ADS 468x60

18 December 2011

திகிலிவெட்டை மக்களும், மண் வாசனையும்..


கொடுத்துச் சிவந்த கைகள் போல வளங்கொழிக்கும் கிழக்குப் புற தழிழ் விழை நிலங்களையும், தழராத சுறுசுறுப்பான படுவான் மக்களையும் பார்த்து வியக்காதவர் யாரும் இல்லை. மட்டக்களப்பின் சிறப்பே வந்தோரை வாழவைக்கும் இன்முகமும், ஊரெங்கும் குளிர்பரப்பும் வாவிகளும் தான். இப்படி சிறப்புற்று விளங்கும் மீன்பாடும் மட்டு நகருக்கு வடக்கே 20 கிலோ மீற்றர் தொலைவில் கிரான் பிரதேச செயலக எல்லைக்குள் சந்திவெளிக்கு அப்பால் குறிஞ்சி, முல்லை மருதம் என்று மூன்று நிலங்களும் ஒருங்கே அமைந்து, பச்சை ஆடைபோற்றி படர்ந்து பூத்துச் சிரிக்கும் எமது தாய் மண்ணான 'திகிலி' என்று அம்மக்களால் செல்லமாக  அழைக்கப்படும் திகிலிவெட்டை எனும் கிரமத்தின் 'வாங்கோ' என்று வரவேற்க்கும் மக்கள், குழந்தைகள், மாடுகள், ஆடுகள், பச்சை பசேல் என்ற பயிர்ச் செடிகள் இன்னும் நிறையவே கண்டேன்.

திகிலி மக்கள். 
சிரித்தபடியே வேலையில் ஈடுபடும் சிறுவர்கள் இருந்து முதியோர் வரை கண்டு வியந்தேன். மூன்று தசாப்த கால சிவில் யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி உயிர்களை, உடமைகளை, சொத்துக்களை இழந்து, நாடோடித் திரிந்து தற்பொழுது வந்திருக்கும் இம்மக்கள் அவர்கள் யாருடைய சோரமும் இல்லாமல் உழைத்து வாழ்வதை ஒரு வரப்பிரசாதமாகக் கருதுகின்றனர் என்பதை நினைக்கும் போது எனக்கு புல்லரித்து விட்டது. 

சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி
சோம்பலில்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்திக் கட்டி
கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி

சம்பா பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு
வரப்பும் உள்ளே மறைஞ்சிருக்கு... 
எனும் பட்டுக்கோட்டையின் பாட்டை செயல்வடிவில் பார்த்தேன். அங்கு அவர்கள் எறும்புகள் போன்று சிறுகச் சேர்த்து பெருக வாழும் பெருமக்கள், வயிற்றைக் காக்க வாய்க்கால் வெட்டும் தொழிற்ப்படை, தரிசு நிலங்களில் அரிசி விளைவிக்கிறவர்கள், எல்லை கடந்த சந்தோசத்தில் எங்கும் போனேன். சீமை நகரத்தில் இல்லை, சேய்மையில் மக்களின் மனத்தூய்மையில் பார்த்தேன். இம்மக்கள்; சந்திவெளியையும் திகிலியையும் குறுக்கறுக்கும் ஆற்றில் மீன்பிடித்தல், அதுபோல்  வேளான்மை, பசு வளர்த்தல், சேனைப் பயிர்செய்கை மற்றும் ஆடு கோழிகளை வளர்த்தல் போன்ற இன்னோரன்ன தொழிலையும் செய்து வருகின்றனர். வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படுகிறது அதற்க்கிடையே பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேலென தானிப்பயிர்கள் நிலத்தை போர்த்து இருந்ததை பார்க்கும் போது உள்ழூர ஒரு விதமான இன்பம் கண்டேன்

தானியத்தின் தாயகம்..
உலகில் இன்று பிரதான பிரச்சினையாக உருவெடுத்திருப்பது பட்டினிப் பிரச்சினையாகும். அந்தப் பட்டினிக்கே சாவு மணியடிக்கும் ஒரு கூட்டம் எம்தமிழ் இனத்தில் இருப்பதனை நினைத்து நெஞ்சி நிமித்தினேன். இந்தக் கூட்டம் பெருமைக்குரியதே. உலகில் ஏழு பில்லியனாக பெருகி இருக்கும் மக்கள் தொகையில் ஒரு பங்கினர் பட்டினியால் தினம் தினம் சாகும் போது, நெல்லு, சோழம், கச்சான், உழுந்து, பயறு என்று மேட்டுப் பயிர், வீட்டுப்பயிர், சேனைப்பயிர் என்றெல்லாம் செய்து உண்டி நிறைய உணவு கொடுக்கும் திகிலி மக்கள் எமக் கெல்லாம் எடுத்துக் காட்டானவர்கள். 

