ADS 468x60

25 August 2011

நுண் நிதி நிறுவனத்தின் குறிக்கோள்கள் எவ்வவாறு நலிவுற்றோரை பலப்படுத்துகிறது.

இலக்குச் சந்தையை தெரிவு செய்வது, நுண் நிதிச் சேவையை வழங்குனர் மற்றும் நிதிச் சேவைகளுக்கான அறியப்பட்ட கேள்வி ஆகியவற்றில் தங்கியுள்ளது. எந்தவொரு நாட்டிலும், சேவை வழங்கப்படாத அல்லது குறைவாக சேவை வழங்கப்படுகின்ற தொழில்களும் குடும்பங்களும் உள்ளன. இவர்கள் பொருளாதார ரீதியில் செயலூக்கமற்ற மிக வறியவர்களிலிருந்து தமது சமூகத்தினருக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்ற வளர்ந்திருக்கின்ற சிறிய தொழில் முயற்சிகள் வரை பரந்து காணப்படுகின்றன. 


இவ் வகையினரே நுண்நிதிச் சேவைகளுக்கான கேள்விப் பக்கத்தினை உருவாக்குகின்றார்கள்.பொதுவாக நிரமபல் பக்கமானது தொடர்புடைய சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதில்லை.
இடை வெளிகளை நிரப்பி, சேவை வழங்கப்படாத குழுக்களை சந்தையினுள் ஒருங்கிணைக்கின்ற சேவைகளை நுண் நிதி நிறுவனங்கள் வழங்க வேண்டியுள்ளது.

அபிவிருத்தி நிறுவனங்கள் என்ற வகையில் நுண்நிதி நிறுவனங்களின் இலக்கானது, அபிவிருத்திக் குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் சேவையாற்றப்படுகின்ற அல்லது சேவையாற்றப்படாத நிதித் தேவைகளுக்கு சேவை செய்வதாகும். இவ் அபிவிருத்திக் குறிக்கோள்கள் பொதுவாக பின்வருவனவற்றுள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் கொண்டிருக்கின்றன.
  • வறுமையைக் குறைத்தல்
  • பெண்களுக்கு அல்லது குடித்தொகையில் ஏனைய அனுகூலமற்ற பிரிவினருக்கு வலுவூட்டல்
  • தொழில் வாய்ப்பை உருவாக்குதல்
  • தற்போது இயங்குகின்ற தொழில்கள் வளர்வதற்கு அல்லது அவற்றின்
  • நடவடிக்கைகளை பன்முகப்படுத்துவதற்கு உதவுதல்
  • புதிய தொழில்களின் அபிவிருத்தியை ஊக்குவித்தல் 
சிறிய மற்றும் நுண் தொழில் முயற்சித்திட்டங்களுக்கு கடன் வழங்குதல் பற்றிய ஓர் உலக வங்கி ஆய்வில், மூன்று குறிக்கோள்கள் மிகவும் அடிக்கடி
குறிப்பிடப்படுகின்றன.
  • நுண் தொழில் முயற்சிகளை உருவாக்கி விரிவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் வருமான வாய்ப்புக்களை உருவாக்குதல்.
  • விசேடமாக பெண்கள் மற்றும் வறிய மக்கள் போன்ற நலிவடைந்த குழுக்களின் உற்பத்தித் திறன் மற்றும் வருமானங்களை அதிகரித்தல்.
  • வரட்சியால் பாதிக்கப்படக் கூடிய பயிர்களில் கிராமியக் குடும்பங்கள் தங்கியிருத்தலை அவர்களது வருமான உருவாக்க செயற்பாடுகளை பல்வகைப்படுத்துவதனூடாக குறைத்தல்.
பெரும் எண்ணிக்கையில் நிபந்தனை மாறிகள் ஒவ்வொரு நாட்டின் சந்தர்ப்பத்திலும் தரப்படுமிடத்து, ஓர் இலக்குச் சந்தையுள் பிரவேசித்து சேவையாற்றுவதற்கான ஒவ்வொரு நிறுவனத் தீர்மானமும் அச்சந்தையிலுள்ள நிலைமைகளைச் சமப்படுத்துவதுடன், நுண்நிதியின் இரு நீண்ட கால இலக்குகளை கவனத்திற் கொள்ள வேண்டும். யாவரையும் அடையக் கூடியதாக இருத்தல்  நிதி நிறுவனங்களால் தொடர்ந்து குறைவாக சேவையாற்றப்படுகின்ற மக்களுக்கு சேவைகளை வழங்குதல். (பெண்கள், வறிய மக்கள் சுதேச, கிராமிய மக்கள்) மற்றும் நிதிச் சேவைகளை வழங்குவதற்கான செலவுகளை ஈடு செய்வதற்கு போதுமான வருமானத்தை பெறக்கூடிய வகையிலான பேண்தகுதன்மை எந்த இலக்குச் சந்தை தெரிவு செய்யப்படுகின்றதென்பதைப் பொ
றுத்து, நுண் நிதி நிறுவனங்களிpன் நிதிநிலையிலான விளைவுகள் காணப்படுகின்றன. ஏனெனில் செலவுகள் பாதிப்படையும். சுருக்கமாகக் கூறுவதானால் குறிக்கோள்கள் பற்றியும்  அவற்றை எவ்வாறு அடைவது என்பது பற்றியும் மேற் கொள்ளப்படும்.

தீர்மானங்களில் விட்டுக் கொடுப்புக்கள் சம்பந்தப்பட்டுள்ளன. நிதிச் சேவைகளுக்கான கேள்வி எங்கு நிறைவேற்றப்படாதுள்ள தென்பதையும் எந்த இலக்குப் பிரிவு அவற்றினது நோக்கங்களுக்கு பொருத்தமாக உள்ளன என்பதையும் நுண் நிதி நிறுவனங்கள் தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக நிதி மற்றும் ஏனைய சேவைகளுடன் வறிய மக்களைச் சென்றடைவது ஒரு நுண்
நிதி நிறுவனத்தின் குறிக்கோளாக இருப்பின் நிதிச்சேவைகளுடன் மட்டும் பொருளாதார ரீதியில் செயலூக்கமுள்ள வறிய மக்களுக்கு மட்டும் சேவையாற்ற விரும்பும் நுண் நிதி நிறுவனங்களிலிருந்து அதன் இலக்குச் சந்தை வேறுபடும். இதற்கு கூடுதலாக அவற்றின் குறிக்கோள்களை அடையும்
ஒரு வழியாக, சில நுண் நிதி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட பொருளாதாரத் துறையில் அல்லது தொழிலின் மட்டத்தில் கவனம் செலுத்துவதற்கு விரும்பக் கூடும்.

0 comments:

Post a Comment