ADS 468x60

26 November 2011

சீரற்ற காலநிலையும் சீரளியும் மக்களும்;தொடரும் போராட்டம்.

வாழ்க்கையில் போராட்டம் இருக்கத்தான் செய்யும் ஆனால் போராட்டமே வாழ்க்கையாகலாமாஎவ்வாறாயினும் அது தான் இன்று எம்மக்களின் நிலைப்பாடாகி விட்டதுதமிழர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குள்ளயே போராடிப் போராடி சலித்து விட்டனர்ஐந்து தசாப்த கால உரிமைப் போராட்டம்உடமையையும் உயிரையும் காக்கப் போராட்டம்உணவுக்காகப் போராட்டம்வறுமையோடு போராட்டம் இன்னும் இயற்கை அனர்த்தங்களில் இருந்து வருகின்ற இடர்களுக்கு(Risks) எதிராகப் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்இந்தப் போராட்டத்தினை மக்கள் சுயமாக நின்று வென்றுவிட முடியாதுஅதற்க்கு மக்கள் சத்தியில் உருவாக்கப்பட்ட அரச இயந்திரத்தின் தேவைப்பாடு முக்கியமானதாகும்அதற்கு அப்பால் மக்களது ஒத்துழைப்பு மற்றும் அவர்களுக்கு இவை பற்றிய விழிப்புணர்வுகள் மேலதிகமாக வலுச் சேர்ப்பவையாகத்தான் இருக்கும்ஆனாலும் இவை பொறுப்புள்ளவர்களின் அசண்டையீனங்களால் தான் மக்களையும் அவர்களது சொத்துக்களையும் பறித்துச் செல்லும் துர்ப்பாக்கியமான நிலைக்குள் தள்ளியள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் 2633.1 sq KM பரப்பளவில் 5,86,803 சனத் தொகையை உள்ளடக்கிய ஒரு பிரதேசமாகும்இங்கு தங்களது பிளைப்புக்காக அநேகமான மக்கள் விவசாயம்மீன்பிடிகால் நடை வளர்ப்புவீட்டுத் தோட்டம்மேட்டு நிலப் பயிர்ச் செய்கை போன்ற வற்றின் வருமானத்தினையே நம்பி வாழ்ந்து வருகின்றனர்அதிலும் குறிப்பாக 65மூ விகிதமான மக்கள் தங்களது பிளைப்புக்காக விவசாயத்தினையே நம்பி வாழ்கின்றனர்.

இங்கு மனிதன் மற்றும் இயற்கையால் வந்த அனர்த்தங்களில் சிக்கி சின்னாபின்னமாகிய கடந்த காலப் படிப்பினைகள் நிறையவே உண்டுகுறிப்பாக இம்மாவட்டம் காலநிலை மாற்றங்களுக்கிணங்க(Climate Change)  புயல்வெள்ளம்வரட்சிசுனாமிஇடி மின்னல்மிருகங்களின் தாக்கம் மற்றும் இன்னோரன்ன நோய் உபாதைகள் (Decease) என்பன போன்ற இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கக் கூடிய நிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.  

