ADS 468x60

29 September 2012

சில்லிக்கொடியாற்றில் ஒரு கல்விச்சுடர்..


புள்ளங்கள படிப்பிச்சு ஆளாக்கணும்இ இந்த பக்கத்தில நாங்களெல்லாம் மாட உளச்சி உளச்சி தேஞ்சி போனதுதான் மிச்சம். என்ட புள்ளங்களாச்சும் படிப்பிச்சு இஞ்சால பக்கத்து சனங்கள நல்லா படிப்பிக்க வைக்கணும். நாங்க பட்ட துன்பம் எங்களோட போகட்டும் இந்தக் குஞ்சுகளயாச்சும் உருப்படியாக்கணும்' என்று தம்பிராச தனது நிலைபற்றி பேசினார்.

சில்லிக்கொடியாறு கொக்கட்டிச்சோலைக்கு தெற்கே இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள ஒரு விவசாயக் கிராமமாகும். அங்கு 5 குழந்தைகளுடன் வாழ்து வரும் இவர் தங்களது வாழ்வாதாரமாக வயற்செய்கைஇ பசு வளர்த்தல் என்பனவற்றை செய்து வருகின்றனர். மூத்த பெண் திருமணம் செய்து விட்டார். ஏனைய அனைவரும் கல்வி கற்று வருகின்றனர்.
இரண்டாவது குழந்தைதான் கலைச்செல்வி. இந்தக் பிள்ளை 2011 இல் உயர்தரப் பரீட்சையில் கணிதப்பிரிவில் தோற்றி வின்சற் பாடசாலைக்கு மாத்திரமல்ல அந்த கிராமத்துக்கும் இந்த மட்டு மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்து தந்துள்ளார். மாவட்டத்தில் 6வது நிலையினை பெற்று சிறந்த மாணவியாக திகழ்ந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இந்த பிள்ளையை கவனித்து எடுத்தேத்துவது எங்கள் எல்லோரதும் கடமையல்லவா! 
' நான் இராப்பகலாக உழைக்கிறேன்இ எழய பிள்ளையைதவிர எனக்கு எல்லாம் பொட்டக் குஞ்சுகள் தான் மகன்இ அதால நான் மட்டும்தான் இந்த பிள்ளைகள படிப்பிக்கிறத்துக்கு பாடுபடுறன். இருந்தாலும் இவ கெம்பசுக்கு போனால் எப்படி இந்த பெரிய செலவ நிவத்தி செய்யிற என்ற கவல மட்டும்தான் எனக்கு இருக்கம்பி' என்று கூறினார் தகப்பன். . 

எது எவ்வாறு இருந்தாலும் இந்த தகப்பனதும் இந்த குடும்பத்தினதும் வைராக்கியத்தினையும்இ ஈடுபாட்டினையும் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. அந்தப் பிள்ளையை நான் சென்று பாராட்டி வாழ்த்தும்போது தந்தை தம்பிராசாவின் கண்கள் ஆனந்தக் கண்ணீரை வாரி இறைத்தது. கலைச்செல்வியிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன் ' தங்கச்சி நீங்கள் கடவுள் புண்ணியத்தில் படித்து ஒரு எந்திரியாக வெளிவரும்போது நீங்கள் இந்த மக்களுக்காக சில உதவிகளை செய்யவேண்டும். குறிப்பாக உங்களைப் போல் படித்த குழந்தைகளை இங்கு உருவாக்குவீர்களா' எனக் கேட்டேன் கண்ணீர் மல்க 'ஆம் கட்டாயம் செய்வேன் அண்ணா' என எனக்கு உறுதியளித்தது இன்றும் எமது குழந்தைகளின் நல்ல எதிர்காலம் தொலைவில் இல்லை என்பதை பறைசாற்றிற்று.

1 comments:

Anonymous said...

Happy to hear that Batti poeple are becoming enthusiastic about education... We must assist such people....

Post a Comment