ADS 468x60

12 February 2013

மட்டக்களப்பு மக்களின் முகமலர்ச்சியில் மறுமலர்ச்சி


நம்மில் கனபேருக்கு இந்த ஊர்களின் பெயரைக் கேட்டாலே அந்தளவு பயமாக இருந்தது ஒரு காலத்தில். கரடியனாறு, மரப்பாலம், புல்லுமலை, ஆயித்தியமலை, கித்துள், கொடுவாமடு, உறுகாமம் போன்ற கிராமங்கள் யுத்தகாலத்தில் நேரடியாக பெரும் பாதிப்புக்குள்ளான கிராமங்களாகும். அந்தக்காலத்தில் அடிக்கடி இடம்பெயர்ந்து, உயிர்கள், சொத்துக்கள் போன்ற எல்லாவற்றிலும் இழப்புகளை சந்தித்து இன்று வேரில்லாத மரம்போல் இந்தச் சமுகம் ஆடிப்போய் கிடப்பதனை அனைவரும் அறிவர். எஞ்சிய ஆடுமாடுகள் மேயும் புல்வெளிகளிலும், கணக்கற்றுக்கிடக்கும் வயற்காடுகளிலும் இங்குள்ள அநேகமான சிறுவர்கள் கல்வி கற்கும் பருவத்தினை காணமத்துக் கொண்டிருக்கிறார்கள்.

04 February 2013

சொர்க்கம் அல்லவோ...













மட்டு நகர் நம் மக்கள் விரும்பும்
அழகான நிலமல்லவோ
வான் மேகமும் மலைச் சாரலும்
ஒன்றாகி கூடிடும் மேடை அல்லவோ.

கயல் பாடிடும் வயல் ஓடையில்-எந்தன்
நெஞ்சம் பட்டு சொட்டு தாலாட்டுது
முயல் பாய்ந்திடும் முல்லைக் காடுகள்-சொட்டு
தேனை மொட்டு விட்டு பாலூட்டுது
என் மண்ணே உன்னைத் தான்- விட்டு
பின்னே போகுமா
மனம் தேடி அலைகின்றதே
இந்தக் காற்றிலும் இன்ப ஊற்றிலும்
நாம் வாழும் வாழ்க்கை சொர்க்கம் அல்லவோ


கலை ஊறிடும் கங்கை ஓடிடும்-கண்கள்
பார்க்கும் இடம் எங்கும் பொங்கும் இன்பமே!
அள்ளும் பாத்திரம் மெல்ல ஊறிடும்-வளம்
எங்கும் பூப்பதை நான் பார்க்கிறேன்.
இங்கு வந்தோர் சொந்தமாய் -ஒன்றாய்
வாழும் வண்ணமாய்
பண்பான நிலம் அல்லவோ!
எந்த நேரமும் இந்தப் பூமியில்
ஒன்றாகும் சொந்தம்  கோடி அல்லவோ!



நிஜத்தில் காண்பதற்க்காய்


இன்னும் இன்னும் சுமக்கிறது
முன்னும் பின்னும் நீ கொடுத்த
நம்பிக்கை மூட்டைகளை
வாழ விடு இல்லாவிட்டால்
வாழ்ந்து விடு..
சாந்தியடைந்து விடும்
செத்து மடியும் என்னுயிர்...

ஒளித்து விளையாடுவதற்கு- நீ
என் வீட்டு மூலையிலா இருக்கிறாய்!
உன் சிரித்த முகத்தை
படம் பிடித்து தூக்கியிருக்கும்
என் இதயச் சுவர் இப்பவும்
அழுகிறது
நிஜத்தில் காண்பதற்க்காய்