ADS 468x60

06 February 2012

"புதிர் உண்ணுதல்" பாரம்பரியத்தின் சுவாரசியம்தான் என்ன?

தமிழர்களின் வாழ்வு; பொருளாதாரம், அரசியல், சமயம் மறறும் கலாசாரம் என்பனவற்றுடன் ஒன்றொடொன்று பிரிந்துவிடாமல் பிணைந்திருப்பது அதன் வரலாற்று முதிர்சியை புடம்போட்டுக் காட்டுதுங்க..

இன்று தைப்பூச திருநாளுங்க...உன்மையில் நம்ம தமிழர் பண்பாடு மற்றய இனத்தினரையும் விரும்பவைக்கும் வகையில் அதில காணப்படுகின்ற பண்பாடு,  நாகரிகம் மற்றும் ஒழுக்க விழிமியங்கள் சிறப்பாக அமைந்திருக்கு..

ஆயிரமாயிரம் அற்புதங்களை அள்ளித் தரும் உன்னதத் திருநாளான தைமாத பூச நட்சத்திரத்தன்றுதான் முதலில் நீரும், அதிலிருந்து உலகமும் உயிர்களும் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்ய அன்னை உமையவளை வேண்டினார். உமையவள் தன் சக்தியின் மூலம் ஜோதியை வேல் வடிவில் உருவாக்கி முருகனிடம் கொடுத்தாள். இந்த வேல், பிரம்மவித்யா சொரூபமானது என்று சாஸ்திரம் கூறும். அந்த வேல் பிறந்தநாள் தைப்பூசத் திருநாள் ஆகும்.

நட்சத்திர வரிசையில் "பூசம்' எட்டாவது நட்சத்திரம். தை மாத பூசம் பெரும்பாலும் பெளர்ணமியில்தான் வரும். இந்நாளில் அனைத்து சிவன் கோயில்கள், ஆறு படைவீடுகள் உள்ளிட்ட முருகன் கோயில்களில் திருவிழாக்கள்தான்!

பூச நாளின் பிரதான தேவதை குரு பகவான். கோள்களில் ஞானம் தருபவர். அது போல் நட்சத்திரங்களில் பூச நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. ஆதலால் தைப்பூசத்தன்று புனித தீர்த்தத்தில் நீராடி, குரு பகவானா கிய பிரகஸ்பதியையும், குருவின் குருவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வழிபடுவதால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம்.

தைப்பூச விரத முறை: தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறுஉருத்திராட்சம்அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம்திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால்பழம்சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.

இவ்வாறு பெரும் சிறப்புக்குரிய நன்னாள் இலங்கை தமிழர்களால் பின்பற்றப்படுவது அவர்கள் தமிழ் மரபுகள் மீது வைத்துள்ள பக்திக்கு எடத்துக்காட்டு அல்லவா!

தமிழர்களின் புதிய வருடமானது தை மகள் வருகையுடன் ஆரம்பமாகிறது, இதனால்தான் நம்மட முன்னோர்கள் 'தை பிறந்தால் வழிபிறக்கும்' என்றார்கள். இந்த மாசத்தில் வருகின்ற தைப்பூச திருநாளில் 'புதிரெடுத்தல்', 'புதிருண்ணுதல்' எனும் பாரம்பரிய மரபுகள் மட்டக்களப்பு மாநிலத்தில் குறிப்பாக இருந்து வருதுங்க...
தைப்பூசத்தில் தான் மக்கள் புதிர் எடுப்பர். தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் 
என்பவற்றுடன் வயலுக்குச் சென்றுகிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.

பாத்திங்கனா புதிரெடுத்தல் என்பது தைப்பூச நாளில் விளைந்த வயலில் கதிர் எடுத்து, வீட்டின் முன்வாசலில் வைத்து அதன் பின்னர் நல்லநேரம் பாத்து வீட்டினுள்ளே எடுப்பதனைக் குறிக்கின்றது. இதில விசேசம் என்னென்றால் முந்திய வருடத்தில் எடுத்த பழய கதிரை புதிய பெட்டியினுள் எடுத்து அத்துடன் பணம்இ பொன்இ தங்கம், பாக்கு, வெற்றிலை, பூ மற்றும் திருநீறு என்பனவற்றையும் வைத்து அதனை வெள்ளை பட்டினால் மூடி கடவுளை பிராத்தித்து பின் இந்த பெட்டியோடு சென்று வெளியிலே இருக்கும் புதிய கதிரை சந்தோசமாக எடுத்து உள்ளே சாமி இருக்கும் அறையினுள் கொண்டுவருவார்கள்.
கொண்டுவந்த புதிரை  குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார். அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும்.  இதனை புதிருபொங்கல் என்றழைப்பாங்க. இந்த புதிரினைப் பொங்கியபின் விளக்குச்சோறு கூட்டி அதன் பின்னர் புதிய பொங்கலுடன் பால்இ பழம்இ சீனி இவையெல்லாம் போடடு குடும்பத்தலைவனால் பிசைந்து எல்லோரும் ஒன்றாக உண்ணுவர்..அத்தோடு அன்றைக்கு நல்ல கறிகூட்டி சந்தோசமாக உண்டு மகிழுவார்கள்... இவ்வாறான வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறிமுறையினை தமிழ் பண்பாடு தவிர எதிலும் காணமுடியாதங்கோ...

1 comments:

Unknown said...

அருமை, அருமையான விடயம். மீண்டும் இதை நினைவிருத்திக் கொள்ள வைத்தமைக்கு, மனமுவந்த நன்றிகள்.
தமிழர் பண்பாடு, பாரம்பரியம் என்றும் மறைந்துபோகக் கூடாது என்பதற்காய் நீங்கள் காட்டும் ஆர்வம் நன்றிகள். உறவுகளே தெரிந்து கொள்ளுங்கள்.

Post a Comment