ADS 468x60

05 December 2011

இலங்கையின் பேண்தகு வீட்டுத் திட்ட செயன்முறைகளும், வாழ்கை முறையும்.


ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் அவன் வாழ்வதற்க்கு தேவையான உறைவிடம் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. இதனால்தான் எந்த ஒரு நாட்டை எடுத்துக் கொண்டாலும் வீட்டுத்துறை முக்கியமானதாகக் அபிவிருத்தி திட்டங்களில் கருத்தில் எடுக்கப்படுகிறது. இது ஒரு நாட்டின் பொருளாதாரச் செழிப்பினைத் தூண்டி விடுகின்ற வகையில் எல்லாத் துறைகளையும் ஒன்றிணைத்து முன்னெடுக்கும் முகாமைத்துவத்தின் தேவையை வலியுறுத்துகிறது. அழகான வீடு ஒரு மனிதனின் அடிப்படை மனிதாபிமானத் தேவையாகும். இது முழுவதுமாக வீட்டுக்காரரின் விருப்பு மற்றும் வாழ்கைத் தரம் என்பன மூலம் செல்வாக்குச் செலுத்துகின்றது. வீட்டுத் திட்டங்களில் ஏற்ப்படுகின்ற முன்னேற்றம் பல வழிகளில் நன்மை பயக்கின்றது. உதாரணமாக பொருளாதார நன்மைகள், சேரிப்புற வாழ்க்கைக்கான முற்றுப்புள்ளி, சேமிப்பு ஊக்குவிப்பு, நேரடி மறைமுக கட்டுமானப் பணி வேலைவாய்ப்புகள் மற்றும் நுகர்வு என்பனவற்றினை குறிப்பிடலாம்.

ஒரு நாட்டில் அல்லது பிரதேசத்தில் வீட்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஏற்ப்படுகின்ற அபிவிருத்தியானது பாரபட்சமில்லாத பொருளாதார வளர்ச்சியை தூண்டி விடுகின்றது. அத்துடன் வீட்டு உரிமையாளரின் சொத்துக்களை அதிகரிக்கின்றது. வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றத்தினை ஏற்படுத்துகின்றது. மறுபுறத்தில் மக்களிடையே குறைந்த வருமானம் ஈட்டும் துறைகளை தூண்டி விடுகின்றது இதன் மூலம் ஒட்டு மொத்த சமுகத்தினையும் வலுவூட்கின்ற மார்க்கமாகவும் அதேபோல் அந்தச் சமுகத்தின் வறுமை நிலையைக் குறைவடையச் செய்கிற கருவியாகவும் பார்க்கப்படுகின்றது.

இதனால் திட்டமிட்டுக் கட்டப்படுகின்ற வீட்டுத்திட்டங்கள் அந்தச் சமுகத்தின் சிறுவர்களின் கல்வி, சுகாதாரம், சந்தோசமான குடும்பச் சூழல், சேமிப்பு சிக்கனம் என்பனவற்றில் செல்வாக்குச் செலுத்துகின்றது. ஆகவே வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதியானது பெரிய ஓர் சமுகத்தின் நிலைத்து நிற்க்கின்ற பொருளியல் வளர்ச்சிக்கு கால்கோலாக இருக்கின்றது.
இரண்டு தசாப்த கால வரலாற்றில் தேசியளவிலான வீட்டுத்திட்டம் கணிசமாக அம்மக்களது பௌதிக வாழ்க்கைத் தரத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. தேசிய வீடமைப்பு திட்ட நடவடிக்கை எமது நாட்டில் 3.9 மில்லியனாக இருந்து 4.7 ஆக உயர்ந்துள்ளது. ஆகவே  பேண்தகு விருத்தியில் வீடமைப்புத் திட்டம் நல்ல செல்வாக்குச் செலுத்தி வருகின்றமையில் எதுவித சந்தேகமும் இல்லை. இவற்றுக்கு முறையான வங்கியியல் நடவடிக்கைகள் தான் காரணமாகும்.