கடந்து வந்த வெள்ளமும் இழப்பும்.
வெள்ளம் நாம் வருடா வருடம் எதிர்நோக்கும் பாரிய அனர்த்தமாக மாறி விட்டதுஇது நீர் நிலைகள் ஒழுங்கான முறையில் வடிந்து செல்வது தடைப்படும்போதுவெள்ளம் வடிந்தோடுகின்றமற்றும் தாழ்நிலைப்பகுதிகளில் குடியிருப்புகளை அமைக்கின்ற போது வெள்ளம் தடைப்பட்டு அதன் ஆபத்தினை அதிகரிக்கச் செய்கின்றதுஅத்துடன் வெள்ள அனர்த்த மட்டங்களை கருத்தெடுக்காமல் நிலப்பயன்பாட்டினை மேற்கொள்ளல்அதிகரித்துவரும் சனத்தொகை (Population growth) காரணமாக நிலப்பகுதியின் அளவு குறைந்து வருகின்றமை இதனால் வெள்ளளம் வடிந்தோடுகின்ற இடங்களில் வருமானம் குறைந்தவர்களின் அத்துமீறிய குடியேற்றம்வடிகால் அமைப்புகளை தூய்மை செய்வதில் காணப்படுகின்ற பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் மற்றும் பொது மக்களின் அசண்டையீனமான போக்குமண்ணை முறையற்ற முறையில் அகன்றெடுத்தல்நீர் வழிந்தோடி தேங்கி நிற்கும் இடங்களை நிரப்புதல் மற்றும் அவற்றின்மீது கட்டிடங்களை அமைத்தல் மற்றும் சட்டம் ஒழுங்குகளை மீறுதல் போன்ற காரணங்களினாலும் வெள்ளம் அனர்த்தமாகி ஆபத்துகளை விளைவிக்கின்றது.
கடந்து சென்ற வெள்ள அனர்த்தம் ஏற்ப்படுத்திய அனர்த்த வடு மாறாத நிலையில்இப்பொழுது தொடர்ந்து பெய்து வரும் அடை மழை வெள்ளக்காடாகி காட்சியளிக்கிறதுகடந்த மோசமான வெள்ள அனர்த்;தம் போல் 50 ஆண்டுக் முன் தான் இடம் பெற்றுள்தாகவும்இந்த அனர்த்தம் வீடுகள்வாழ்வாதாரம் (Livelihood)> பாடசாலைகள்சுகாதாரம்நீர் வழங்கள்சமுக பொருளாதார உட் கட்டுமானங்கள்(Infrastructures) அனைத்தையும் மிக மோசமாக சீரளித்து மக்களின் உழைக்கும் ஆற்றலை நலிவுறச் செய்திருந்ததுஅதிலும் குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்பொழுது குடியேறிவெல்லாவெளிபட்டிப்பளைவவுளதீவுசெங்கலடிகிரான் மற்றும் வாகரை போன்ற பிரதேசத்தில் வாழ்ந்து வரும் நலிவுற்ற மக்களையே அதிக இழப்புக்கு உள்ளாக்கி இருந்தது.

அதன்போது 480,000 பேர் மாவட்டம் பூராகவும் பாதிக்கப்பட்டதுடன், 362,464 பேர் இடம் பெயர்ந்து 598 நலன்புரி முகாங்களில் தங்க பைக்கப்பட்டிருந்தமை அறிந்ததேஇங்கு மதிப்பீட்டின் படி கிட்டத்தட்ட 500,000 ஏக்கர் விவசாய செய்கை மண்ணோடு மண்ணாய் அழிந்து போனதுஅதுபோல 18610 வீடுகள் முற்றாகவும் மற்றும் 5279 வீடுகள் பகுதியளவிலும் எல்லாமாக 23889  வீடுகள் கடந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனஅத்துடன் மூன்று பெரிய குளங்கள் அதிகரித்த மழை காரணமாக நீர் மட்டம் அதிகரித்து ஆபத்தான நிலையில் இருந்தமையினால் தொடர்ச்சியாக திறந்து விட்டமையும் குறிப்பிடத்தக்கதுOCHA இன் அறிக்கைப்படி 467.3 மில்லியன் ரூபாய்க்கள் சிதைவடைந்த 8 பெரிய, 11 சிறிய குளங்களுக்கும் மற்றும் சிதைவடைந்த 102 சாதாரண விவசாயக் குளங்களையும் திருத்த தேவைப்படுவதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

மீள் உருவாக்கச் செயற்ப்பாட்டின் தேக்கம்.(Stagnation of Recovery)

அனர்த்தங்களின் போதுஅதற்கு முன் மற்றும் அதன் பின்னரான அனர்த்த முகாமைத்துவம் ஒரு பிரதேசத்தில் தேவையானதாகும்குறிப்பாக 2005 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு செயன்முறைப்படுத்தி வரும் அனர்த்த முகாமைத்துவ நிலையங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றதுஇவை அனர்த்தங்களின் போது வரும் இடர் தணித்தல்(Mitigation)  அல்லது முகாமை செய்தல் (Management) என்பனவற்றுக்கு பொறுப்புக் கூறும் ஒன்றாக உருவாக்கப் பட்டுள்ளதுகுறிப்பாக இந்த இடர் முகாமைத்துவ மையம் (Disaster Management Cent) மாவட்ட ரீதியாக அமைந்திருந்துஇடரை முகாமை செய்வதற்க்கான திட்டமிடல் (Planing), இடர் தணித்தல்(Mitigation), தயார் படுத்தல்(Preparedness), பதில் இறுத்தல் (Response) மற்றும் மீள் உருவாக்கம் (Recovery) என்கின்ற அடிப்படை தந்திரோபாயங்களை மையப்படுத்தி இயங்கி வருகின்றதுஇதில் பொறுப்புக் கூறுதல் மற்றும் மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகள் என்பன ஏனைய அரசம மற்றும் அரச சார்பற்ற பொறிமுறைகளிற்கு ஊடாகவே நடைமுறைப்படுத்தப் பட்டுவருவது குறிப்பிடப் படத்தக்கது.

