ADS 468x60

26 December 2013

சுனாமி

காலத்தின் தலைகீழ் மாற்றத்தில்
மனிதன் மாத்திரமல்ல
நீயும் எமக்கு எதிரி
வருடங்கள் உருண்டு
ஒளிந்து கொண்டாலும்-நீ
வந்து போன நாள்
இருட்டித்துக் கொள்ளுகின்றது..

மாந்திப் போகாத நினைவலைகள்
சாந்தி சாந்தி எனப் பகரட்டும்---

24 December 2013

யாவரும் மகிழ்சி கொள்வோம்!!.

மெசியா மெசியா!
யூதர்கள் அழைத்தனர் அன்று,
நானும் ஒரு இடையன்,
அவலம், அவமானம்,
சவால்கள், சங்கடங்கள்,
பாவம்,  துரோகம்
இவற்றுடன் களைத்துவிட்டேன்.....

பாவ அடிமைத்தனம்,  அடக்குமுறைகளில்
இருந்து இன்னும் மீளாமல்...
அருவருப்பான, எளிமையான,
துன்பம் நிறைந்த, ஒதுக்கப்பட்ட
இடையன்  என்னிடம்,
இறை மகனே வாருவாயா!

என்னிடம் உன் வருகை சொல்ல
வான தூதர்கள் கிடையாது,
செருக்குடையோர் தலைக்குனிவும்,
வலியோரின் வலு இழப்பும்,
எழியோரை உயிர்த்தெழுதலும்,
உன் வருகையால் நிறைவேறட்டும்,
மகிழ்ச்சி பிரகாசிக்கட்டும்
விடிவெள்ளியாக எனக்கு
வெளிச்சம் காட்டு!!

காட்டுப்பாதையின் முட்புததர்களை
காண்பதற்க்காய்
ஒளியை ஏற்று!!...
என்நாளும் இன்னாளாய் இருக்க
தேவனே உன்னை பிரார்த்தித்து
அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்....

10 December 2013

புன்னகை மட்டும்
அன்பு கனத்துவிட்டுப்போகும்
மனதையும் கரைய வைக்கிறது
பொறுமை நம்மை
அடிக்க ஏங்குவோர்கு ரணமாகிறது
எழிமை எல்லோரையும்
நம்மில் விருப்பம் கொள்ளச் செய்கிறது
புன்னகை மட்டும் 
வரண்ட உள்ளங்களுக்கு மழைத்துளியாகிறது..
மழைத்துளியாக இல்லாவிட்டாலும்
மிருகங்களாக மாறாமல் இருப்போம்
ஏனெனில் அவை புன்னகைப்பதில்லை

23 November 2013

மட்டு மாவட்டத்தில் ஒட்டுமொத்தத்தில் கடந்த ஆண்டு 1102 மாணவர்கள் இடைவிலகள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக இடைவிலகும் மாணவர்கள் (339) மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் உள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த கால யுத்தம்இ வறுமை காரணமாக பின்தங்கிய கிராமங்களை அதிகமாகக் கொண்டுள்ளமை இதற்கு காரணம் என்று சொன்னால் மட்டக்களப்பின் மத்திய வலயத்துக்கு (195) என்ன நடந்தது?? 
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக இடைவிலகும் மாணவர்கள் (339) மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் உள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த கால யுத்தம்இ வறுமை காரணமாக பின்தங்கிய கிராமங்களை அதிகமாகக் கொண்டுள்ளமை இதற்கு காரணம் என்று சொன்னால் மட்டக்களப்பின் மத்திய வலயத்துக்கு (195) என்ன நடந்தது?? 

இன்றய கல்வியில் இருக்கும் அவநம்பிக்கை இதற்கு ஒரு காரணம். எவளவோ முதுமானி வரைக்கும் படித்துவிட்டு பட்டதாரிப்பயிலுனர்ளாக இருப்பது அவர்களில் உள்ள பிழையா அல்லது அந்தக் கல்வியில் உள்ள தவறா என இன்றய தலைமுறை சிந்திக்கலாம். தொழில் தான் இன்றய கல்வியின் முதல் இலக்குமேஈ ஆனால் இந்தக் கல்வியால் அந்த இலக்கை எட்டமுடியவில்லையே என்பதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்கள் கண்முன் காட்சி தருவதும் நகர் புறங்களில் கல்வியினை தொடர முடியாமல் இருப்பதற்க்கான காரணமாக இருக்கலாம், சாதாரண தரம் முடித்தபின்பே அவர்கள் தொழில் சார் கல்வி அல்லது பயிற்சியுடன் கூடிய தொழில் போன்ற புதிய உத்திகளை கையாண்டு உழைக்கும் மார்க்கத்தினை நாடி விட ஆரம்பித்துள்ளதனைக் காணலாம்.

