ADS 468x60

22 June 2011

இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை.

நான் பார்த்த வரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும,; மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகின்ற கேள்வி, 'ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஸ்ட்டங்களைக் கொடுக்கணும்?' இந்த கேள்வி கேட்க்கப்படும் போதெல்லாம் நான் படித்த கதை ஒன்று ஞாபகம் வருகிறது.

அது ஒரு கிராமம், சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான், அப்போது 'என்னைக் காப்பாற்று காப்பாற்று' என்று ஒரு அலரல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கியிருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்து பரிதாபமாகக் கத்துகிறது. 'உன்னை வலையில் இருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி வீடுவாய்' நான் மாட்டேன் எனறு முதலையை காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன்.

ஆனால் முதலை 'நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன், என்னை நம்பு, என்னைக் காப்பாற்று' என்று கண்ணீர் விடுகின்றது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்.வலையில் இருந்த முதலையின் தலை வெளிப்பட ஆரம்பித்த உடனேயே அது சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது.

'பாவி முதலையே இது நியாயமா?' என சிறுவன் கண்ணீருடன் கேட்க்க, முதலை சொன்னது 'இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை' என்று சொல்லி விட்டு சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்கு சாவை பற்றிக்கூட கவலையில்லை ஆனால் முதலை சொன்ன சித்தாந்தத்தினை கேட்க்க கவலையாய் இருந்தது. முதலையின் வாய்க்குள் மௌ;ளப் போய்க் கொண்டிருக்கும் சிறுவன் கரையில் இருந்த மரத்தின் மேல் உள்ள பறவைகளைப் பார்த்து கேட்டான் 'முதலை சொல்வது மாதிரி இதுதான் உலகமா இதுதான் வாழ்க்கையா?' அதற்க்கு பறவைகள் சொன்னது ' எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம், ஆனால் பாம்பு வந்து அவற்றை குடித்து சென்று விடுகின்றதே' அதனால் சொல்கிறோம் முதலை சொல்வதுதான் சரி.

நம்ப முடியாமல் ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான், அதற்க்கு கழுதை சொன்னது, ' நான் இழமையாக இருந்த காலத்தில் என் எஜமான் என்மீது அழுக்கு துணிகளை சுமக்க வைத்து என்னை சாறாய்ப் பிழிந்தெடுத்தான், ஆனால் என் தலை நரைத்து வயது வந்ததும் உன்னை சும்மா வைத்து சாப்பாடுபோட முடியாது என்று என்னை துரத்தி விட்டான்' ஆகவே முதலை சொல்லுவதுதான் சரி 'இதுதான் உலகம் இது தான் வாழ்க்கை என்றது' கழுதை.
சிறுவனால் அப்போதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை கடைசியாக அவ்வளியால் வந்த முயலைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்கிறான். அதற்கு முயல் 'இல்லை முதலை சொல்வதனை நான் நம்பவில்லை முதலை பிதற்றுகிறது' என்றது. முதலைக்கு கோபம் வந்த விட்டது. சிறுவனின் காலை வாயால் கௌவிக் கொண்டே வாதாடத் தொடங்குகின்றது. 

முயல் சொன்னது "ம்கும் சிறுவனை வாயால் கௌவிக்கொண்டு பேசிவதனால், நீ சொல்வது எனக்கு சரியாகப் புரியவில்லை" என்றது முயல். பெரிதாகச் சிரித்த முதலை "'சிறுவனை விட்டால் ஓடி விடுவான் அல்லவா'" என்றது முதலை. அதற்கு முயல் 'புத்தியில்லாத முதலையே உன் வாலின் பலத்தினை கூடவா மறந்து விட்டாய், சிறுவன் ஓட முயற்சித்தால் வாலினால் ஒரே அடியில் அடித்து பிடித்து விடுவாயே' என்றது. 

இதனை நம்பி சிறுவனை விடுவித்து பேசத் தொடங்கியது முதலை, அப்போது முயல் சிறுவனைப் பார்த்து 'நில்லாதே ஓடு ஓடு' என்றது. சிறுவன் ஓட ஆரம்பிக்க அப்போது வாலை அசைக்க முற்பட்டது அது வலையில் சிக்கி இருப்பது அப்போதுதான் அதன் நினைவுக்கு வந்தது, அதற்குள் சிறுவன் தப்பித்தான். அப்போது கோபத்துடன் தன்னை பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது 'இதுதான் உலகம் இது தான் வாழ்க்கை' என்று. 

சிறிது நேரத்தில் கிராமத்தில் இருந்த ஆட்களையெல்லாம் சிறுவன் அழைத்து வர அவர்கள் முதலையை கொன்று விடுகின்றார்கள். அப்போது சிறுவனோடு வந்த நாய், சிறுவன் பதறி அடித்து விரட்டுவதற்குன் அந்த புத்திசாலி முயலை அங்கே ஓடிப் பிடித்து தின்று விடுகின்றது. சிறுவன் பெரு மூச்சி விடுகிறான்... 'இது தான் உலகம் இது தான் வாழ்க்கை' என்று சமாதானமாய் ஆகிறான்.

0 comments:

Post a Comment