ADS 468x60

20 July 2013

எட்டு உயிரை ஒரே குடும்பத்தில் பறித்து ஏப்பம் விட்ட ஆழி அலை-- நடந்தது என்ன!

கரு இருந்து தெரு வரைக்கும் சீவியங்களை பறித்து பசியாறிச் சென்ற ஆழி அலைக்கு வயசு ஒன்பது. காலங்கள் காத்திருப்பதில்லை ஆனால் அது ஞாபகங்களைத் எறிந்து விட்டு நடப்பதும் இல்லை. 26.12.2012 அன்று குப்பம் இருந்து குடிமனை வரை நீத்த உயிர்களுக்கு சாந்திவேண்டி கண்கள் பனிக்க மௌனங்கள் அஞ்சலிக்கப்பட்டன.


நானும் கலந்து கொண்டிருந்தேன், கேள்விப்பட்டு என் இதயத்தின் உயித்துளி கண்வழியே வெளியேறிய வண்ணம், 8 உயிர்களை ஒரே குடும்பத்தில் பிரேதங்களைக்கூட காட்டாமல் குரோதமாய் கொண்டொழித்த அந்த நாளை நினைவுபடுத்தும்; அந்த குடும்பத்துடன் இணைந்து கொண்டேன். வம்சம் என்று சொல்ல வரிகள் இல்லாத தனிமரமாகி நிற்கும் அந்த அழகம்மா குடும்பம் என் கண்களுக்குள் இன்னும் நிழலாடுகின்றது.

அழகம்மா தரும் அதிர்ச்சி வீடியோ தகவல் இங்கே
அடுக்கி வைத்த புகைப்படங்களை கண்ணீரால் கழுவிக் கொண்டிருந்த அழகம்மா (74/1, Old Kalmunai Road, Kallady uppodai, Batticaloa, Conduct No. 0775566049)  அவருடன் எஞ்சியுள்ள மகன் மயூரன் மற்றும் மகள் திவ்யா அத்துடன் இவரின் தாய் கமலாதேவி ஆகியோரை பார்த்து சற்று ஆறுதல் கூறி விட்டு, பேசிக்கொண்டிருந்தோம்.

'நாங்க தம்பி களியானம் முடிச்சி மட்டக்களப்பில் உள்ள நாவலடி புறஞ்சோலை என்னும் இடத்தில்தான் குடியிருந்து வந்தோம். எனக்கு அப்போது இரு புள்ளைகள் இருந்தனர், எனக்கு மூன்றாவது குழந்தை பிறக்க இருந்ததால அம்மா கல்லடிக்கு வரச்சொன்னார். அதால நானும் திவ்யாவும் அம்மாட வீட்ட வந்திட்டம், வந்து 14 நாட்களில் சுனாமி அடிச்சது' என்று வாக்கியத்தை முடிக்கும்போது கண்கள் கரைய ஆரம்பித்தது அழகம்மாக்கு.

அவர் தொடர்ந்தார் 'என்ட கணவர் அற்புதராஜா மூத்த பிள்ள சரண்யா, தங்கச்சி வினோதினி அவட 6 மாச மகன் டிலக்சன் மற்றது தம்பி சசிக்குமார் அவரிட மனைவி திருவாகினி அவங்கட 6 மாச குழந்தை தட்சாயினி இவங்க எல்லோரும் எங்கள உட்டுத்து போயிட்டாங்க. ஒருவரைக்கூட கண்டு புடிக்கல்ல அதுக்கு ஆக்களும் இருக்கல்ல. இதெல்லாம் கேள்விப்பட்ட எங்கட அப்பா அதிர்ச்சில செத்துப்போயிட்டாரு தம்பிசொல்லி குழறவும் ஆக்களில்லாத அநாதயாப் போயிட்டன் தம்பி.