கல்வியை மாற்றவேண்டும் அது நடைபெறவில்லை அதனால் தானாக மாறுகின்றனர் இது இடைவிலகலுக்கு முழுக்காரணமும் இல்லைதான் ஆனாலும் பெரிய பங்கு இந்தத் தலைமுறையினரின் நியாயமான மாற்றம் புறக்கணிக்கதக்கதல்லவே!
"சமுக கலாசார சீர்கேடுகள் என்ற பேரில் வயிற்றுப்பசியாறும் ஒரு துரதிஸ்ட்ட பெயரினை எமது மாவட்டம் பெற்றுள்ளதோ"


  82,234 குடும்பங்கள் கிட்டத்தட்ட 1/5பகுதியினர் மாத வருமானமாக 1000 க்கும் குறைவாகப் பெறுகின்றமை வறுமையில் வாடுகின்றவர்களின் அதிகப்படியான எண்ணிக்கையை சுட்டிக்காட்டுகின்றது. யுத்தம் நடைபெற்ற வடக்கின் சில மாவட்டங்களில் கணவரை யுத்த அநர்த்தங்களால் இழந்த பெண்களை விடவும் பல மடங்கு அதாவது 24இ084 பெண்களை தலைவர்களாகக் கொண்ட விதவைப் பெண்களை எமது மாவட்டம் 'யுத்தமும்' 'சுனாமியும்' போட்ட சாபத்தினால் இன்னும் கொண்டுள்ளதை தகவல் சொல்லுகின்றது. 
'சோதனைமேல் சோதனை போதுமடா சாமி' மட்டக்களப்பின் நிலமை பௌதீக ரீதியில் சில மாற்றங்களை அபிவிருத்தி என்ற வகையில் ஏற்ப்படுத்தி இருப்பினும் மனித வலுவில் ஏற்ப்பட்டிருக்கும் மாற்றம் ஏமாற்றமே என்கின்ற தகவலை கீழுள்ள தகவல் காட்டுகின்றது.
இதன் காரணமாகவே பல 'சமுக கலாசார சீர்கேடுகள் என்ற பேரில் வயிற்றுப்பசியாறும் ஒரு துரதிஸ்ட்ட பெயரினை எமது மாவட்டம் பெற்றுள்ளதோ' என அண்மைய செய்திகளை பார்க்கும்போது தோணுகின்றது. 

மறுமுனையில் யுத்தம் முடிவடைந்து விட்டது, சிவில் நிர்வாகம் அமுல்படுத்தப்பட்டுள்ளது, பொதுச் சேவையினை பெறுவதற்க்கான அனைத்து நடவடிக்கைகளும் நடமாடும் சேவைகள் மூலம் எடுக்கப்பட்டுள்ளது அத்துடன் கிழக்கு மக்கள் தேசிய அடையாள அட்டையினை பெறுவதற்க்கான பிரத்தியேக காரியாலயமும் எமது மாவட்டத்தில் அமையப்பெற்றும் திருமணப் பதிவு இல்லாமல் 7,484 பேரும், பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் 6,480 பேரும் அதுபோல் தே.அ.அட்டை இல்லாமல் 9,712 பேரும் இருப்பது வருத்தமே. இதனால் பாடசாலைக் கல்வி, வாக்களிக்கும் பலம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு என பல சந்தர்ப்பங்களை இழக்க நேரிடும் நிகழ்தகவினை கொண்டிருப்பது ஆபத்தான எதிர்காலத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. நாம் எல்லோருமே இந்த நிலைமைகளுக்கு பதில் கூறவேண்டிய கடப்பாடுள்ளவர்களே, அரசாங்க சேவையாளர்கள் கூட அரச சேவையாக இவற்றை எண்ணாமல் பொதுச் சேவையாக செய்யவரும்போதே இவற்றுக்கு தீர்வு கிட்டும் ஏனெனில் நாமெல்லாம் பொதுசன உத்தியோகத்தர்களே!

26 September 2013

இனங்களால் ஒன்றாகத் துடியடா

தாகத்தில் தண்ணீரை குடியடா
தலைகீழாய் போவதும் குடியடா
ஒன்றாகச் சேர்ப்பதும் குடியடா
ரெண்டாக பார்ப்பதும் குடியடா

கோயிலில் கும்பிடக் குடியடா
குயவர்கள் பறயர்கள் குடியடா
திருமணம் செய்திடக் குடியடா
இருமனம் பிரிப்பதும் குடியடா

மனிதனில் வேறில்லை படியடா
மதங்கொண்ட மாந்தரை அடியடா
இனங்களால் ஒன்றாகத் துடியடா
இல்லாடடி இருந்தென்ன மடியடா-நீ
இல்லாடடி இருந்தென்ன மடியடா

