ADS 468x60

02 October 2011

வயோதிபத்துக்கு எறும்புகள் கொடுக்கும் கௌரவம்.


'உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே' என்பது என்னவோ மனிதனுக்கு மட்டுமல்ல, எமக்கெல்லாம் உதாரணமாகத் திகழும் கடினமாக முயற்சியுடன் ஓயாது உழைக்கும் எறும்புகள், தேனீக்கள் போன்ற ஜீவன்களுக்கும் சேர்த்துத்தான் என எண்ணத் தோணுகிறது.

முதியோர்கள் இனிக்கும் அடிக்கரும்பு, கடைந்தெடுத்த வெண்ணை, கனிந்து வந்த பழுத்த பழங்கள், காற்றும் மழையும் கடந்த வந்த அனுபவக்கப்பல்கள் அவர்கள் ஞானிகள், வழிகாட்டல்கள் இன்னும் எல்லாம் அவர்களே. ஆதனால்தான் அவர்கள் கனம் பண்ண வேண்டியவர்களாக உலகலாவிய ரீதியில் ஞாபகப் படுத்தப்படுவது பெருமைக்குரியது.

மனிதர்கள் ஒன்றும் புத்திஜீவிகளாக, கலைஞர்களாக, உழைப்பாளியாக பிறப்பவர்கள் அல்லர், மாறாக அவர்கள் அவ்வாறு உருவாகிக் கொள்கிறார்கள். நிறைய விடயஙந்கள் மனிதன் ஏனைய ஜீவாராசிகளிடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறான். இதனைத்தான் கவிஞ்ஞர் கண்ணதாசன் சொன்னார் 'பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீன்களில் படகினைக் கண்டான்' என்று. 

நாம் எறும்புகளிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய ஒரு புதிய விடயம் என்ன தெரியுமா!
'தேவையற்றவர்கள் என எமது சமுகத்தினால் ஒதுக்கப்படும் முதியோர்கள்' போன்றல்லாது, அவைகள் முதியோர்க்கு கொடுக்கும் கௌரவம்; வினோதமானது, நம்ப முடியாமல் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! ஆனால் செய்யப்பட்ட அனேகம் ஆய்வுகளின் மூலம் இவை கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய அமெரிக்காவில் இலைகளை உணவாக வெட்டி உண்ணும் எறும்புகளின் வெற்றியின் இரகசியம் என்ன என மேற்க்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையில், அவை வயதுக்கு ஏற்றவாறு எவ்வாறு வேலைத்தளத்தினில் வேலைகளை பிரித்துக் கொடுக்கின்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒறீகன் பல்கலைக்கழகம், அத்துடன் அமெரிக்க ஒறீகன் அரச பல்கலைக் கழகங்களின் கூட்டு முயற்சியில் செய்யப்பட்ட ஆய்வறிக்கையில் இளமையான, சுறுசுறுப்புமிக்க எறும்புகள் இலைகளை வினைத்திறனாக வெட்டி உணவுகளை அறுவடை செய்யும் வேலையில் ஈடுபடுகின்றது என கண்டறியப்பட்டுள்ளன. ஆவைகள் கூர்மையான வெட்டும் பற்களால் மிக வினைத்திறனான முறையில் ஈடுபடுகின்றனவாம். 

ஆனால் அவை வயது போனதும் மனிதர்களைப்போல் பற்களின் வெட்டும் திறன் குறைவடைந்து மழுங்கி விடுகின்றது. இருப்பினும் வயது வந்த எறும்புகளுக்கு அவர்களது உடல் பலத்துக்கு ஏற்ப்ப வேறு வேலை ஒன்றை வழங்கி விடுகின்றதாம். ஆதனால் உணவுக்காக வெட்டப்பட்ட இரைகளை சுமக்கும் பங்கினை அவைகள் செய்யத் துடங்கிவிடுகின்றனர்.

குறிப்பாக மிக நுண்ணிய கருவிகளை கொண்டு செய்யப்பட்ட ஆய்வில், வயது வந்த எறும்புகளின் பற் தாடைகள் 340 தடவைகள் இளம் எறும்புகளை விட சோர்வடைந்து காணப்படுவதாகக் கண்டறியப் பட்டுள்ளது.

ஆக உணவுக்கான ,லைகளை வெட்ட முடியாத வயது வந்த எறும்புகளை அடையாளங் கண்டு, வெட்டிய இலைகளை அவைகளின் இருப்பிடம் நோக்கி சுமந்து செல்லுகின்ற பணிக்கு அமர்த்தி விடுகின்றனவாம். அதே போல் எமது சமுகத்திலும் முதியவர்கள் செய்யக் கூடிய வேலைகளை அவர்களுக்கு கொடுத்து கௌரவிக்கின்ற முறையினை நாம் இந்த எறும்புகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடல் என ஆய்வாளர் கோடிட்டு காட்டுகிறார். 

ஆகவே நாங்கள் இந்த முதியோர் வார நாட்களில் முதியோர்கள் எவ்வாறு மரியாதையடன் கௌரவிக்கப்படுகின்றனர் என்கின்ற செய்தி எறும்புகளில் இருந்து கற்றுக் கொண்டது போல் இன்னும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றது அல்லவா. ஆகவே எமது நாட்டில் குறிப்பாக அரசாங்கத்தில் ஓய்வு பெற்ற பழுத்த அனுபவம் வாய்ந்த மனித வளத்தினை கிடப்பில் போடாமல் அவர்களையும் அபிவிருத்திப் பாதையில் இணைத்து, அவர்களும் 'நாங்கள் சமுகத்தில் இருந்து வேறானவர்கள் அல்லர் என்கின்ற அந்தஸ்த்து கொடுக்கின்ற நன்நாள் வர பிராத்தித்து. முதியோர்களுக்கு வணக்கம் செலுத்தி மரியாதை கொடுப்போம்.

0 comments:

Post a Comment