ADS 468x60

28 March 2011

வழுக்கு மரம்


நான்
எழுந்ததெல்லாம்
சாண் அளவு தான்!
விழுந்ததெல்லாம்
அடியளவு!
அந்த,
விழுகைகளெல்லாம்
அழுகைகளாகி
என் கண்ணீர் ஆற்றை
கலைத்து விட்டதே!

18 March 2011

"சுப்பர் மூன்" பயமா? அபாயமா!!


இந்த நூற்றாண்டில் பல அதிசயங்களை சென்ற காலங்கள் சுமந்து வந்ததுபோலே இப்பொழுதும் புதிதாக ஒரு கதை அடிபடத் தொடங்கி  உள்ளது. அதை நான்கூட நம்பவில்லை அது தான் சந்திரன் பூமிக்கு மிகவும் அண்மிக்கப்போகும் கதை, இதனை ஆங்கிலத்தில் "சுப்பர் மூன்"( SUPPER MOON) என்று அழைக்கின்றனர். இரண்டு தசாப்த காலத்தில் இது முதற்தடவையாக நிகழ இருக்கின்றது. இது புவியை மிகவும் அண்மிக்கும் நிகழ்வாகும் அதாவது புவிக்கு சரியாக 221,567 மைல் தூரத்தில் மார்ச் மாதம் 19ம் திகதி 2011 இல் புவியருகே வர இருக்கிறது. முன்னய பௌர்ணமி நாட்களை விட 14% விகிதம் பெரிதாகவும் 30% விகிதம் தெழிவாகவும் தோன்ற இருக்கிறது. 

இது 1955, 1974, 1992 மற்றும் 2005ம் ஆண்டுகளில் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அப்போது அது மிகமோசமான காலநிலை மாற்றத்தினை காட்டி இருக்கிறது. நாசா(NASA) மற்றும் நோவா(NOAA) போன்ற ஆய்வு மையங்களின் எச்சரிக்கைப்படி பாரிய அலைகள் மட்டும் 1 தொடக்கம் 6 இஞ் உயரத்துக்கு ஏற்படும் என கூறியுள்ளனர். எது எவ்வாறு இருப்பினும் சோதிடர் றிச்சட் நோல் கறிப்பிடுகையில் "இநத சுப்பர் மூன் பாரியளவிலான எரிமலை வெடிப்பு, சுனாமி, நில நடுக்கம் மற்றும் மோசமான கால நிலை மாற்றம் என்பனவற்றினை உண்டுபண்ணும்" என எச்சரித்துள்ளார்.

உன்மையில் ஆய்வாளர்களின் கருத்துப்படி இது அனர்த்தம் விளைவிக்கும் சாத்தியத்தினைக் கொண்டுள்ளதாம். பிறிட்டனின் காலநிலை ஆய்வாளர் ஜோன் கெற்லே கூறுகையில் ' புவியில் ஓட்டில் இது தாக்கம் ஏற்ப்படுத்த மாட்டாது ஆனால் பாரிய அலைகளை, வெள்ளத்தினை இது ஏற்ப்படுத்தும் அபாயம் உள்ளது, ஆதலால் கரையோரங்களில் இருப்பவர்கள் அவதானமாக இருப்பது அவசியம்' எனக் கூறியுள்ளமை அவதானத்துக்குரியதே. அதே போல் யப்பானின் சுனாமிக்கும் இந்த சுப்பர் மூனுக்கும் சம்மந்தம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அனர்த்தம் ஏதும் ஏற்ப்படாமல் இருந்தால், உங்கள் கண்களை, நம்மை நெருங்கும் சந்திர வெளி நோக்கி குவித்தால் அதிர்ச்சி கலந்த பயம் உண்டாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஆக மொத்தத்தில் இவற்றை பார்க்கும்போது, இந்த சுப்பர் மூன் பூமி மீதான உயர் அழுத்தத்தினை கொடுக்க இருப்பதனால் பாரிய அலைகள் உருவாவதற்க்கான சாத்தியம் உன்மையே, அதில் நாசா சொல்லுவதை எந்த அளவுக்கு நம்புவது! சோதிடர் சொல்லுவதை ஏற்றுக் கொள்வது எப்படி! என்பது அனைவருக்கும் குழப்பமானதே!. இருப்பினும் எனது பாதத்தின் அடியில் நாளை அவை நடக்கும் போதுதான் என்னால் கூறமுடியும் எது எது சரியென்று. ஆண்டவனை இந்த அனர்த்தங்கள் தாக்கிவிடக் கூடாது என்பதற்க்காய் பிராத்திக்கின்றேன். இந்த சுப்பர் மூன் தொடர்பான ஒரு ஒலி ஒளிக்கலவை இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

07 March 2011

ஒரு நாட்டின் விருத்தி அந்நாட்டு பெண்களின் வளர்சியிலேயே தங்கியுள்ளது...

