ADS 468x60

11 August 2012

கிழக்கின் அடுத்த முதலமைச்சர் யார்? எதிர்பார்ப்பை கிழப்பியிருக்கும் தேர்தல் களம்


நடைபெற இருக்கும் கிழக்கு மாகாண சபை தேர்தல் வரலாற்று முக்கியம்வாய்ந்த போட்டி நிறைந்த ஒன்றாக இருப்பதனால்தான் கிழக்கின் அடுத்த முதல்வர் யார் என்கின்ற பெரிய கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இலங்கையில் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டு, அதிகாரங்கள் பரவலாக்கப்படும் நடை முறை இருந்து வந்தது. இதன் மூலம் அதிகாரங்கள், பொருளாதாரம், மற்றும் வளங்கள் நாட்டின் எல்லா எல்லைகளிலும் சமமாகக் கிடைக்கப் பெற 1978 ஆம் ஆண்டு யாப்பின் 13ம் இலக்கச் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபை முறை சட்டபூர்வமாகக் கொண்டு வரப்பட்டது.. இலங்கையில் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படும் மாகாண சபைகளின் பின்னணி என்ன? அவற்றில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள், அவை செயலற்று இருந்தமை, அதன்பின் நடத்தப்பட்ட தேர்தல்கள் மற்றும் இவற்றில் கிழக்கிலங்கையில் தமிழர்களின் நிலைத்து நிற்ப்பதற்க்கான தந்திரோபாய நகர்வுகள் என்பன பற்றி ஆய்வு செய்யப்படுகிறது.

1988 இல் அப்போது இருந்த E.P.R.L.F இயக்கத்தின் உறுப்பினர் வரதராஜப்பெருமாள் முதல்வராக அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் த.ஈ.வி, புலிகளின் யுத்தம், இந்திய இராணுவ வெளியேற்றம் என்பனவற்றுடன் இச்சபை 1990 இல் கலைக்கப்பட்டு தற்க்காலிகமாக கொழும்பில் இருந்து நிருவகிக்கப் பட்டு வந்தது.

கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டமையும் மாகாண சபைக்கான தேர்தலும்.
இவ்வாறு செயலிழந்து கிடந்த இந்த வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் செயற்ப்பாடுகள் குறித்து ஒக்டோபர் 16, 2006 சுப்றீங்கோட்  மூலம் வடக்கு மாகாணம் வேறாகவும் கிழக்கு மாகாணம் வேறாகவும் பிரிக்கப்பட்டது. டகிழக்கு இணைக்கப் பட்டது போதிய திருப்தியை தராத காரணத்தினால் இரு நிருவாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டது. இதனை சட்டப்படி செலலிழந்த செல்லுபடியாகாத ஒன்று என வர்ணித்து இருந்தனர்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்துக்கான 2008ம் ஆண்டின் தேர்தல் மே 10, 2008 இல் 18 வருடங்களின் பின்னர் இரண்டாவது தடவையாக முதலாவது கிழக்கு மாகாணத்துக்கான மாகாண சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்க்கான மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் 980000 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் 18 அரசியல் கட்சிகள் மற்றும் 58 சுயேட்சைக் குழுக்களில் இருந்து 1342 போட்டியாளர்கள் முன்னிறுத்தப்பட்டு மாபெரும் போட்டி இடம் பெற்றது. இதில் 20 ஆசனங்களை ஆழும் கட்சி கைப்பற்றி ஆட்சியை தனதாக்கி அதிலும் ஒரு தமிழன் அமோக வாக்குப் பலத்தினால் முதலமைச்சர் ஆனமை வரலாறு சொல்லும் கதை. இதில் ஒன்றை விளங்கிக் கொள்ளும்போது கிழக்கில் கிழக்கு தமிழ் அரசியல்வாதி வருவதற்க்கான சாத்தியம் அறைகூவப்பட்டது பெருமைபடக்கூடிய ஒன்றாக இருந்தது.
அட்டவணையில்  உள்ள புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்ப்போமானால் சில தமிழர்ளின் இடங்களில் புள்ளி விபரக் கணக்கெடுப்பு நடாத்த படாத விடத்தும் 1881 ஆம் ஆண்டில் இருந்து 2012 ம் ஆண்டு வரையான கணக் கெடுப்பின் படி தமிழர்கள் தான் கிழக்கிலங்கையில் அனேகம் காணப்பட்டிருக்கின்றனர் எனவே, எமக்குள் இருக்கும் பொது விளக்கம் இந்த கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அனேகம் வாழும் பிரதேசத்தினில் ஒரு தமிழன் ஆட்சி செய்வது ஒன்றும் பெரிய வேலை இல்லையே! என்பதுதான்.