இருந்தும் பூரணத்துவமான மீள் உருவாக்கச் செயற்ப்பாட்டுக்கான (Recovery activities)  ஒருங்கிணைப்புச் தந்திரோபாயத்தினை (Coordination mechanism)  இந்த அனர்த்த முகாமைத்துவத்தில் கடமை புரியும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளால் தான் செய்யமுடியும்அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால் அது மக்களின் மீள் எழும் தன்மையை (Resilience) கேள்விக்குள்ளாக்கும் அர்த்தமற்ற நியமனமாகவே கருதப்படும்குறிப்பாக இம்மாவட்டத்தில் மீள் குடியமர்த்தப்பட்ட (Resettled) ஆறு பிரதேச செயலகப்பிரிவில் மட்டும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 2,14,430 பேரில் 1,41,793 பேர் தான் இழந்தவற்றை திருப்ப பெற்றிருந்தனர் ஏனையவர்கள் இன்னும் இடைவெளியாகவே காணப்படுவதனை கீழ் உள்ள வரைவு தெழிவுபடுத்துகின்றது.
மூலம்UNOCHA  வின் ஜூன் மாத ஆரம்ப மீள் உருவாக்கம் மீதான தகவல் அட்டவணையில் இருந்து.

இது போன்று தான் ஏனைய வீடுகள்பாதைகள்பாடசாலைகள் மற்றும் கால் நடைகள் என்று எத்தனை விகிதமானவை மீளக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன என்ற கேள்விக்கு யார் பொறுப்பு கூற வேண்டியவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்இதனால் அப்பாவிப் பொது மக்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில் தற்பொழுது பெய்துவரும் அடை மழை அவர்களை 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோன்று துன்பப்படும் நிலைக்கு ஆளாக்கியுள்ளதுஇருப்பினும் இந்தப் பணியினை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தில் (UNDP) செயற்ப்படும் ஆரம்ப மீள் உருவாக்க ஒருங்கிணைப்பு மையத்தின் உதவியுடன் மாவட்டச் செயலகத்துடன் இணைந்து செயற்படுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதுஇந்நிலை மீண்டும் உருவாகி இருக்கும் நிலையில் இந்த அனர்த்தங்களுக்கு வகைகூறும் வகைகள்அதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பன ஆராயப்படுதல் வேண்டும்.

பொறுப்புக் கூறவேண்டியவர்கள் யார்?
நான் மேற்கூறிய அனர்த்த இடர் தணிப்பு தந்திரோபாயத்தினில் முக்கியமாக சமுக மட்டத்திலான செயற்ப்பாடுகள் மற்றும் அமுல்படுத்தல்கள் என்பனவற்றினை அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் செயற்படுத்த வேண்டிய கடப்பாடு இருக்கிறதுஅதில் மக்களின் ஈடுபாடும் முக்கியமானதாகும்குறிப்பாக சமுகம் இந்த இடர் தணிப்புச் செயற்ப்பாடுகளில் நான்கு வகையான முக்கிய வகிபங்கினைக் கொண்டுள்ளது.
1. அரசு அனர்த்தம் தணிப்பு சம்மந்தமான தேசிய மற்றும் கிராமமட்டத்தில் என்ன வகையான நடவடிக்கையினை எடுக்கின்றது என்கின்ற தகவலை அறிய மக்களுக்கு உரிமை இருக்கிறதுஉதாரணமாக தேசிய இடர் தணிப்புக் கொள்கை பற்றி விழிப்புணர்வுக் கூட்டங்கள்துண்டுப்பிரசுரங்கள் மூலம் தெரியப்படுத்தல்.

2. கிராம மட்டத்திலான இடர் தணிப்புச் செயற்பாடுகளில் மக்களை பங்குபறறச் செய்தல்;. உதாரணமாக இடர் வரைபடம் வரைதல்நலிவுற்றோர் சம்பந்தமான மதிப்பீடுகிராம மட்ட இடர் தணிப்பு திட்டங்களை வரைதல் போன்றவற்றில் ஈடுபடச் செய்தல் அவர்களை இச் செயற்ப்பாட்டின் பங்கு தாரர் ஆக்கும் செய்முறை முக்கியமானதாகும்.