'மகளிர்; தினம்' மார்ச் மாசம் 8ம் திகதி நினைவு கூரப்படுவது பலபேருக்கு ஏன் என்று தெரியாமல் இருக்கலாம், இது பெண்கள் இந்தச் சமுகத்தின் கண்கள், மதிப்புக்குரியவர்கள், சம உரித்துடையவர்கள், பெருமைக்குரியவர்கள் என்பது பற்றியெல்லாம் இந்தச் சமுகம், பெண்கள் எல்லாம் தெரிந்து கொள்வதற்க்காக கொண்டாடப் படுவதொரு தினம்.  உலகெங்கும் உள்ள பெண்கள் சாதி, நிறம், சமயம், தேசியம் இவற்றுக்கெல்லாம் அப்பால் சென்று எல்லோரும் ஒன்றாகக் கொண்டாடும் ஒரு தினமாகும். பெண்ணைத் தாயாக, தாரமாக, காதலியாக, சகோதரியாக, நண்பியாக இன்னும் எல்லா வகையிலும் மதித்து அவர்களை கௌரவிக்கின்ற நன்நாள் இத்தினமாகும்.

ஏன் இத்தினம் கொண்டாடப்படுகிறது? அப்படி என்று பார்த்தால், 1910 இல் டென்மார்க்கில் உள்ள கோப்பின்காம் நகரில் நடத்தப்பட்ட சர்வதேச மாநாட்டிலேயே இந்த சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடுவதற்க்கான வேண்டுதல் வைக்கப்பட்டது. இது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால்  1977 இல் பெண்களுக்கென ஒரு தினம் அவர்களது உரிமைகள், சமத்துவம் என்பனவற்றை நிiனைவு படுத்துவதாய் அமையும் வகையில் மார்ச் 8ம் திகதி கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப் பட்டுக்கொண்டு வருவது சிறப்புக்குரியதே.

இத்தனை கொண்டாட்டங்கள் நடத்தினாலும் பெண்களுக்கான பாதுகாப்பு, உரிமைகள், போசாக்கு, உரித்துடமைகள் கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது. முன்னால் இந்தியப் பிரதமர் ஒருமுறை கூறினார் 'ஒரு நாட்டினுடைய நிலைமையை அங்கு வாழுகின்ற பெண்களின் வாழ்க்கை தரத்தினை வைத்துக் கொண்டு சொல்லி விடலாம்' என்றார். ஆகவே ஒர நாட்டின் எழுச்சியும் வீழ்சியும் பெண்களை சமத்துவமாகப் பேணுகின்ற நாடுகளிலேயே தங்கியுள்ளது.

பெண்களும் புறக்கணிப்பும்.
உலகின் கால் பங்கிற்கும் அதிகமான உணவினை உலகிற்கு உற்ப்பத்தி செய்து பஞ்சம் இல்லை எனும் அன்னக் கொடி பிடிக்கின்றனர். அவர்கள் உழுதிறார்கள், பயிரிடுகின்றனர் அவற்றை அறுவடை செய்கின்றனர். சகாரா, ஆபிரிக்கா மற்றும் கரிபியா போன்ற நாடுகளில் 80 விகிதமான உணவினை பென்கள் உற்ப்பத்தி செய்கின்றனர். ஆசியாவில் 50 விகிதமான உணவு உற்ப்பத்திக்கு வகை கூறுகின்றனர் பெண்கள். இலத்தின் அமெரிக்காவிர் பிரதியீட்டுப் பயிர்ச் செய்கை, மிருக வளர்ப்பு மற்றும் சிறய அளவான வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இவர்கள் அதற்க்கான குறைந்தளவ அங்கிகாரத்தினையே பெற்றுள்ளனர். அநேகம் பேர் இதற்க்கான கூலியைப் பெறமலேயே இதனை செய்கின்றனர் இதனால் அவர்கள் தங்கள் விவசாய உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாமல் பாரம்பரிய முறைக்குள் முடங்கிக் கிடந்து அல்லலுறுவதனை இச்சமுகம் பாராமுகமாய் இருப்பது கவலைக்குரியதே.

