ADS 468x60

03 September 2011

அதிர வைக்கும் ஆதித்யா குட்டி.

உலகத்தில் மிக விரும்பப்படுவது சிறுவர்கள் அவர்களுடைய ஆக்கங்கள், செயற்ப்பாடுகள் அதுபோல் எல்லாமே. என் வாழ் நாளில் ஏன் எல்லோரது வாழ்விலும் இந்த அளவுக்கு கவர்ந்த திறமையான அழகான செல்லக் குழந்தை ஆதித்யா என்று சொன்னால் அது ஒன்றும் மிகையல்ல. ஆதித்யா குட்டி உங்களுக்கு எனது தெய்வத்தின் ஆசீர்வாதம் என்றும் இருக்க வேண்டுகிறேன். 

சக்தி தயாரிக்கும் நிகழ்சிகள் அனைத்தும் ஏனோ எனக்குப் பிடிப்பதில்லை;   இருந்தும் சக்தியின் யூனியுர் சுப்புர்ஸ்ரார் நிகழ்ச்சியில் என்னை கவர்ந்த தெய்வக் குழந்தை ஆகித்யா தான்.

என்ன அசத்தலான குரல், என்ன அடக்கம், என்ன மரியாதை, ஞானம் இந்த சிறிய வயதில் எத்தனை பெரிய வளத்தை இறைவன் அவளுக்கு கொடுத்து இருக்கிறான் வார்த்தைகளில் சொல்ல முடியாத திறமைசாலி. எனக்கு இருக்கும் சின்னச் சின்ன ஆசைகளில் மிகப் பெரிய ஆசை ஆதித்யாவை சந்தித்து நேரில் ஒரு பாடலை பாடச் சொல்லி கேட்டு ரசிப்பதுதான்

.இன்று அவள் பாடிய பாடல் 'நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா' உன்மையில் சொல்லப்போனால் அவளின் வசீகர குரலுக்கு இந்த அற்ப்ப மனிதனின் அத்தனையும் அடிமையாகி விட்டதென்றே கூறலாம். அவருடைய தாயார் ஒரு சங்கீத ஆசிரியை அப்பா கூட ஒரு விரிவுரையாளர் இருந்தாலும் இந்தக் குழந்தை அனைவருக்கும் எல்லா வகையிலும் ஒரு முன் மாதிரியே. ஆவள் அணியும் தமிழ் கலாசார உடை முக்கியமாக எல்லோரையும் கவர்ந்த ஒன்று. வெட்க்கி தலை குனிய வைக்கும் வகையில் கலாசாரத்தை கொச்சைப்படுத்தும் ஆடைகளை அணிவித்து வரும் குழந்தைகளை பார்க்கச் சகிக்கவில்லை.

இதனால்தான் இந்த சக்தி தழிழ் கலாசாரத்தை இல்லாமல் செய்துவிடுமோ என்று பயமாக கூட இருக்கிறது. ஏன் அவர்கள் இந்தியாவைப்பார்த்துக் கூட திருந்தலாமே, இங்கு தமிழ் பற்றாளர்கள் இல்லயா என்று இலங்கைவாழ் தமிழர்கள், பாவம் ஏக்கப் பெருமூச்சி விடுகின்றனர். இருப்பினும் எத்தனையோ கஸ்ட்டத்தின் மத்தியில் திறமையாளர்களை கண்டு பிடிக்கும் சக்தியை பாராட்டாமல் இருக்கவும் முடியவில்லை. தயவு செய்து கலாசாரத்துக்கு முக்கியம் கொடுங்கள், ஆடை, அணிகலன், ஆபரணங்களை தமிழ் கலாசாரத்தின் அடிப்படையில் அணிய சிறார்களை வழிப்படுத்தவேண்டிய பொறுப்பு சக்தியின் பொறுப்பல்லவா!

ஆதித்யா தனது அதி உயர்திறமையை அவளது பாடல் தெரிவுகளின் மூலம் நிரூபித்து காட்டியிருந்தாள். முதல் ஒரு தடவை 'சிங்கார வேலனே தேவா' என்ற பாடலை சுர வரிசை மாறாமல் பாடி அசத்தியிருந்தாள், உன்மையில் 'இசையால் வசமாகா இதயமெது' என்பதை ஆதித்யா பாடும் போதுதான் நான் மயங்கியதை உணர்ந்தேன். அழகான உச்சரிப்பு, படோடாபம் இல்லாத பாடல் அபிநயம், ஏற்றுக்கொள்ளும் பக்குவம், புதிது புனையும் ஞானம், மெருகேற்றும் சாதுரியம் இன்னும் எல்லாமே வாய்க்கப் பெற்ற குழந்தை, எம் தழிழ் இனத்தின் சொத்து, அதை முழுதாகப் பாதுகாத்து அனைவரும் பெருமைப்பட வேண்டும். இதற்கெல்லாம் மகிடமாக அமைவது அங்கே பிசகாமல் இசைக்கப்படும் இசை, ரத்னம் அவர்களின் தோல்வாத்தியங்கள், மற்றும் புல்லாங்குழல் இசை, கிற்றார் வாத்திய கலைஞர்கள் வாழ்த்துதற்குரியவர்கள்.

"ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்" ஒரு பிள்ளையை பெரிய வலியில் இருந்து பெற்று எடுத்தவுடன் படும் ஆனந்தத்தினை விட, உன்னுடைய மகன் அல்லது மகள் இப்பேர்பட்டவளாமே என்று பலபேர் கூறும்போது கிடைக்கும் ஆனந்தம் அளப் பெரிதாம்... உன்மை, உன்னை, இந்தக் குழந்தையை ஈன்று இவ்வாறு ஆளாக்கி இதனால் வரும் இன்பம் தான் தனி வாழ்துகள் பெற்றோர்களே!

இவற்றுக்கு அப்பால் ஆதித்யாவை ஊக்கப்படுத்த ஊடகங்கள், நலன் விரும்பிகள், உறவுகள் முன்வரவேண்டும். வாழ்க வாழ்க வாழ்க ஆதித்யா மருமகள்.

ஆதித்யா அசத்தல்.


4 comments:

ஈழவன் said...

ஆதித்யாவின் அசத்தல் காலத்துக்கேற்ற அருமையான பதிவு, பாராட்டுக்கள்.

Seelan said...

நன்றி நண்பரே........

Mathi said...

அசத்தலான பதிவு தோழரே....

Seelan said...

யாராய் இருந்தாலும் நம்ம பிள்ளதானே அசத்தல், நன்றி மதி

Post a Comment