ADS 468x60

20 July 2014

மட்டக்களப்பு பூர்வீகக் கலைகள் அந்நிய மோகத்தில் ஆடிப்போகும் ஆபத்து...

நாடுகளின் காட்டுவெள்ளம் போன்ற பெருவளர்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாம் வாழுகின்ற ஆசிய நாடுகள் 50 வருடங்களுக்கு பின்னால் நிற்ப்பதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன. அவைகள் மதவாதம், இனவாதம், மொழிப்பிரிவினை, சாதிச்சண்டை இன்னும் எத்தனையோ.. இவைகள் உழைக்கும் ஆற்றல், கண்டுபிடிப்பாற்றல், புதிது புனையும் ஆற்றல் என்பனவற்றையெல்லாம் அடியோடு அழித்திருக்கின்றது.


அவற்றை நன்கு புரிந்துகொண்ட அன்னிய ஆட்சியாளர்கள்; இதை தங்கள் ஆட்சிக்காலங்களில் இவற்றை வைத்துக்கொண்டுதான் பிளைப்பு நடத்தி இருக்கின்றனர்.மட்டுமாநகரின் பிரசித்தம் வாய்ந்த அரங்க கலை வடிவங்களில் பறைமேளக் கூத்து தனித்துவமானது. இக்கலையானது மட்டக்களப்பு பிரதேசத்தில் பறையர் சாதியினர் வாழ்கின்ற கோளாவில், களுதாவளை, புன்னைக்குளம், ஆரையம்பதி, கல்முனை, வெல்லாவெளி, பிலாலிவேம்பு,  மாவடிவேம்பு ஆகிய பகுதிகளிலே சிறப்பாக பேணப்பட்டுக் கொண்டு வருகின்றது. பறையர் சமுகத்தின் பண்பாட்டினைப் பேணி வருகின்ற பறைமேளக் கூத்தினை வாழும் கலையாக தக்க வைத்துக் கொள்வதே கலைஞர்களின் கடப்பாடாகும்.
பறைமேளக் கூத்தின் தோற்றம்
ஆரம்பகாலங்களில் கிராமங்களுக்கு வருகின்ற பெரியவர்களை வரவேற்பதற்கும், செய்திகளை எடுத்துச் சொல்வதற்கும் பறை அறைதல் எனும் செயற்பாடு இருந்தது. இவற்றினூடாக ஆட்டங்களையும் அபிநயங்களையும் உள்வாங்கி பறைமேளக்கூத்தாக உருவாக்கி இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.

இப்பறை மேளக்கலையானது ஆலயங்களிலே ஆலயத்தாளம், அபிஷேகத்தாளம், அழைப்புத்தாளம், சுற்றாலைத்தாளம், பெரியபூசைத்தாளம் என்பவற்றிற்கும் மரணத்திலே ஆரம்பத்தாளம், தெரியப்படுத்தும்தாளம், எடுத்துச்செல்லும்தாளம், சந்திகூடும்தாளம், என்பவற்றின் உடாகவும் ஆடம்பரத்திற்காக வரவுத்தாளம், கோணங்கித்தாளம், இராசதாளம், பல்லாக்குத்தாளம், நாலடித்தாளம், ஆறடித்தாளம், எட்டடித்தாளம், தட்டுமாறும்தாளம் என இவ்வகைத்தாளங்களுக்கு ஏற்ப பறைமேளம் இசைக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது.
           
இன்று தமிழர்களின் திருவிழாக்களில், வரவேற்ப்பு வைபவங்களில், பொது நிகழ்வுகளில் ஏன் கல்யானம் போன்ற பாரம்பரிய கலாசாரச் சடங்குகளில்கூட பேண்ட் வாத்தியம் முதலான இன்னொருவரின் கலையை தூக்கி வைத்து ஆடும் ஒரு கேவலமான மனோபாவத்தால் இற்றைக்கு ஐயாயிரம் வருடத்துக்குமேல் பழங்குடியாக இருந்துவரும், செம்மொழி உரித்துடைய  எமது கலை குப்பைத்தொட்டிக்குள் வீசும் கீழ்நிலையால் நம்மை நாமே தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழர்களின் பாரம்பரிய கலைகள்..

பாவம் நம்ம மக்கள் இதனால் நல்ல கலாசாரத்தை இழந்திருக்கின்றனர், வளங்களை இளந்திருக்கின்றனர். என்னிடம் ஒரு நண்பர் கூறும்போது இவற்றின் ஆழமான தாக்கம் புலநாகியது. குறிப்பாக இலங்கையில் அதிலும் மட்டக்களப்பில் நிறையவே பாரம்பரியக்கலைகள் இருந்து வந்தது. இவைகள் புத்தகங்களில் படிக்கும் அளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்; துரதிஸ்டம் யாருக்கும் வரக்கூடாது. அண்ணாவியார் பரம்பரை, பறையடிப்போர் பரம்பரை, சாத்திரக்கலைஞ்ஞர்கள், அதர்வணவேதம் பயின்றோர் இவர்களுக்கும் அதேகெதிதான் நடந்துகொண்டிருக்கிறது.

