ADS 468x60

01 June 2011

மட்டக்களப்பு கிராமங்களில் துளிர் விடும் தழிழ் உணர்வுகள்.


'தேன் கதலி சூழ்ந்ததனால் 
தேத்தாத்தீவு என்ற 
நான் பிறந்த மண்ணுக்கு
நல்ல தமிழ் வணக்கம்'

மட்டு வாவி குளிர் பரப்பும் தேத்தாத்தீவினில், தேன் சொட்ட கவிபாடிய கவியரங்க நிகழ்வின் நீள அகலம் பற்றியதான ஒரு குறுக்கு வெட்டு பார்வை இங்கு சிறிய கட்டுரையாகத் தரப்படுகின்றது.


யுத்தமும் கைநழுவிய கலாசாரச் சமிக்ஞைகளும்.
இலங்கையில் இரண்டு தசாப்தகால யுத்தம் உயிர்களை மட்டும் காவு கொள்ளவில்லை, அந்த இனத்துவ அடையாளங்கள், வழிபாட்டு வழக்காறுகள், பாரம்பரியம், நடைமுறைகள், உறவுமுறைகள் என்று எல்லாவற்றையும் இழந்த, ஏதோ எச்ச சொச்சமாக மிஞ்சிய தழிழ் இனம பார்க்க ஏதோ மீண்டு வருவது போல் ஒரு உணர்வு இப்போது இருந்தாலும், முன்னைய காலங்களுடன் ஒப்பிடும் போது, இப்போது அதில் இருந்தான சிறிய விடுதலை எமக்கு பெரிதாகத் தெரிகின்றது அவளவுதான். யுத்த வடு இன்னும் ஒரு பரம்பரை அலகை கடத்தும் வரை, அது எம்மில் ஒட்டிக்கொண்டு இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

வாவி மகள் வளைந்தோடும், வந்தோரை, வாழ வைக்கும் மட்டு மா நாகரின் தெற்கே, 12 மைல் தொலைவில், தேன் கதலி சூழ்ந்து அழகு தரும் தேத்தாத்தீவினிலே, 'மன்முனை தென் எருவில் பற்று பிரதெச சபை கலைஞ்ஞர் ஒன்றியத்தின்' ஏற்ப்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கவியரங்கு அந்தி மாலைப் பொழுதில், 28 மே மாசம் 2011 அன்று தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலய கலாசார மண்டபத்தில் மிகப்பிரமாதமாக இனிதே நடந்தேறியது. பாரதிதாசன் ' தமிழுக்கும் அமுதென்று' ஏன் சொன்னான் என்பது அன்றுதான் எனக்கு புரிந்தது.
(கலாபூசணம் அரசரெத்தினம்( கலைஞர் ஒன்றியத்தலைவர்) மற்றும் செயலாளர் கோபாலபிள்ளை.)
கலாபூசணம் அரசரெட்ணம் தலைமை தாங்க, ஏரூரான் கவிநயவுரை வடிக்க கலாபூசணம் தேனூரான் தலைமையில், கவிமாரி பொழிந்தது உட்பட அத்தனை அறிஞர்கள், கலைஞர்கள், விருது வென்றவர்கள் என ஒன்று திரண்ட பட்டாளத்தினை தேனூர் மண்ணில் பார்க்க இனிமையாகவும், பெருமையாகவும்  இருந்தது. 
(அக விளக்கேற்றும் மூத்த கலைஞரும், ஓய்வு பெற்ற அதிபருமான சுப்ரமண்யம் அவர்கள்.)
எத்தனை இடர்கள் இருப்பினும், தமிழை தளரவிடாது முண்டு கொடுத்து படர விட்டு தொடர வைத்த பெருமை, சில கலைஞர்களையே சாரும். மங்கிப்போய் மடியா வண்ணம் நாடகம், கூத்துகள், கரகம், காவியம், கவியரங்குகள், அவை எல்லாம் வெளிறிப்போகாமல், தண்ணீருக்குள்ளால் நெருப்பு கொண்டு வருவதனைப்போல், றிலேயில் தடியை மாற்றுவதுபோல் எமது தலை முறைக்கு அவற்றை தந்துதவிய கலைஞர்கள் கௌரவிப்பு இந்த நிகழ்வின் மகுடமாக இருந்தது. யுத்தில் கை நழுவிய கலாசார வழக்குகளை ஒருக்கால் பூசி மொழுகிய புகழ் தேத்தாத்தீவு மண்ணுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தழிழ் இனத்துக்கும் பெருமை சேர்ப்பதாகவே இருந்தது.