இன்றய அரசியலில் ஒன்றுமே இல்லாது இழந்து போன தமிழர்களை காப்பாற்ற அரசியலை பயன்படுத்தும் தந்திரோபாயங்கள் தேவை. வெறுமனே தமிழர்களை காப்பாற்றுகிறோம் அவர்களது உரிமைகளைக் காப்பாற்றுகிறோம் என்று சொல்லி 'இருந்ததையும் இழந்தாய் போற்றி' என்ற கணக்கில் இன்னும் இன்னும் ஏமாறாமல் அரசியல் சூட்சுமத்தின் ஊடாக தமிழர்களுக்கு விமோசனம் கொடுக்கும் வகை செய்தல் இன்றய தேவை.

20012 Election Result
 கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக வோணஸ் ஆசனங்கள் அடங்கலாக 37 ஆசனங்கள் காணப்படுகின்றது. ஆதனை மேலுள்ள அட்டவணையில் காணலாம். அதன் முழுவிபரமும் குறிப்பாக எமது கிழக்குமாகாண ஆசன விபரங்களும் எமது வாக்களிப்போர் விகிதமும் சொல்லும் உன்மையை பின்வரும் தரவுகள் காட்டி நிற்கின்றது.

மொத்த ஆசனங்கள் - 37
மக்களால் நேரடியாக தெரிவு - 35
மேலதிக ஆசனங்கள் - 02

அம்பாறை மாவட்டம்( 14 ஆசனம்)
தமிழ் வாக்காளர்கள் - 69783 ( 2ஆசனம்)
முஸ்லிம் வாக்காளர்கள் -209350 (7ஆசனம்)
சிங்கள வாக்காளர்கள் -157013 (5ஆசனம்)
மொத்தம். -436146(14ஆசனம்)

மட்டக்களப்பு மாவட்டம்( 11 ஆசனம்)
தமிழ் வாக்காளர்கள் -255115 (7 or 8ஆசனம்)
முஸ்லிம்வாக்காளர்கள்-89635(4 or 3ஆசனம்
சிங்கள வாக்காளர்கள் -1600(இல்லை)
மொத்தம். -346350(11ஆசனம்)

திருகோணலை மாவட்டம்(10 ஆசனம்)
தமிழ் வாக்காளர்கள். -88607(4ஆசனம்)
முஸ்லிம் வாக்காளர்கள் -83684(3ஆசனம்)
சிங்கள வாக்காளர்கள். -73839(3ஆசனம்)

மொத்த வாக்குகளின் அடிப்படையில்
தமிழ் வாக்குகள்-413505 (13 or 14ஆசனம்)
முஸ்லிம்வாக்குகள்-382669(14 or 13ஆசனம்)
சிங்கள வாக்குகள்-232452(8ஆசனங்கள்)

அத்தோடு அதிக வாக்குகள் பெறும் கட்சிக்கு 2 ஆசனங்கள் மேலதிகமாக வழங்கப்படும். ஆனால் ஆட்சியமைப்பதற்கு 20 ஆசனங்கள் தேவை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்

அன்று தமிழ் வாக்காளர்களிடையே காணப்படும் அடையாளம் காணப்பட்ட பிரச்சனைகள்.
அனேகமான கட்சிகளின் இறக்குமதி
அரசியலில் எதுவித நேரடி இலாபத்தினையும் சம்பாதிக்காமை
அரசியலில் இருக்கும் குறைந்தபட்ச விருப்பம் மற்றும் அச்சம்.
வாக்களிப்பு பற்றிய சரியான தெழிவின்மை
இதனால் நிராகரிக்கப்படும் வாக்குகள் குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் அதிகளம் காணப்படுகிறது.
பொருளாதார வீழ்ச்சி

சாதாரண மக்கள் உன்மையில் குழப்பத்தில் இருப்பதனைக் காணக்கூடியதாய் இருக்கிறது ஏனெனில் சென்ற மாகாண சபைத்தேர்தலில் 18 அரசியல் கட்சிகள் மற்றும் 58 சுயேட்சைக் குழுக்களில் இருந்து 1342 போட்டியாளர்கள் பாமர மக்களிடம் வாக்கு கேட்டுச் சென்றனர். இதில் குறிப்பாக தமிழ் மக்களுக்கு மாடும் தெரியவில்லை மானும் தெரியவில்லை அதனால் பெறுமதியான வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