 பறை இது சங்ககாலத்தின் புலத்தில் இருந்து மருவி வரும் தமிழர் கலையாகும். இவர்கள் இப்போது பாராட்டப்பட்டும், போற்றப்பட்டும் வந்தனர். கல்யான வீடு, கோயில் திருவிழாக்கள், சடங்கு வைபவங்கள், வரவேற்ப்பு வைபவங்கள், ஏன் மரணவீடுகளில் எல்லாம் சூழ்நிலைக்கேற்ப்ப பல ராகமோடிகளைப் கொண்டு தமிழர் வாழ்வில் மங்காத இடத்தினைப்பிடித்திருந்தது. 

பறை இன்னிசை அற்றுப்போக உள்ள காரணம்
பறைமேளக்கூத்தின் ஆற்றுகையாளர்களாக விளங்கும் பறையர் மற்றவர்களின் புறக்கணிப்பினால் ஏற்படுகின்ற தாழ்வு மனப்பாங்கும், சாதிமுறைமைக்குள் பறைமேளக்கலை இருப்பதுவும் இக்கூத்து மருவி வருகதற்கான காரணங்களாகக் குறிப்பிடலாம். அத்தோடு இளைஞர்கள் தாங்கள் பறைமேளத்தை பழகினால் சமூகத்தில் அந்தஸ்து கிடைக்காது என்று எண்ணுவதும், ஊர்களிலே பறைஅடிப்பதற்கு தடைவிதிப்பதும், பறையர்    சமூகத்தினரை ஊர்களில் ஒதுக்கி வைப்பதும் இக்கூத்து மருவிவருவதற்கான காரணங்களாக குறிப்பிடலாம் போர் சூழலும் அதனால் ஏற்பட்ட இழப்புக்களும், இதனால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட அபரீதமான மன உளைச்சல்களும்  கலைகளைப் பாதித்து நின்றது. இந்நிலையும் பறைமேளக்கூத்தின் வீழ்ச்சிக்கு ஓர் காரணம் என்று குறிப்பிடலாம்

கவலைதரும் விடயம் என்னவெனில் பலபேரும் ரசிக்கும்படி இசையமைக்கும் கலைஞ்ஞன் அவற்றை செய்ய முடியாத சாதாரண மக்களால் ஒதுக்கப்பட்டான்;. அவர்கள் கோயிலுக்குள் நுளைய மறுக்கப்பட்டனர், பொது நிகழ்வில் கலந்துகொள்ள மறுக்கப்பட்டனர், சுகதுக்கங்களில் பங்குகொள்ள ஒதுக்கப்பட்டனர் ஆக  இனிய இசையான பறைமேளம் வாசிச்ச குற்றத்துக்காக. காலப்போக்கில் அவர்கள் தாழ்ந்த இனம் என பச்சை குத்தப்பட்டனர்.

இன்றும் போற்றும் சிங்களப் பறை...
ஆனால் மறுபுறத்தில் சிங்கள மக்கள் அவர்களை ஊர் ஊராக வளர்த்து அவர்களது பாரம்பரியம் என மார்தட்டும் அளசுக்கு அதற்கென பிரத்தியேக பாட அலகுகள் எல்லாம் பல்கலைக்கழக மட்டத்தில் ஆரம்பித்து இருக்கின்றனர். அவர்கள் கௌரவிக்கப்படுகின்றனர், எங்கள் கலை என மார் தட்டுகின்றனர், தங்கள் தனித்துவத்தை நிலை நாட்டுகின்றனர். ஆனால் இங்கு எமெக்கென இருந்த பாரம்பரியம், தனித்துவம், கலாசாரம் இவையெல்லாம் ஒரே இரத்தம் கொண்ட மனித வர்க்கத்தினால் பிரித்துப் பார்ப்பது விசித்திரமாகவே இருக்கிறது.

