ADS 468x60

19 June 2011

கண்ணகி இலக்கிய விழா.

"மழைக்கு வர்ணன், காற்றுக்க வாயு துன்பத்தில்
திளைக்கும் உலகை காப்பது விஸ்னு

கற்புக்கு அரசி கண்ணகி தானே.....
உலகமே உணரும் வண்ணம் உன்மையை உரைத்த தாயி
ஊரெல்லாம் குடியிருந்து உலகாழ்வது அழகு.
ஊருக்கு உண்மை அழகு
உன்மைக்கு பெண்மை அழகு- அந்தப்
பெண்மைக்கு கண்ணகிதான் அழகு"

கண்ணகி தனிப்பெரும் இலக்கிய, ஒழுக்க, தமிழ் பண்பாடுகளின் ஒட்டுமொத்த வடிவமாகத் திகழும் ஒரு படைப்பாகும். இதனால்தான் இன்றும் குறிப்பாக தமிழர்கள் வாழ் இலங்கையின் எல்லாப்பாகங்களிலும் அவளுக்கு விழா எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இருந்தும் பொதுவாக விழாக்கள், நிகழ்வுகள் அவற்றைப்பாதுகாப்பதற்க்கான முனைப்புகள் இதுவரை எடுக்கப்படவில்லை காரணம் மூன்று தசாப்தகால யுத்தம், அனர்த்தங்கள், அரசியல் பலவீனம் என்பன போன்ற இன்னோரன்ன காரணங்களை சொல்லலாம். இவற்றை உணர்ந்த மட்டக்களப்பு வாழ் அறிஞ்ஞர்கள், கலைஞர்கள் சமுகம் பெருவளவிலான முனைப்பில் இதனை இப்பொழுது அழகாக திட்டமிட்டு நடத்துகின்றனர்.


இந்நிகழ்வு 18.06.2011 சனிக்கிழமை தொங்கி 19.06.2011 அன்றுடன் முடிவடைய இருக்கின்றது. இதற்கு கண்ணகி இலக்கிய விழா என பெயரிட்டு நடாத்துகின்றமை சாலப் பொருத்தமானதே.

இந்நிகழ்வின் நோக்கங்கள்,
கண்ணகி தொடர்பான இலக்கியங்களை அறிமுகம் செய்து பரவலாக்குதல்.

பண்டய காலம் தொடக்கம் இன்றுவரை பயின்றுவரும் கண்ணகி இலக்கியங்களை வெளிக்கொணர்தல்.

கிழக்கு இலங்கையின் பண்பாட்டு அடையாளமாக இலங்கும் கண்ணகி இலக்கியங்களை வெளிக்கொணர்தல்.

தென் இந்தியாவிலும் இலங்கையிலும் குறிப்பாக கிழக்கு இலங்கையிலும் நிலவும் கண்ணகி நம்பிக்கைகளுக்கிடையே பொதுமைகளை ஆராய்தல். என்பன இந்த விழாவின் இலக்காகக் கொண்டுள்ளது.

இங்கு பிரதான நிகழ்வுகளாக,

'கண்ணகி இலக்கிய விழாப் பட்டயம'; பிரகடணம்

'செங்கதிர்' கண்ணகி விழாச் சிறப்பிதழ் வெளியீடு

நூல் அங்காடி திறப்பு விழா

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் ஒலிப்பேழை வெளியீடு.

ஆகியன பிரதான நிகழ்வுகளாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இவைதவிர உரையரங்கு, ஆய்வரங்கு, கலையரங்கு என்பனவும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கண்ணகி விழாத் தொடுர்பான அழைப்பானைகளின் பிரதிகள்...


4 comments:

ம.தி.சுதா said...

இந்தப் பதிவின் மீதான தங்கள் புரிந்துணர்விற்கும் வாசித்து விளங்கிக் கொண்ட மொழியறிவிற்கும் ஆயிரம் நன்றிகள் சகோதரம்...

http://mathisutha.blogspot.com/2011/06/vettri-fm-in.html

S.T.Seelan (S.Thanigaseelan) said...

இல்லை சகோதரனே எனக்கு விளங்கியது ஆனால் உங்களுக்கு என்னை பிரத்தியோமாகத் தெரிந்தும் விடுபட வைத்து விட்டீர்களோ என்ற ஒரு ஆதங்கம்.... அது பறவாயில்லை.....

ம.தி.சுதா said...

இல்லை சகோதரம் அது நான் திரட்டிய தகவலே தவிர கணக்கெடுப்பில்லை.... அதை செய்தது புளொக்கர் தான்.. நான் யாரையாவது தனிப்பட அறிமுகப்படுத்தியிருக்கிறேனா ? அப்படிச் செய்து தங்களைத் தவற விட்டிருந்தால் என் முழுத் தப்பையும் ஏற்க தயாராக இருக்கிறேன்..

S.T.Seelan (S.Thanigaseelan) said...

புரிந்து கொண்டேன்.. நமக்குள் எதற்கு குழப்பம்.. சகோதரா தோணியது சொன்னேன்... நீங்கள் அதற்கு தக்க பதில் தந்தீர்கள் குழப்பம் தீர்ந்தது.. இப்போது சந்தோசம்..be friend...

Post a Comment