14 September 2013

மீன்பாடும் தேநாடு வாருமையா


மீன்பாடும் தேநாடு வாருமையா-எங்க
மேலான பண்பாட்டை பாருமையா
தேனோடு பால்தயிர் சேருமையா-நம்ம
தேமதுர தமிழ் ஊறுமையா

நெஞ்சினில் வஞ்சகம் இல்லையையா-எங்க
நிலத்தினில் பஞ்சமும் இல்லையையா
கெஞ்சாமல் தஞ்சமும் கிடைக்குமையா- இரந்து
கேட்போர்கு அமுதள்ளி படைக்குமையா

இல்லாதோர் இல்லாமல் செய்வோமையா-இங்கு
இருக்கின்ற பேதத்தை கொய்வோமையா
கல்லாமை இருள்நீங்கி உய்வோமையா- நம்ம
காலத்தில் உறவினை நெய்வோமையா

ஒரு கிராமத்து காத்து

மண்டூர் வருக்கன் சொழயே  உன் மம்மி எந்தஊரு
வாவிமகள் பாடும் நாடா  வந்தூh கேக்கிறேன்.
நீ வாவிமகள் பாடும் நாடா வந்து கேக்கிறேன்.

சோலையூர் சிவன் தேரு உன் சொந்தம் இங்கயாரு
சொல்லடி கல்லடிப் பாலம் சென்று நோக்கிறேன்
நீ சொல்லடி கல்லடிப் பாலம் சென்று நோக்கிறேன்

காரைதீவுப் பொண்ணப் போல காரமாகப் பார்கிறாய்
போரதீவு பாலப் போல பொங்கிவிட்டு போகிறா
தேத்தாத்தீவு கலையப் போல பாத்தாநீயும் கலக்கிறாய்
புளியந்தீவு கோட்டை யாட்டம் நெஞ்சிக்குள்ள பூட்டுறா
நீ எனக்கு இல்லைஎன்றால் அச்சொடைஞ்ச சில்லு சில்லு
நீ சிரிச்சிப் போனாப்போதும் மப்புஏத்தும் கள்ளு கள்ளு

வெல்லாவெளி வெள்ளாம போல் தலகுனிஞ்சி போகிறா
வாழச்சேனை கடதாசி போல் இடைமெலிந்து இழுக்கிறாய்
கதிரவெளி சோளன் குலையே கண்டமெல்லாம் மணக்கிறாய்
கன்னங்குடா கூத்தப் போல கண்டபடி ஆட்டுறா
காதல் கடல் தாண்ட நீதான் மட்டக்களப்பு வெளிச்சவீடு
கண்ணிரண்டும் ஒன்னத் தேடும் காதறுந்த தோடு தோடு

04 August 2013

இலங்கையின் பேண்தகு வீட்டுத் திட்ட செலன்முறைகளும், வாழ்கை முறையும்.

ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் அவன் வாழ்வதற்க்கு தேவையான உறைவிடம் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. இதனால்தான் எந்த ஒரு நாட்டை எடுத்துக் கொண்டாலும் வீட்டுத்துறை முக்கியமானதாகக் அபிவிருத்தி திட்டங்களில் கருத்தில் எடுக்கப்படுகிறது. இது ஒரு நாட்டின் பொருளாதாரச் செழிப்பினைத் தூண்டி விடுகின்ற வகையில் எல்லாத் துறைகளையும் ஒன்றிணைத்து முன்னெடுக்கும் முகாமைத்துவத்தின் தேவையை வலியுறுத்துகிறது. 

அழகான வீடு ஒரு மனிதனின் அடிப்படை மனிதாபிமானத் தேவையாகும். இது முழுவதுமாக வீட்டுக்காரரின் விருப்பு மற்றும் வாழ்கைத் தரம் என்பன மூலம் செல்வாக்குச் செலுத்துகின்றது. வீட்டுத் திட்டங்களில் ஏற்ப்படுகின்ற முன்னேற்றம் பல வழிகளில் நன்மை பயக்கின்றது. உதாரணமாக பொருளாதார நன்மைகள், சேரிப்புற வாழ்க்கைக்கான முற்றுப்புள்ளி, சேமிப்பு ஊக்குவிப்பு, நேரடி மறைமுக கட்டுமானப் பணி வேலைவாய்ப்புகள் மற்றும் நுகர்வு என்பனவற்றினை குறிப்பிடலாம்.