3. இடர்களை தணித்து வாழும் சமுகமாக (Disaster -resistant Community) வாழ்தல்உதாரணமாக முன்னெச்சரிக்கை மையங்களை அமைத்தல்அபிவிருத்திச் செயற் திட்டங்களில் இடர் தணிப்பு உபாயங்களை உள்வாங்குதல்பாதுகாப்பான இடங்களை நிர்ணயனம் செய்தல் போன்றவற்றில் அவர்களை பங்கேற்க்கச் செய்தல்

4. கிராம மட்டத்தில் இடர்களை தணிப்பதற்கு மக்களது இயலுமைகளை கட்டியெழுப்புதல் (ஊயியஉவைல டீரடைனiபெ). குறிப்பாக காப்புறுதித் (Capacity Building) திட்டங்களை அமுல்படுத்தல்வாழ்வாதாரப் பிரதியீடாக சிறுகடன் திட்ட உபாயங்களை (Micro Credit mechanism) அனர்த்த வலயத்தினுள் (Disaster Prone Areas) அறிமுகப்படுத்தல் அதே போல் தனியார் துறையினர் ஊடான தயார் படுத்தல் திட்டங்களை கொணர்தல் என்பனவற்றினைக் கொள்ளலாம்.

இவையனைத்தையும் சமுகத்தின் மத்தியில் கொண்டு வருதல் இடர் முகாமைத்துவ நிலையத்தின் பொறுப்பாகும் அல்லவாஅதற்கு அது சார்ந்த அறிவுதிறன் வாய்ந்தவர்களின் திட்டமிடல் தேவையானதாகும்இது தான் மக்களை மீண்டும் மீண்டும் நலிவுற்றோர் (Vulnerability) என்ற வகுதியில் இருந்து மீளௌச் செய்யும் தந்திரோபாயங்களாகும்

அது போன்று தான் எல்லா அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் ஒரு குறுக்கு வெட்டாக இடர் தணிப்பு முகாமைத்துவம் சம்பந்தமான ஒருங்கிணைந்த செயற்ப்பாடு (DRR Integration into the developing plan) அவசியமாகிறதுஅது இல்லாமல் செய்யப்படும் அபிவிருத்திகள் அனைத்தும் இன்னுமொரு அனர்தத்தினை உருவாக்கி விடுகின்றதுஉதாரணமாக மட்டக்களப்பின் புதிய பிரதான வீதி போடப்பட்டபோது இயற்கையாக நீர் வடிந்தோடும் வடிகான்கள் மக்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவத்தில் துறைதேர்ந்தவர்களின் கலந்துரையாடல் பங்களிப்பு இல்லாமல் போடப்பட்டு நீர் வடிந்தோடுவது அநேகமான இடங்களில் தடைப்பட்டு அவை மக்களை வெள்ளமாக வருத்தியதோடு கோடிக்கணக்கான நஸ்ட்டத்தினையும் இந்த அபிவிருத்தியாளர்களுக்கு ஏற்ப்படுத்தி இருந்ததுஇப்போது அவர்கள் அவற்றை மீள் புனருத்தாபனம் செய்தல் 'கண் கெட்ட பின் சூரிய நமஸ்க்காரம் செய்வது போல்' அல்லவா இருக்கின்றதுஇவை ஒரு நீண்டு நிலைத்திருக்கும் அபிவிருத்திச் சமிஞ்ஞைக்கு முற்றிலும் முரனானது ஆகும்

இதற்க்கும் அப்பால் இவ்வாறு பொறுப்பற்றுச் செயற்படும்அதுபோல் துறை தேர்ந்த அனுபவம்கல்வி அல்லாத அதிகாரிகளினால் வெள்ள அனர்த்தத் மூலம் வருடா வருடம் பாரிய இழப்புகளை சந்தித்து வருகிறதுஅவை பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

