ADS 468x60

13 February 2011

இது முறையா?

இருட்டறையை நாடி பலபேர் சென்றனர் இன்று..என்ன விளங்கவில்லையா ??? ஆமாம் 'சட்டம் ஒரு இருட்டறை' என்று அண்ணா சொன்னவர்தானே! அந்தச் சட்டத்தினை பயிலுவதற்க்காக மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழகம் ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்த நுழைவுக்கான பரீட்சை இன்று 13.02.2011 வெள்ளம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இது நான் உட்பட நேற்றுவரை அநேகம் பேருக்கு தெரிந்திருக்க இல்லை. அதனால் யாரும் பரீட்சைக்காக படிக்க முடியாமல் போய்விட்டது.

இருப்பினும் பரிட்சைக்கு வந்தோம், இங்கு அவர்களால் தரப்பட்ட அனுமதி அட்டையில், பரிட்சைக்கு முன் அவர்களுடைய கையொப்ப உறுதிப்படுத்தல் செய்ய வேண.டி இருந்தது. கிட்டத்தட்ட 100க்கு மேற்ப்பட்ட பரீட்சாத்திகள் அந்த உறுதிப்படுத்தும் கையொப்பத்தினை பெற முண்டியடித்துக் கொண்டு நின்றனர். பரிட்சையும் நெருங்கிக் கொண்டு இருந்தது. அது காலை 10 மணிக்கு திட்டமிடப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
                                                             
ஒரே ஒரு அதிகாரியால் இத்தனை பேரையும் உறுதிப்படுத்த முடியுமா?? பரீட்சாத்திகளுக்கும் அந்த உயர் உத்தியோகஸ்த்தர்களுக்கும் காரசாரமான விவாதம் போய் கொண்டிருந்தது. அவர்களை பரீட்சை மண்டபத்திணுள் வந்து உறுதிப்படுத்த கோரியும் அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. நேரம் காலை 9.45 ஐ தாண்டியும் மாணவர்கள் சிலர் உறுதிப்படுத்தாமல் பரீட்சை மண்டபங்களான மகஜனக்கல்லூரி மற்றும் மட்ஃஇந்துக்கல்லூரி செல்ல ஆரம்பித்த பின்னர்தான் அவர்கள் பரிட்சை மண்டபத்தினுள் வந்து உறுதிப்படுத்த ஒத்துக் கொண்டனர்....

பல மேலதிகாரிகளும் கியூவில் காத்துக்கிடந்து இத்திறந்த பல்கலைக்கழக நிருவாகத்தின் அசமந்த போக்கினை வரிக்கு வரி திட்டித்தீர்த்தமையை காணக்கூடியதாக இருந்தது. இது யாருடைய பொறுப்பு என்பது அனைவரது கேள்வியாகவும் அங்கலாய்ப்பாகவும் இருந்தது.....

4 comments:

Ramesh said...

அவ்வ்வ்வ.. இதுக்குத்தான் நாங்களே சட்டத்தை கையில எடுக்கணும் எங்கிற.....ஹிஹிஹி..

S.T.Seelan (S.Thanigaseelan) said...

பட்டத்தை கையில் எடுக்காமல்- தம்பி
சட்டத்தை எப்படிப்பா எடுக்கிறது...

கவி அழகன் said...

நன்னடத்தை உத்தியோகத்தினர்Probation Officers எல்லாம் நிகிரின போல சட்டம் படிக்க

S.T.Seelan (S.Thanigaseelan) said...

ஆகா கண்டு பிடிச்சிட்டீங்களோ....

Post a Comment