31 July 2013

கருணையுள்ளம் மட்டும்

படித்தவன்தான் இன்று

பகல் வேசம் போடுறான்-பணம்

படைத்தவன்தான் இன்று

அடுத்துயிரை கொல்கிறான்

கிடைத்தவற்றை பிரித்து

அடுத்தவர்கும் கொடுக்கும்

கருணையுள்ளம் மட்டும்

எங்களிடம் அதிகம் அதிகம்

பேஸ் புக்

என் சட்டைப்பேனைக்கு
விடுதலை கொடுத்தவன்
கண்ணீர் துளிக்கு
பெறுமதி சேர்த்தவன்

கண்டங்களுக் கிடையே
பாலம் சமைத்தவன்
சமையல் விவகாரத்தையும்
சர்வதேசத்துக்கு அறிவிப்பவன்

ஒற்றை இடைவெளிக்குள்
காதல் கணை தொடுத்தவன்
அள்ளக்கையர்களையும்
கவிஞ்ஞராக்கியவன்

புகைப்படங்களின் ஆல்பங்களை
அழ வைத்தவன்
கள்ளத் தொடர்புக்கு
சாவி கொடுப்பவன்

இன்னும் ஒன்ன நம்பித்தான்
ஐபோனும் சம்சுங்கும்
சக்கைபோடுகிறது
சொர்க்கமும் நரகமும்
நீதான் அமைத்துக் கொடுக்கிறாய்
பேஸ் புக் - நீ
புரட்சிகளின் புதிய ஆரம்பம்.

உயிர் காப்பதற்க்காக....

நிஜம் ஒறுத்துவிட்டது
அதற்க்காக பொய்கள்
விலைக்கு போகலாமா??

இன்னும் உள்ளுக்குள்
குமறுவதில் மட்டும்
வாழ்ந்து போகிறோம்.....
உயிர் காப்பதற்க்காக....

28 July 2013

தோணிதாட்ட மடுவின் சோகக் கதை....


போய்க்கொண்டே இருந்தோம் அந்த முகங்களைத் தேடி அடர்ந்த காடு, உடைந்த றோடு, விரிந்த புல் வயல் வெயிலில் காய்ந்த பயிர்போல் பல பரிதாப முகங்களைக் கண்டு சோகத்தோடு உள்ளே நுழைகிறோம்... அங்கே புதிய புதிய அனுபவங்களை கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டோம்.

20 July 2013

எட்டு உயிரை ஒரே குடும்பத்தில் பறித்து ஏப்பம் விட்ட ஆழி அலை-- நடந்தது என்ன!

கரு இருந்து தெரு வரைக்கும் சீவியங்களை பறித்து பசியாறிச் சென்ற ஆழி அலைக்கு வயசு ஒன்பது. காலங்கள் காத்திருப்பதில்லை ஆனால் அது ஞாபகங்களைத் எறிந்து விட்டு நடப்பதும் இல்லை. 26.12.2012 அன்று குப்பம் இருந்து குடிமனை வரை நீத்த உயிர்களுக்கு சாந்திவேண்டி கண்கள் பனிக்க மௌனங்கள் அஞ்சலிக்கப்பட்டன.

19 July 2013

மட்டக்களப்பின் ஆவணங்களை பாதுகாக்கும் முனைப்பு ஆரம்பம்.

ஒரு சமூகத்தின் இருப்பினை உறுதி செய்வது அதன் புராதன சுவடுகளாகும். உலகில் பல தொலைந்து போன நாகரிகங்கள் அதன் சுவடுகளை ஆதாரமாகக்  கொண்டே அதன் வரலாறு ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கிறது. இது போன்று தான் இலங்கைத் தமிழர்களின் தொன்மை வரலாறுகள், பல கால இனமுரன்பாடுகள் காரணமாக நியாயமான அளவு இழந்திருக்கின்றது. குறிப்பாக கிழக்கின் மட்டக்களப்பின்  தொன்மை, பூர்வீகம் சார்பான தேடல் அதன் பராமரிப்பு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருந்திருக்கவில்லை என்பது கவலைக்குரியதே.

