ADS 468x60

31 October 2011

நீயும் நானும்..பிடித்திருக்கு பிடித்திருக்கு
புரியவில்லை ஏனென்று...
காற்றை அழைந்து
கதைத்த நிமிடங்கள்
வலைத் தளத்தில்
வளைத்த வார்த்தைகள்

பக்கத்தில் வந்து
வெட்கித்த சாயல்கள்
பள்ளிப் பிள்ளைபோல்
பார்த்த பார்வைகள்

கல்யாணத்துக்கு நாள்
குறித்த நினைவுகள்
காது வலித்தும்-செல்லில்
கரைந்த காலங்கள்

எரிமலையாய் எழுந்த கோபம்
இதமாக விழுந்த பார்வை
பிடித்திருக்கு பிடித்திருக்கு
நீயும் நானும்
நிஜத்தில் வாழ....

26 October 2011

தீப திருநாள் வாழ்துகள்விட்டிலுக்கு விழக்கு ஒளி
வீட்டுக்கு தீபம் ஒளி
தொட்டிலுக்கு குழந்தை ஒளி
தொடர்இருளில் கதிர் ஒளி

வாழ்க்கைக்கு கல்வி ஒளி
கல்விக்கு கற்றோர்  ஒளி
வாடுவோர்க்கு அன்பு ஒளி
வானமெங்கும் நிலா ஒளி

கண்ணுக்கு கருணை ஒளி
கயவர்க்கு ஞானம் ஒளி
காற்றுக்கு ஜீவன் ஒளி
காதலுக்கு உன்மை ஒளி

துன்பத்தில் நட்பு ஒளி
துணையான மனைவி ஒளி
இன்பத்தில் செல்வம் ஒளி
இனித்திடும் தீபாவளி ஒளி ஒளியே!

24 October 2011

யார் கிழக்கின் அடுத்த முதல் அமைச்சர்?


நடைபெற இருக்கும் கிழக்கு மாகாண சபை தேர்தல் வரலாற்று முக்கியம்வாய்ந்த போட்டி நிறைந்த ஒன்றாக இருப்பதனால்தான் கிழக்கின் அடுத்த முதல்வர் யார் என்கின்ற பெரிய கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இலங்கையில் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டு, அதிகாரங்கள் பரவலாக்கப்படும் நடை முறை இருந்து வந்தது. இதன் மூலம் அதிகாரங்கள், பொருளாதாரம், மற்றும் வளங்கள் நாட்டின் எல்லா எல்லைகளிலும் சமமாகக் கிடைக்கப் பெற 1978 ஆம் ஆண்டு யாப்பின் 13ம் இலக்கச் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபை முறை சட்டபூர்வமாகக் கொண்டு வரப்பட்டது. இலங்கையில் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படும் மாகாண சபைகளின் பின்னணி என்ன? அவற்றில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள், அவை செயலற்று இருந்தமை, அதன்பின் நடத்தப்பட்ட தேர்தல்கள் மற்றும் இவற்றில் கிழக்கிலங்கையில் தமிழர்களின் நிலைத்து நிற்ப்பதற்க்கான தந்திரோபாய நகர்வுகள் என்பன பற்றி ஆய்வு செய்யப்படுகிறது.

குறிப்பாக இலங்கையில் காணப்பட்ட நீண்ட கொடூரமான சிவில் யுத்தத்தினை முடித்து வைக்க வேண்டிய தேவை அப்போதைய அரசாங்கத்திற்கு இருந்தது. இந்த நேரத்தில் இந்தியாவின் உதவியை நாடவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் இருந்தமையினால் இலங்கை- இந்திய ஒப்பந்தம்   1987 யூலை 29 இல் கைச்சாத்திடப்பட்டது. இதில் குறிப்பாக உடன் பட்ட விடயங்களுள் மாகாண சபையின் அதிகாரங்களைப் பலப்படுத்துவது என உடன் பட்டிருந்தனர். இதே நேரத்தில் 14.11.1987 இல் 1978ம் ஆண்டின் 13ம் இலக்கச் சட்டத்தினை பாராள மன்றத்தினால் ஏற்றுக் கொண்டிருந்தது. அதன் பின்னர் 03.02.1988 ஆண்டு மாகாண சபையின் 1987ம் ஆண்டுக்கான 42ம் இலக்க சட்டத்துக்கு இணங்க ஒன்பது மாகாண சபை பிரகடணப் படுத்தப்பட்டது.

வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் அன்றய தேவைப்பாடு.
1988 இல் தான் வடமத்தி, வடமேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாண சபைக்கான தேர்தலுடன் ஆரம்பமானது. இலங்கை- இந்திய உடன்படிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முக்கியமான விடயங்களுள் ஒன்று, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த வகையில் நிர்வகிப்பது என்பது. இதனையே தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு தனது தாரக மந்திரமாக கொணடடிருந்தது. இந்த ஓப்பந்தத்துக்கு இணைவாக 02.09.1988 இல் இரு மாகாணங்களும் ஒரே நிருவாக அலகின் கீழ் ஒன்றிணைக்கப் பட்டுள்ளதனை அப்போதைய ஜனாதிபதி ஜே;ஆர். ஜயவர்த்தன அவர்களால் அறிவிக்கப் பட்டிருந்தது.

இதன் பின்னர் புதிதாக இணைக்கப்பட்ட வடகிழக்கில் 19.11.1988 மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு வடகிழக்கில் பெரும்பாண்மையாக வாழ்ந்து வருகின்ற தமிழர்களின் பிரதிநிதி ஒருவர் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். அதன் நோக்கம் அப்போது இணைந்த மாகாணங்களுக்குள் தமிழர்களின் ஆதிக்கத்தினை நிலை நிறுத்துதல், சிதைவடைந்த மக்களின் வாழ்க்கையைக் கட்டி எழுப்புதல் என்பனவாக இருந்தது. அப்போது இருந்த நு.P.சு.டு.கு இயக்கத்தின் உறுப்பினர் வரதராஜப்பெருமாள் முதல்வராக அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் த.ஈ.வி, புலிகளின் யுத்தம், இந்திய இராணுவ வெளியேற்றம் என்பனவற்றுடன் இச்சபை 1990 இல் கலைக்கப்பட்டு தற்க்காலிகமாக கொழும்பில் இருந்து நிருவகிக்கப் பட்டு வந்தது.

கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டமையும் மாகாண சபைக்கான தேர்தலும்.
இவ்வாறு செயலிழந்து கிடந்த இந்த வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் செயற்ப்பாடுகள் குறித்து ஒக்டோபர் 16, 2006 சுப்றீங்கோட்  மூலம் வடக்கு மாகாணம் வேறாகவும் கிழக்கு மாகாணம் வேறாகவும் பிரிக்கப்பட்டது. டகிழக்கு இணைக்கப் பட்டது போதிய திருப்தியை தராத காரணத்தினால் இரு நிருவாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டது. இதனை சட்டப்படி செலலிழந்த செல்லுபடியாகாத ஒன்று என வர்ணித்து இருந்தனர்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்துக்கான 2008ம் ஆண்டின் தேர்தல் மே 10, 2008 இல் 18 வருடங்களின் பின்னர் இரண்டாவது தடவையாக முதலாவது கிழக்கு மாகாணத்துக்கான மாகாண சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்க்கான மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் 980000 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் 18 அரசியல் கட்சிகள் மற்றும் 58 சுயேட்சைக் குழுக்களில் இருந்து 1342 போட்டியாளர்கள் முன்னிறுத்தப்பட்டு மாபெரும் போட்டி இடம் பெற்றது. இதில் 20 ஆசனங்களை ஆழும் கட்சி கைப்பற்றி ஆட்சியை தனதாக்கி அதிலும் ஒரு தமிழன் அமோக வாக்குப் பலத்தினால் முதலமைச்சர் ஆனமை வரலாறு சொல்லும் கதை. இதில் ஒன்றை விளங்கிக் கொள்ளும்போது கிழக்கில் கிழக்கு தமிழ் அரசியல்வாதி வருவதற்க்கான சாத்தியம் அறைகூவப்பட்டது பெருமைபடக்கூடிய ஒன்றாக இருந்தது. 
அட்டவணையில்  உள்ள புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்ப்போமானால் சில தமிழர்ளின் இடங்களில் புள்ளி விபரக் கணக்கெடுப்பு நடாத்த படாத விடத்தும் 1881 ஆம் ஆண்டில் இருந்து 2007 ம் ஆண்டு வரையான கணக் கெடுப்பின் படி தமிழர்கள் தான் கிழக்கிலங்கையில் அனேகம் காணப்பட்டிருக்கின்றனர் எனவே, எமக்குள் இருக்கும் பொது விளக்கம் இந்த கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அனேகம் வாழும் பிரதேசத்தினில் ஒரு தமிழன் ஆட்சி செய்வது ஒன்றும் பெரிய வேலை இல்லையே! என்பதுதான்.