உலகமயமாதலும் உளமாயையும்.
உலகமயமாதல் காரணமாக இலங்கை இந்தியா போன்ற பாரம்பரியத்தை இறுக்கமாக கடைப்பிடிப்பதாக கூறிக்கொள்ளும் நாடுகளிலும் கலாசார மாற்றங்கள் தவிர்க்கமுடியாத ஒன்றாகித்தானே விடுகின்றது.

காலத்தின் கட்டாயம் காரணமாக மக்களிடையே ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் காலம் காலமாக காவிக்கொண்டுவந்த சில எண்ணக் கருக்களை இன்றும் மாற்றிக்கொள்ள முயற்சிக்காமல் இருப்பது வேதனைதான். முக்கியமாக பெண்கள் விடயத்தில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். எந்த ஓர் கொள்கையும், நடை உடை பாவனையும் அந்தக் காலகட்டத்தில் சரியானதாக இருக்கிறதா அல்லது பொருத்தமானதாக இருக்கிறதா என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமே தவிர நிலமானிய சமூக அமைப்பில் பழக்கமாக, வழக்கமாக, எழுதாத சட்டமாக வந்தவற்றை எல்லாம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வற்புறுத்துவது எந்தவிதத்திலும் சரியாகாது. 
(கடல் போல் திரண்ட கலைஞர் குலாமில் ஒரு பகுதியினர்.)
இருப்பினும் தழிழர்கள் கலாசாரத்தினை கட்டிப்பிடித்து விட்டு விடாமல், புதுமை சேராமல் கொண்டு நடத்த சொல்லவில்லை, அவற்றை ஒரு மாற்றான் பிள்ளை மனோபாவத்தினில் எள்ளி நகைப்பது இன்றய இளய சமுகத்தினிடை காணப்படுவது வேதனைக்குரியதே.

சினிமாவின் கற்பனைக் கீரோக்கள், ஊடகத்தின் மேலைத்தேய சாயம், தொலைக்காட்சிகளின் காலாசாரம் அறுந்த தொடர்கள், புதிய பாவனைப் பொருட்களின் இறக்குமதி என்பன போன்ற இன்னோரன்ன காரணங்கள்  எல்லாம் உலகமயமாக்கலின் வேர்களாகி, விழுதுவிட்டு ஓங்கத் தொடங்கியதனால், உன்மையான,, மேலையோர்களும் விரும்பும் நல்ல கலாசாரம் இன்றய இளம் சமுகத்தினிடையே உலகமயமாக்கலில் சிக்கிக்கொள்ளும் உளமாயையை ஏற்ப்படுத்தி இருக்கின்றது.
(கவியரங்கில் கன்னிக் கவிவடிக்கும் பிரகாஸ்)
இவற்றை எல்லாம் கட்டுடைத்து மட்டக்களப்பின் மான்மீயத்தை பறைசாற்ற முதியோர்களின் கையைப்பிடித்து இளையோர்கள் செல்லும் ஒரு நிலைப்பாடு மட்டக்களப்பின் கிராமங்களில் குறிப்பாக தேத்தாத்தீவு கிராமத்தில் இருந்து ஊற்றெடுக்கத் தொடங்கி இருக்கிறது பெருமையே பெருமை.