'காடு வெளையட்டும் பொண்ணே நமக்கு காலம் இருக்குது பின்னே' என்பதுக்கு இணங்க மாரி காலம் தொடங்குவதற்கு முன் உழுது பண்படுத்தி காடு மேடுகள் எல்லாம் விதைத்து மழை விழ விழ பயிர்கள் எழத் தொடங்கி மார்கழி, தை வந்து விட்டால் அறுவடை தொடங்கும். இதைத்தான் முன்னோர் கூட 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று கூறிவைத்துள்ளனா்.  வீட்டுக்கு வீடு வாசற்ப் படி என்பது போல் இம்மக்கள் இந்த மண் நிலங்களை எல்லாம் பொன் விழையும் பூமியாக்குவதில் வல்லவர்களாக இருக்கின்றனர்;.

வாழ்வழிக்கும் வளக்கூறுகள்.
இவற்றுக்கு மேலாக இங்கு நிறையவே புற்தரைகள், மலைக் குன்றுகள், நீர் நிலைகள் குளங்கள் என்றெல்லாம் நிறயவே உண்டு. அனேகம் பேர் மீன்பிடியிலும் இங்கு ஈடுபட்டு தங்களது நாளாந்த உணவுத் தேவையை பூர்த்தி செய்து மேலதிகமானவற்றினை விற்ப்பனை செய்கின்றனர். அது போல் மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு என்பனவும் அவர்களால் மேற்க் கொள்ளப்படுகின்றன. அங்கே இரண்டாம் கட்டைப் பிரதேசத்தில் மலைகளை உடைத்து கருங்கற்களை விற்கும் தொழிலும் காணப்படுகின்றது. இவை தவிர சிறிய கடைகள் மற்றும் விறகு விற்றல் என்பன போன்ற இன்னோரன்ன தொழிலிலும் இம்மக்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் எதிர் கொள்ளும் சவாலும் சங்கடங்களும்

என்னதான் இருந்தும் இம்மகளிடையே சில இடர்களுக்கு முகம் கொடுக்கும் கொடுமைகளை எண்ணி வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. எவ்வளவுதான் உழைத்தாலும், பாடுபட்டாலும் அதன் மூலம் பெரிதாகப பயன் அடைவது கிடையாது. என அவர்கள் பெரு மூச்செறிய கூறுகின்றார்கள். வெள்ள அனர்த்தம், பண்டிகளின் பயிர் நாசம் மற்றும் இடைத்தரகர் கொள்ளை என்று அடிக்கிக் கொண்டே போகலாம்.

'அட காடு வெளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும்தானே மிச்சம்
கையும் காலும்தானே மிச்சம்' 
என மக்கள் அலுத்துக் கொண்டதை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது. எனக்கு ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது அது சம்பர் ஒவ் கொமர்ஸ்சில் ஒரு நேர் முகப் பரீட்சைக்கு சென்ற போது அங்கு அவர்கள் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டனர். அது, விவசாயிகள் அவர்களது உற்ப்பத்திகளை தகுந்த விலைக்கு விற்க்க முடியாமைக்கு என்ன காரணம்? இது போல் இதற்கு யார் பொறுப்பு? என்பது தான். அதற்கு நான் அளித்த பதில் அம்மக்கள்தான் என்பதாக இருந்தது. 

காரணம் அவர்கள் தான் அதனை நிர்ணயித்த விலைக்கு விற்க்கும் வழிகளை தெரிந்து வைத்திருக்கும் உபாயங்களைக் கையாள வேண்டும். குறிப்பாக நெல்லை நெல்லாக விற்க்காமல் அரிசாக்கி, அதில் இருந்து மாவாக்கி அதில் உற்ப்பத்திகளை செய்யும் போது நெல்லாக விற்பதனை விட அதிக இலாபம் கிடைக்கும், அது போல் அவற்றைச் நீண்ட நாட்களுக்கு பாதுகாத்து வைத்திருந்து கேள்வி நிலவுகின்ற நேரம் பாத்து அவற்றை உரிய விலைக்கு விற்று இலாபம் அடையலாம்.