யுனிசெவ்வின் 2007 அறிக்கைப்படி பெண்கள் தங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கும் பாரபட்சம், வலுவூட்டலின்மை போன்றன அவர்களது குழந்தைகளை எதிர்காலத்தினைப் பாதிப்படைய வைக்கிறது. இது அவர்கள் வருமானப் பகிர்வினில் புறக்கணிக்க படுவதனால்தான் என்றால் உன்மையே.
கீழ் உள்ள தகவல் அவர்கள் மீதான பாரபட்சத்தினை காட்டுகின்றது.
இங்கு குறிப்பிட்ட நாடுகளின் உள்நாட்டு தலைக்குரிய வருமானம் அமெரிக்க டொலரில் கணிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான் கூலி வேறுபாட்டினைக் காட்டி நிற்கின்றது. இதற்க்குக் காரணம் பெண்கள் ஆண்களுடன் ஒப்பிடும் பொழுது வேலைக்கு குறைந்த வருவாயினை பெறுவதாகவும் அவர்களத தராதரத்துக்கு குறைவான வேலை வளங்குவதனையும் காணலாம். யுனிசெப்பின் அறிக்கைப்படி அதிகப்படியாக வேலை செய்யும் பெண்களுக்கு குறைந்த அளவு வேலை நேரத்துக்கான கூலியே வளங்கப்படுகின்றது, ஊழியச் சந்தையில் பெண்கள் செல்லும் தகுதியிருந்தம் அநேகமான பெண்கள் வீட்டு வேலைக்காகவே அமர்த்தப்படுகின்றனர். பெண்கள் வெளிப்புறச் சூழலில் வேலை பார்க்கும்போது, ஆண்களை விடவும் ஒரு சராசரியான குறைந்த கூலியை மட்டுமே பெறுகின்றனர். 

அத்துடன் குறைந்த கூலியில் பாதுகாப்பற்ற ஒரு தொழிலுக்குள்ளயே குறைந்த கூலியில் சமுக மற்றும் நிதி ரீதியான குறைபாட்டுடன் வேலையில் அமர்த்தப்ப:கின்றனர். இது மட்டுமல்ல சொத்தடிப்படையிலும் ஆண்களுடன் ஒப்பிடும் போத மிகக்குறைவாகவே கொண்டுள்ளனர். பால் ரீதியான பாரபட்சம், சொத்து அவர்களின் நிதி கொள்ளவு ரீதியில் புறந்தள்ளுவதனால் அவர்கள் நலிவுறுந்தன்மைக்கு உட்ப்படடு இலகுவில் வறுமைப் பிடிக்குள் அகப்பட்டு விடுகின்றனர். ஆகவே வேலை செய்யும் பெண்கள் தங்களது கூலி, வேலை நேரம் என்பன போன்ற சிக்கல்களுக்குள் வருமானம் கணவனால் கட்டுப்படுத்துகின்ற நிலையில் பிள்ளைகளை, தனத நலத்தினை முன்னெடுத்துச் செல்ல சிரமப்படும் ஒரு நிலமையினையே இச்சமுகம் பெண்களுக்கு வழங்கிய பரிசாகும் என யுனிசெவ் தனத அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளது.
எனவே ஆரோக்கியமான அடிமைத்தனமில்லாத சம அந்தஸ்த்து படைத்த ஒரு சமுகத்தை கட்டியெழுப்ப பெண்களை தலைவர்களாக்கும் வலுவூட்டல் அவசியம். அத்துடன் பெண்கள் மீதான உரிமைகள், சமவாயங்கள் நாடுகளின் அரசினால் உரிய முறையில் நடைமுறைப்படுத்த தூண்டிவிட வேண்டும். இதுவே இந்த பெண்களுக்கு நாங்கள் இத்தினத்தினில் செய்யக்கூடிய மரியாதையாக இருக்கும்.

உலக அதிசயம்.........


















நீ
கற்பில் கால் நடந்து
மார்பில் பால் சுரந்து
மடியில் உயிர் சுமந்து- தொப்புள்
கொடியில் உறவு ஈர்ந்த
உலக அதிசயம்.

தாலி கட்டி –பின்
தூளி கட்டி
தோழிலாட்டி
நிலாக்காட்டி
தீனி ஊட்டி
நிலாவுக்கே அனுப்பிய
பெருமாட்டி.....

விருட்சமானாலும் - உன்
வித்துக்கள்
தெருக்களில் முளைத்ததால்
சீர் கெட்டு தளைத்ததால்
உனக்கு உலகம் தந்ததெல்லாம்
சகுனி
சூர்ப்பனகை
அரக்கி
வேசி- இதையெல்லாம்
தூக்கி வீசி!!!!

தூய பிறப்பே!
சுட்டெரிக்கும் கற்பே!
தாயே!
எழுந்து நில்!
விழும் இந்த உலகத்தை
கைகளில் தாங்கி
கருணையில் நனைத்து
நல்வழி காட்ட முன்னே செல்!
வாழ்துகிறேன்......

06 March 2011

இந்தியாவின் வறுமையைக் குறைப்பதில் மிலேனியம் இலக்கு தீர்வாகுமா?

லகில் ஒரு டொலருக்கு கீழ் வருமானம் உழைத்து வறுமைக் கோட்டின் கீழ் அநேகமாக வாழுகின்ற நாடுகளுள் இந்திய அதி உச்ச அளவில் வறுமையான எல்லைக் கோட்டின் கீழ் வாடிக்கிடக்கும் நாடுகளில் ஒன்று என புதுடில்லியில் அமைந்துள்ள உலக வங்கியின் சிரேஸ்ட பொருளியலாளர் ரிங்கு மூர்க்கை தெரிவித்துள்ளார்.

