ADS 468x60

22 September 2011

முரண்......


நியாயம் அநியாயம் எல்லாம் இப்போ கதைக்கப்படுவது குறைந்துவிட்டது. கலியுகத்தில் நடப்பதெல்லாம் அநியாயம்தான், அல்லாது நன்மை செய்பவன் நாதியற்றுதான் கிடக்கிறான். இருப்பினும் எச்சசொச்சமாக நன்மை செய்பவர்களும் உளர். 

உள்ளம் என்பது ஆமை அதில் 
உன்மை என்பது ஊமை 
சொல்லில் வருவது பாதி 
நெஞ்சில் தூங்கிக்கிடப்பது மீதி.

ஆதலால் உள்ளம் ஆமைபோல் எல்லாவற்றயும் உள்ளே இளுத்து அடக்கி வைத்திருக்கிறது கண்டு கொள்வது சிரமம். நெஞ்சில் என்ன இருக்கிறது என்பதனை வாய் வார்த்தைகளை கொண்டு அறிய முடியவில்லை, நாடகமேடையில் நடிக்க வந்தவர்கள்போல் யதார்த்தத்துக்கு மாறாக நடிக்கிறவர்கள் அநேகம் அநேகம்.
அதுக்கும் மேலாக சிலருக்கு சரியென படுவது சிலருக்கு பிளையாய் தெரியும் மாறாக பிளையெனத் தெரிவது சரியாய் தெரியும் இரண்டையும் அறியத் தெரிந்தவன்தான் 'முரண்'பாடற்றவன்.

மன்னிப்பு அது எனக்கும் நிறையவே இருப்பதில்லை சிலவேளைகளில் எனக்கு தவறு செய்கின்றவர்களை நான் தண்டிக்க நினைப்பதுண்டு ஆனால் 'மன்னிக்க தெரிந்தவர்கள் மாணிக்க கோயில்' என்பார்கள். மன்னிப்பு கேட்போர் தண்டிக்கப்படக்கூடாது இது உலகநீதி, சட்டம், பொது மறை மனச்சாட்சிக்கும் தெரிந்தது, இருப்பினும் எம்மில் எத்தனைபேர் மற்றவர்களை மன்னிக்க கற்றுக்கொண்டிருக்கிறோம்! மன்னிப்பு கேட்க பழகியிருக்கிறோம்! என்றால் அது கேள்விக்குறிதான். இதனாலும் பனிப்போல் இருக்கும் சிறிய பிரச்சினைகளும் மலைபோல் முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றது.

வாழ்கையில் சோதனை வேதனைகள் இல்லாமல் நிறையப் பேர் வாழ்கின்றனர், அவர்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா? இல்லை அர்ச்சந்திரன் எத்தனை சோதனைகளைப்பட்டான், காந்தி அன்னை தெரேசா இவர்கலெல்லோரும் உன்மையைக் காப்பாற்ற எத்தனை எத்தனை துன்பங்களை சுமந்தனர். ஆனால் இந்த உலகத்தில் பொய், களவு, காக்காய் பிடித்தல், காலில் விழுதல், சுரண்டல், லஞ்சம், அடுத்தவனை புறங்கூறல், அபகரித்தல், பொய்சாட்சி, போட்டுக் கொடுத்தல், ஏமாற்றுதல், நம்பிக்கைத் துரோகம் இன்னும் என்னவெல்லாம் எழிய பழக்கங்கள் உளதோ அதை எல்லாம் செய்பவன் தான் வாழ்கிறான், நல்லா இருக்கிறான். இதனால் நல்லவர்கள் சமுகத்தின் தீய சக்திகளோடு முரண்படுகிறார்கள்.

சிலர் எவ்வாறுதான் நண்பர்களாக, பழகியவர்களாக, அறிமுகமானவர்களாக இருந்தாலும் சில இடங்களில் நம்மை புரிந்து கொள்ளாமல் அந்த முதிர்ந்த நட்பை அறுவடை செய்யாமலே விலகிக் கொள்கிறார்கள். முன்பு கூறியதுபோல் சரி பிழையை பகுத்து உணரத் தெரிவதில்லை, சிலர் குட்டிக்கொண்டே இருப்பர் பொருட்படுத்த மாட்டார் குட்டுப்படுபவர் இறுதியில் இவைகள் முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றது. புரிந்துணர்வு ஒரு வகையான ஞானம், பொறுமையின் வடிகட்டிய ஒன்று, சகிப்புத்தன்மை, இதுவும் என்னிடத்தில் இருப்பதில்லை. ஏன் என்றால் புரிந்து கொண்டு இறுதியில் ஏமாற்றப்பட்டு தெரிந்து கொண்டதுதான் மிச்சம்.

வழியில் துணையாய் வருபவரெல்லாம் வாழ்க்கைத் துணையாய் ஆவாரா?
பாசத்தோடு அருகில் இருந்து பணிகள் யாவும் செய்வாரா?

இல்லை அப்போ யார் மடையர் யார் புத்திசாலி? நம்பிக் கெடுபவன் மடையன், நம்பவைத்து களுத்தறுப்பவன் புத்திசாலி. சட்டம் படிப்பவன் எல்லாம் பாவம் செய்யவா படிக்கிறான்? ஏன்னென்றால் பாவிகளுக்கு அங்குதானே விமோசனம் கிடைக்கிறது. இங்குதான் நல்லவர்கள் சட்டத்தினில், சத்தியத்தில் முரண்படுகிறார்கள்.

நல்ல முரண்பாடற்ற புரிந்துணர்வாளர்கள் நண்பர்களாக, காதலியாக, குருவாகக் கிடைக்க பெரும் பேறு செய்திருக்க வேண்டும் அவை முன்பு செய்த வினைப்பயன் மூலம்தான் வந்து சேர்கின்றது. 

2 comments:

Agape Tamil Writer said...

அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்நன்றி

Seelan said...

நன்றி சகோதரா.. அப்படியே பண்ணுகிறேன்

Post a Comment