அதுபோல் அனேகமான சேனைப் பயிர் விளைச்சல்கள் குறைந்த விலையில் இடைத்தரகர்களால் சூரையாடப்படுவது ஒரு பிரச்சினையாகும். இங்குள்ள மக்கள் கடினப்பட்டு உழைத்த உழைப்பை இன்னொரு முதலாழி வர்க்கம் குறைந்த விலைக்கு வாங்கி கூடிய இலாபம் ஈட்டும் துர்ப்பாக்கிய நிலையில் இம்மக்கள் காணப்படுகின்றனர். எனக் கொரு பாட்டு நினைவு வருகிறது.

பெண்: மாடாய் உழைச்சவன் வாழ்க்கையிலே
பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்
ஆண்: அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி!
பெண்: பஞ்சப் பரம்பரை வாழ்வதற்கு இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான்
ஆண்: தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி.

ஆகவே மக்கள் சிந்திக்க வேண்டும், அவர்களை எம்போன்ற படித்த இளைஞர்கள் விழிப்படையச் செய்யவேண்டும். மற்றவன் எம்மைப் பார்த்து மாடன் என்னும் நிலையை மாற்றவேண்டும். அவர்களால் அரசியல் ஆசனங்களை அலங்கரிக்கும் அரசியல் வாதிகள் மக்களின் தேவையை கண்டறிந்து தங்களது அரசியல் பலம், புத்தி ஜீவிகளின் திட்டம் என்பனவற்றினைக் கொண்டு  அவர்களை இந்த பிரச்சினையில் இருந்து மீட்சி பெறச் செய்ய ஏற்ப்பாடுகள் செய்ய முன் வர வேண்டும். அவர்களிடையே சேமிப்புப் பழக்கத்தை சிந்திக்க வைக்க வேண்டும். இதனால் அம்மக்களின் தங்கி வாழும் நிலை மாறும், வருமானம் உயர்வடையும், கல்வி சுகாதாரம் மேன்மையடையும் இதனால் நல்ல வாழ்க்கைத் தரத்தினைக் கொண்ட மக்கள் சமுகமாக எம்மினத்தினை மாற்றமுடியாத சிந்திக்க வேண்டும். எமது ஒட்டு மொத்த மக்களின் நிலையும் இந்த திகிலி வட்டை மக்களின் நிலைப்பாடுதான். 

மக்களுக்கு சில அரசியல் தலைவர்களுக்கு கிடைத்த பொன்னான சந்தர்ப்பத்தினை வைத்து ஏன் உதவி செய்ய முடியாது, இந்த மூலப் பொருட்களை வைத்து முடிவுப் பொருட்களாக மாற்றி ஒட்டு மொத்த இலாபங்களையும் உழகை;கும் வர்க்கத்துக்கு பெற்றுக் கொடுக்க அது சார்ந்த தொழிற்ச்சாலைகளை நிறுவலாமே, அதுபோல் இந்த உற்ப்பத்திப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு களஞ்சியப்படுத்;தும் பொதுக் களஞ்சிய சாலைகளை நிறுவினால் கேள்விக்கேற்ப்ப நல்ல விலைக்கு இந்த உற்ப்பத்திப் பொருட்களை விற்க்கச் செய்யலாமே. ஆகவே சிந்திக்கவேண்டிய செயற்ப்பட வேண்டிய பொறுப்பு எம்மால் தெரிவு செய்யப்பட்டு எமக்கு பயனற்று இருக்கும் அரசியல் வாதிகளைப் போல் எமது மக்களுக்கும் இருக்கின்றது அல்லவா?

பட்ட துயர் இனி மாறும்
கிட்ட நெருங்குது நேரம்
நானே போடப் போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்... 
என மக்கள் தங்களை தாங்கள் ஆழும் திட்டம் இடும் நேரம் வந்து விட்டது எனத்தான நினைக்கிறேன் இது அனேகமான ஏமாற்றுவழி அரசியல்வாதிகளுக்கு சாட்டையடியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

2 comments:

S.T.Seelan (S.Thanigaseelan) said...

Ok I will visit

kowsy said...

அருமையான கட்டுரை. இப்போது தேவையானதும் கூட. திகிலிவெட்டை இப்போதுதான் அறிந்தேன். பெருமையான மக்கள். லகர ளகர வேறுபாட்டைக் கவனியுங்கள் .விளை நிலங்கள் . தளராத போன்றவை . வாழ்த்துகள்

Post a Comment