த்திய வங்கி சொல்லும் உண்மையான வறுமை என்பதற்கும், அரச அதிகாரிகள் சொல்லும் இதற்கான வரையறைக்கும் உள்ள வித்தியாசங்கள் அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளிடையே ஒரு விவாதமாகவே இருந்து வருகிறது. 

மத்திய வங்கியின்(Central Bank ) கணக்கீட்டின்படி 80 வீதமானோர் அதாவது 1.1 பில்லியன் மக்கள் இரண்டு டொலருக்கு குறைவாகவே பெறுகின்றனர். இதன் கருத்து உலகில் மூன்றில் ஒரு பங்கு வறியவர்களும் இந்தியாவிலே வசித்து வருகின்றனர். ஆனால் இது இந்தியாவில் 3ல் 1பங்கு மக்கள் 1 டொலருக்கு குறைவாகவே பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் குறிப்பிடுவதன் அடிப்படையில் இந்தியாவில் கிராமப்புறங்களில் வாழ்கின்றவர்கள் 9 டொலர் அதாவது மாதம் 356 தொடக்கம் 538 ரூபா மாத்திரமே பெறுகின்றனர் என்றும் ஆனால் நாட்டுக்கு நாடு இது வேறுபடுகின்றன என்றும் சொல்லப்படுகின்றது.     

அரச மற்றும் மத்திய வங்கியின் அறிக்கையின் படி இந்தியாவின் வறுமை அதிகரித்துக் கொண்டிருப்பது ஜக்கிய நாடுகளின் மிலேனியம் அபிவிருத்தி இலக்கினை 2015ல் 1 நாளுக்கு 1டொலர் வருமானம் பெறுபவர்களின் அளவை அரைவாசியால் குறைக்கின்ற இலக்கு தவறுவிடப்படும் அபாயம் உள்ளதென  ஜக்கிய நாடுகளுடன்(UN) சேர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கி(ADB) நடாத்திய ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது. அதே போன்று பட்டினியால் வாடுகின்ற மொத்த மக்களின் தொகை அரைவாசிக்குக் குறைவான தொகையினையே அடையக்கூடியதாக இருக்கும் என அமெரிக்காவை தளமாகக்; கொண்ட சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்சி தெரிவித்துள்ளது. 

இருப்பினும் நாடுகளுக்கிடையில் இந்த வறுமையை நிர்ணயிப்பதனில் முரண்பாடுகள் இருக்கின்றன. குறிப்பாக இந்தியா ஒரு பல்வகைத்தன்மை கொண்ட நாடு. இதன் சராசரி மற்றும் மொத்த வருமான பரம்பலைக் கொண்டு அந்த நாட்டின் வறுமையின் ஆழத்தை அளவிட முடியாது என பிரதம பொருளியளாளர் அபுசெஸ் சரீப் கூறுகின்றார். மேலும் அவர் கூறுகையில் இந்த வறுமை இன்னும் பல வழிகளில் கணிப்பிடப்படினும் அவை ஒரு செயற்கையான சுவரில் எழுதப்படுவன போல் ஆகும். உதாரணமாக 1-2 டொலர்களுக்கிடையில் வருமானம் பெறுபவர்களின் வாழ்க்கைத்தரம் தான் என்ன? இதில் என்ன கோடு வறுமைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது? என்பது போன்ற கேள்விகள் இருக்கின்றன அல்லவா!

மிக மோசமான வறுமை என்பதனை மிக நுணுக்கமாக அவதானிப்போமானால், இதில் அநேகமாகனவர்கள் ஓரங்கட்டப்பட்ட சமுகங்களாகவே இருப்பதனைக் காணலாம். அதிலும் குறிப்பாக பின்தங்கிய சாதியைச் சேர்ந்தவர்கள், இங்கு வாழுகின்ற முஸ்லிம்கள் அத்துடன் கல்வி அறிவில் பின்தங்கியவர்கள் இவர்கள் வறுமைப்பிடியில் இருந்து சிறியளவிலேயே மீட்சி பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் குறிப்பாக இந்த வறிய சமுகத்தின் வாழ்க்கைத் தரம், அவர்கள் வாழ்கின்ற வாழிடம், அவர்கள் சேந்திருக்கும் சமுகம் என்பனவற்றில் மிக மிகத் தங்கி இருக்கிறது. குறிப்பாக இது பெண்கள், முஸ்லிம்கள், ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் சாதிய ஒழுங்குபடுத்தல்களில் புறக்கணிக்கப் பட்டவர்களாகவும் இருப்பதனைக் காணலாம்.

