ADS 468x60

01 January 2014

முடியுமானால் முன்னுக்கு வா !!

என் நூறாவது கவிதை... மகிழ்சியுடன்  மண் வாசம் சேர்த்தவாறே!!







ஜலதரங்கம் பாடும் கடற்கரை வெற்றிலை போட்ட கிழக்குவாணம் வீடு சென்று திரும்பும் தென்னறல்
நெழிந்து நெழிந்து
வளைந்து வளைந்து ஒளிந்து ஒளிந்து ஓடுகின்ற வாவி
சங்கீதம் பாடும் மழை-அதில் நனைந்து நனைந்து சலங்கை ஒலிக்குத் வேளான்மை வயல்

வேலி போட்டு கிடக்கும் மலைச்சாரல் வெட்கித்து சாயும் நாணல் தரை நடனமாடும் தென்னங்கீற்று நா இனிக்கும் முந்திரிகை
இயேசு புத்தன் சிவன் அல்லா ஆசி புரியும் அன்பு நிலம் ஓடிச் செலும் மீன்கள்-அங்கு பாடிச் சொல்லும் புதுமை
கொட்டிக் கிடக்கும் கலை-அதை கட்டிக் காக்கும் பழமை கோட்டையும் கொடியும் கொண்டு நாட்டை ஆண்ட பழமை இனிமை இனிமை இனிமை எங்கு சென்றாலும் புதுமை
உடல் உடைந்து உழைப்பிழந்து நடைப்பிணமாய் கிடந்தாலும் வந்தோரை வாழவைக்கும் மக்கள்
இருந்தும் இருந்தும்,, தழைக்க முடியாது பின்நோக்கும் கல்வி பிழைக்க வழியின்றி பரிதவிக்கும் மக்கள்
செழிக்கும் வளம் இருந்தும்
அழிக்கும் முதலைகள்
அறுந்து கிடக்கும் ஒற்றுமை ஆருத்துபோன நம்பிக்கை புரிந்தவர்கள் தேவை 
அறிந்தவர்கள் தேவை முடியுமானால் முன்னுக்கு வா மூன்று பரம்பரையும் உனக்கு பின்னால்!!

0 comments:

Post a Comment