ADS 468x60

23 November 2013

"சமுக கலாசார சீர்கேடுகள் என்ற பேரில் வயிற்றுப்பசியாறும் ஒரு துரதிஸ்ட்ட பெயரினை எமது மாவட்டம் பெற்றுள்ளதோ"

  82,234 குடும்பங்கள் கிட்டத்தட்ட 1/5பகுதியினர் மாத வருமானமாக 1000 க்கும் குறைவாகப் பெறுகின்றமை வறுமையில் வாடுகின்றவர்களின் அதிகப்படியான எண்ணிக்கையை சுட்டிக்காட்டுகின்றது. யுத்தம் நடைபெற்ற வடக்கின் சில மாவட்டங்களில் கணவரை யுத்த அநர்த்தங்களால் இழந்த பெண்களை விடவும் பல மடங்கு அதாவது 24இ084 பெண்களை தலைவர்களாகக் கொண்ட விதவைப் பெண்களை எமது மாவட்டம் 'யுத்தமும்' 'சுனாமியும்' போட்ட சாபத்தினால் இன்னும் கொண்டுள்ளதை தகவல் சொல்லுகின்றது. 
'சோதனைமேல் சோதனை போதுமடா சாமி' மட்டக்களப்பின் நிலமை பௌதீக ரீதியில் சில மாற்றங்களை அபிவிருத்தி என்ற வகையில் ஏற்ப்படுத்தி இருப்பினும் மனித வலுவில் ஏற்ப்பட்டிருக்கும் மாற்றம் ஏமாற்றமே என்கின்ற தகவலை கீழுள்ள தகவல் காட்டுகின்றது.

இதன் காரணமாகவே பல 'சமுக கலாசார சீர்கேடுகள் என்ற பேரில் வயிற்றுப்பசியாறும் ஒரு துரதிஸ்ட்ட பெயரினை எமது மாவட்டம் பெற்றுள்ளதோ' என அண்மைய செய்திகளை பார்க்கும்போது தோணுகின்றது. 

மறுமுனையில் யுத்தம் முடிவடைந்து விட்டது, சிவில் நிர்வாகம் அமுல்படுத்தப்பட்டுள்ளது, பொதுச் சேவையினை பெறுவதற்க்கான அனைத்து நடவடிக்கைகளும் நடமாடும் சேவைகள் மூலம் எடுக்கப்பட்டுள்ளது அத்துடன் கிழக்கு மக்கள் தேசிய அடையாள அட்டையினை பெறுவதற்க்கான பிரத்தியேக காரியாலயமும் எமது மாவட்டத்தில் அமையப்பெற்றும் திருமணப் பதிவு இல்லாமல் 7,484 பேரும், பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் 6,480 பேரும் அதுபோல் தே.அ.அட்டை இல்லாமல் 9,712 பேரும் இருப்பது வருத்தமே. இதனால் பாடசாலைக் கல்வி, வாக்களிக்கும் பலம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு என பல சந்தர்ப்பங்களை இழக்க நேரிடும் நிகழ்தகவினை கொண்டிருப்பது ஆபத்தான எதிர்காலத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. நாம் எல்லோருமே இந்த நிலைமைகளுக்கு பதில் கூறவேண்டிய கடப்பாடுள்ளவர்களே, அரசாங்க சேவையாளர்கள் கூட அரச சேவையாக இவற்றை எண்ணாமல் பொதுச் சேவையாக செய்யவரும்போதே இவற்றுக்கு தீர்வு கிட்டும் ஏனெனில் நாமெல்லாம் பொதுசன உத்தியோகத்தர்களே!

0 comments:

Post a Comment