யுத்தம், இயற்க்கை அனர்த்தம் என்பன தவிர இந்த மக்களை தங்களது பிளைப்புக்காக ஏமாற்றிய கூட்டம் என்பனவற்றினால் இருக்க பிரச்சினைகளும் கூடியதே தவிர எதுவித சுதந்திரத்தினையோ, தங்களது பிள்ளைகளின் மற்றும் பிரதேசங்களின் அபிவிருத்தியினையோ இல்லாவிட்டால் பூரணமான உரிமையினையோ இந்த மக்கள் கண்டிருக்கவில்லை. வெறுமனே பிச்சைக்காரர்களாக மாறி இலங்கையிலே 20விகிதம் வறுமையில் வாடும் மக்கள் கூட்டத்தை கொண்ட கெதியற்ற சமுகமாக மாறி இருந்தனர் இந்த மட்டு மாநில மக்கள். இந்த காரணங்களால் தழிழ் மக்கள் பெரும்பாலும் வாக்களிப்பதனை புறக்கணித்திருந்தனர்.

எமது முஸ்லிம் சகோதர சமுகத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது, தமிழ் மக்களுக்கு இந்த அரசியலில் அவளவு விருப்பம் இருந்திருக்கவில்லை.   இந்தக் காரணங்களால் வாக்களிப்பு பற்றிய தெழிவு எமது மக்களுக்கு மிக மிக குறைவாகவே இந்த மூன்று தசாப்தகாலத்தில் இருந்து வந்திருக்கிறது. இது மிகமோசமான தாக்கத்தினை எமது தமிழ் சமுகத்துக்கு ஏற்ப்படுத்தி இருக்கிறது. தவிரவும் தாக்குதல்கள், அடாவடி, காரியாலய சிதைப்புகள் மற்றும் வாக்குமோசடிகள் என்பனபோன்ற இன்னோரன்ன காரணங்கள் மக்களிடையே அச்சத்தினை ஏற்ப்படுத்தி இருந்தது.
மேலுள்ள அட்டவணையில் தபால் மூல வாக்குகள் கூட 2055 ஆக அதிக அளவில் தமிழர்கள் செறிந்துவாழும்  மட்டக்களப்பில் நிராகரிக்கும் அளவுக்கு எமது வாக்குப்பலம் அமைந்திருக்கிறது. ஆனால் முஸ்லிம்கள் செறிவாக இருக்கும் அம்பாரையில் அது வெறும் 438 ஆக மட்டும் இருப்பதனைக் காணலாம்.
அதுபோல மேலுள்ள அட்டவணை மூலம் இன்னொரு விடயத்தினை புரிந்துகொள்ளலாம் அதாவது, 10.42 விகிதமான அதிக வாக்குகள் மட்டு மாவட்டத்திலும் வெறும் 7.16 விகிதமான வாக்குகள் அம்பாரை மாவட்டத்திலும் சென்ற தேர்தலில் நிராகரிக்கும் அளவுக்கும், 128507 பேர் வாக்களிக்க செல்லாமல் நிராகரித்தமையையும் வைத்து நோக்கினால் 39விகிதமான வாக்குகள் மட்டக்களப்பில் அளிக்கப்படாமலும் ஒரு தமிழ் பிரதிநிதியை தெரிவுசெய்து முதலமைச்சராக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகண சபையின் ஆதிக்கத்தின் தேவைப்பாடும் பொருளாதார வளர்ச்சியும்
ஓரு நாட்டின் அரசியலையும் செழிப்பினையும் நிர்ணயிப்பது அந்த நாட்டின் பொருளாதாரமாகும். இங்கு 2008 இன் மாகாண சபை தேர்தலுக்கு முன்னும்    பின்னும் நாட்டின் பொருளாதார நிலைமையில் என்ன மாற்றம் இருந்தது என்பதனை சற்று நோக்க வேண்டும். 1980களில் மாகாணத்தின் மொ.உ.உற்ப்பத்தியில் அதன் பங்களிப்பாக 14 விகிதமாக இருந்து இடைப்பட்ட யுத்தகாலத்தில் அது 8 விகிதமாக குறைவடைந்திருந்து மீண்டும் 2008 காலப்பகுதியில் மொ.உ.உற்ப்பத்தியில் 16 வீதமாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண சபை அதிகாரம் கிடைத்தவுடன் கிழக்கின் உதயம் திட்டம் ஜனாதிபதியின் ஆலோசனைக்கிணங்க ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் கீழ் புதிய நவீன வீதிகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், குடிநீர் விநியோகத்திட்டங்கள், நீர்ப்பாசனத்திட்டங்கள், புதிய நகர அபிவிருத்தித் திட்டங்கள் அத்துடன் தொழில் நுட்ப்ப அபிவிரத்தித் திட்டங்கள் போன்ற பாரிய பொருளாதார மலர்ச்சி ஏற்ப்படுத்தப்பட்டது. இத்துடன் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள், புதிய சுற்றுலா வலயங்கள், நகர அபிவிருத்தித் திட்டங்கள் என்பன உருவாக்கப்பட்டமையை மறந்துவிடவோ மறுத்துவிடவோ முடியாது. இவை காரணமாக இம்மாகாணத்தில் 70 விகிதமாக செறிந்து வாழுகின்ற விவசாயிகளில் 2006 களில் 56 விகிதமாக இருந்த விவசாய உற்ப்பத்தி இப்போது 80 விகிதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பொருளாதார மாற்றங்கள் எல்லாம் இதற்க்கு முன் ஒரு போதும் காணாத அளவுக்கு எமது மாகாணத்தில் இடம்பெற்றுள்ளதெனின் அதற்க்கு காரணம் பலம் வாய்ந்த அரசியல் பின்னணி என்றால் யாராலும் மறுக்க முடியாது. அதுவும் இந்த மாகாணத்தினை நன்கு உணர்ந்திருக்கின்றவர்கள் அவர்களது சொந்த சிந்தனையில் அவர்களது மக்களை ஆழும்போது அது பிரயோசனமானதாகவே இருக்கும்.

