ADS 468x60

30 March 2014

திறமை என்கிறது நமக்குள்ள எரியிற நெருப்பு

நம்ம மக்கள் தொகையில பெரும்பான்மையானவர்கள் நடுத்தர வர்க்கம். நிறையக் கனவுகள் நிறைய ஆசைகள், வாழ்க்கையில ஜெயிக்கனும் என்றுதான் வாழ்க்கைய ஆரம்பிக்கிறாங்க. ஆனா எங்கயோ சின்னச் சின்ன ஆசைகளுக்கு சின்ன சின்ன வெற்றிகளுக்கு திருப்தி அடைந்துவிடுவார்கள். ஆசைக்கும் தேவைக்கும் நடவில ஓடிட்டே இருப்பாங்கள். திடிர்எனப்பார்த்தால் அந்த வேகம் குறைந்திருக்கும். 

அந்த பயர் இல்லாம இருக்கும். பார்த்திருக்க தலையெல்லாம் நரைத்திருக்கும் ஒரு சின்னதா ஒரு வீடு, அங்க ஒரு கலர் ரீவி, ஒரு ஸ்கூட்டர் வைக்கு அதில முன்னாடி ஒரு குழந்தை பின்னாடி ஒரு குழந்தை அதற்கு பின்னால மனைவி. இந்த வசதி கிடைத்தா போதும் என்று முடங்கிப்போன எத்தனையோ திறமைசாலிகள நாளாந்தம் பார்க்க கிடைக்கிதுங்க. திறமை என்கிறது நமக்குள்ள எரியிற நெருப்பு அது அணையாம காப்பாத்தனும் பாத்துக்கனும்.

இதற்கு விதிவிலக்கான ஒரு திறமையான குடும்பத்தலைவனையும் தலைவியையும் கண்டேனுங்க பூநகரியில புல்லரிச்சிப்போச்சி. பேர் ஊர் சொல்லல்ல அவர் வைச்சிருக்கிற அணையாத முயற்சி திறமையைப் பற்றி ஒன்னு ரெண்டு வார்தை சொல்லுறன். யுத்தத்தில ஒரு காலை முழுசா இழந்த இவர், நல்ல ஒரு சிற்பி, கைவினைஞர், ஒரு பைசிக்கள் திருத்தினர், ஒரு விவசாயி அதற்கும் அப்பால் ஒரு நல்ல குடும்பஸ்த்தன் ஓயாத முயற்சியாளன். ஒற்றைக்காலில் இப்படி நெருப்பெரியும் நம்பிக்கையுள்ளவர் இரண்டு கால்களை வைத்து சும்மா திரியும் பலபேருக்கு ஒரு றோல் மாடல். 

எத்தனையோ புதிய பொருட்களை உருவாக்கினாலும் அவை எல்லாம் விற்க்கப்படாமல் உடைந்து சிதைந்து போவதைப் பார்க்க கவலையாக இருக்கிறது. இவற்றுக்கு நல்ல விலையோ சந்தையோ கிடைக்காததால் உழைப்பை மட்டும் வைத்து உருவாக்கும் பொருட்களுக்கு ஊதியம் இல்லாமல் இருப்பது வேதனையைத் தருகிறது. நல்ல உள்ளங்கள் இவற்றை வாங்குவதன் மூலமாவது இந்த முயற்ச்சியாளனுக்கு உதவலாம்.

0 comments:

Post a Comment