பொதுவாக இந்தியா அடிப்படைக் கல்வியில், மிலேனியம் அபிவிருத்தி இலக்கில் சொல்லப் பட்டதற்கிணங்க அடைந்து விட்டதென்றே கூறப்படுகின்றது. இருப்பினும் கல்வியின் தரம் எப்படி இருக்கின்றது என்பது கேள்விக்குரியதே.

உதாரணமாக ஆய்வறிக்கை ஒன்று, 8-11 வயதுக்கிடையிலான பாடசாலை செல்லும் மாணவர்களிடையே 10 பேரில் ஒன்றுக்கு மேல் ஒன்றுமே வாசிக்க முடிவதில்லை. அதுபோல் 14 விகிதமான மாணவர்கள் எழுத்துக்களை வாசிக்க முடிவில்லை என்றும், இதில் ஐந்தில் ஒரு பங்கினர் சொற்களை கூட்டி வாசிக்க முடியவில்லை என்றும் மற்றும் 40 விகிதமளவிலான மாணவர்கள் ஒரு பக்க கதையினை முழுசாக வாசிக்க முடியவில்லை என்றும் அறிக்கை இட்டுள்ளது.

ஆகவே இங்கு மிலேனியம் இலக்கை எட்டுவதற்க்கான அடிப்படைக் கல்வி போதுமானதாக உள்ளது என்கின்ற வாதம் கூடப் பொய்து விட்டது. ஏனெனில் இங்கு சரியாக எத்தனை பேர் வாசிக்கவும், விளங்கிக் கொள்ளவும் முடிகின்றது? கல்வியில் அடைவு கிட்டி விட்டது என்பது அதன் தராதரத்தை பொறுத்தும் இருக்க வேண்டும் அது வறுமையை தணிப்பதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளில் மிகப் பிரதானமானது. ஆகவே இந்தியாவின் வறுமையைக் குறைப்பதனில் மிலேனியம் அபிவிருத்தி இலக்கு தீர்வாக அமையுமா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

களத்து மேட்டு கண்ணம்மா....


சின்னவத்தை சீமை
சென்றுவரச் சேய்மை
குறுணல் புடைத்து
உலை மூடும் கண்ணம்மா
கூலிக்கு செய்யவில்லை- அரிசி
ஆலைக்குச் செல்வாள்- அங்கு
காலையில் அரிசி விற்க்க
கடனுக்கு ஐந்து மரைக்கால்- எடுத்து
உடனுக்கு உடன் கடன் கொடுப்பாள்..

சின்ன வீட்டினுள்
செல்லமாய் ரெண்டு பெண் பிள்ளை
கணவன் வயல் சென்றும்
காணாமல் போன பின்னும்..
உணவு கொடுக்க மறுத்திலள்..
உடை உடுக்க தவறவில்லை..

காலையில் பிள்ளைகட்கு
கறிசோறு சமைத்து விட்டு..
ஒரு நாளில் ஒரு தடவை
ஓடுகின்ற பேருந்து..
மறு முறையும் வாராது..
வாழைக்கால் ஆறுமட்டும்
வந்து செல்லும் அந்த வண்டி
அதில்
தினமும் அரிசி விற்க்க
பனங்காடு பாண்டிருப்பு
மாங்காடு மருதமுனை
இனங்கண்டு சென்று விற்ப்பாள்..

பாரங்கள் தலை சுமந்த கண்ணம்மை
தூரங்கள் பார்த்ததில்லை
மழை வெயில் பனி
மாச்சல்கள் தொட்டதில்லை..
நேரம் போன தெரியாமல்
பாரம் குறைந்த தலையுடன் - சற்றே
ஆறுதல் அடைந்ததால்
பேருந்து போனது...

பாவம் என்ன செய்வாள்...
இருபத்தி ஒன்பது மயில்கள் நடக்க
இருட்டுப் பட்டு விட்டது..
கண்கள் பார்க்க மறுத்தது -இரண்டு
பெண்களின்; ஏக்கம் வேறு.
சென்றடைந்தாள் .....இருந்தும்
அவள் செல்லங்களை கண்ட பின்தான்
உள்ளத்தில் உயிர் வந்தது..

பசிவயிற்றைக் கிள்ளியதால்
பானையில் அரிசெடுத்து
உலைவைக்க போனால்...
பானைதான் இருந்தது..
அரிசங்கு இருக்கவில்லை
யாருக்கு தெரியும்...
ஊரெல்லாம் உணவளித்த கண்ணம்மை
உலைமூட்ட அரிசி தேடுவாள் என்று...

இலங்கையில் ஓங்கத் தொடங்கும் உரிமைக்குரல்கள்....

