ADS 468x60

18 May 2012

வானம் பார்த்த பூமி


நடு விரல் சுழுக்கு போல்
மேலும் ஆசையாக
உன் பார்வையும் இதயத்தில்
இன்னும் வேண்டும் என்ற...
ஏக்கத்தில்....

நானும்,
வானம் பார்த்த பூமியாக,
பிம்பங்களில் மட்டும்,
தோன்றி மறையும் -உன்னை,

கனவுகளின் வெக்கையில்
காய்ந்து கிடக்கும் -என்
இதயத்துக்கு- உன்
கடைக்கண் பார்வையும் கடும் மழைதான்....

13 May 2012

ஏய் நிலவே


தூரப் பார்க்கிறேன்- அந்த
நிலாவின் அழகை
ரசிப்பதற்க்காக மட்டும்தானா! என்று
ஆச்சரியத்துடன்!!

உருவம் இல்லாத- என்
உள்ளம் சொன்னது!
நீ நினைத்தால்
நிலவிலும் குடியிருக்கலாம் என்று.

அந்த நிலவுக்கு
வழிகள் தேவையில்லை
விழிகள் மட்டும் போதும்.
சாந்தமான பூமி
குளிர்ந்த முகம்
இதமான காற்றின் அரவணைப்புடன்
நீ நினைத்தால்
நிலவிலும் குடியிருக்கலாம். என்று...

ஓ அந்த நிலா...
என் பக்கம் வருமா!!




12 May 2012

மட்டக்களப்பில் பிள்ளைகளை பெற்றோர்கள் சுமையாக நினைக்கின்ற நிலை

'எம்  எதிர்காலம் கல்வியின் எதிர்காலத்தினைப் பொறுத்தே அமையும்' என நாம் அடிக்கடி சொல்லி வருகின்றோம்;. இந்நாட்டின் ஒட்டுமொத்த தேசிய வருமானத்தினை இட்டு பெருமையடைகிறார்கள், இருந்தபோதும் எம்மக்கள் கல்வியறிவின்மையால் ஆண்டுதோறும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவது பெரும்பாலும் புரிவதில்லை. காலம் செய்த கோலத்தால், குறிப்பாக தமிழ் இனம் கல்வியை துலைத்து விட்ட நிலையில் இன்று சமுக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் மிகப் பின்னடைந்து இருக்கின்றமை வேதனையே. இருப்பினும் இன்று படிப் படியாக இவற்றை உணரத் தொடங்கி இருக்கும் எமது உறவுகள் கை கொடுக்க தொடங்கியிருப்பது வரவேற்க்கத்தக்கதே!