இன்றய அரசியலில் ஒன்றுமே இல்லாது இழந்து போன தமிழர்களை காப்பாற்ற அரசியலை பயன்படுத்தும் தந்திரோபாயங்கள் தேவை. வெறுமனே தமிழர்களை காப்பாற்றுகிறோம் அவர்களது உரிமைகளைக் காப்பாற்றுகிறோம் என்று சொல்லி 'இருந்ததையும் இழந்தாய் போற்றி' என்ற கணக்கில் இன்னும் இன்னும் ஏமாறாமல் அரசியல் சூட்சுமத்தின் ஊடாக தமிழர்களுக்கு விமோசனம் கொடுக்கும் வகை செய்தல் இன்றய தேவை.
 கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக வோணஸ் ஆசனங்கள் அடங்கலாக 37 ஆசனங்கள் காணப்படுகின்றது. ஆதனை மேலுள்ள அட்டவணையில் காணலாம். 

இன்று தமிழ் வாக்காளர்களிடையே காணப்படும் அடையாளம் காணப்பட்ட பிரச்சனைகள்.
அனேகமான கட்சிகளின் இறக்குமதி
அரசியலில் எதுவித நேரடி இலாபத்தினையும் சம்பாதிக்காமை
அரசியலில் இருக்கும் குறைந்தபட்ச விருப்பம் மற்றும் அச்சம்.
வாக்களிப்பு பற்றிய சரியான தெழிவின்மை
இதனால் நிராகரிக்கப்படும் வாக்குகள் குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் அதிகளம் காணப்படுகிறது.
பொருளாதார வீழ்ச்சி

சாதாரண மக்கள் உன்மையில் குழப்பத்தில் இருப்பதனைக் காணக்கூடியதாய் இருக்கிறது ஏனெனில் சென்ற மாகாண சபைத்தேர்தலில் 18 அரசியல் கட்சிகள் மற்றும் 58 சுயேட்சைக் குழுக்களில் இருந்து 1342 போட்டியாளர்கள் பாமர மக்களிடம் வாக்கு கேட்டுச் சென்றனர். இதில் குறிப்பாக தமிழ் மக்களுக்கு மாடும் தெரியவில்லை மானும் தெரியவில்லை அதனால் பெறுமதியான வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

யுத்தம், இயற்க்கை அனர்த்தம் என்பன தவிர இந்த மக்களை தங்களது பிளைப்புக்காக ஏமாற்றிய கூட்டம் என்பனவற்றினால் இருக்க பிரச்சினைகளும் கூடியதே தவிர எதுவித சுதந்திரத்தினையோ, தங்களது பிள்ளைகளின் மற்றும் பிரதேசங்களின் அபிவிருத்தியினையோ இல்லாவிட்டால் பூரணமான உரிமையினையோ இந்த மக்கள் கண்டிருக்கவில்லை. வெறுமனே பிச்சைக்காரர்களாக மாறி இலங்கையிலே 20விகிதம் வறுமையில் வாடும் மக்கள் கூட்டத்தை கொண்ட கெதியற்ற சமுகமாக மாறி இருந்தனர் இந்த மட்டு மாநில மக்கள். இந்த காரணங்களால் தழிழ் மக்கள் பெரும்பாலும் வாக்களிப்பதனை புறக்கணித்திருந்தனர்.