14 July 2013

சிந்துவெளி நாகரிகத்தை விஞ்சிவிட்ட கிழக்கு மக்களின் நாகரிகம்


நாகரிகங்கள் மக்களது வாழ்விடங்கள் சார்ந்து அந்த அந்த இடத்துக்கு ஏற்ப்ப தோற்றம் பெற்ற ஒரு விடயமாகும். மக்களது சமுக வளர்ச்சி அந்த நாகரிக பரிநாமத்தில் பூத்துக் குலுங்கும் ஒன்றாகும். உலகில் தலை சிறந்த விரல் விட்டு எண்ணக்கூடிய நாகரிகங்களுள் சிந்து நாகரிகம் போற்றுதற்க்கு உரியதாகும். இவர்கள் இயற்க்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்தனர், இயற்க்கையை நேசித்தனர், இயற்க்கைக்கு பயந்து இயற்கையை வணங்கினர். சிந்து நதி வறட்சி நிலப்பகுதியைச் சேர்ந்த ஒரு காட்டாறு. வெள்ளம் பெருகி வரும் போது படுகைளில் வண்டல் படியும். செடி, கொடி, புதர்களை வெட்டிப் போட்டுத் தீ மூட்டுவார்கள். பின்பு ஆடு மாடு, ஒட்டகங்களை படுக்கப் போடுவார்கள். அவை படுத்து எமுந்த பகுதிகளில் விதைகளைத் தூவி விளைந்த வற்றைச் சேமித்துக் கொள்வார்கள். உலகில் சிந்து நதி தீரத்தில் மட்டுமல்ல பாரசீகப் பகுதிகளில், இன்றய ஈரான், ஈராக் நீல நதிக்கரை(எகிப்து) இல் கூட இப்படித்தான் நாகரிகம் வளர்ச்சி கண்டது. 

07 July 2013

கண்ணே கண்ணே மட்டு மண்ணே !!

கண்ணே கண்ணே மட்டு மண்ணே உன்னை
காதல் செய்வதென்ன- இன்னும் காதல் செய்வதென்ன
காலம் மறுகரையில் என்னை சேர்த்தாலும்
காவல் செய்வதென்ன –உன்னை காவல் செய்வதென்ன

தேனே தேனே எங்கும் விளையும் காடு
தென்றல் உலவும் வீடு
மீன்கள் பாட்டிசைக்க மான்கள் அசைந்தோடும்
மேனி அழகு நாடு- வாவி பழகும் பாரு

மெது மெதுவாக சூரியனும்
மேகத்தினூடே விரிகிறதே
எதுவந்த போதும் எமக்கெனவே
எதிர்காலம் கண்ணில் தெரிகிறதே

சாந்திகெட சத்தமிடும்
சமுகத்தை மேடையில் தூக்கிடுவோம்
ஏந்திநிற்கும் கரங்களெல்லாம்
ஏர்பிடிக்கும் கரம் ஆக்கிடுவோம்
திருநாள் வருநாள் தெரிகிறதே

கண்ணே கண்ணே மட்டு மண்ணே உன்னை
காதல் செய்வதென்ன- இன்னும் காதல் செய்வதென்ன
காலம் மறுகரையில் என்னை சேர்த்தாலும்
காவல் செய்வதென்ன –உன்னை காவல் செய்வதென்ன

23 June 2013

மட்டக்களப்பில் அப்பக்கடை அவலம்..

நான் இந்த அம்மாக்களிடம் தான் ஆசயாய் அப்பம் சாப்பிடுவேன்.. சுவையாய், மிருதுவாய் இனிமையாய் இருக்கும். ஆனால் அந்த சுவையான அப்பத்துக்கு பின்னால் பெரிய வேதனை, கஸ்ட்டம், சிரமம், பிரச்சினைகள் மறைந்து இருக்கிறது. மட்டக்களப்பில் ஒரு புள்ளி விபரம் கூறுகிறது, கிட்டத்தட்ட 40,000 விதவை தமிழ் பெண்கள் இருப்பதாக. இவர்கள் தங்கள் வயிற்றுப்பிளைப்புக்காக எவ்வளவு வேதனைப்படுகிறார்கள் என்பதை நான் நன்கு அறிந்திருக்கிறேன். 

மட்டக்களப்பு மிகை உணவு விளையும் பூமியாகும், ஒரு முயற்சியாளன் தன்னிடத்தில் அதிகம் காணப்படும் வளங்களை வைத்தே ஒரு தொழிலை தொடங்குகிறான் என்பதற்க்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

16 June 2013

பொரியல் துண்டு

ஓ பின்னே போய் பார்க்கிறேன்
முன்னே கொண்டு வந்தாய்
இராப் பொழுதுகள் தெரியாத
உழைப்பில் பிழைக்க வைத்தவர்

எமது இன்பத்துக்காய் 
நிலாக்களை விளக்காக்கி
நிலங்களை போர்த்தி
வெயிலில் குளித்து
அவையத்துள் முந்தி இருக்கச் செய்தவர்
இதயத்துள் முந்தி நிற்கிறார்

கொழும்புக் கடையில்
மதியச் சோறு கொண்டு தந்தான்
கோறாச் சோற்றை குழைத்தபடி
ஏற இறங்கப்பார்த்தேன் ஒரு
பாறை மீன் துண்டு....