  • வெள்ளத்தினால் பெரியளவிலான மண்ணரிப்பு உருவாகின்றதுஅத்துடன் இது பாலங்கள்பாதைகள்கட்டிடங்கள் என்பனவற்றை சிதைவடையச் செய்கின்றது.
  • மனிதர்களால் கட்டப்பட்ட வீட்டின் சுவர்கள்கதவுகள்கூரைகள் அத்துடன் வீடுகள் என்பன சிறிய வெள்ளத்தினாலும் பாதிப்படைகின்றது.
  • விவசாய நிலங்களில் ஏற்ப்படுகின்ற வெள்ளத்தின்போது விவசாயப்ப் பயிர் செய்கைகள்மிருக வளர்ப்புப் பண்ணைகள் அத்துடன் செல்லப்பிராணிகள் என்பன வெள்ளத்தின்போது மிகுந்த பாதிப்பினை எதிர்நோக்குகின்றன.
  • வெள்ளம் போக்குவரத்தினை சீர்குலைத்து விடுகின்றது இது அங்கு உடனடி உணவுத்தட்டுப்பாட்டினை உண்டுபண்ணுவதுடன் அதுவே மக்களை பட்டினிச் சாவுக்கும் இடடுச் செல்லும் துர்ப்பாக்கியம் ஏற்ப்பட்டு விடுகின்றது.
  • வெள்ள காலங்களில் அதன் வடிந்தோடும் தன்மையைப் பொறுத்து மக்களின் இடப் பெயர்வுகள பாரியளவில் ஏற்ப்பட்டு வருகின்றன.
  • இதன்போது மக்ககள் தற்காலிக வீடுகளிலும் மற்றும் மீள்குடியேற்ற திட்டங்களிலும் குடியமர்த்தப்படும் போது தூய்மையான நீரைப் பெறுவது மற்றும் போதியளவு உணவினைப் பெறுவது மட்டுப்படுத்தப்பட்டே காணப்படுவதுடன் அங்கு ஏற்ப்படும் சுத்தமற்ற தன்மை உணவு மற்றும் குடி நீர் மூலம் வரும் நோய்களுக்கு ஏதுவாக அமைந்து காணப்படும்.
  • ஓவ்வொரு வருடமும் வரும் வெள்ள அனர்த்தத்துக்கென பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை வழங்க வேண்யெ நிர்ப்பந்தம்.
  • வெள்ளம் ஏற்ப்பட்டதன் பின்னர் பல்வேறு நோய்கள் உண்டாகுகின்றனகுறிப்பாக கொலராதைப்பொயிட்டையேரியா மற்றும் காய்சல் போன்ற இன்னோரன்ன நோய்களையும் உண்டுபண்ணுகின்றது.
இவற்றில் இருந்து விடுபட சில முக்கிய தந்திரோபாயங்கள் கையாளப்படுதல் வேண்டும் குறிப்பாக
வேள்ளத்தை இலகுவாக்கும் முகாமைத்துவம் (Flood Plain Management) இங்கு நிலப்பயன்பாட்டு வரைமுறைகள்அபிவிருத்திக்கான வழிகாட்டல்கள் மற்றும் காப்பீடு என்பவை குறிப்பிடத்தக்கது.

நீர் ஓட்டத்தின் வேகத்தை ஆறுகளில் தணித்தல் இதற்கு உயரத்தில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாத்தல்நீரை தேக்கி வைக்கும் புதிய வசதியைச் செய்தல்

ஆறுகளை அபிவிருத்தி செய்தல் அதில் வடிகான்களை புனரமைத்தல்வெள்ளம் வழிந்தோடும் இடங்களை அமைத்தல்.

வெள்ளத்தின் நீர் மட்டத் ,தகவல்களை அதன் இடர் வரைபடத்தினைஅதன் சுழற்சி முறையினை அடையாளங் காணுதலும் அவற்றை உரிய முறையில் தெரியப்படுத்துதலும்குறிப்பாக தகவல்களை பராமரித்தல்.

அவசர ஆயத்தப்படுத்தல் செயன்முறைகளை (Emergency Activities) மேற்க்கொள்ளல்குறிப்பாக வெள்ள தணிப்பு தயார்படுத்தலை மேற்கொள்ளல்எச்சரிக்கைபாதுகாப்பான இடங்கள் மற்றும் நிவாரணங்களுக்கான தயார்படுத்தலை மேற்கொள்ளல் போன்ற வெள்ள இடர் தணிப்பு தந்திரோபாயங்கள் மாவட்ட மற்றும் கிராம மட்டங்களில் செயற்ப்படுத்துதல் முக்கியமானதாகும்.

எனவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் அசண்டையீனம்மற்றும் சமுகத்துக்கு இருக்கும் விழிப்பற்ற தன்மை அதுபோல் அபிவிருத்தி செயற்ப்பாடுகளிற்குள் அனர்த்த முகாமைத்துவத்தினை உட்ப்படுத்தாமைகுறைந்தளவான ஒருங்கிணைந்த செயற்ப்பாடுகள் என்பன நலிவுற்ற மக்களை மீண்டும் மீண்டும் அனர்த்தத்துக்குள் அகப்பட வைப்பதுடன்அவர்கள் வருடாவருடம் தங்களது உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க போராடிப் போராடி விருத்தி நோக்கி செல்ல முடியாத ஒரு பாவப்பட்ட சமுகமாக இருப்பதனையே நாம் காணக் கூடியதாய் இருக்கும்.

0 comments:

Post a Comment