ADS 468x60

26 September 2012

மட்/பண்டாரியா அ த க பாடசாலைக்கு சீருடை உதவி


Image may contain: 19 people, people standingயுகங்கள் பல கடந்து மனிதன் நவீன யுகத்தில் வாழ்ந்து வருகிறான். விவசாய யுகம் (Green era), கைத்தொழில் யுகம் (Blue era), அறிவு யுகம் (Knowledge era) என காலம் கடந்தே போய்விட்டது. கல்வியை வறுமை பாதித்து வருவதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்து உள்ளது.


மட்டக்களப்பினை பொறுத்தமட்டில் மட்டில்லா கலை, கலாசாரம் மற்றும் கல்வி கேள்விகளில் சிறந்த புண்ணிய பூமியாக திகழ்ந்த இடம். ஆனால் அவை யுத்தம் மற'றும் வறுமை செய்த பயனாக பாழ்பட்டு கெட்டு குட்டிச் சுவராகி விட்டது எம்மக்கள் வாழ்க்கை. இருப்பினும் இவற்றை அக்கறையுள்ள எம் ரெத்தத்தின் ரெத்தங்கள், உடன் பிறப்புக்கள் இவற்றை உணர்ந்து சீர்செய்ய ஒன்று கூடி வருவது வரவேற்க்கத்தக்கதாகும். எங்கள் முகப்புத்தக குழுமத்தின் விசுவாசி ஒருவர் தந்துதவிய பணத்தில் இந்தச்சிறார்களின் துணிகள் தைத்து புதிதாக வழங்கப்பட்டது. மட்/பண்டாரியா அ த க பாடசாலைக்கு திடீர் எனச் சென்று பார்த்தேன் அங்கு அழகாக தைத்த ஆடைகளுடன் அழகு பறவைகளாக குதூகலித்த குழந்தைகளுடன் நானும் எனை மறந்து ஒரு கணம் குதூகலித்து விட்டேன். 

வறுமை காரணமாக அதிகமான மக்களால் கல்வி அடையப்பட முடியாமல் போனமையே அதை இலவசமாக வழங்க வேண்டும் என இலங்கை உட்பட உலகின் பல அரசுகள் சிந்திக்கத் தொடங்கின.

எமது நாட்டிலும் இலவசக் கல்வியின் தந்தை c.w.w. கன்னங்கர அவர்களால் இலவசக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டதும் இந் நன் நோக்கினாலேயே ஆகும்.

கற்றல் வறுமைக்குத் தடையா? வறுமையோடு போராடும் மனிதர்கள் குறிப்பாக, இளமைப் பருவத்திலும் மாணவப் பருவத்திலும் கல்வியிலிருந்து இடையில் சறுக்கி விழுவதற்கு வறுமை ஒரு காரணமாக இருக்கின்றது. விதிவிலக்காக வறுமையோடு போராடிக் கொண்டே அதன் பொறியில் சிக்கி விடாது, தன்னம்பிக்கையோடு தடைகளைத் தாண்டிச் சென்று முன்னேறியவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

உலகில் மிகப் பெரும் சாதனைகளை நிகழ்த்தியவர்களும் பரந்தளவிலான செல்வாக்கைப் பதித்தவர்களும் வறுமையோடு பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். வாழ்க்கைக்குக் குறுக்காக வறுமை நின்ற தருணத்தில் அதனைக் கடந்து சென்று காலத்தால் அழியாத சாதனையை எதிர்கால சந்ததியிடம் கையளித்துச் சென்றுள்ளனர்.
ஆகவே நாங்கள் சின்ன சின்னதாக இவ்வாறு எடுத்தேத்துவது கடவுளுக்கு செய்யும் தொண்டுக்கும் மேலாகும், எனவே ஒன்றிணைந்து எமது கல்விச் சமுகத்தினை கட்டியெழுப்புவோம்.

0 comments:

Post a Comment