ADS 468x60

19 July 2011

றோல் மடல்....

Myspace Puppies Graphics Dogs Clipart
றோல் மடல் என்பது ஒரு விதமான மனவியல் அணுகுமுறை என்று கூறலாம். வாழ்க்கையில் சில பாத்திரங்கள் எங்களை வெகுவாகக் கவர்ந்து கொள்ளும், சில வெறுப்பை ஊட்டும். இன்று சினிமா, விளையாட்டு, மொடலிங், தொடர் நாடகங்கள் இவை எல்லாம் இளம் தலைமுறையினரை பலப்படுத்தியுள்ளதா, பலவீனப்படுத்தி உள்ளதா? ஏன்றால் பலவீனப் படுத்தியுள்ளது என்றே விடை வரும்.

குறிப்பாக இளம் பெண்களிடையே தங்களுடைய வாழ்கை துணைவர் எப்படி இருக்க வேணும் என்ற கேள்விக்கு வந்த பதில்களில் அயன் சூரியா, சியான் விக்ரம், கில்லி விஜய் போன்று கொஞ்சம் பசன், கொஞ்சம் வில்லத்தனம், முழு அக்டிவான ஆளா இருக்கும் ஆண்களைத்தான் பிடிக்குமாம்..
நான் நிறய படிச்சிருக்கன், அழகாயும் இருக்கன் இருந்தும் கறுப்பாக, ஜம்மெண்டு இருக்கும் ஆண்கள் தானாம் பெண்களுக்கு பிடிக்கிறது என்று அலுத்துக் கொள்பவர்கள் ஆயிரம் ஆயிரம். அவர்கள் சாதாரண றவைர் வேலை செய்தாலும், சாக்கடையில் நின்றாலும் பறவாயில்லையாம் அடிபுடி, காதில கம்மல், பள்சர் வைக் எண்டு சினிமா நடிகர்களின் சாயலை பின்பற்றும் றோல் மடல்கள் என்றால் பெண்களுக்கு அதிகம் அதிகம் பிடிப்பதாக பொதுவான அபிப்பிராயம் இருக்கிறது.


இவ்வாறான சுபாபத்திலான பெண்கள் வாழ்கையை சினிமாக்கள் மாதிரியே பாதி நாட்களில் வீணாக்கி விடுவதணை காணக்கூடியதாக உள்ளது. செக்சியான ஆபாசப் படங்கள் முறைகேடான பழக்க வழக்கங்கள் என்பனவற்றை பின்பற்றுகின்ற வழிகள் இன்று அதிகம் அதிகம், இன்றய தொழில் நுட்ப்ப உலகத்தில் என்னதான் தடை போட்டாலும் இவற்றை கட்டுப்படுத்தாத அளவுக்கு இவை ஊடுருவி பிஞ்சிலே பழுக்க வைத்து வஞ்சகம் செய்கிறது இன்றய இளைய தலைமுறைக்கு.

ஒரு நண்பர் கூறினார், தான் அந்த காலத்தில் காதலிக்கும்போது பட்ட பாடுகளை, கடிதம் மூலம் தொடர்பு கொண்டு அவளை சந்திக்கப்படும் பாடு சொல்ல முடியாதாம். அப்படியான ஆபத்துக்குள்ளும் அவளை சந்தித்து கண்களால் மட்டும் பேசி வருடக்கணக்கில் பழுத்து வரும்போதுதான் அந்த காதல் கல்யாணத்தில் முடிவடையுமாம், ஆனால் இன்று அப்படியா இருக்கிறது போன், பேஸ்புக், ஈமெயில், இன்ரநெற் போன்ற இன்னோரன்ன புதிய சாதனங்கள் வீட்டுக்கு வீடு வாசல்படி. இவற்றின் மூலம் இலகுவாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு விடலாம். ஆதனால் குறுகிய காலத்தில் யார் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொள்ள அவகாசம் இல்லாமல், காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும் சம்பவங்கள் தான் ஏராளம்.

எனவே கற்றுக்கொண்ட பாடங்கள், அனுபவங்கள் என்னதான் சொன்னாலும் அவற்றை உள்வாங்கி திருந்தும் அளவுக்கு துரித வேகத்தில் வளரும் உலகத்தினுள் வாழும் இளசுகளுக்கு சிந்திக்க நேரமும் இல்லை புத்தியும் இல்லை. எனவே பெற்றோர்கள் அவதானமாக இருப்பது சாலச்சிறந்தது. தற்போது கிராமங்களில் இவ்வாறான பாலியல் துஸ்ப்பிரயோகம், ஏமாற்றம் சம்மந்தமான செய்திகள் அதிகரித்துவிட்டது. நாள்தோறும் இவை துரிதமாக பெருகி விட்ட நிலையில் அது ஒட்டு மொத்த இனத்தின் அவமானச் சின்னமாக அமைந்து விடுகின்றது. எனவே புத்திஜீவிகள் ஒன்று கூடி இவற்றை இல்லாமல் செய்யும் தந்திரோபாயங்களை கையாளுவதே சாலப் பொருந்தம்.

0 comments:

Post a Comment