                   (ம.உ.ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளுரின்(R.மனோகரன்) மக்கள் விழிப்பூட்டல்-கல்முனை)
இன்று அபிவிருத்தியடையாத நாடுகளை மட்டுமல்ல , அபிவிருத்தியடைந்த மேற்குலக நாடுகளையும் அடிக்கடி இயற்கை விட்டுவைக்கவில்லை, அது புயலாகவும், பூகம்பமாகவும், வெள்ளமாகவும் பேரபாயங்களை ஏற்படுத்திச் செல்வதை நாம் கத்தரினா என்றும் ரீட்டா என்றும் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறான பேர் அனர்த்தங்களிலிருந்து மிகவும் குறைந்த அழிவுகளை அல்லது அதை தவிர்ப்பதற்க்கான அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அனர்த்த நிவாரண கண்காணிப்பு பற்றிய தேவை எமக்கு வேண்டியிருக்கிறது. இந்த இரண்டிலும் சுனாமியின் போது மீழ் உருவாக்கச் செயலாற்றுகைகளில் அனர்த்தத்திற்கான நிவாரணங்கள் மீதான கண்காணிப்பு, அவர்களது அடிப்படை உரிமைகள் சார்பான பாதுகாப்பு என்பன அம்பாரை மக்களது மீள் உருவாக்கத்தினில் எத்தகைய பங்கினை செலுத்தி இருக்கின்றது என்பதையே நான் இக்கட்டுரை மூலம் விளக்க உள்ளேன். 

ஆழிப் பேரலையின் அழிவுகள்.
சுமத்திராவில் 2004 டிசம்பரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆசிய நாடுகளின் பல பாகங்களையும் பலமாக சுனாமி என்ற பேரலையாக மாறி உயிர்களையும், உடமைகளையும் அழித்துச் சென்றுள்ளது. அரசியல் ஸ்த்திரமின்னை, முகாமைத்துவ அறிவின்மை, போர்சூழல் என்பன காரணமாக வருடங்கள் பல கழிந்தும் பாதிக்கப்பட்டவாக்;கும் இனிமேல் இவ்வாறான அனர்த்தம் ஏற்படமல் காப்பதற்கும் எதுவித சரியான திட்டமும் இல்லையென்றே எண்ணத் தோணுகிறது இதனால்தான் இன்றும்கூட சுனாமியால் பாதிக்கப்பட்ட பல்வேறு மக்கள் மழையிலும், வெயிலிலும் ஓலையாலும், தகரங்களாலும் கட்டப்பட்ட தற்காலிக கொட்டகைகளில் வாழும் நிலை இருந்து வருகிறது. 

சுனாமியின் காரணமாக இலங்கையில் 31,229 பேர் இறந்துள்ளனர். 4100 பேர்வரை இதுவரை காணாமல் போயுள்ளனர் தவிர 5,16,150 பேர் வரை இடம்பெயர்ந்து வாழ்ந்தனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவைதவிர 28,449ம் ஏக்கர் பயிர்செய்கை, நிலம் என்பன முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 9,000 ஏக்கர் நெற் செய்கையும் 645 ஏக்கர் ஏனைய பயிர்ச்செய்கை நிலமுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 12,928 வீட்டுத்தோட்டங்கள், 559 மரக்கறித்தோட்டங்கள் மற்றும் 317 பழத்தோட்டங்கள் என்பனவும் முற்றாக அழிந்தன.

இவைதவிர கிட்டத்தட்ட 16479 மீன்பிடி வள்ளங்கள் பாதிக்கப்பட்டும் முற்றாக அழிவுற்றும் உள்ளன. இவைபோன்று 86 மருத்துவ வசதி நிலையமும் 195 கல்வி நிலையங்களும் (பாடசாலைகள், பல்கலைக்கழகம், கல்விக்கல்லூரி) என்பன முற்றாகவும் பகுதியாகவும் அழிவடைந்துள்ளன. இவற்றை விட மேலான 275,000 பேர் தங்கள் வேலை வாய்ப்பினை இச்சுனாமி பேரலையால் இழந்துள்ளனர். 

இவ்வாறு ஏற்படுத்திச் சென்ற பாதிப்புகள் சாதி, இனம், மதம், ஏழை, பணக்காரன் என்று வேறுபடுத்திப் பார்க்கவில்லை. இது இலங்கையின் உள்நாட்டு தேசிய உற்ப்பத்தியில் 4.5 சதவீத அளவு நட்டத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 1500-1600 மில்லியன் ரூபாவாகும். இது அநேககமாக கரையோரங்களி;ல் வாழும் மீனவர்களினதும், சிறிய தொழில் உற்ப்பத்தியில் ஈடுபடுவோரினதும் மற்றும் விவசாயிகளினதும் வாழ்வாதாரப் பாதிப்பினை மதிப்பிட்டுக்காட்டுகின்றது.   