எமது முஸ்லிம் சகோதர சமுகத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது, தமிழ் மக்களுக்கு இந்த அரசியலில் அவளவு விருப்பம் இருந்திருக்கவில்லை.   இந்தக் காரணங்களால் வாக்களிப்பு பற்றிய தெழிவு எமது மக்களுக்கு மிக மிக குறைவாகவே இந்த மூன்று தசாப்தகாலத்தில் இருந்து வந்திருக்கிறது. இது மிகமோசமான தாக்கத்தினை எமது தமிழ் சமுகத்துக்கு ஏற்ப்படுத்தி இருக்கிறது. தவிரவும் தாக்குதல்கள், அடாவடி, காரியாலய சிதைப்புகள் மற்றும் வாக்குமோசடிகள் என்பனபோன்ற இன்னோரன்ன காரணங்கள் மக்களிடையே அச்சத்தினை ஏற்ப்படுத்தி இருந்தது.
மேலுள்ள அட்டவணையில் தபால் மூல வாக்குகள் கூட 2055 ஆக அதிக அளவில் தமிழர்கள் செறிந்துவாழும்  மட்டக்களப்பில் நிராகரிக்கும் அளவுக்கு எமது வாக்குப்பலம் அமைந்திருக்கிறது. ஆனால் முஸ்லிம்கள் செறிவாக இருக்கும் அம்பாரையில் அது வெறும் 438 ஆக மட்டும் இருப்பதனைக் காணலாம்.
அதுபோல மேலுள்ள அட்டவணை மூலம் இன்னொரு விடயத்தினை புரிந்துகொள்ளலாம் அதாவது, 10.42 விகிதமான அதிக வாக்குகள் மட்டு மாவட்டத்திலும் வெறும் 7.16 விகிதமான வாக்குகள் அம்பாரை மாவட்டத்திலும் சென்ற தேர்தலில் நிராகரிக்கும் அளவுக்கும், 128507 பேர் வாக்களிக்க செல்லாமல் நிராகரித்தமையையும் வைத்து நோக்கினால் 39விகிதமான வாக்குகள் மட்டக்களப்பில் அளிக்கப்படாமலும் ஒரு தமிழ் பிரதிநிதியை தெரிவுசெய்து முதலமைச்சராக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகண சபையின் ஆதிக்கத்தின் தேவைப்பாடும் பொருளாதார வளர்ச்சியும்
ஓரு நாட்டின் அரசியலையும் செழிப்பினையும் நிர்ணயிப்பது அந்த நாட்டின் பொருளாதாரமாகும். இங்கு 2008 இன் மாகாண சபை தேர்தலுக்கு முன்னும்    பின்னும் நாட்டின் பொருளாதார நிலைமையில் என்ன மாற்றம் இருந்தது என்பதனை சற்று நோக்க வேண்டும். 1980களில் மாகாணத்தின் மொ.உ.உற்ப்பத்தியில் அதன் பங்களிப்பாக 14 விகிதமாக இருந்து இடைப்பட்ட யுத்தகாலத்தில் அது 8 விகிதமாக குறைவடைந்திருந்து மீண்டும் 2008 காலப்பகுதியில் மொ.உ.உற்ப்பத்தியில் 16 வீதமாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

கிழக்கு மாகாண சபை அதிகாரம் கிடைத்தவுடன் கிழக்கின் உதயம் திட்டம் ஜனாதிபதியின் ஆலோசனைக்கிணங்க ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் கீழ் புதிய நவீன வீதிகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், குடிநீர் விநியோகத்திட்டங்கள், நீர்ப்பாசனத்திட்டங்கள், புதிய நகர அபிவிருத்தித் திட்டங்கள் அத்துடன் தொழில் நுட்ப்ப அபிவிரத்தித் திட்டங்கள் போன்ற பாரிய பொருளாதார மலர்ச்சி ஏற்ப்படுத்தப்பட்டது. இத்துடன் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள், புதிய சுற்றுலா வலயங்கள், நகர அபிவிருத்தித் திட்டங்கள் என்பன உருவாக்கப்பட்டமையை மறந்துவிடவோ மறுத்துவிடவோ முடியாது. இவை காரணமாக இம்மாகாணத்தில் 70 விகிதமாக செறிந்து வாழுகின்ற விவசாயிகளில் 2006 களில் 56 விகிதமாக இருந்த விவசாய உற்ப்பத்தி இப்போது 80 விகிதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பொருளாதார மாற்றங்கள் எல்லாம் இதற்க்கு முன் ஒரு போதும் காணாத அளவுக்கு எமது மாகாணத்தில் இடம்பெற்றுள்ளதெனின் அதற்க்கு காரணம் பலம் வாய்ந்த அரசியல் பின்னணி என்றால் யாராலும் மறுக்க முடியாது. அதுவும் இந்த மாகாணத்தினை நன்கு உணர்ந்திருக்கின்றவர்கள் அவர்களது சொந்த சிந்தனையில் அவர்களது மக்களை ஆழும்போது அது பிரயோசனமானதாகவே இருக்கும்.

