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் ஒரு வினோதமான, புதுமையான ஒரு விடயத்தினை கூறி இருந்தது அனைவரையும் வியக்கவைத்தது. அதுதான் 'ஆறுமுகம் கெண்செப்ற்'   (Arumugam Concept)….    ஆகா என்னடா இது என்று எண்ணிவிடாதீர்கள் ஆமாம் ஒரு முகாமையாளர் தான் கொண்டிருக்கவேண்டிய ஆறு வகை தகுதிகளை அருனகிரிநாதரின் திருப்புகளில் இருந்து பிளிந்ந்து தந்தது அவரின் புலமைக்கு எடுத்துக்காட்டானதுங்க.

அந்த திருப்புகள் எல்லோர்க்கும் தெரிந்த ஒன்னுதான்.

1.'ஏறுமயில் ஏறுவிளையாடு முகம் ஒன்று'  முருகன் மயில் ஏறி விளையாடுவதில் படு கில்லாடி, இதை முகாமையாளர் ஒருவருடன் ஒப்பிடுவோம் என்றால் அவர்; தனது துறையில் அத்துப்படியாக இருக்கவேனும். உதாரணத்துக்கு ஒரு விற்பனை முகாமையாளர் விற்பனைத்துறை சார்ந்த அனைத்தும் தெரிந்து இருக்கனும்.

2.'ஈசருடன் ஞான மொழிபேசு முகம் ஒன்று' முருகன் சிறுவனாய் இருந்தாலும் தகப்பன் சாமி என்று பேரெடுத்தவர் அல்லவா. அதுபோல முகாமையாளர் தான் அனைத்து தரப்பினருடனும் பேசும் வான்மை கொண்டிருக்கவேணும். அது தனது நிறுவனத்தின் லாபத்தினை நல்ல முறையில் நடத்தவல்லது.

3.'கூறுமடியார்கள் வினைதீர்த்த முகம்ஒன்று' முருகன் தன்னை நாடிவருகின்றவர் எவராயினும் அருள்கூர்ந்து அரவணைப்பவர். அதுபோலவே முகாமையாளர் தன்னை நாடிவருகின்ற சக ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவேணும்.

4.'குண்டுருக வேல்வாங்கி நின்றமுகமொன்று' தான் பிரச்சினைகள் வருகின்றபோது சத்திவேல் கையில் ஏந்தி அவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் சத்தி படைத்தவர் என்று போற்றப்படுகிறார். அதுபோலவே ஒரு முகாமையாளர் தனக்கு எழுகின்ற பிரச்சினைக்கு அஞ்சாமல் எதிர்துநிற்கும் செல்வாக்கு அவரிடம் இருக்கவேண்டும்.

5.'மாறுபடு சூரரை வதைத்தமுகமொன்று' தனக்கும், தன்னை சூழ உள்ள அடியவர்களுக்கும் துன்பம் விளைத்த அசுரர்களை துவம்சம் செய்யும் முகமும் முருகனுக்கு இருக்கிறது, என்று அருனகிரியார் சொல்லுவதுபோல், ஒரு பணியகத்தினில். ஒரு முகாமையாளர் பிரச்சினைகளைக்கண்டு அஞ்சி விலகி ஓடக்கூடாது அவற்றை தனது திறமையால் வென்று பிரச்சினைக்குரியவர்களை களையெடுக்கும் ஆற்றலும் அவருக்கு இருக்கவேணும்..

6.'வள்ளியை மணம்புரிய வந்தமுகம் ஒன்று' முருகன் ஒரு திருவிளையாடல் செய்யும் தமிழ்க்கடவுள்.. அவர் தான் சந்தோசமாக இருக்கவும் பிறரை சந்தோசமாக வைத்திருக்கவும் தவறியதில்லை. இது போன்றே ஒரு முகாமையாளர் எந்த நேரமும் வேலை வேலை என்று இருந்தால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சரியான வெளியீட்டினைக் காட்டமாட்டார்கள். ஆதனால் சுற்றுப்பிரயாணங்கள், ஒன்றுகூடல்கள் போன்ற களிப்பூட்டும் நிகழ்வுகளை ஒழுங்கு செய்யவும் தெரிந்து இருக்கனுமாம்.

அப்பப்பா என்ன விளக்கம், எல்லோரும் வியப்போடும் விருப்போடும் கேட்டுக்கொண்டு இருந்தனர். ஆறுமுகம் ஒரு முகாமையாளர்கு தேவைதான் என்றும் தானும் அதனைத்தனது வாழ்வில் கடைப்பிடித்துத்தான் ஜெயித்து வருவதாகவும்.. பிராந்திய அபிவிருத்திக்கு இவ்வாறு தேர்சி பெற்ற தலைவர்களின் பங்களிப்பே உதவும் எனவும் கூறியமை புதுமையிலும் புதுமையே..

3 comments:

சக்தி கல்வி மையம் said...

நன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி ..

பதிவுலக நண்பர்களே..
அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...

Ramesh said...

நல்லபல தகவல்கள் தொடருங்கள் அண்ண...

S.T.Seelan (S.Thanigaseelan) said...

மிக்க நன்றி நண்பரே, மற்றும் ரமேஸ் எனது பதிவுக்கு ஊக்கம் தருவதால் நான் இன்னும் இவ்வாறான தகவல்களை தரத்தூண்டுதற்கு நன்றிகள்

Post a Comment