அனர்த்த நிவாரண கண்காணிப்பு அலகும் (Disaster Relief Monitoring Unit) அதன் அடைவுகளும்.
சுனாமிப் பேர் அனர்த்தத்தின் பின்னர் பல நிறுவனந்கள், அன்றை அயல் நாடுகள் மற்றும் மனிதாபிமானப் பணியாளர்கள் முண்டியடித்து இப்பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேசக்கரம் நீட்டி உதவியளித்தமை குறிப்பிடத்தக்கது இதன் பின் இவ் உதவிகள் சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதும் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையில் இருக்கும் போது நிவாரண உதவிகளை எதிர் பார்த்து இருக்கவில்லை என்பதும் ஒரு பொதுவான கருத்தாக இருந்தது. இவ்வாறான குறையை நிவர்த்திக்க உதித்த ஒரு ஸ்த்தாபனம்தான் அனர்த்த நிவாரண கண்காணிப்பு அலகு ஆகும. இது சமூகம் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் நிறைவேற்றும் வேலையை அல்லது நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் மற்றும் கண்காணிக்கும் ஒரு நிறுவனக செயற்ப்பட்டது. எனவே இது நிதி மற்றும் பொருள் உதவி வழங்கும் ஒரு நிறுவனமல்ல. 
                     (திருமலை கிண்ணியாவில் மனித உரிமை ஆணைக்குழுவின் மக்கள் விழிப்பூட்டல்)
இவ்வமைப்பானது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கீழ் உருவாக்கப்பட்டு விசேடமாக சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண, புணர்வாழ்வு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்குமாக உருவாக்கப்பட்ட அமைப்பாக இருந்தது. இதன் நோக்கம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமை மீறல்களை கண்காணிப்பதும் பரிசீலனை செய்வதுமாகும்.

1996 ஆண்டின் 21ம் இலக்கச் சட்டத்தில் விரிவாக கூறப்பட்டதற்கு இணங்க நாட்டில் உள்ள அனைத்து மக்களது உரிமைகளையும் பாதுகாப்பதற்க்காகவும், மேம்படுத்துவதற்க்காவும் உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன அமைப்பே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகும். இவ்வமைப்பினது கொள்கைகளையும், திட்டங்களையும் தழுவியவாறே செவ்வனே செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பே இவ்வனர்த்த நிவாரண கண்காணிப்பு அலகாகும்.

கள கண்காணிப்பில் DRMU இதனுடைய பணிகள்.

DRMU சுனாமிக்கு பிந்திய நிவாரணம், கீழ் கட்டமைப்பு மற்றும் புனர் நிர்மான வேலைகளில் மக்களின் கருத்துகககைத் தெரிவிப்பதற்கு முன்னுரிமைகளை மாவட்ட ரீதியில் வழங்கி அடிப்படை அணுகுமுறைகளை ஊக்குவிக்கின்றது. இதன் கள அலுவலகங்கள் முல்லைத்தீவு மற்றும் கிளிநோச்சி தவிர்ந்த ஏனைய சுனாமியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உருவாக்கப்பட்டிருந்தது. கள உத்தியோகஸ்த்தர்களாக ஐக்கிய நாடுகள் ஸ்த்தாபனத்தின் தொண்டர்கள்  உட்பட பலர் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்கள், கிராம உத்தியோகத்தக்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமுக அமைப்பின் தலைவர்களுடன் தொடர்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டு சிறப்பாக செயற்ப்பட்டு வந்தமை குறிப்பிடலாம்.

DRMU இன் பிரதான பணிகள். 

1. அரசாங்க நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற நிவாரண மற்றும்   புனருத்தாபன வேலைகளை மேற்பார்வை செய்வதுடன் கண்காணித்தல்.
2. மீள் கட்டமைப்பு, நிவாரண பணிகளின் போது மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு தேவையான ஆலோசனைகளை அரசாங்கத்திற்கு சிபார்சு செய்தல்.
3. அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், அபிவிருத்தி நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் மனித உரிமைகள் பிரச்சினைகள் சம்மந்தமாக இணைந்து செயற்படல்.
4. மனித உரிமைகள் சம்மந்தமான பிரச்சினைகள், அவற்றை பாதுகாப்பது சம்பந்தமான ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் அரசாங்கத்திற்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் வழங்குதல்.
5. மீள் கட்டமைப்பு, புனருத்தாபன நடவடிக்கைகளின் போது சுனாமியால் பாதிக்கப்பட்ட நபர்களின் மனித உரிமைகள் நிலமையை சமுக கலந்துரையாடல்களின் மூலம் கண்காணித்தல்.
6. பாதிக்கப்பட்ட மக்கள், அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய கடமை புரிபவர்களுடன்  விழிப்புனர்வு நிகழ்சிகள், தகவல் பரிமாற்றம், மற்றும் கல்வியை வழங்குதன் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை வலுவூட்டல்.
7. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் சமுக, பொருளாதார, அரசியல், கலாசார உரிமைகளை பாதுகாப்பதில் உதவுதல்.
8. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் அடிப்படை உரிமை, உரித்துடமை மீறல் சம்மந்தமான முறைப்பாடுகளை அனர்த்த நிவாரண கண்காணிப்பு அலகிற்கு சமர்ப்பிக்க முடியும். பின்னர் இம்முறைப்பாடுகள் பரிசீலிக்கப்படும்.ம்

சுனாமி இழப்பீட்டு சம்பந்தமான உரிமை மீறல்களின் போது DRMU இன் செயற்பாடுகள்.

