ADS 468x60

30 March 2013

மட்டக்களப்பு கிராமங்கள் மாற்றம் காணுகின்றன-குடியிருப்பு ஓர் எடுத்துக்காட்டு

"ஒரு பெருங்கூட்டம் காத்துக் கொண்டு நின்றது. ஆல மரத்தின் இலைகள் அசைந்து பச்சைக் கொடி பிடிக்க, மாடுகளும், ஆடுகளும்  பறவைகளும் குதுகலிக்க, ஒரு கிராமத்து வாசனையை நுகர்ந்த வண்ணம் உள்ளே நகர்ந்தோம்"

பட்டிருப்பு தொகுதியின் பழம் பெரும் கிராமங்களில் ஒன்றான குடியிருப்புக் கிராமம் 38 குடும்பங்களைத் தன்னகத்தே கொண்டு, மட்டக்களப்பின் தெற்கே சுமார் 24 கிலோ மீற்றருக்கு அப்பால் ஆற்றங்கரையில் அமைந்துள்ள வறிய கிராமமாகும். இந்தக் கிராமம் வயல்வெளிகள் சூழ வெண்மணற்த் திடலில் அமைந்திருக்கின்ற போதும், வருடா வருடம் ஏற்ப்படுகின்ற வெள்ள அனர்த்தத்தினில் பாதிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

இங்குள்ள மக்களின் கல்வி, பொருளாதாரம் என்பனவற்றினை ஏனைய கிராம மக்களுடன் ஒப்பிடும்போது மிக மிக மோசமாக இருந்து வருகின்றது. இங்குள்ளவர்களின் கல்வி முன்னேற்றம்  பின்தங்கி காணப்படுவதனால் இவர்களில் ஆனேகர் கூலி வேலைகள், மீன்பிடி, வயல் வேலை மற்றும் மேட்டு நிலப் பயிர்ச் செய்கை என்பனவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் குடும்பங்களின் நிலையை உணர்ந்த எமது குழுமத்தினர் அவர்களை அணுகி, உதவி கருசனை செலுத்த தொடங்கியுள்ளனர்.

இதன் முதல் கட்டமாக இயற்கைக்கு பங்கம் இல்லாத தருவிக்கப்பட்ட நல்ல சக்தியை சேமித்து பயன்படுத்தக்கூடிய விறகு ராட்டி அடுப்புகள் 50 இந்த மக்களுக்கு 12.03.2013 அன்று பி.ப 5.00 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், வீட்டு உபயோகத்துக்கு விறகுகளை பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்துள்ளது. அது மட்டுமல்ல தீர்ந்து போகக் கூடிய  ஏனைய சக்திகள் மத்தியில் விறகு இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.  அதனால் இந்த மக்கள் பக்கத்தில் கிடைக்கும் விறகுகளைப் பயன்படுத்தி உணவினை தயார்படுத்தி வருகின்றனர். 

மரங்களை விறகுக்காகத் தறிப்பதைத் தவிர்த்து சூழலை பாதுகாப்பதற்குரிய எரி பொருள் குறைந்த பாவனையில் உள்ள அடுப்பை ஒவ்வொரு வீட்டிலும் நாம் பயன்படுத்த வேண்டும் இதன் மூலம் குறைந்தளவு எரி பொருளைப் பயன்படுத்தி பல சமயல்களை ஒரே நேரத்தில் செய்ய முடியும். புகை குறைந்த இந்த அடுப்பை பாவிப்து சமையல் வேலையில் ஈடுபடுவோருக்கு ஆரோக்கியமானதும் கூட, அத்துடன் இது குறைந்தளவு புகையை வெளிவிடுவதால் சூழலில் காபன் அளவு குறைந்து சூழல்மாசடைதல் குறைக்கப்படுகிறது. ஆதற்க்கும் மேலாக பணம் கூட மீதமாகிறது. இதற்கு அமைவான இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அடுப்புகளை, மாகாண சபையின் அமைச்சின் செயலாளரிடம் கேட்டுக் கொண்டதற்க்கிணங்க இந்த உதவியினை கலாநிதி அமலநாதன் அவர்கள் தந்து உதவியது குறிப்பிடத்தக்கது.