'எல்லாரும் நிவாரணம் அது இது எண்டு ஓடித்திரிஞ்சாங்க. இத்தின உயிரயும் இழந்திட்டு அதுகளில மினக்கட மனம் வரல தம்பி. அதால ஒண்டும் பெரிசா கிடைக்கல. திராய்மடுல ஒரு வீடு தந்திருக்கிறாங்க அங்க அம்மா போய் இருக்கிறா. நாங்க கல்லடில இருக்கம், வருமானத்துக்கு ஒரு மாடு வளக்கன், இடையிடையே அப்பம் இடியப்பம் சுட்டு விக்கிறன். அத விட புள்ள பிறந்த வீட்டுக்கு முளகு தண்ணி அரச்சி குடுக்கிற இதுகளால தான் சீவியம் கழியிது தம்பி' என்று ஆற்றொன்னாக் குறையா சொன்னார்.

திவ்யா கூறுகையில் 'நான் பிரத்தியேக வகுப்புகளுக்கு காசில்லாத காரணத்தினால் போகல்ல அதால கணிதம், விஞ்ஞானம் இதுகளில பெரிசா செய்ய இல்ல. அம்மாக்கு உதவி செஞ்சிட்டு இருக்கன்' என்றார்.

மிகவும் கஸ்ட்டப்படும் அழகம்மா பாதுகாப்பு இன்மை, வருமானம் இன்மை என்பவற்றால் துன்புற்றாலும் காட்டிக் கொள்வதில்லை. 'மகனுக்கு இதுவரைக்கும் கொப்பி மற்றும் பாடசாலை உபகரணங்கள் வாங்கவும் இல்லை அதற்க்கான வசதியும் இல்லை;. என்னால் மீண்டுவர ஆசை ஆனால் அது முடியாமல் இருக்கிறது. 2014இல் மயூரன் ஸ்கொலசிப் வகுப்பு படிக்கிறான் ஆனா எல்லாப் பிள்ளைகளையும்போல நான் செய்யுற தொழில வைச்சி அவனுக்கு ரிவிசன் பீஸ் குடுக்க முடியல்ல'என்ன பண்ணுர தம்பி ஆண்டவன் எங்கள அநாதையாக்கிட்டான் என்று அழுதுகொட்டினார்.
Majuran
'நான் கணவருடன் இருக்கும்போது மட்டும் தான் ஒழுங்காக மூன்று நேர சாப்பாடு சாப்பிட்டு இருக்கிறோம்' என்ற அழகம்மா அழத்தொடங்கி சுதாகரித்துக்கொண்டு 'பால் தேத்தணி குடித்து என் பிள்ளைகளுக்கு பழக்கமில்லை அவர்களையும் நான் ஒறுத்து வாழப் பழக்கியுள்ளேன்' என கூறினார்.

ஆக இந்த குழந்தைகளின் கல்வி மட்டும் தனது எதிர்காலமாக எண்ணி இருக்கும் அழகம்மாவுக்கு, அதுகூட நம்பிக்கை இழக்க தொடங்கியுள்ளது. எமது கல்விச் செல்வம் இப்படித்தான் கவனிப்பார் இன்றி நிலைகுலைந்து கிடக்கிறது. உடுக்க உடுப்பின்றி, படிக்க வழியின்றி இதைப்போல் எத்தனை எம்முறவுகள் இன்னும் சீரழிகிறது, என்பது இவ்வாறான குடும்பங்களை சந்திக்கும் போதுதான் தெரிகிறது.

இந்த நிலையை உணர்ந்த எமது குழுமத்தினர் உடனடியாக இந்த சிறுவனின் அனைத்து அடிப்படை பாடசாலை தேவைகளையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளமை வரவேற்க்கதக்கது. அதுபோன்று இந்த அழகம்மா பசு வளர்ப்பதில் மிகுந்த விருப்பம் இருந்தாலும் நல்ல பசு அதற்க்கான வசதிகள் இருந்தால் அவர்களுக்கு செய்யும் பெரிய உதவியாக இருக்கும் என விநயமாக கேட்டுக்கொண்டு. தன் நிலைமையை உணர்ந்து அழுதுகொண்டிருந்தார்.......

தனக்கு வருவாய் தரும் பசுவுடன்
காற்றோடு சங்கமித்த உயிர்களின் நிழலுடன் மட்டும்


வழங்கிய பாடசாலை உபகரங்களுடன் மயூரன்
அடுப்பங்கரையில் இடியப்பம் தயார்படுத்தும் போது.

0 comments:

Post a Comment