பயித்தியம் மிச்சத்தைக் கொட்டவாபோறா??
தம்பிக்கு வை எனக்கு வேணாம்!
அப்பாவின் அதட்டல்
அந்த ஒற்றை மீன்துண்டு
கொண்டுவந்து
நினைவுறுத்திய போது
என் கண்கள் பனித்த
கண்ணீர்துளிகளை எல்லா
அப்பாக்களுக்கும்
காணிக்கையாக்குகிறேன்

30 March 2013

மட்டக்களப்பு கிராமங்கள் மாற்றம் காணுகின்றன-குடியிருப்பு ஓர் எடுத்துக்காட்டு

"ஒரு பெருங்கூட்டம் காத்துக் கொண்டு நின்றது. ஆல மரத்தின் இலைகள் அசைந்து பச்சைக் கொடி பிடிக்க, மாடுகளும், ஆடுகளும்  பறவைகளும் குதுகலிக்க, ஒரு கிராமத்து வாசனையை நுகர்ந்த வண்ணம் உள்ளே நகர்ந்தோம்"

பட்டிருப்பு தொகுதியின் பழம் பெரும் கிராமங்களில் ஒன்றான குடியிருப்புக் கிராமம் 38 குடும்பங்களைத் தன்னகத்தே கொண்டு, மட்டக்களப்பின் தெற்கே சுமார் 24 கிலோ மீற்றருக்கு அப்பால் ஆற்றங்கரையில் அமைந்துள்ள வறிய கிராமமாகும். இந்தக் கிராமம் வயல்வெளிகள் சூழ வெண்மணற்த் திடலில் அமைந்திருக்கின்ற போதும், வருடா வருடம் ஏற்ப்படுகின்ற வெள்ள அனர்த்தத்தினில் பாதிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

02 March 2013

கல்வியில் பின்னிற்கும் எமது சமுகம் கரைசேர்வது எப்போ! கவலையுறும் கிராம மக்கள்

காலங்காலமாக விவசாயத்தினையே நம்பி வாழுகின்ற மக்கள் நம்மவர்கள். ஆனால் காலநிலை மாறிவிட்டது, காலங்களும் மாறிவிட்டது இதனால் கை நழுவிப்போனது அவர்களின் தொழில் நிலமை, அவர்களது நம்பிக்கையினைப் போல். மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடா வருடம் ஏற்ப்பட்டு வரும் வெள்ள அனர்த்தம் மாற்றீடில்லாத பாரம்பரிய விவசாயத்தினை கழுவிச் சென்று அந்த விவசாயிகளை எல்லாம் நடு வீதியில் தள்ளி விடுவதனை சமகால அறிக்கைகளில் இருந்து காணலாம்.  
கல்வியில் பின்னிற்கும் எமது சமுகம் மனித வலுவில் (கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசாரம்) ஏற்ப்படுத்தும் பயனுள்ள மாற்றம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகிக்கிறது

12 February 2013

மட்டக்களப்பு மக்களின் முகமலர்ச்சியில் மறுமலர்ச்சி


நம்மில் கனபேருக்கு இந்த ஊர்களின் பெயரைக் கேட்டாலே அந்தளவு பயமாக இருந்தது ஒரு காலத்தில். கரடியனாறு, மரப்பாலம், புல்லுமலை, ஆயித்தியமலை, கித்துள், கொடுவாமடு, உறுகாமம் போன்ற கிராமங்கள் யுத்தகாலத்தில் நேரடியாக பெரும் பாதிப்புக்குள்ளான கிராமங்களாகும். அந்தக்காலத்தில் அடிக்கடி இடம்பெயர்ந்து, உயிர்கள், சொத்துக்கள் போன்ற எல்லாவற்றிலும் இழப்புகளை சந்தித்து இன்று வேரில்லாத மரம்போல் இந்தச் சமுகம் ஆடிப்போய் கிடப்பதனை அனைவரும் அறிவர். எஞ்சிய ஆடுமாடுகள் மேயும் புல்வெளிகளிலும், கணக்கற்றுக்கிடக்கும் வயற்காடுகளிலும் இங்குள்ள அநேகமான சிறுவர்கள் கல்வி கற்கும் பருவத்தினை காணமத்துக் கொண்டிருக்கிறார்கள்.

04 February 2013

சொர்க்கம் அல்லவோ...

மட்டு நகர் நம் மக்கள் விரும்பும்
அழகான நிலமல்லவோ
வான் மேகமும் மலைச் சாரலும்
ஒன்றாகி கூடிடும் மேடை அல்லவோ.