புதிய தலைமுறையில்...
இருப்பினும் நீண்டு சென்ற சிவில் யுத்தம் இந்த இனவெறியர்களை சற்று பின்தள்ளி இருந்தது. ஆனாலும் அந்தக் கலைஞர் குழாம் வளர்ந்து, குடும்ப நிலையில் சந்தோசமாக இருக்கின்றனர். மறுபுறத்தில் பழைய கலைஞர்களுடன் அவை புதிய தலைமுறைக்கு எடுத்துவரப்படாமல் அது அங்கேயே நின்றுவிட்டது, துயரமே. இதனால் அவர்கள் தங்களுக்கு என கோயில், தங்களுக்கென சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று அவர்கள் தனித்துவமாய் வாழப்பழகி விட்டனர், இது மறுபுறத்தில் இந்த சாதியவாதிகளுக்கு கடுப்பூட்டு10ம் செயலாக இருப்பினும், அவர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு மதிப்பு கொடுத்தாக வேண்டிய தேவை இவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பேரசிரியர் மௌனகுருவின் புரட்சியும், கட்டிக்காப்பும்....
இந்த தமிழர் பண்பாட்டுக் கலை எச்சசொச்சம் இல்லாமல் போவதை யாரும் விரும்புவதில்லை, ஆனாலும் அவற்றை முன்னெடுக்கும் தெம்பும் யாரிடமும் இல்லை. சிலரால் மட்டுமே அவை இன்றும் கொஞ்சமாவது மின்னுகின்றதெனின் அவர்களை பாராட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.

மட்டக்களப்பின் மூளையாக மிளிரும் கிழக்குப் பல்கலைக்கழகம் இந்த விடயத்தில் போற்றப்பட வேண்டியதொன்றாகும். கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நுண்கலைத்துறைப் பேராசிரியராக இருந்த பெருமைக்குரிய பேராசான் மௌனகுரு அவர்கள் இக்கலைஞர்களுக்கு புத்தூக்கம் கொடுக்க ஆரம்பித்தார். 

வருடா வருடம் உலக நாடக விழாக் கொண்டாடி மகிழும் இவர்கள், பறை மேளக் கலைஞ்ஞர்களை மாத்திரமல்ல, அனைத்துப் பாரம்பரியக் கலைகளையும் வெளிக்கொணரத் தொடங்கினார். பறைமேளம் பயிலும் மாணவ அணியினரை உருவாக்கினார். அது அழிந்துபோகாமல் நீருற்றி வளர்து வருகின்றமை எமக்கெல்லாம் தையிரியம் ஊட்டும் செயலாகவே இருக்கின்றது.

பேராசிரியர் அவர்கள் மிக எழிமையானவர் ஆயிரம் ஆயிரம் பட்டதாரிகளை உருவாக்கிய செம்மல், மாத்திரமா பட்டி தொட்டியெல்லாம் இந்த கலைகளை ஊக்குவிக்க பாடுபடுகின்ற ஒருவர். புல்கலைக்கழகங்கள் பட்டதாரிகளை மாத்திரம் உருவாக்கும் இடம் எனும் அர்த்தமற்ற சிந்தனைக்கு புதிய வடிவங் கொடுத்து, அங்த சமுகத்தின் கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகம் என்பனவற்றினை கட்டிக்காக்கின்ற ஒரு புனிதப்பள்ளி என்பதை இவரின் செயற்பாடு காட்டத்தவறவில்லை.

இவ்வாறான ஊக்குவிப்பு, கௌரவிப்பு, தட்டிக்கொடுத்தல் என்பன பல்கலைக்கழக மட்டத்தில் மாத்திரம் நின்றுவிடாமல், அனைத்து நிகழ்வுகளிலும், அனைத்து மட்டங்களிலும் அவை பிரதிபலிக்கும்படி செய்யவேணும். அவர்களுக்கென ஊக்குவிப்புத்தொகை, பாராட்டுக்கள் என்பன வழங்கப்படுவதோடு பல்கலைக்கழக, கல்லூரி மற்றும் பாடசாலை போன்ற கல்விக்கூடங்களில் அவை பயிலப்படவேண்டும்.. இது வெறும் ஆதங்கம்தான் இருப்பினும் இது எங்களது கனவாகாமல் நிஜத்தில் கொண்டுவரவோம், எங்களை நாங்கள் பண்பாடுவோம்.

ஆய்ந்து அறிந்து சொல்லுவது ஒன்றும் முக்கியமல்ல, அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டிய பொறுப்பு தழிழுர்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பல்லவா? இல்லாவிடின் நாளை இன்னொருவன் வந்து இங்கு தழிழர்கள் வாழ்ந்தார்களா! என்று கேட்கும்போது, நாங்கள் அவற்றின் அடையாளங்களை துலைத்து பல்லை இழித்தால் பயன் இல்லை.. நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.. 

இச்சமாதான காலத்தில் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக மீளமைக்க வேண்டும்.. அது தான் நமது அடுத்த பரம்பரைக்கு இனத்துவ அடையாளமாக அமையும் என்பதை உணர வேண்டும்.

0 comments:

Post a Comment