தழிழர்களின் வாக்குப் பலமும் நம்பிக்கையீனமும்.
ஒப்பீட்டளவில் 40 விகிதமாக கிழக்கு மாகாணத்தில் செறிந்து வாழ்கின்ற தமிழர்கள் வாக்குப் பலம் கொண்டவர்கள். இருப்பினும் சென்ற தேர்தலில் அவர்களில் 39 விகிதமானவர்கள் வாக்களிக்காது இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதுபோன்று அளிக்கப்பட்ட வாக்குகளில் 21088 வாக்கு நிராகரிக்கப்பட்டமை இன்னும் வாக்களிப்பதில் எம்மக்களுக்கு இருக்கும் தெழிவின்மை புரிகிறது. 

தமிழர்கள் ஏமாற்றுப்படும் இனம் என கூறும் அளவுக்கு அவர்களது கடந்த கால அரசியல் இருந்து வந்தது. குறிப்பாக தமிழ் மக்கள் ஓரிருவரது சுயலாபத்துக்காய் விலைபோனதை அவர்கள் இன்று நன்கு உணர்ந்துள்ளனர்.  கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது கால் பங்கிற்கு மேலான தழிழர்கள் வாக்களிக்க வராது ஏனோதானோ என்று புறக்கணித்திருந்தனர். இருந்தும் தழிழர்கள் மூலம் ஒரு முதல் அமைச்சரை வரவைக்கலாம் என்பது எமக்கு கிடைத்த ஒரு பாடமாக இருக்கலாம். 

உன்மையில் தழிழன் ஒருவன் மீண்டும் மீண்டும் முதல் அமைச்சராக வரவேணும் எனின் தழிழை நேசிப்பதோடு அல்லாமல், உன்மையாக மக்களிடையே சென்று பணிபுரியக் கூடிய,  கொடுத்த வாக்குகளை நிறைவேற்றக்கூடிய, விலைபோகாத, இனத்துவ அடயாளங்களை பேணிகப்பாதுகாக்கும்;, தனது சமுகத்தின் கல்வி, கலாசாரம், பண்பாடுகள் மற்றும் நாகரிக வரம்புகளை சரிவடையாமல் பேணக்கூடிய ஒருவர் தேவை.

இவை தவிர மக்களிடையே வாக்களிக்கக் கூடிய ஆர்வத்தினை தூண்டும் விழிப்புணர்வினை ஏற்ப்படுத்த வேண்டும். அத்துடன் மக்களிடையே தேர்தல் மூலம் கிடைக்கும் பலாபலன்களை எடுத்துச் சொல்ல வேண்டும். உன்மையை நன்கு ஆராய்ந்து அறியக்கூடிய அரசியல் பக்குவத்தினையும் அதன் முக்கியத்தினையும், பொது அமைப்புகள், நலன்விரும்பிகள் பக்கச்சார்பு இல்லாத வகையில் எமது மக்களிடையே எடுத்தியம்ப வேண்டும். அதன் பின்னர் இம்மாகாணத்தில் இருக்கின்ற செறிவான தமிழ் வாக்குகள் நம்பிக்கையான ஒருவருக்கு அளிக்கப்பட வேணும். ஆதன் மூலம் மட்டுமே நாம் நமக்கான ஒரு பிரதிநிதியை உருவாக்கிகொள்ளலாம், இந்த உன்மையை படித்த மக்கள் முதல் பாமர மக்கள் வரை விளங்கிக் கொள்வார்களாயின் அடுத்தடுத்து கிழக்கில் ஒரு தமிழ் பிரதிநிதியை முதலமைச்சராக கொண்டுவந்து அத்தனை நன்மைகளையும் பெற்று இம்மக்களின் சுபீட்ச்சத்துக்கு வழிகோலலாம் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. 