எனவே முறை சார் வங்கிகளின் மூலம் குறிப்பிடத்தக்களவு சதவீத வளர்ச்சியை இத்திட்டங்கள்; எட்டியுள்ளது.  இன்றய நிதி மூலங்களின் முதன்மையானதாக, வீட்டினை அடகு வைத்து பணம் பெறுகின்ற நடைமுறை நன்கு வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாறான சந்தையில் 2009 இல் மட்டும் 167 மில்லியன் ரூபாய் இலங்கையில் புளக்கத்தில் விடப்பட்டது. வங்கியின் மொத்த வருமானத்தில் இது 14 விகிதமாக இருந்தது. அத்துடன் வாழ்க்கையின் பௌதிக தரம் நிலையான முறையில் வளர்ச்சி கண்டுள்ளது. உதாரணமாக 78 வீதமான மக்கள் தங்கள் வீடுகளில் வானொலிப் பெட்டிகளை கொண்டுள்ளனர் அதுபோல் 70 விகிதமானவர்கள் தொலைக்காட்சி பெட்டி வைத்துள்ளனர். இதற்கு அப்பால் இவர்களில் 75 விகிதமானவர்கள் மின்சார வசதியை கொண்டுள்ளனர், 63 விகிதமானவர்கள் தூய குடி நீரையும் மற்றும் 90 விகிதமானவர்கள் ஆரோக்கியமான வாழ்கையையும் கொண்டுள்ளனர்.

இவ்வாறான முன்னேற்றமான ஒரு வளர்ச்சிப் போக்கு சந்தேகத்துக்கு இடமின்றி இலங்கை மிலேனியம் இலக்கை அடைவதற்கு ஆரம்பத்திலேயே செல்வாக்கு செலுத்த தொடங்கியுள்ளதை அதிகமாக வருமானத்தினை ஈட்டுகின்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது மகிழ்சியான விடயமபக இருக்கிறது. இன்றய தகவலின் அடிப்படையில் இலங்கை கல்வி மற்றும் சுகாதாரம் என்பனவற்றில் மிலேனியம் இலக்கை ஏற்கனவே அடைந்துள்ள நிலையில் அதுக்கு மேலாக வறுமைப் தணிப்பு, அதுபோல் சிறுவர்கள், பிறக்கும்போது இறக்கும் சிசுக்களின் தொகை மற்றும் பாலியல் சமத்துவம் என்பனவற்றில் கணிசமான சாதகமான மாற்றங்களை அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறு இருப்பினும் பிராந்திய மற்றும் துறைரீதியாக காணப்படுகின்ற ஏற்றத்ததழ்வுகள் வீட்டுத்துறையினர் மற்றும் நிதி நிறுவனங்களின் முன்னுரிமை அடிப்படையில் ஒரு ஒன்றிணைந்த அணுகுமுறையூடாக உற்றுநோக்கப்படுகிறது. அதேசமயம் முழு உலகமும் நல்ல வசதிகளைக் கொண்ட வீடுகளைக் கட்டுவதன் மூலம்  நிலைத்திருக்கக்கூடிய வீட்டுத்திட்டத்தினையும் வாழ்க்கையினையும் எதிர்பார்ப்பதோடு அவை மூலம் எதிர்மறையான சுற்றுச் சூழல் பாதிப்புகளை தடுக்கும் மார்க்கத்தினையும் உறுதிப்படுத்துகின்றது. இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு நிதி நிறுவனங்கள் வீட்டுத்திட்டங்களை இலங்கையில் அமைப்பதுதான் எதிர்கால சந்ததியினருக்கு உறுதுணையாக அமையும்.

மறுபுறத்தில் இந்த வீடுகளை அமைக்க அதிகமான இயற்க்கை வளங்கள் தேவைப்படுகின்றன. இது பூமியின் நகர்வுக்கு காரணமாக இருப்பதுடன் கணிசமான கழிவு முகாமைத்துவத்துவத்தின் தேவையினையும் வலியுறுத்துகின்றது. வேறு விதமாகக் கூறுவதானால் ஒரு மனை வீட்டுத்திட்டங்களாக மாற்றப்படமாட்டாது, அப்பால் உறவினர்களின் கிராமத்தில் இருந்தான கூட்டம் அதேபோல் நகரத்தில் இருந்தான மக்கள் எல்லாம் சேர்ந்து வாழுவதனைத்ததான்; வீடுகள் என்னும் பதம் கூறுகின்றது. எனவே ஒரு வீட்டினைக் கட்ட திட்டமிடுவது, அபிவிருத்தி செய்வது எண்ணிலடங்காத பிரதிபலன்களைக் சுற்றுச் சூழல் மற்றும் இயற்க்கை மீது கொண்டுள்ளது. 

அதேநேரம் உலகம் முழுவதும் எதிர்கொள்ளப்படும் மற்றுமொரு சவால் அதிகரித்து வரும் நகரமயமாக்கலாகும். தகவல் அடிப்படையில் இலங்கையைப் பொறுத்தவரையில் தற்ப்போது அதன் மொத்த சனத்தொகையில் 30 விகிதமானவர்கள் நகரத்தில் வாழ்கின்றனர். இது 2015 இருந்து 2030 காலப்பகுதியில் 45 விகிதத்தில் இருந்து 65 விகிதமாக அதிகரிக்கப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கையில் நகர மக்கள் குடியேற்றத் திட்டங்களைக் கருத்தில் கொண்டால் அவற்றின் பௌதிக வள விருத்தியில் மிக முக்கிய கவனம் செலுத்துவது அவசியமாகும்.

