ADS 468x60

22 May 2011

நாகரிக வேலிக்குள் சிக்கிக் கிடக்கும் நாட்டுப்புற வழக்காறுகள்.

மனித இனம் எவ்வளவு பழமை வாய்ந்ததோ, அந்த அளவு பழமை மிக்கது நாட்டுப்புறவியலாகும். இதில் மட்டக்களப்பு அளவில் எத்தகு நிலையில் நாட்டுப்புறவியல் விளங்கியது என்பதைக் காணும் போது, மட்டக்களப்பில் நாட்டுப்புறவியல் துறை தனித்ததொரு துறையாக வளரவில்லை. ஆனால் அது சமயம், தமிழ், விளையாட்டு போன்ற இன்னோரன்ன துறைகளை சார்ந்து மட்டக்களப்பில் ஒரு சமுகத்தின் நாரிகக் கண்ணாடியாகவே அமையப்பெற்றிருந்தது.

குறிப்பாக மானுடம் தொடங்கிய காலம் முதலே நாட்டுப்புற வழக்காறுகள் தோன்றிவிட்டன. மக்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் இவற்றின் அடிப்படையில் எழுந்த படைப்புத்திறன் மிக்க வழக்காறுகள் இலக்கியமாகப் பரிணமித்தன. அவை,

1) பொது மக்களைச் சார்ந்த மரபுமுறைகள் என்றும்,
2) பொது மக்கள் இலக்கியம் என்றும்,
3) பொதுப் புராணவியல் என்ற
பெயர்களிலும் வழங்கப்பட்டன.

ஆனால் வில்லியம் ஜான் தாமஸ் என்னும் ஆங்கிலேயர் கி.பி.1846 ஆம் ஆண்டு நாட்டுப்புறவியலைக் குறிக்கும்
"Folklore" என்ற சொல்லை உருவாக்கி உலகுக்கு வழங்கினார். இச்சொல்லே பெருவாரியாக எல்லா நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு  வருகின்றது. இவ்வாறு, மனிதனின் சடங்கு முறைகள், நம்பிக்கைகள், கதைப் பாடல்கள், பழமொழி, நாட்டுப்புறப் பாடல் என வழக்காறுகள் அனைத்துமே நாட்டுப்புறவியல் இலக்கியம் என்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டுப்புறவியல் என்பது பழங்காலப் பண்பாட்டின் எச்சம் (Cultural Survival) என்பது அவர் கருத்தாகும்.

உலக நாடுகளில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரெஞ்சு, ஜெர்மன், கனடா, மெக்ஸிகோ, ஜப்பான் ஆகிய நாடுகள் இவ்விலக்கியத்தின் பல்வேறு கூறுகளை, தத்தம் மண்ணின் மணம் வீசத் திறனாய்வு செய்து உலகளாவிய அளவில் நாட்டுப்புற இலக்கியத்தின் சிறப்பினை உணரும்படி செய்தன