எம்மக்களிடையே பாரிய சவாலாகவும் கேள்விக்குறியாகவும் இருக்கும் அடுத்த கிழக்குமாகாண முதலமைச்சர் யார் என்கின்ற கேள்விக்கான பதில் வரலாற்று மாற்றத்தினை ஏற்ப்படுத்த இருக்கின்றது. இந்த வரலாற்று வெற்றியை ஆய்ந்து உணர்ந்து செயலாற்றவதன் ஊடாகவே தமிழர்கள் வாழ்வு வளம்பெறும் என்றால் மிகையாகாது. இதனை இங்கு வாழ்கின்ற மக்கள் மாத்திரமல்ல வெளிநாடுகளில் வாழுகின்ற எம்மகளும் உணர்ந்து செயற்ப்பட தலைப்பட வேண்டிய தார்மீக பொறுப்பு உண்டு அதுதான் தமிழரின் அடுத்த தசாப்தத்துக்காக காப்பீடாக அமையும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. ஆகவே சிந்திப்போம் செயற்ப்படுவோம்.


15 October 2011

நல்லொரு கூத்து

உலகத்தின் செம்மொழி அந்தஸ்த்து பெற ஒரு மொழிக்கு எத்தனையோ தகுதிகள் வேண்டும் அத்தனையும் தன்னகத்தே கொண்டு நாம் வாழும் போதே தழிழனாய் பிறந்தேன், என்ற பெருமை கொள்ள வைக்கும் எங்கள் அழகு தமிழுக்கு அழகு சேர்க்கும் தழிழ் இலக்கிய விழா கிழக்கு மண்ணின் முக வெத்திலையாக இருக்கும் மீன்பாடும் தேன்நாட்டில், கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் ஏற்ப்பாட்டில் நடாத்தப்படுவது பாராட்டபட வேண்டியது' என கிழக்குப்பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி பிறேம்குமார் நிகழ்வுகளின் இடையே நிறுவிக்காட்டினார்.

ஒரு இனம் நீண்டிலங்க அதன் கலை, கலாசாரம், பண்பாடு, மொழி இந்த நான்கு சக்கரங்களும் தேவை. மூன்று தசாப்த கால யுத்தத்தின் கோரப்பிடியில் கை நழுவிய எமது இனத்துவ அடையாளங்கள், இன்று மின்னல் போல் ஆங்காங்கு பளிச்சிட்டு மறைந்தாலும,; அவை மின்னத் தொடங்கி இருக்கிறதை நினைத்து பெருமை தான்.

02 October 2011

வயோதிபத்துக்கு எறும்புகள் கொடுக்கும் கௌரவம்.


'உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே' என்பது என்னவோ மனிதனுக்கு மட்டுமல்ல, எமக்கெல்லாம் உதாரணமாகத் திகழும் கடினமாக முயற்சியுடன் ஓயாது உழைக்கும் எறும்புகள், தேனீக்கள் போன்ற ஜீவன்களுக்கும் சேர்த்துத்தான் என எண்ணத் தோணுகிறது.

முதியோர்கள் இனிக்கும் அடிக்கரும்பு, கடைந்தெடுத்த வெண்ணை, கனிந்து வந்த பழுத்த பழங்கள், காற்றும் மழையும் கடந்த வந்த அனுபவக்கப்பல்கள் அவர்கள் ஞானிகள், வழிகாட்டல்கள் இன்னும் எல்லாம் அவர்களே. ஆதனால்தான் அவர்கள் கனம் பண்ண வேண்டியவர்களாக உலகலாவிய ரீதியில் ஞாபகப் படுத்தப்படுவது பெருமைக்குரியது.

மனிதர்கள் ஒன்றும் புத்திஜீவிகளாக, கலைஞர்களாக, உழைப்பாளியாக பிறப்பவர்கள் அல்லர், மாறாக அவர்கள் அவ்வாறு உருவாகிக் கொள்கிறார்கள். நிறைய விடயஙந்கள் மனிதன் ஏனைய ஜீவாராசிகளிடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறான். இதனைத்தான் கவிஞ்ஞர் கண்ணதாசன் சொன்னார் 'பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீன்களில் படகினைக் கண்டான்' என்று. 

நாம் எறும்புகளிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய ஒரு புதிய விடயம் என்ன தெரியுமா!