ஆகவே ஒரு வீட்டுத்திட்டத்தினை அபிவிருத்தியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் போது சில பின்வரும் நிலைத்திருக்கும் தந்திரோபாயங்களை உள்வாங்குதல் வேண்டும்.

சூழலியல் ஒருங்கமைவும் சட்டங்களும்.
வீட்டுத் திட்டங்களை அமைத்துக் கொள்ளும்போது மனிதனது தேவைக்கு ஏற்ப்ப சுற்றுச் சூழலை சம அளவில் பாவிக்கும் உபாயத்தினை அபிவிருத்தியாளர்கள், நிதி நிறுவனங்கள் கருத்தில் எடுத்தல் அவசியமாகும். இதனூடு இலங்கையின் கலாசாரம், ஒற்றுமை, உயிரியல் பாதுகாப்பு என்பனவற்றை நிலைநிறுத்தக் கூடியதாகவும்; அமைய வேண்டும். மேலும் முக்கியமாக தகுதி வாய்ந்த கட்டுமான அதிகாரிகளினால் பரிசோதித்து உறுதிப்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.

பொருத்தமான வீடுகளுக்கான ஊக்குவிப்பு
நிலையான வீட்டுத்திட்டங்கள் எதிர்மறையான விளைவுகளைத் தவிப்பதாகவும் இதேநேரம் சுகாதாரத்தினை ஊக்குவிக்க கூடிய வளங்களை வினைத்திறனாக கட்டுமானப் பணியில் பயன்படுத்தக் கூடிய வகையில் ஊக்கப்படுத்த வேண்டும். 

கழிவுக் கட்டுப்பாடு 
வீட்டுத்திட்டங்களை அமைக்கும்போது கழிவுகளைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளதா என கவனித்தல் வேண்டும். அதேபோல் கழிவு முகாமைத்துவத்தினை (றயளவ அயயெபநஅநவெ) கருத்தில் கொண்டு அத்திட்டங்கள் நன்கு திட்டமிடப்படவேண்டும். குறிப்பாக பெற்றோலியப் பொருட்கள் மூலம் வருகின்ற காபன் கழிவுகள் சுற்றுச் சூழலுக்கு எத்தகைய பாதிப்புகளையும் ஏற்படுத்தாத நிலைத்திருக்கும் திட்டங்கள் இதற்கு அவசியமானதாகும்.

இயற்க்கை வளப் பயன்பாடு 
எபிபொருள், மின்சாரம், நீர் மற்றும் கடதாசி என்பனவற்றினை பாவனை செய்வதனை முகாமை செய்வதன் மூலம் இயற்க்கை வளங்களை உலகளவில் பாதுகாக்கும் நடவடிக்கையினை கைக்கொள்ள வேண்டும்.
நிலையான வள முகாமைத்துவத்தின் தேவை
வீட்டுத்திட்டங்களுக்கு நிதியளிக்கின்ற நிதி நிறுவனங்கள் மீள் உரவாக்கச் செயற்பாடுகளில் பயன்படுத்தப்படும் பொருட்க்கள் மீளப் பெறும் வளிமுறைகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அவை சூழலை ஆரோக்கியம் இல்லாது செய்கின்ற நிலைக்கு இடமளிக்காத செயற்பாடுகளை மேற்க்கொள்ள வேண்டும்.

சமுக விழிப்புணர்வை தூண்டுதல 
நிதியிடுகின்ற நிறுவனங்கள், அபிவிருத்தியாளர்கள் வீட்டுரிமையாளர்களிடையே அனர்த்த முன்னாயத்தம் அதன் முகாமைத்துவம், கழிவு முகாமைத்துவம், சிக்கன வளப்பயன்பாடு இவை சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்ப்படுத்த வேண்டும்.

ஆகவே வீட்டத்திட்டங்கள் சாதாரணமாகவே உறைவிடமாக மட்டும் இல்லாது கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, கலாசாரம், ஒற்றுமை, வாழ்வாதாரம், கட்டுமான விருத்தி என்பனவற்றை ஒருங்கிணைத்து ஒரு அபிவிருத்தியின் நுழைவாயிலாக அமைவற்க்கு அதன் முறையான நன்கு திட்டமிடப்பட்ட அமுலாக்கத்தின் முக்கியம் அவற்றில் பிரதிபலிக்கப்பட வேண்டும், அப்போதுதான் வீடுபோலே நாடும் வளர்ச்சி பெறும்.

0 comments:

Post a Comment