நரைகள் தோழ்கொடுக்கும் நாகரிக அறுதி.
எப்போதுமே எந்த ஒரு முன்னெடுப்புக்கும் இளையோர்கள் தோழ் கொடுக்க மூத்தவர்களின் வழி நடத்தலில் கொண்டு செல்வதுதான் வழக்கு.. அதற்கு ஒரு சக்தி இருக்கிறது, வைராக்கியம், வியூகம் என்றெல்லாம் இருக்கிறது. ஆனால் எமது நாகரிக தோரணைகள் அநாகரிகமாக நோக்கப்படும் ஒரு மனோபாவம் எம்மவரிடையே வளரத்தொடங்கியுள்ளது இப்போது.
(கௌரவிக்கப்பட்ட கலைஞருடன் ஒட்டிக்கொண்ட நான்..)
இது கிழடுகளுக்கு உரிய நிகழ்வு, அங்கு தழிழ், பாரம்பரியம், விழுப்பம் இதுகள் தானே பேசப்போகின்றனர். அங்கு போட்டி பொறாமை இராதே போய் என்ன செய்வது என்ற மனோ நிலையில் வாழும் கீழ்த்தனமான சமுகத்துக்கு தேத்தாத்தீவின் இளைஞர்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றமை பிரமிக்கத்தக்கதே. அவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் முறை ஒரு தனி அழகுதான். 

அரசியல் சாயம் தீட்டும் அசல் வழக்காறுகள்.
குறிப்பாக இன்றய அரசியல் ஒரு விதமான பிழைப்பிதம் நோக்கியதான போக்கினைக் கொண்டு இருக்கின்றது. நமது அடுத்த இருப்புக்கு என்ன வழி என்பதனை பார்கின்றனரே தவிர மக்களின், அவர்களின் இனத்துவ, மரபுவழி, கலாசார உரித்துகளை எல்லாம் புறந்தள்ளிய ஒரு அரசியலாகவே இருக்கின்றது. மாவட்ட கலாசார உத்தியோகஸ்த்தர் மலர்ச்செல்வன் கூறுகையில், பாராளு மன்ற உறுப்பினர்களுக்கு என ஒதுக்கப்படும் மாவட்ட அபிவிருத்தி நிதியில் 10 விகிதமான நிதி கலாசார அபிவிருத்தி அலுவல்களுக்கு என பிரத்தியேகப்படுத்தப்பட்டு இருப்பதனையும், அது கலாசார முன்னேற்றத்துக்கு பயன்படுத்தப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டினார். அவை ஆலயங்களில் பாவிப்பதற்க்கான ஒலி பெருக்கிகள் வாங்குவதற்கும், ஆலய கட்டுமானப் பணிகளுக்கும் எனவே ஒதக்கப்படுவதாகவும், அதனூடு அரசியல் இலாபம் தேட முயலுகின்றனரே தவிர, கலாசார முன்னேற்றம் பற்றி தெரியாத இவர்களால் என்ன எம்மக்களுக்கு இலாபம் என்று அவர் விசனம் தெரிவித்தார்.
(தேத்தாத்தீவின் அழகு சொட்டும் பாடலை பாடும் பல்கலைக்கழக வாருசுகள்)

தூசி தட்டும் இளையதலை முறை.
எது எவ்வாறு இருப்பினும் எல்லோரையும் வியக்க வைக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கவியரங்கு, தழிழையும், கலாசாரத்தினையும் வளர்த்துச் செல்வதனில் ஒரு அற்புதமான திருப்பு முனையாகவே அமைந்தது எனலாம்.  குறிப்பாக இன்பராஜன் நெறிப்ப்த்தலில் பிரதேச செயலாளர் உட்ப்பட மூத்த கலைஞர்களின் அகவிளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமாகி, இறைவணக்கம் என்று தொடங்கி அறிமுகப்பாடலை களுதாவளை கிராமியக் கலைக்கழகம் இசைத்து முடிக்க, வரவேற்ப்புரையுடன் நேராகவே கவியரங்குக்குள் நுழைந்து களை கட்டியது நிகழ்வு. 
(கைமாறும் இளைய தலை முறை)
கவிஞர், கலாபூசணம் தேனூரான் தலைமை தாங்க, ஏரூரான் கண்மணிதாஸன் எனும் புனைபெயரோன், சுவைச் சாரூறும் இன் சொல்லோன் காந்தன் ஐயா நயவுரை பகர கவியரங்கு ஓகோ என்று இருந்தது.

