ADS 468x60

10 June 2011

கண்ணகிக்கோர் கவியாரம்....

















மின்னல் ஒளிபரப்ப சென்நெல் கதிர் இசைக்க
சோவெனத் தருக்கள் பூத்து சொரிந்து மணம் வீசிநிற்க்க
ஆவெல்லாம் பால் சொரிந்து அழும் பிள்ளை பசிதீர்க்க
தென்னகத்தே கண்ணகித்தாய் வண்ணமதாய் பிறக்கின்றாள்.

மதுரை மானகரம் மங்களமாய் அருள் பரப்ப
எதிரே நின்றபகை எல்லாம் ஒளிந்துவிட
உதிரும் புன்னகை உதட்டினில் ஜொலிக்க
உதித்தாள் பூம்புகார் மண்ணில் உத்தமி

தெய்வக் குழந்தையாய் உதித்த தேவி மானாக்கன்
கையில் மகளாய் மலர்ந்து நின்றாள்
வையகத்தே ஆயிரங்கண்ணாள் அம்பிகை வடிவில்
உய்யவைக்க வந்துதித்தாள் ஊரெல்லாம் நமக்காக

பத்தியால் கொண்ட சித்தியால் பெற்ற வெற்றியால்
உள்ளத்தால் உயர்ந்த எண்ணத்தால் அழகு வண்ணத்தாள்
மெல்லத்தான் மலர்ந்தாள் அழகால் வளர்ந்தாள்
புன்னகைத்தாள் தெய்வத்தைப் பின்னவைத்தாள்
கண்ணகித்தாய் என்று எண்ணவைத்தாள் நம்மையெல்லாம்.

மெல்லத்தான் அழகை சொல்லத்தான் இடையிலில் மாசாத்தான்
மகனாய் வளர்தான் பக்தியில் உயர்ந்தான் சித்திகள் பெற்றான்
இதை சொல்லத்தான் மனதில் எண்ணித்தான் விரைந்தான் மதுரையை அடைந்தான் கோவலன் தந்தை மாசாத்தான்.

இட்டபடி இறைவன் கட்டளைக்கு ஏற்ப்ப கட்டளகி கண்ணகியாள் கட்டளகன் கோவலனை திட்டமிட்டபடி மதரையில் திருமணம் முடித்தனர்.
சட்டங்கள் தவறாமல் தவமயில் கண்ணகியும்
துதித்தாள் கணவனை மதித்தாள் கொண்ட சிறப்பால்
கோவலனும் எதைத்தான் கொடுக்க மறுத்தான் வாழ்வில் சிறந்தான்.....இந்நாளில்....

நெஞ்சில் பட்டதோ ஊழ்வினை தொட்டதோ வாழ்வினை சுட்டதோ
கோவலனை விட்டதோ இல்லை
மஞ்சம் கொண்டதோ மார்க்கம் மாறியதோ மாதேவி ஆசை தேறியதோ மயிலாள் கண்ணகி மதித்த கணவனுக்கு.

இசையில் இழகியதால் இன்பத்தில் பழகியதால்
பிசகாமல் அழகியவள் பின்தொடர்ந்து சென்றதால்
ஆசையில் ஆபரணங்கள் அத்தனையும் விற்றதால்
வசைமொழி கேட்டதால் வாடி நின்றான் கோவலன்.

ஆங்கே மன்னவன் பாண்டியனின் மனைவியின் சிலம்பமும் தொலைந்து போனதுதான் என்னே என்ன ஆச்சரியம்.....
மன்னவன் பாண்டியன் பிடித்தான் கோவலனை அடித்தான் மன்னவனின் வசைகேட்டுத் துடித்தான் தன்நெஞ்சில் தானே கையால் இடித்தான் எண்ணமெல்லாம் துண்டு துண்டாய் ஒடித்தான் கோவலனும்.

பாண்டிமா மன்னவனின் பாவத்தில் கொன்ற செய்தி கேட்ட காலத்தின் காவல் நாயகி, ஞாலத்தின் கற்ப்புக்கரசி, உன்மையை மட்டும் உரைக்கும் உத்தமி, நன்மையை நலமாய் நல்கிடம் மாது என் செய்தாள் தெரியுமா?

மதுரை மன்னனின் மாளிகை நோக்கி
மற்றோர் சிலம்பை கையில் தூக்கி
சென்றாள் சினத்தை உடலெங்கும் பரவி
போய்முன் நின்றாள் கணவனை
கொன்றவர் யார் என்று வினவி
வழக்கைத் தொடர்ந்தாள்
வாழ்கைக் கேட்டு தன்
பிழைப்பைக் கெடத்த பெருமன்னன் முன்னே.

மன்னவன் பாண்டியன் மறுத்துரைக்க,
கையில் இருந்த சிலம்பமும் மன்னவனால்
களவாடியதென்ற சிலம்பமும்
ஒன்றென மன்னன் பொய்யில் -என்னை
பழித்துரைத்ததை தையல் கண்ணகியாள,;
அங்கம் சிவசிவக்க பொங்கிவரும் கோபம்
தகதகென்று நெருப்பாய் எரிய
எங்கும் இருக்கும் இறைவன் இருப்பதென்றால்
மன்னன் வாயின் வார்தை பொய் என்றால்
நின்றால் இறைவன் முன்றால்
உன்மை கொன்றால் மதுரை மா நகரே
பத்தி எரிக என்றாள் சிலம்பை வீசி.

மழைக்கு வர்ணன், காற்றுக்க வாயு துன்பத்தில்
திளைக்கும் உலகை காப்பது விஸ்னு
கற்புக்கு அரசி கண்ணகி தானே.....
உலகமே உணரும் வண்ணம் உன்மையை உரைத்த தாயி
ஊரெல்லாம் குடியிருந்து உலகாழ்வது அழகு.
ஊருக்கு உண்மை அழகு
உன்மைக்கு பெண்மை அழகு- அந்தப்
பெண்மைக்கு கண்ணகிதான் அழகு.

வங்கக் கடல் மாலையிட சங்கத்தமிழ்
எதிரொலிக்கும் மங்களத் திருநாடாம் இலங்காபுரியில்,
நீர்த்தாய் குளிர்பரப்ப நிலத்தாய் வளங்கொலிக்கும்
பார்த்தால் பசிதீர்க்கும் பசிஞ்சோலைப் பட்டினமாம் -
மீனினம் பாட்டிசைக்க மானினம் துள்ளியோடும்
வானகம் கறுக்கக் கண்டு மயில்கள் கோலாகலிக்கும,;
பசித்தோரின் முகம் பார்த்து பசிதீர்க்கும் பொன்னாடாம்
மட்டக்களப்பதனில்,

தாமரை மலர்கள் எல்லாம் வாவெனக் கையசைக்கும்,
மாமதுரை பூத்து நின்று வாசம் பரப்பிநிற்கும்
செட்டியார் குலமக்கள் செறிந்திலங்கும் செடடியூரில்
வந்தமர்ந்த மாதுக்கு கையில் தீச்சுடரும், மடியில் மடிப்பிச்சையும்,
தோழில் காவடியும், சொண்டில் அலகும் குத்தி, வசந்தன் வைத்து
கும்மி கரகம் ஆடி, பசிந்தாள் இலையில் பசிஆற்றி குளிர்தில் வைத்து கொண்டாடும் வைகாசி இது வரும் போது ஊரெல்லாம் கைராசி...

0 comments:

Post a Comment