ADS 468x60

27 February 2014

அத்தானுக்கு ஆசையெல்லாம் ஒன்மேல

அடியே பொண்ணு ஐயாரெட்டு
அம்பாரக் கரும்புக் கட்டு
அத்தானுக்கு ஆசையெல்லாம் ஒன்மேல
ஒன்னப் பாத்து பாத்து ஏங்கிறனே தன்னால
மட்டுநகர் வாவிபோல மச்சினி நீ நடக்கும்போது
மனசு தாங்கலயே என்னால -என்ன
மவுசப் போல சுழட்டுறயே கண்ணால

கல்லடி வீச்சிலதான் கண்ணம்மா நீ நடக்கும்போது
மனசு தாங்கலயே என்னால- நீ
மீனப் போல பாடுறயே முன்னால

மண்டூரு வருக்கன்போல வடிவா மணக்கிறயே
மறுகா கிறுகிறயே கோபமா- நான்
மண்டி போட்டு கிடக்கிறேண்டி தாபமா

அடியே பொண்ணு ஐயாரெட்டு
அம்பாரக் கரும்புக் கட்டு
அத்தானுக்கு ஆசையெல்லாம் ஒன்மேல
ஒன்னப் பாத்து பாத்து ஏங்கிறனே தன்னால

0 comments:

Post a Comment