தழிழர்களின் வாக்குப் பலமும் நம்பிக்கையீனமும்.
ஒப்பீட்டளவில் 40 விகிதமாக கிழக்கு மாகாணத்தில் செறிந்து வாழ்கின்ற தமிழர்கள் வாக்குப் பலம் கொண்டவர்கள். இருப்பினும் சென்ற தேர்தலில் அவர்களில் 39 விகிதமானவர்கள் வாக்களிக்காது இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதுபோன்று அளிக்கப்பட்ட வாக்குகளில் 21088 வாக்கு நிராகரிக்கப்பட்டமை இன்னும் வாக்களிப்பதில் எம்மக்களுக்கு இருக்கும் தெழிவின்மை புரிகிறது. 

தமிழர்கள் ஏமாற்றுப்படும் இனம் என கூறும் அளவுக்கு அவர்களது கடந்த கால அரசியல் இருந்து வந்தது. குறிப்பாக தமிழ் மக்கள் ஓரிருவரது சுயலாபத்துக்காய் விலைபோனதை அவர்கள் இன்று நன்கு உணர்ந்துள்ளனர்.  கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது கால் பங்கிற்கு மேலான தழிழர்கள் வாக்களிக்க வராது ஏனோதானோ என்று புறக்கணித்திருந்தனர். இருந்தும் தழிழர்கள் மூலம் ஒரு முதல் அமைச்சரை வரவைக்கலாம் என்பது எமக்கு கிடைத்த ஒரு பாடமாக இருக்கலாம். 

உன்மையில் தழிழன் ஒருவன் மீண்டும் மீண்டும் முதல் அமைச்சராக வரவேணும் எனின் தழிழை நேசிப்பதோடு அல்லாமல், உன்மையாக மக்களிடையே சென்று பணிபுரியக் கூடிய,  கொடுத்த வாக்குகளை நிறைவேற்றக்கூடிய, விலைபோகாத, இனத்துவ அடயாளங்களை பேணிகப்பாதுகாக்கும்;, தனது சமுகத்தின் கல்வி, கலாசாரம், பண்பாடுகள் மற்றும் நாகரிக வரம்புகளை சரிவடையாமல் பேணக்கூடிய ஒருவர் தேவை.

இவை தவிர மக்களிடையே வாக்களிக்கக் கூடிய ஆர்வத்தினை தூண்டும் விழிப்புணர்வினை ஏற்ப்படுத்த வேண்டும். அத்துடன் மக்களிடையே தேர்தல் மூலம் கிடைக்கும் பலாபலன்களை எடுத்துச் சொல்ல வேண்டும். உன்மையை நன்கு ஆராய்ந்து அறியக்கூடிய அரசியல் பக்குவத்தினையும் அதன் முக்கியத்தினையும், பொது அமைப்புகள், நலன்விரும்பிகள் பக்கச்சார்பு இல்லாத வகையில் எமது மக்களிடையே எடுத்தியம்ப வேண்டும். அதன் பின்னர் இம்மாகாணத்தில் இருக்கின்ற செறிவான தமிழ் வாக்குகள் நம்பிக்கையான ஒருவருக்கு அளிக்கப்பட வேணும். அதன் மூலம் மட்டுமே நாம் நமக்கான ஒரு பிரதிநிதியை உருவாக்கிகொள்ளலாம், இந்த உன்மையை படித்த மக்கள் முதல் பாமர மக்கள் வரை விளங்கிக் கொள்வார்களாயின் அடுத்தடுத்து கிழக்கில் ஒரு தமிழ் பிரதிநிதியை முதலமைச்சராக கொண்டுவந்து அத்தனை நன்மைகளையும் பெற்று இம்மக்களின் சுபீட்ச்சத்துக்கு வழிகோலலாம் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. 