யார் DRMU க்கு முறைப்பாட்டை செய்ய முடியும்?

1. சுனாமியால் பாதிக்கப்பட்ட எவரேனும் சுனாமியுடன் தொடர்புடைய மனித உரிமை முறைப்பாடுகளை னுசுஆரு க்கு செய்ய முடியும்.
2. முறைப்பாடுகள் பாதிக்கப்பட்ட தனிநபர் சார்பாகவோ குடும்பம் சார்பாகவோ அல்லது பாதிக்கப்பட்ட தனிநபர் சார்பாகவோ செய்ய முடியும்.
3. பாதிக்கப்பட்ட நபர் சார்பாக வருபவரினால் செய்யப்படும் முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.
4. சுனாமி தவிர்ந்த ஏனைய மனித உரிமை முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நேரடியாக ஏற்றுக்கொள்ளப்படும்.

முறைப்பாடுகள் கிடைக்காமல் DRMU க்கு பரிசீலனை செய்ய முடியுமா?

ஆம், அத்தியாவசியமான அடிப்படை உரிமைகள் மீறல்களை பரிசீலனை மற்றும் விசாரணை செய்ய முடியும்.

எங்கே நான் எனது முறைப்பாட்டினை செய்ய முடியும்?
கிராமசேவகர், பிரதேச செயலாளர் மற்றும் அரச அதிபர் போன்ற அரசாங்க அதிகாரிகளினூடாக அரசினால் வழங்கப்படுகின்ற உதவிகள் கிடைக்கப் பெறாவிடின் பாதிக்கப்பட்ட நபர் னுசுஆரு க்கு முறைப்பாடுகளை செய்ய முடியும்

முறைப்பாடுகளை நேரடியாகவோ, கடிதம் மூலமாகவோ, தொலைபேசி ஊடாகவோ அல்லது பெக்ஸ் மூலமாகவோ மேற்கொள்ள முடியும்.

முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட வேண்டியவை.

1. என்ன உரிமை மீறப்பட்டுள்ளது?
2. யாருடைய உரிமை மீறப்பட்டுள்ளது?
3. உரிமை மீறலுக்கு பொறுப்புக் கூறவேண்டிய நபர் அல்லது நிறுவனம்.
4. எப்படி உரிமை மீறப்பட்டுள்ளது?
5. எங்கே, எப்போது அநீதி இழைக்கப்பட்டுள்ளது?
6. எதிர்பார்க்கும் உதவி.

எப்படி முறைப்பாடுகள் கையாளப்படுகின்றன.

1. DRMU வின் விதிகளுக்கு உட்படாத முறைப்பாடுகள் உரிய நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்படும்.

2. DRMU வினால் ஏற்றுக்கொள்ளப்படும் முறைப்பாடுகள் DRMU வின் கள உத்தியோகஸ்த்தர்களினால் மேலதிக பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு விசாரனையை தொடர்வதற்க்கான ஆதாரங்கள் கண்டறியப்படுமிடத்து அம்முறைப்பாடு முன்னெடுத்துச் செல்லப்படும்.

3. பின்னர் பொறுப்பு கூறுபவரிடமிருந்து அறிக்கை கோரப்படும்.

4. அவ்வறிக்கைகளின் மூலம் தீர்க்கப்படாத முறைப்பாடுகள் அழைப்பானை விடுவதன் மூலம் அல்லது விசாரனை மூலம் தீர்க்கப்படும்.
                                                          (களத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன்- மூதூர்)
இவ்வாறு இன்னலுறும் மக்களுக்கு அவர்கள் தமது உரிமைகள், உரித்துடமைகள் என்பன சார்ந்த சாத்தியமான பெறுபேறுகளை எமது கல்முனை கள உத்தியோகஸ்த்தர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் சேர்ந்து அவர்களது உரிமைகளை ஓரளவாவது பாதுகாத்துள்ளோம் என்று புளகாங்கிதம் அடையாமல் இருக்க முடியாது. கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாகங்களிலும் இப்பணி செய்ய கிடைத்த வாய்பை எண்ணி இப்போதும் பெருமிதம் அடைகிறேன். தற்போதும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வாழ்வாதாரங்கள் வாழ்விடங்கள் இழந்த நிலையில் அதற்க்கான நிவாரணங்களைப் பெறுவதனில் பல புறக்கணிப்புகள், ஓரங்கட்டுதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றவர்கள் அவர்களது முறைப்பாடுகளை அவர்களது மாவட்டங்களில் இருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கலாம்.