ADS 468x60

19 April 2012

எந்தன் தேசத்தின் புகழ்

தேன் கதலி வருக்கன்
மா இளநீர் பெருகி
வான் பிளந்து மழை பொழிய
வயல் நிலங்கள் செழிக்கும்
நான் பிறந்த மட்டு மாநில
நல்ல தமிழ் நாடே


முந்திரிகை கொழித்து மணம்
மூக்கினுள் வந்து மோத

பந்தி வைத்து பசியாற்றும்
பண்புடைய தேன் நாடே
செந்தமிழில் முந்தி இருக்கும் திருநாடே
நீ வாழி வாழியவே....

11 April 2012

பிறந்த நிலமே மறந்து விடுமா!!


புதிய வானம் புதிய பூமி
என்னை அழைக்கிறதே!
இளமைக் கோலம் வசந்த காலம்
கண்ணில் தெரிகிறதே!
மட்டக்களப்பே! மட்டக்களப்பே!
தேன்சிந்தும் பூமி நீதானே
பிறந்த நிலமே மறந்து விடுமா
எனை ஈன்ற சாமி நீதானே

ஆற்றங்கரையும் அசையும் இலையும்
என்னைச் சுகம் கேட்குதே
காற்று வெளியும் கடலின் ஒலியும்
என்னைக் கண்டு துள்ளுதே

ஒரு அன்னையைப் போல்
சிறு பிள்ளையைப் போல் - மண்ணில்
பாசம் உன்டாகுதே
ஒரு பறவையைப் போல்
இரு சிறகினுக்குள் - என்னில்
நேசம் கொண்டாடுதே

சொந்த மண்ணில் சோகம் நேர்ந்தால்
கைகள் கொடுத்திடுவோம்
வந்தோர் எல்லாம் வாழ வைத்த
சொர்க்கம் காத்திடுவோம்