'இந்த மண்ணெண்ணை, கரண்டு விலை உயர்வால எங்களுக்கு அதுகள பாவிக்க தெரியல. நாங்க கொள்ளிக்கு போய்த்தான் அடுப்பு பாவிக்கிறம். ஆனா அதுகூட இப்போ கஸ்ட்டமா போயிற்று, இருந்தாலும் இங்கு எல்லா மக்களுக்கும் நீங்கள் வளங்கிய இந்த அடுப்பின் மூலம் குறைந்த விறகைப் பாவித்து எங்கட சமயல செய்ய முடியும். அதால உங்க எல்லாருக்கும் எங்கட மனம் நிறைந்த நன்றிகள்' என இந்த ஊரின் மூத்த உறுப்பினர் தங்கம்மா கருத்து தெரிவித்தார்.

'இந்த உதவிக்கு அப்பால் நீங்கள் அனைவரும் உங்களது பிள்ளைகளை கல்வியில் நல்ல நிலைக்கு இட்டுச் செல்ல உறுதுணையாக இருக்கவேண்டும். இந்தப் பொருட்களை உங்களுக்கு கொண்டு சேர்த்தது கூட எனது கல்விதான். இந்த கிராமத்தில் இதுவரை யாருமே பல்கலைக்கழகம் சென்றதில்லை. அதனால்தான் பாருங்கள் உங்கள் குடும்பத்தலைவர்கள் எல்லோரும் கூலித்தொழிலில் தங்கி இருக்க வேண்டி இருக்கிறது. அதனால் தான் மிகவும் சிரமத்தில் இருக்கும் இந்த ஊர் மக்களுக்கு இந்த குறைந்த சக்தியில் உணவினைத் தயார்படுத்தும் அடுப்பினை வளங்க வேண்டுமென நினைத்தேன். அதற்க்கு காரணம் இந்த குழுமத்தின் அக்கறையும், நல்ல செயற்ப்பாடுகளும்தான் என்பதனை தெரிவிக்க விரும்புகிறேன்' என இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர் கலாநிதி அமலநாதன் அவர்கள் தெரிவித்தார்.

இதன் பின்னர் எமது குழும அங்கத்தவரும், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் சுகுணன் அவர்கள் கூறுகையில் 'இந்த பெறுமதி வாய்ந்த உதவியை செய்வதற்கு முன்வந்த எமுது செயலாளரை நன்றி கூருவதுடன், இந்தப் பிரதேசத்தின் கல்வி, சுகாதாரம் நல்ல முறையில் எதிர்காலத்தில் வளர்ச்சி பெற வேண்டும் எனவும் அதற்க்கான பிரத்தியேக உதவிகளை செய்ய இந்தக் குழுமம் எப்பொழுதும் முன்னிற்க்கும்' எனவும் கருத்து தெரிவித்தார்.
அதிகரித்துவரும் சுற்றுசுழல் மாசு அதை விட வேகமாய் அதிகரிக்கும் எரிபொருட்களின் விலைகள் இவை எல்லாவற்றிற்குமே இது ஒரு எளிய தீர்வாய் அதே சமயத்தில் மிகப்பெரிதாய் சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தவண்ணம்; எங்களால் சமையல் அடுப்புக்களை தற்போது விநியோகித்து வைத்தோம். ஆக எமது குழுமம் இந்த மாவட்டத்தின் பொருளாதாரம், கல்வி, கலாசாரம் என்பனவற்றுடன், இங்குள்ள பெண்களுக்கு சிரமம் ஏற்படா வண்ணமும், அதன் சுற்றுச் சூழல் நோக்கிய கவனத்தினையும் கொண்டுவருவது ஒரு நீண்டு நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கான முன்னேற்ப்பாடு என்றே சொல்ல வேண்டும். இது போன்று இங்குள்ள அமைப்புகள் சங்கங்கள் மற்றும் அனைத்து சக்திகளும் சேர்ந்து சக்தியை சேமிக்கும் ஒரு தூர நோக்கை உருவாக்க வேண்டும் என்பதே எம் அனைவரதும் அவாவாகும்.

( மறக்காமல் உங்களது கருத்தை comment இல் தெரிவியுங்கள் & பேஷ்பூக்கில் பகிர்ந்துகொள்ளுங்கள் ..  )

நிகழ்வுகளின்  நிழல்கள்


0 comments:

Post a Comment