ஒரு சமுகத்தின், இனத்துவத்தின் தனித்தன்மையை புடம்போட்டு, பட்டை தீட்டிக்காட்டுவது அதன் வளக்காறுகள், ஒழுக்க விழுமியங்கள், பண்பாட்டு மரபுகள் என்பவைதான். நாகரிக வேலிக்குள் அகப்பட்டுக்கிடக்கும் தேன் தமிழ் வந்து பாயும் மட்டக்களப்பின் வழக்காறுகள் மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின் தற்பொழுது சிறியளவில் தூசிதட்டி பார்க்கும் ஒரு போக்கு வரவேற்க்கத்தக்கதே. இருப்பினும் அவையெல்லாம் அழிந்து போகும் இத்தறுவாயில் மீட்டெடுக்க போதுமான சத்திகளா! என்ற கேள்வி தொக்கு நிக்கின்றது. சோதிடம், கிராமிய பூசை நடைமுறைகள், விருந்தோம்பல், கூத்து, கரகம், கும்மி, மகிடி, விளையாட்டுகள், பழமொழிகள், மாந்திரிகம், சோதிடம், பறை மேளம் போன்ற அரிய தழிழ் சொத்துக்கள் இன்று எங்கே போய்விட்டது??
"காவடியென்றால் பறை வேண்டும்.பறை இல்லையென்றால் அந்தக் காவடியில் வேலையே இல்லை.பாப்பவர்களுக்கும் உப்புச் சப்பில்லாதது போல இருக்கும்.ஆடுபவருக்கும் நன்றாக இழுத்து ஆட முடியாது.பண்டைத் தமிழனின் வாத்தியக் கருவியான பறையின் பவர் அத்துணை வாய்ந்தது.பறையில் கட்டப் பட்டிருக்கும் தோலில் ஆழமாக விழும் அடியில் ஏற்படும் அதிர்விலே வரும் சுருதி நரம்புக்குள் புகுந்து, காவடிய ஆடுபவரை துள்ளி ஆடச் செய்யும். எம்மையும் அந்த சுருதிக்கு ஆட அழைக்கும்.அற்லீஸ்ற்(Atleast) கால்களையாவது நம்மையறியாமல் ஆட்டுவிக்கும்.அத்தனை சக்தியுள்ளது.""http://vadaliyooraan.blogspot.com/"

ஆய்ந்து அறிந்து சொல்லுவது ஒன்றும் முக்கியமல்ல, அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டிய பொறுப்பு தழிழுர்கள் ஒவ்வொருவுரினதும் பொறுப்பல்லவா? இல்லாவிடின் நாளை இன்னொருவன் வந்து இங்கு தழிழர்கள் வாழ்ந்தார்களா! என்று கேட்கும்போது, நாங்கள் அவற்றின் அடையாளங்களை துலைத்து பல்லை இழித்தால் பயன் இல்லை.. நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.. இச்சமாதான காலத்தில் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக மீளமைக்க வேண்டும்.. அது தான் நமது அடுத்த பரம்பரைக்கு இனத்துவ அடையாளமாக அமையும் என்பதை உணர வேண்டும்.
இந்த நிலையில் நான் மட்டக்களப்பின் மத்தியில் முந்திரிகை மணம் வீச வெள்ளரி வளம் கொலிக்கும் புதுக்குடியிருப்பு என்னால் மதிக்கப்படும் ஒரு தழிழ் கிராமம் என்றால் அது மிகையாகாது. அங்கு அண்மையில் நடந்து முடிந்த கண்ணகை குளிர்திதில் என்னை மெய்சிலிர்க்க வைத்தது, அத்தனை பாரம்புரியம், பண்பாடு, நாரிக விழுமியம்..சோக்கான குடிமக்கள்... இது போன்று எமது ஏனைய தழிழ் மக்கள் தங்களது தனித்துவத்தினை தாங்களே காத்துக் கொள்ள வேண்டும்.அதன் சில புகைப்படங்கள் இங்கே...
..

ஆனால் இப்போது, சினிமா மோகம், ஊடக துறையின் முறைகெட்ட அபார வளர்ச்சி, தொலைத் தொடர்பு தொல்லை, பாரம்பரியத்தை பாராமுகமாப் பார்க்கும் அநாகரிக மாயை..போன்ற இன்னோரன்ன காரணங்களால் எமது தமிழ் மக்களின் தூய தனித்துவங்கள் மழுங்கடிக்கப்பட்டு மாற்றான் பிள்ளைகளாக மாறி நமக்கென ஒரு தனித்துவம், கலாசாரம், இன்னும் எல்லாவற்றையும் அழித்து வாழுகின்ற சமுகத்தை பார்க்கும் போது வேதனையாக இருக்கின்றது.

பல்கலைக்கழகங்கள், கல்விக் கல்லூரிகள், பாடசாலைகள் இவர்கள் ஒரு சமுகத்தின் முதுகெலும்புகள் அல்லவா அவுர்கள் வளைந்து விடக்கூடாது நிமிந்து நின்று இந்த கமுகத்தின் தனித்துவம் காப்பது அவர்களது பொறுப்பாகும் அல்லவா??

0 comments:

Post a Comment