வெடிப்பறக்கும் கவிதையில் சக்தி புகள் சித்தி பெற்ற இந்து (யோகேந்திரன்) ஆசிரியர் அவர்கள் ஆரம்பத்திலேயே...
'மன்முனைத் தென் எருவில் பற்று
பிரதேச செயலகத்தின் - கலைப்பணி
கண்முன்னே தெரிகிறது - இக்
கவியரங்கத்தின் மூலம்'

'கலைஞர் ஒன்றியத்தின்
கைங்கரியத்தில் ஒன்று
கவியரங்கமாய் இன்று
கடு நடை போடுது வென்று'
என்று தொடங்கி,  முந்தானை பிடிச்ச பருவம் பற்றி முத்தாய்ப்பாய் பாடினார் அவர்..இது போன்று இன்னும் ஐந்து பருவங்கள் அழகாக கவியாய் கலக்கின.
அதில் எனக்கு பிடிச்ச ஒரு கவிதை...

மல்லிகைப் பூக்கொடுத்து
மாது என் மனங்கெடுத்து
வெள்ளிக் கிழமை விடிய முதல்
விறாந்தையில இருப்பன் என்றாய்' 

என்று தொடங்கும் அடிகள் நகைச்சுவையாய் எழிமையாய் நாட்டு வழக்குகள், நலிவடைந்த பேச்சு மொழி கலந்த கவிதை எல்லோரையும் கொள்ளை கொண்டிருந்தது.

இறுவட்டு வெளியீடும் இரட்டிப்பு மகிழ்சியும்.
(இறுவட்டினைப் பெறும் பிரதேச செயலாளர்)
மட்டக்களப்பு மண்ணுக்குள் இவளவு திறமை, புத்தாக்கம், விநோதம், எழுச்சி, மண்வாசைன என்பன இருக்கிறதா என்று மூக்கில் விரல்வைக்கும் அளவுக்கு தேத்தாத்தீவு இளைய கலைஞர்களின் சாதனையாக ஒரு இறுவட்டு வெளியிட்டு வைத்ததுதான் இந்நிகழ்வுக்கே மகுடமாய் இருந்தது. 

உலகிலே முதல் முதலாக அழிந்து போகும் நிலையில் இருந்த 'கழுகு மலைப்பத்து': இது கதிர்காம முருக அடியார்களினால் கண்ணீர் மல்க பாதயாத்திரையில், வழிகாட்டியாக தொன்று தொட்டு பாடப்பட்டு வரும் ஒரு தெய்வீக சக்தி வாய்ந்த பாடல், காவடி எடுக்கும்போது, தனிவழி செல்லும் போது, அலக குத்தும் போது இதை பாடுவது ஒரு மரபு. அதுபோல் ஸ்ரீ பால முருகன் புகழ்பாடும் 'பால் மணல் பத்து', மட்டக்களப்பின் புகழை மீன்பாடியது போல் நான் பாடிய 'மீன் பாடும் ஓசை' மாவட்ட சிறப்பு பாடல், தேனூர் சிறப்புப்பாடலான 'தேத்தாத்தீவு அழகான களரியம்மா' எனும் பாடல் "மரம் மனிதனுக்கு வரம்" உட்ப்பட ஆறு பாடல்கல் இங்கு உத்தியோக பூர்வமாக கவிஞ்ஞர் ஏரூரான் (காந்தன் ஐயா) மற்றும் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் அருள்ராஜா ஆகியோருக்கு வளங்கி வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த கீழ்கோடிட்ட பாடல் தலைப்புகளை அழுத்தும் போது அவற்றை நீங்கள் பார்க்க முடியும்.
( இறுவட்டின் அடுத்த பிரதியினைப் பெறும் ஏரூரான் அவர்கள்.)
அனைவரும் எமது மண் இவ்வளவுக்கு திறமைசாலிகளை கொண்டுள்ளதா என  என் காது குளிர குளிர வினவியது இப்போதும் நினைவிலிருக்கிறது. இது போன்று நிறையவே ஏலவே நாங்கள் வெளியிட்டு வருவதும் அனைவருக்கும் தெரியாமல் இருக்கலாம்.

