ADS 468x60

13 June 2011

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை...

'அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை, அவள் அடி தொழ மறுப்பவர் மனிதர் இல்லை'  அன்னை வர்ப்பினில்தான் ஒரு பிள்ளையின் இலட்சியம், ஆழுமை, மனப்பாங்கு விருத்தி, தலைமைத்துவம் என்று எல்லாம் அடங்கி இருக்கின்றது என்பதை பறை சாற்றும் வகையில் ஒரு உன்னத பணியை கிழக்குப்பல்கலைக்கழக சிரேஸ்ட்ட விரிவுரையாளரும் மற்றும் சமுகத்தொண்டனுமான திரு ஞா.தில்லைநாதன் அவர்களின் தலைமையில், 11 யூன் 2011 அன்று கிழக்குப்பல்கலைக்கழக பிரதான மண்டபத்தினில் அன்னையர் கௌரவிப்பு நிகழ்வு, கலைப்பீட சிறப்பு கற்கை மாணவர்களின் உறுதுணையுடன் நடத்தப்பட்டது. அதிதிகளாக கலைப்பீடாதிபதி பேராசிரியர் மா.செல்வராசா, சிரேஸ்ட்ட விரிவுரையாளர் ஜெய்சங்கர் மற்றும் பிரதிப்பதிவாளர் மும்தாஜ் ஆகியோருடன் மாணவர்களின் தாய்மார், மாணவர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்...... 

இதில் மானவர்களின் அன்னையர்கள் அவர்களின் முன்னே, இப்பிள்ளைகளை பெற்றெடுத்த பெருமைக்காக நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது எல்லோரயும் மனம் நெகிழ வைக்கும் ஒரு பெறுமதி மிக்க நிகழ்வாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. வாழும்போதே போற்றுதல் இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அங்கு அவர்களின் பிள்ளைகளின் செயற்பாடுகள், கல்வி நிலை, அவர்கள் மீது அன்னையர்கள் எடுக்கவேண்டிய கருசனைகள் என்பனவும் சிலாகிக்கப்பட்டதுடன்.  மாணவர்கள் விரிவுரையாளர்களின் கவிதை, பேச்சு, இன்னோரன்ன நிகழ்வுகளும் சேர்த்து அவையை களைகட்ட வைத்தமை சிறப்பு. இதில் பாராட்டுகளும் வாழ்துகளும் அதன் ஒருங்கிணைப்பாளர் தில்லைநாதனுக்கே சேரவேண்டும்.

புத்தக வெளியீடு
அன்னயர் தின சிறப்பு மலர் வெளியீடு ஒன்று இடம்பெற்றது. இதில் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களின் சிறப்பான ஆக்கங்களை உள்ளடக்கமாக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.. இதன் ஆசிரியராக செல்வி நிஸாந்தினி, 3ம் வருட சமுகவியல் சிறப்பு கற்கை மாணவி இருந்து நெறிப்படுத்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது இம்மலரின் முதல் பிரதியினை சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட பேராசிரியரும், கலைப் பீடாதிபதியுமான மா.செல்வராசா அவர்கள் பெற்றுக்கொள்ள அடுத்த பதிவு பிரதிப்பதிவாளர் மும்தாஜ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

ஓளிந்து கிடக்கும் திறமைகளை தோண்டி எடுத்து, மாணவர்களின் இயலுமைகளை அவர்களது தாய்மாரின் முன்னே அறியப்படுத்தி. வாழ்க்கையின் ஒளி பொருந்திய பாதைக்கான வழிகளாக விரியச் செய்யும் ஒரு ஜனரஞ்சக சமுகமயமாக்கல் செயற்பாட்டியின் முதற்க்கட்டமாக இதனை செய்துள்ளதாக விரிவுரையாளர் ஞா.தில்லைநாதன் குறிப்பிட்டிருந்தார்.
நினைவகளின் நிழல்கள்...



0 comments:

Post a Comment