கிழக்கில் தமிழர்களைப் பொறுத்தவரை அனைவரும் ஓரணியில் நின்று ஒரு கட்சிக்கு 100% வாக்களித்தால் 13அல்லது 14 ஆசனங்களையே பெற முடியும். ஆனால் தமிழர்களின் வாக்களிப்பு வீதம் 50 தொடக்கம் 55 வீதமாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் தமிழர்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்க வேண்டிய முயற்சிகளை மேற்கொள்வதோடு கிழக்குத்தலமைகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டியது கிழக்குத் தமிழன் ஒவ்வொருவரினதும் கடமை.

இன்றய நிலையில் அனைத்து மக்களும் ஒரு குடையின்கீழ் நின்று எமது மக்களின் அரசியல், சமுக, பொருளாதார வரட்சியை இல்லாது காக்கும் கைங்கரியம் அனைவரும் சிந்தித்து முடிவெடுக்கவேண்டியதொன்றாகும். மக்களின் மனதில் இடமற்றவர்கள்தான் பாராளுமன்ற மற்றும் மாகாண சபைத்தேர்தல்களில் போட்டியிட்டு தோற்றுப்போய் இருக்கிறார்கள். இவர்கள் காலத்தாலும், மக்களாலும் நிராகரிக்கப்பட்டவர்கள் எனத் தெரிந்தும், திரும்பவும் இவ்வாறானவர்கள் கோபிப்பார்கள் என்பதற்க்காக அவகளை வேட்பு மனுத்தாக்கல் செய்ய அனுமதிப்பார்களானால், இன்று ஒதுங்கியிருக்கும் 50% விகிதம் 75% விகிதமாகி பிச்சை எடுக்கும் தமிழினத்தை பிரசவிக்கும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இதில் இருந்து விடுபட பல வழிகள் இருக்கின்றன. 

இந்த வேட்பாளர் தீர்மானத்தினை மக்களிடம் ஒப்படையுங்கள், அவர்களது பிரதிநிதிகளை அவர்களே தீர்மானிக்கட்டும், அதன்பின் வருகின்றவற்றுக்கு அந்த மக்களே பொறுப்பானவர்களாக இருக்கட்டும். அரசியலில் தேவையான அளவு தள்ளாடுகின்றவர்கள் இருக்கிறார்கள். அது போதும் தளராத இளயோர்களை, எங்கு சென்றும் எந்த மொழியிலும் எடுத்துரைக்கக்கூடிய, மக்களின் மனதில் இடம்பிடித்த படித்தவர்களை நிறுத்தி எமது கிழக்கின் மானத்தை காப்பாத்துங்கள். இன்னும் மட்டக்களப்பான் மாடன் எனும் இழிபெயரை உங்கள் தெரிவை வைத்து திணித்துவிடாதீர்கள்.

எம்மக்களிடையே பாரிய சவாலாகவும் கேள்விக்குறியாகவும் இருக்கும் அடுத்த கிழக்குமாகாண முதலமைச்சர் யார் என்கின்ற கேள்விக்கான பதில் வரலாற்று மாற்றத்தினை ஏற்ப்படுத்த இருக்கின்றது. இந்த வரலாற்று வெற்றியை ஆய்ந்து உணர்ந்து செயலாற்றவதன் ஊடாகவே தமிழர்கள் வாழ்வு வளம்பெறும் என்றால் மிகையாகாது. இதனை இங்கு வாழ்கின்ற மக்கள் மாத்திரமல்ல வெளிநாடுகளில் வாழுகின்ற எம்மகளும் உணர்ந்து செயற்ப்பட தலைப்பட வேண்டிய தார்மீக பொறுப்பு உண்டு அதுதான் தமிழரின் அடுத்த தசாப்தத்துக்கான காப்பீடாக அமையும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. ஆகவே சிந்திப்போம் செயற்ப்படுவோம்.

0 comments:

Post a Comment