கலைஞர் கௌரவிப்பு..
இதனைத்தொடந்து தேற்றாத்தீவின் ஊர் புகழ்பாடும் 'தேத்தாத்தீவு அழகான களரியம்மா' எனும் பாடல் பல்கலைக்கழக மாணவர்களால் உணர்சி பூர்வமாக இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து, கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். இது அங்கு நிகழ்சி ஒருங்கிணைப்பாளர்களின் முதிர்சி மதிக்கும் திறன் என்பன வற்றினை பறைசாற்றிற்று.
(கௌரவிக்கப்பட்ட மூத்த கலைஞர்களுடன் பிரதேச செயலாளர் அவர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக கலாசார உத்தியோகஸ்த்தர்களுடன் ஏரூரான்)
மூத்த கலைஞர்களாக திரு.கா.சுப்பிரமணியம்(ஓய்வு பெற்ற அதிபர்), திரு.க.நவரத்தினம்(பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர் துறைமுக அதிகார சபை), திரு.க.இராசரெட்ணம்(அண்ணாவியார்), திரு.மு.வல்லிபுரம் (அண்ணாவியார்) ஆகியோர் வாழும்போதே முதன்மை அதிதி மற்றும் சிறப்பு அதிதிகளால் பொன்னாடை போற்றிக் கௌரவிக்கப்பட்டனர்.
(மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மலர்ச் செல்வன் மனமுவந்து பேசுகிறார்.)
தொடர்ந்து, தொடர்ந்தும் அகில இலங்கை ரீதியில் பல தடவை சென்று வெற்றி வாகை சூடி மாவட்டத்துக்கும், மற்றும் ஊருக்கும் பெருமை தேடித்தரும் தேத்தாத்தீவு தேனுகா கலைக்கழகம் நடத்திய ஸ்ரீ ஆண்டாள் எனும் வில்லிசை அனைவரையும் ஆனந்தப்படுத்தியது.

இத்துடன் நன்றியுரையினை மன்மனை தென் எருவில் பற்று கலைஞர் ஒன்றிய செயலர் திரு.இ.கோபாலபிள்ளை நிகழ்த்த இனிதே நிறைவற்றது. இது எமக்கெல்லாம் தமிழராக வாழ்வது எவ்வளவுக்கு எவ்வளவு பெருமை என்பதை நினைவுபடுத்தியது. ஏரூரான் கூறயதற்க்கிணங்க 'பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானிலும் நனி சிறந்ததுவே'......

6 comments:

ம.தி.சுதா said...

தமிழை பிரதிபலிக்கும் ஒரு இலக்கியத்தக்கான பதிவு.. மிக்க நன்றி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நன்றி சுதா...

Author said...

நல்ல ஆய்வு. பாராட்டுக்கள்

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நன்றி ஜாவிட்.....

Unknown said...

நமது பிரதேசத்தின் தமிழின் சிறப்பு/பற்று கண்டு மிக்க மகிழ்ச்சி.

சிறந்த பதிவு சகோதரம் வாழ்த்துக்கள்

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நன்றி மகாதேவன்..

Post a Comment