கயல் பாடிடும் வயல் ஓடையில்-எந்தன்
நெஞ்சம் பட்டு சொட்டு தாலாட்டுது
முயல் பாய்ந்திடும் முல்லைக் காடுகள்-சொட்டு
தேனை மொட்டு விட்டு பாலூட்டுது
என் மண்ணே உன்னைத் தான்- விட்டு
பின்னே போகுமா
மனம் தேடி அலைகின்றதே
இந்தக் காற்றிலும் இன்ப ஊற்றிலும்
நாம் வாழும் வாழ்க்கை சொர்க்கம் அல்லவோ


கலை ஊறிடும் கங்கை ஓடிடும்-கண்கள்
பார்க்கும் இடம் எங்கும் பொங்கும் இன்பமே!
அள்ளும் பாத்திரம் மெல்ல ஊறிடும்-வளம்
எங்கும் பூப்பதை நான் பார்க்கிறேன்.
இங்கு வந்தோர் சொந்தமாய் -ஒன்றாய்
வாழும் வண்ணமாய்
பண்பான நிலம் அல்லவோ!
எந்த நேரமும் இந்தப் பூமியில்
ஒன்றாகும் சொந்தம்  கோடி அல்லவோ!நிஜத்தில் காண்பதற்க்காய்


இன்னும் இன்னும் சுமக்கிறது
முன்னும் பின்னும் நீ கொடுத்த
நம்பிக்கை மூட்டைகளை
வாழ விடு இல்லாவிட்டால்
வாழ்ந்து விடு..
சாந்தியடைந்து விடும்
செத்து மடியும் என்னுயிர்...

ஒளித்து விளையாடுவதற்கு- நீ
என் வீட்டு மூலையிலா இருக்கிறாய்!
உன் சிரித்த முகத்தை
படம் பிடித்து தூக்கியிருக்கும்
என் இதயச் சுவர் இப்பவும்
அழுகிறது
நிஜத்தில் காண்பதற்க்காய்

30 January 2013

வாழ துடிக்கும் வாகரை மக்கள்- மக்களின் குரலில்

(கட்டாயம் படியுங்கள்) இவர்கள் யாருக்கு என்ன தீங்கிழைத்தார்கள்? இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? கடவுளே! உன் முன் பக்தனாக அல்ல, பிரஜைகளில் ஒருவனாக கேட்கிறேன். இவர்கள் கொலை செய்தார்களா? இல்லை கொள்ளையடித்தார்களா? இல்லை நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை செய்தார்களா? குற்றம் என்ன செய்தார்கள் இந்த மக்கள்  குற்றம் என்ன செய்தார்கள்? கூறமாட்டீர்களா? நீங்கள் கூறவேண்டாம்.

29 January 2013

மட்டக்களப்பில் 40 ஆதரவற்றோர் இல்லங்கள்- நீளும் கருணைக்கரம்.

கிழக்கு மாகாணத்தின் யுத்தம், இயற்கை அனர்த்தங்களின் பின்னர் அநேகம் குழந்தைகள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர் அதேபோல் அநேகம் பெண்கள் விதைவகளாக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இறைவனால் படைக்கப்படும் யாரும் அநாதைகள் அல்ல, அவர்கள் இறைவனின் திருக்குழந்தைகள் என்பதை நிருபிக்கும் வண்ணம் இந்த மாவட்டத்தில் பல சிரமங்களுக்கு மத்தியில், இந்த குழந்தைகளை வழிநடாத்துகின்ற 40 சிறுவர் இல்லங்கள் இருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு(http://hrcsl.lk/tamil/?page_id=813) அறிக்கையிட்டுள்ளது. 2012 இல் எழுதிய கட்டுரை ஒன்று

27 January 2013

இரக்கமுள்ளவர்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழர்கள் இருக்கவேண்டும்

பல நூற்றுக் கணக்கானவர்கள் கால்களை இழந்திருந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் காத்துக்கொண்டிருந்தனர். 'வலிமை, வலிமை, அது நமது இந்த வாழ்க்கையில் என்றுமே நிறைய வேண்டும், நம் பாவம் மற்றும் துன்பம் அனைத்திர்க்கும் ஒரே காரணமாக உள்ளது நமது பலவீனம் மட்டுமே. பலவீனம் இருந்தால் அறியாமை வரும், அந்த அறியாமை துன்பத்தை தருகிறது' என்று விவேகாநந்தர் முழங்கியதற்கு ஏற்ப்ப அந்த வலிமையை எங்கள் குழுமத்தினர் விஷேச தேவையுடையவர்களுக்கு இன்று வழங்கினோம். 

21 January 2013

மட்டக்களப்பு கிராமத்து மக்கள் எமது எல்லைத் தெய்வங்கள்!

