ADS 468x60

09 December 2011

விரும்புகிறேன்.....


விரும்புகிறேன்.....
போலியற்ற முகங்களை,
புன்னகைக்கும் உள்ளங்களை,
கேலி செய்யாத நட்பை,
கீழ்த்தரம் இல்லாத வாழ்க்கையை....

விரும்புகிறேன்.....
கடவுளைக் காண - உன்மை,
காதலி கிடைக்க,
பேர் சொல்ல சாக,
பேச்சில் உன்மையை.....

விரும்புகிறேன்.....
காக்கை பிடிக்காத வேலை,
கள்ளம் இல்லாத உள்ளம்,
பிறர்க்காக வாழும் வாழ்கை,
பிறந்த மண் புகழ்பாட....

விரும்புகிறேன்.....
காற்றை இரசிக்க,
கண்ணீரை உரமாக்க,
பிறந்த உயிர்களை,
துறந்த வாழ்க்கையை,

நான் விரும்பியும், என்னை விரும்பாத
விருப்பங்களுக்காய்
காரணம் தேடி கரைந்தும்- என்னுடல்
கண்டது ஒன்றுமில்லை
தேடி தொலைத்தது பணம் மட்டுமில்லை
எனது நம்பிக்கைகளும் கூட...
இன்னும் விரும்புகிறேன்
யோக்கியனாக பாக்கியம் செய்ய.

0 comments:

Post a Comment