மதுரன்குளம் , மாவடிச்சேனை, கட்டுமுறிவு, கதிரவெளி, வாகரை, வெருகல், ஓமடியாமடு, பனிச்சங்கேணி இத்தனை கிராமங்களில் இழையோடி கிடக்கும் வறுமை கல்வியை விளங்கச் செய்யாமல் போய்விட்டது. துடிப்புள்ள எந்த இன்னமும் சோத்துக்கு கஸ்ட்டப்படுவதில்லை. ஒரு இணையத்தளத்தில் பார்த்தேன், 'மட்டக்களப்பார் நீர், நிலம், காடு என்ற அனைத்து வளமும் நிறைந்த காணப்படுவதனால் உழைத்து உண்ண வேறு வழியை தேடவோ சிந்திக்கவோ இல்லையாம், ஆனால் யாழ் மக்கள் வரண்ட, நீர் நிலைகள் குறைந்த நில அமைப்பினைக் கொண்டிருப்பதனால் அவர்கள் விவசாயத்தினை நம்பி வாழ்பதனை விட, கல்வியை நம்பி முன்னேறத் தொடங்கினராம்'. ஆனால் கடந்து சென்ற கசப்பான வருடங்கள் மண்ணையும் வளப்படுத்தவில்லை, மக்களயும் வளப்படுத்தவில்லை என்பதுதான் மட்டக்களப்பினைப் பொறுத்தமட்டில் உன்மை.

13 January 2013

மட்டக்களப்பில் தை பிறந்தால் இவ்வளவு சந்தோசமா?

ஆகா, ஓகோ என்று களைகட்டியிருக்கும் மட்டக்களப்பு மாநிலத்தின் பொங்கல், மிகவும் சந்தோசமாகக் கொண்டாடப்படுகிறது. அனைவரும் ஆநந்தமாக மழைக்கு பின்னர் வெளித்திருக்கும் இந்த தருணத்தினை பயன்படுத்தி வீதிகள், சந்தைகள், கடைத்தெருக்கள் எல்லாம் குவிந்து நிற்க்கும் மக்கள் மகிழ்ச்சியோடு தயாராகி வருவதனை அவதானிக்க முடிகிறது.

08 January 2013

மாற்றம் காணும் மட்டக்களப்பில் ஏற்றம் காணும் விவசாயம்.

மட்டக்களப்பின் முதுகெலும்பு என்பதனை விட, அதன் இருதயமாக இருப்பது அந்த மாவட்டத்தினை வளப்படுத்தும் மண்ணும் மனிதர்களும்தான். ஒரு பிரதேசம் வளர்ச்சி பெற வளங்கள் தேவை என்பது அபிவிருத்தியாளர்களது சிந்தனையாக இருந்து வந்தது. அது மனித வளம், மற்றும் பௌதிக வளம் என்ற இரண்டையும் குறிக்கும். ஆனால் இவற்றில் பௌதிக வளம் இல்லாமலேயே, மனித வளத்தினை மாத்திரம் உரமாக்கி அபிவிருத்தி கண்ட யப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் எம்முன் உதாரணமாக இருக்கும் போது, எல்லா வளமும் கொண்ட எமது மட்டக்களப்பு மாவட்டம் இன்னும் இன்னும் வறுமையில் முதனிலை வகிக்கும் மாவட்டமாக இருப்பது ஒன்றும் புரியாத புதிர் இல்லை.

06 January 2013

பருவம் கடந்து யோசிக்கிறேன்!


வீடு போ போங்கிறது ,
வயல் காடே என்னை
அணைத்துக் கொள்வாயா?

காற்றே உன்னை நேசிக்கிறேன்
மண்ணே உன்னை யாசிக்கிறேன்- உன்
அழகை தினமும் வாசிக்கிறேன்!
அதனால் இன்னும் வசிக்கிறேன்!
பருவம் கடந்து யோசிக்கிறேன்!
பச்சை நிலமே நேசிப்பாயா!!


01 January 2013

மட்டக்களப்பின் சுபீட்சமான பாதையை நோக்கிய ஏமாற்றங்களில்லாத ஆண்டாக மலர 2013ஐ வரவேற்கிறோம்

கடந்து வந்த கசப்பான பாதைகளின் பயணங்களை இன்னும் நாங்கள் ஒரு முன்னேற்றத்துக்கான வழிகளாக கொண்டு எங்களை நாங்கள் புதிதாக்கிக் கொள்ளவேண்டும்;. பரந்து கிடக்கும் வயல் நிலங்களும், மீன் பாடும் வாவி மகளும், கனிகள் கொட்டும் சோலைகளும், அலைகள் மோதும் ஆழ்கடலும் வருமானமும் வளர்ச்சியும் கொண்ட சமுகத்தை ஏற்ப்படுத்த போதுமான வளங்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இருந்தும் இன்னும் எம்மக்களை எடுத்தேத்தும் உணர்வுள்ள, தொண்டுள்ளம் கொண்ட, மனிதாபிமானமான ஒரு சமுதாயத்தினை உருவாக்கவேண்டும் என்கின்ற உறுதிமொழியே இன்று எம் சமுகத்தின் முன் நிற்க்கவேண்டும்.

இல்லாமை நீக்க வேண்டும் 
தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்